Page 270 of 404 FirstFirst ... 170220260268269270271272280320370 ... LastLast
Results 2,691 to 2,700 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2691
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு முரளி சார்,

    ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அரங்கில் கர்ணன் 25-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது பற்றி சிறப்பாக எழுதி இருந்தீர்கள். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. கடலூரில் இருந்து சென்னை வந்து விழாவில் கலந்து கொண்ட இரு நண்பர்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்தது அனைத்தையும் இன்று அதிகாலை கைபேசியின் வழியாகத் தெரிவித்தார்கள்.

    இன்னொரு சந்தோஷமான செய்தி.

    என்னுடைய தங்கை தங்கள் ஊரான மதுரையில் தற்சமயம் இருக்கிறர்கள். நேற்று குடும்ப சகிதம் மதுரை மதி தியட்டரில் ஈவினிங் ஷோ பார்க்கப் போவதாக என்னிடம் தொலை பேசியில் கூறியிருந்தார்கள். எனக்கு சட்டென்று தங்கள் நினைவும், நம் அன்பு ஹப்பர் கோல்ட் ஸ்டார் சதீஷ் அவர்கள் நினைவும் வந்து விட்டது. என்னுடைய தங்கையின் கணவரிடம் தியேட்டர் செல்லும் போது கேமராவையும் எடுத்துக் கொண்டு போகச் சொல்லியிருந்தேன். பதாகைகளையும் படம் பிடிக்கச் சொல்லியிருந்தேன். (நமது திரியில் தரவேற்றத்தான்) தங்கையின் கணவரும் படம் பிடித்துக் கொண்டு இருக்கும் போதே நம் அன்பு ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு என்ன ஏது என்று விசாரிக்க என் தங்கை, "என் அண்ணன் தலைவர் ரசிகர். நெய்வேலியில் வேலை செய்கிறார். இணையத்தில் தரவேற்ற பதாகைகளை படம் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்" என்று விவரங்கள் கூறியவுடன் என் தங்கைக்கும், அவரின் கணவருக்கும் கிடைத்த மரியாதையே தனி தானாம். ரசிகர்கள் அனைவரும் தங்களுடய அன்பால் இவர்களைத் திக்கு முக்காட வைத்தார்களாம். பின் சில ரசிகர்களுடன் பேசுமாறு தங்கை எனக்கு போன் செய்து கொடுக்க அவர்கள் என்னுடன் மகிழ்ச்சியுடன் அளவளாவி தலைவரைப் பற்றி பேசி மகிழ்ந்தது மறக்க முடியாததொரு அனுபவம்.

    போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே ரசிகர்களின் அலப்பறை தெளிவாக போனில் கேட்டது. ஒரே தலைவர் பாட்டு மயம்தான். பின் அனைவருக்கும் வெஜிடபிள் பிரியாணியும், அவித்த முட்டையும் வழங்கப்பட்டதாம். தியேட்டரில் நல்ல கூட்டம் என்று தங்கை என்னிடம் கூறினார். சிறிது நேரத்திலேயே ஹவுஸ்புல் ஆகி விட்டதாம். காங்கிரஸ் எம்பி ஒருவர் (பெயர் தெரியவில்லை) முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு அனைவருக்கும் பிரியாணி வழங்கினாராம். தியேட்டர் உள்ளே ஒரே ஆர்ப்பாட்டமும் கைத்தட்டலும்தானாம். முக்கியமாக ஓ .ஏ.கே. தேவரிடம் தலைவர் சிங்கமாய் கர்ஜிக்கும் போது கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் பிடித்ததாம். படம் முழுவதும் ஆடியன்ஸ் நல்ல ரெஸ்பான்ஸாம். மிகவும் ரசித்துப் பார்த்தார்களாம். குழந்தைகளும், தாய்மார்களும் நிறைய வந்திருந்தனராம். பின் படம் முடிந்தவுடன் ரசிகர்கள் தங்கையின் குடும்பத்தை கூட இருந்து வழியனுப்பினார்களாம். என் தங்கை இவ்வளவையும் இன்று காலை என்னுடன் கைபேசியின் வழியாக பெருமகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

    மதுரை மண்ணின் மைந்தர்களின் பாசத்திற்கும், அன்பிற்கும் எப்போதும் எல்லையே இல்லை என்பதும், தலைவர் மேல் அவர்கள் கொண்ட பக்திக்கு அளவே இல்லை என்பதும் எவ்வளவு உண்மை! (தங்களையும் சதீஷ் சாரையும் போல)

    என் தங்கையும், தங்கை மகனும் அடிக்கடி போன் செய்து இதைப் பற்றியே பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விரைவில் அங்கு எடுத்த புகைப் படங்களை மெயில் செய்வதாகவும் கூறியுள்ளார்கள். மெயில் வந்தவுடன் பதிவிட்டு விடலாம்.

    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 9th April 2012 at 10:24 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2692
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by rsubras View Post
    Sivaji's Tenaliraman pathi discuss pannirukkoma? Kalaingnar T.V la this wednesday telecast panna poraanga...... have read Tenaliraman stories but never had a chance to watch that film and not much heard of that film as well........
    RS,

    We have not discussed Tenaliraman in detail here though it has been mentioned in passing. There were 6 movies of NT that got released between January 14 and February 25th of 1956 and Tenaliraman was one among them. So it didn't get it's deserved due. Tenaliraman will always be remembered for one of it's still photos. It was the scene where Tenaliraman buried in neck deep sand is facing an elephant which is about to stamp him [யானை காலால் இடறுவது என்பது அந்த காலத்து மரண தண்டனை]. When NT fell out from DMK after the Thirupathi Ganesa issue, Kannadasan who was actively in DMK at that point of time used this photo in his magazine தென்றல் and put up a caption சிவாஜியின் எதிர்காலம்?. This led to relations souring between NT and Kannadasan and for almost three years Kannadasan didn't write any songs for NT films and ice was broken only during the making of Bhaga Pirivinai in 1959. Add to it the fact that Kannadasan produced சிவகங்கை சீமை which he projected as the competitor to கட்டபொம்மன் and well you know who had the final laugh!

    In case you chance to watch it please share your views here.

    Regards

  4. #2693
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Gopal,

    Heartiest welcome to You!

    Let you have a very pleasant stay here and hope members here are treated to memorable vignettes from you.

    Would love to read about your thoughts on your favourites Vikraman and Vijay.

    [For the uninitiated, it is Uthama Puthiran and Deiva Magan]

    Regards

  5. #2694
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு சார்,

    மதுரையின் பெருமையை பிறர் சொல்லிக் கேட்கும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. மதுரையைப் பற்றி ஒரு விதமான எதிர்மறையான கருத்தை அண்மைக் கால திரைப்படங்கள் உருவாக்கி விட்டன. உண்மையை சொன்னால் மதுரை மக்கள் வீரமானவர்கள் மட்டுமல்ல ஈரமானவர்களும் கூட. ஒருவரிடம் பழகி விட்டால் அவர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். அதைதான் உங்கள் சகோதரியார் நேரில் உணர்ந்திருக்கிறார்.

    மதியைப் போலவே சரஸ்வதியிலும் நேற்று மாலைக் காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது என கேள்விபடுகிறேன். இந்த தகவல்களை இங்கே பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

    அன்புடன்

  6. #2695
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    கர்ணர் கருவூலம் : 6

    தெய்வ வழிபாடு

    சென்னை சத்யம் சினிமாஸ் : 16.3.2012 : மாலைக் காட்சி

    பாலாபிஷேகம்




    பட்டாசு வெடிக்கும் வைபவம்


    புஷ்பலங்காரம்




    'சத்யம்' திரையரங்க விளம்பரப் பதாகை



    தீபாராதனை




    பக்தர் வெள்ளம்




    களை கட்டும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #2696
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Dear Vietnam Gopal Sir,

    A very very warm welcome to you to our NT thread.

    My sincere & special wishes for your pleasant stay here !

    Thanks for your compliments !

    Regards,
    Pammalar.
    pammalar

  8. #2697
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் பாலா சார்,

    'தினச்சுடர்' சுட்டிக்கு நன்றி ! பெங்களூரூ ரசிகர்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா...அமர்க்களப்படுத்திவிட்டார்களே !!

    "கர்ணன்" வெளியாகும் சமயம் பெங்களூரூ குலுங்கும் !!!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #2698
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    சதாசர்வகாலமும் நமது திரி ஞாபகம்தான் உங்களுக்கு !

    மதுரை 'மதி'யின் ஆரவாரங்களைப் படம்பிடித்த தங்களது தங்கையின் கணவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !

    அப்புகைப்படங்களைக் காண்பதற்கு ஆவல் மேலிடுகிறது !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #2699
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Myth No 2-The Top most collected movies are mostly MGR's Films only during the competing Years(1952-1978)
    Let me analyse this carefully with the figures of highest two grossers yearwise with NT and MGR Movies indicated in Brackets.
    As usual ,I dont offer any comments in addition ,as the reader can make his own conclusion-
    1952- Parasakthi(NT)
    1953- Ovvayar,Devadas
    1954-Manohara(NT),Rathakanneer
    1955-Missiyamma,Kanavane Kan Kanda deivam
    1956-Madurai veeran(MGR),Mangaiyar Thilagam(NT)
    1957-Makkalai Petra Magarasi(NT),Maya Bazaar
    1958-Nadodi Mannan(MGR),Uthamaputhiran(Sivaji)
    1959-Veerapandiya Kattabomman(NT),Bhagapirivinai(NT)
    1960-Padikkatha Methai(NT),Deivapiravi(NT)
    1961-Pava Mannippu(NT),Pasa Malar(NT)
    1962-AlayaMani(NT),Nenjil oor Alayam
    1963-Karpagam,Nanum Oru Penn
    1964-Kathalikka Neramillai,Kai Kodutha Deivam(NT)
    1965-Enga Veetu Pillai(MGR),Thiruvilaiyadal(NT)
    1966-Saraswathi sabatham(NT),Anbe Vaa(MGR)
    1967-Naan, Kaval Karan(MGR)
    1968-Kudiyiruntha Koil(MGR),Panama Pasama
    1969-Adimaipenn(MGR),Sivantha Mann(NT)
    1970-Mattukara Velan(MGR),Engiruntho vanthal(NT)
    1971-Rikshaw Karan(MGR),savale Samali(NT)
    1972-Vasantha Maligai(NT).Pattikkada Pattanama(NT)
    1973-Ulagam sutrum valiban(MGR),Engal thanga Raja(NT)
    1974-Urimai Kural(MGR),Thanga Pathakkam(NT)
    1975-Idaya Kani(MGR),Avanthan manithan(NT)
    1976-Annakili,Badrakali
    1977-Aatukkra Alamelu, Annan oru Koil(NT)
    1978-Thyagam(NT),Sivappu Rojakkal.
    I need not do further analysis .
    டியர் கோபால் சார்,

    தங்களது பதிவில், சில வருடங்களில் சில சிறுதிருத்தங்கள்:

    1954 : மனோகரா(ந.தி.), மலைக்கள்ளன்(ம.தி.)

    1955 : கணவனே கண்கண்ட தெய்வம்(ஜெமினி), மிஸ்ஸியம்மா(ஜெமினி)

    1956 : மதுரை வீரன்(ம.தி.), அமரதீபம்(ந.தி.)

    1957 : மாயாபஜார்(ஜெமினி), வணங்காமுடி(ந.தி.)

    1958 : நாடோடி மன்னன்(ம.தி.), பதிபக்தி(ந.தி.)

    1965 : திருவிளையாடல்(ந.தி.), எங்க வீட்டுப் பிள்ளை(ம.தி.)

    1970 : மாட்டுக்கார வேலன்(ம.தி.), சொர்க்கம்(ந.தி.)

    1974 : தங்கப்பதக்கம்(ந.தி.), உரிமைக்குரல்(ம.தி.)

    [ந.தி. : நடிகர் திலகம், ம.தி. : மக்கள் திலகம்]

    [நடிகர் திலகத்தின் "மங்கையர் திலகம்" 1955-ல் வெளிவந்த திரைக்காவியம், வெளியான தேதி : 26.8.1955]

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #2700
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    அன்னை இல்லத்தின் 'இல்லற ஜோதி'யாய்த் திகழ்ந்த நடிகர் திலகத்தின் துணைவியார் அமரர் கமலா அம்மையார் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம் !

    கலையுலக ஏஞ்சலின் ஏப்ரல் காவியங்கள்

    இல்லற ஜோதி

    [9.4.1954 - 9.4.2012] : 59வது ஜெயந்தி

    பொக்கிஷப் புதையல்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 9.4.1954



    'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 9.4.1954


    குறிப்பு:
    1. "இல்லற ஜோதி", 9 வாரங்கள் [63 நாட்கள்] ஓடிய வெற்றிக்காவியம்.

    2. இத்திரைக்காவியத்திற்கு கதை-வசனம் கவியரசர் கண்ணதாசன். இதில் வரும் அனார்கலி-சலீம் ஓரங்க நாடகத்திற்கு மட்டும் உரையாடல்களை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி.

    3. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிகர் திலகம் நடித்த காவியங்கள் இரண்டு. ஒன்று, "திரும்பிப் பார்(1953)", மற்றொன்று "இல்லற ஜோதி(1954)".


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •