-
4th April 2012, 10:35 PM
#11
Senior Member
Seasoned Hubber
ராஜ் டி.வி. வீரபாண்டிய கட்டபொம்மனை டிஜிட்டலில் எடுப்பதைப் பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அவர்கள் எந்த அளவிற்கு விசுவாசமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு விளம்பரம் செய்வார்கள் என்பது கேள்விக் குறி. சூப்பர் டூப்பர் ஹிட்டாக ரூ. 200 விலையிலும் விற்பனையாகி வரும் கர்ணன் டிவிடியின் விற்பனையைப் பற்றி மூச்சு விடாத நிறுவனமாச்சே... பதிபக்தி டிவிடியின் அட்டையில் ஜெமினி கணேசன் அவர்களின் படத்தைப் பிரதானமாக போட்டு விளம்பரம் செய்பவர்களாச்சே. மூச்சுக்கு முன்னூறு தரம் ... வேறு டி.வி.டி.க்கு விளம்பரம் செய்யும் நிறுவனமாச்சே... இவர்கள் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்தி அப்படத்தை விளம்பரப் படுத்துவார்களா என்பது...
million dollar question...
எனவே இதை வேறு யாராவது தயாரித்தால் நடிகர் திலகத்திற்கு உரிய மரியாதை தந்து விளம்பரப் படுத்துவார்கள் என்பதே என் எதிர்பார்ப்பு...
நம்முடைய இந்த ஆதங்கம் அந்த நிறுவனத்திற்கு எட்ட வேண்டும். அவர்கள் இது வரை செய்யாத அளவிற்கு விளம்பரத்தில் நடிகர் திலகத்தை முன்னிலைப் படுத்த வேண்டும். இது வரை அவர்கள் புறக்கணித்து வந்தது போன்று இனிமேலும் செய்தார்களானால், அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.
Last edited by RAGHAVENDRA; 4th April 2012 at 10:40 PM.
-
4th April 2012 10:35 PM
# ADS
Circuit advertisement
Bookmarks