Page 292 of 404 FirstFirst ... 192242282290291292293294302342392 ... LastLast
Results 2,911 to 2,920 of 4034

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 9

  1. #2911
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள நண்பர்களே,

    அலுவலக வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டதால், நிறைய நாட்களுக்குப் பிறகு தான் இந்தத் திரிக்குள் நுழைய முடிந்தது. நுழைந்தவுடன் அதிர்ச்சி.

    ஹப் சீனியர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தது போல், திரு. வாசுதேவன் அவர்கள் விரைவில் மீண்டும் பதிவிடுவார் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2912
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    DEAR VASU SIR,
    PLEASE CONTINUE YOUR CONTRIBUTION IN THIS THREAD,I TRIED TO PERSONALLY CALL YOU AND REQUEST BUT YOUR CELLPHONE IS IN SWITCHOFF MODE.

    DEAR GURU,
    MY HEARTIEST CONGRATS FOR YOUR ILAYATHILAGAM.

    DEAR BALA,
    A VERY WARM WELCOME TO OUR NT'S THREAD.

    DEAR RAGHAVENDRA SIR,
    MY HEARTIEST WISHES FOR NADIGARTHILAGAM.COM ON IT's 6TH YEAR CELEBRATION.

    DEAR SUPERSTAR PAMMAL SIR,
    VANANGAMUDI AD'S VERY SUPERB.
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  4. #2913
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Uruguay
    Posts
    0
    Post Thanks / Like
    Dear pammalar sir,

    Vanangamudi stills super,you are really great,because you have lot of collections about NADIGAR THILAGAM.

  5. #2914
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. பம்மலார் அவர்களே,

    நடிகர் திலகத்தின் "வணங்காமுடி" நூறு நாட்களைக் கடந்த படம் தான் என்று, சான்றுடன் பதிவிட்ட உங்களுக்குக் கோடி நன்றிகள்.

    பல வருடங்களுக்கு முன்னர் ஆனந்த விகடனில் நடிகர் திலகத்தின் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. அது, ராஜா ராணி படங்களைப் பொறுத்தவரை, அவருடைய படங்கள் ஓடாது என்று. எதை வைத்து, இப்படி அவர்கள் எழுதினார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு சில படங்கள், சாரங்கதாரா, ராணி லலிதாங்கி போன்ற படங்கள் ஓடாததை வைத்தும், மாற்று முகாமில், அந்த வகைப் படங்களை (மிகச் சில என்றாலும்) மட்டுமே நடித்து வெளி வந்ததாலும் இருக்கலாம். அங்கு 1961 -லிருந்து தான் வேறு வகைப் படங்கள் வரத் துவங்கியது.

    தூக்குத் தூக்கி, மனோகரா, தெனாலி ராமன், வணங்காமுடி, உத்தம புத்திரன், சம்பூர்ண இராமாயணம், வீரபாண்டிய கட்டபொம்மன் (சிகரம் தொட்ட வெற்றி!), கர்ணன், என்று எத்தனை வெற்றிப் படங்கள்! எதை வைத்து விகடன் இதழ் இப்படி எழுதினார்கள் என்பது இன்று வரை புரியாத புதிர் தான்!!

    பல நாட்கள் வணங்காமுடியும் கர்ணனும் நூறு நாட்களைத் தொடாத தோல்விப் படங்கள் என்று எத்தனை பேர் வாதிட்டுக் கொண்டிருந்தனர். ஆவணங்களுடன் அவர்கள் வாயை அடைத்த உங்களுக்கு மறுபடியும் கோடானு கோடி நன்றிகள்!

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 18th April 2012 at 03:03 PM.

  6. #2915
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Mr. Raghavendar,

    Heartiest congratulations to you on your Website Nadigar Thilagam.com entering 6th year.

    Please continue to enthral million of NT Fans like me!

    Regards,

    R. Parthasarathy

  7. #2916
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி! நன்றி! நன்றி!



    அன்புள்ளமும், பெருந்தன்மையும் கொண்ட என் உயிரினும் மேலான இத்திரியின் அன்பர்களே!

    உங்கள் அனைவரின் பொற்பாதங்களில் என் நன்றியைக் கண்ணீரால் காணிக்கை ஆக்குகிறேன். தாங்கள் என் மீது வைத்துள்ள அளவு கடந்த அன்பையும், பாசத்தையும் கண்டு வாயடைத்துய் போய் நிற்கிறேன். இது போன்ற அன்பு நெஞ்சங்கள் கிடைத்ததற்கு அந்த இறைவனாருக்கும், இறைவனை விட என் ஊனிலும், உயிரிலும் கலந்த என் முதல் தெய்வமான நடிகர் திலகத்திற்கும் கோடானு கோடி நன்றிகளை அவர்தம் பொற்பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    உலகமே திரும்பிப் பார்க்கும், நான் கோவிலாக மதிக்கும் இத்திரியில் சேவை செய்யும் பாக்கியத்தை நடிகர் திலகம் எனக்கருளியது என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பெரும் பேறு. ராமருக்கு அணில் சேவை செய்ததில் கோடியில் ஒரு பங்கு கூட நான் இத்திரியில் சேவை செய்யவில்லை என்பதை தன்னடக்கத்துடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படி ஒரு சின்னஞ்சிறு சேவை செய்தாலும் என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தங்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும், பேராதரவுடனும் அந்த சேவையை செய்து வந்துள்ளேன் என்பதை நினைக்கையில் பெருமையும் பூரிப்பும் அடைகிறேன்.

    ஒரு சலசலப்பு. ஆரம்பத்தில் சிறிது மனம் காயப் பட்டாலும் தங்கள் அனைவரது அன்பினால் அந்தக் காயம் மாயமாய் மறைந்து போனது. உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகி விடுபவன் தானே மனிதன்! ஆனாலும் நெஞ்சை இனம் புரியாத ஒரு துன்பமும் சோகமும் வாட்டிக் கொண்டே இருக்கிறது. என்னவென்று சொல்லத் தெரிய வில்லை. என்னால் அதிலிருந்து விடுபட முடியவில்லை என்பதை நேரிடையாகவே கூறிக் கொள்கிறேன். இத்திரியில் உறுப்பினர் ஆனதில் இருந்து இன்று வரை என்னால் முடிந்தவற்றை விருப்பு வெறுப்பின்றி நடிகர் திலகம் பற்றிய அவர் புகழ் பாடும் பதிவுகளை அளித்துள்ளேன். குறிப்பாக ஸ்டில்கள். எதிர்காலங்களில் வரும் இளைய தலைமுறையினர் இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகள் கழித்து இத்திரியை பார்க்கும் போது நடிகர் திலகம் என்பவர் 'தெனாலி ராமன்' படத்தில் இப்படி இருந்தாரா... 'ஹரிச்சந்திரா' வேடத்தில் இப்படி இருந்தாரா என்று எந்தத் தடையும் இன்றி விஷூவலாக பார்த்து அவர்கள் ஆச்சரியப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இப்போதே பல dvd-க்கள் கிடைக்கவில்லை. நம்மவரின் படங்களே இன்னும் சில கிடைக்கவில்லை. காலப் போக்கில் எல்லாமே அழிந்து விடக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. நம் கண் முன்னமேயே நடிகர் திலகம் படங்களின் print-களின் நெகடிவ்கள் பல சேதமடைந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. அப்படி வரும் காலத்தில் அனைவருக்கும் இந்த நிழற்படங்களும், புகைப்படங்களும் உதவ வேண்டும் என்பது என் அவா. dvd, cd க்களில் இருந்து ஸ்டில்களை எடுத்துப் போடுவது ஒரு பதிவா அல்லது கஷ்டமா என்று கூட சிலர் நினைக்கலாம். நிச்சயமாக அது ஒரு சிரமமான வேலைதான். பொதுவாகவே எனக்கு ஒன்றிரண்டு ஸ்டில்கள் போடுவதில் மனம் உடன் படாது. அதனால் தான் என்னால் முடிந்த வரை ஸ்டில்களைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன். என்னால் முடிந்த சில ஆவணங்களையும் தந்துள்ளேன். சில திரைப்பட வீடியோக்களையும் தரவேற்றியுள்ளேன். பல மிகுந்த சிரமங்களுக்கிடையே (சில படங்களின் நெடுந்தகடுகள் கிடைக்க இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆயின) தலைவரின் சில அபூர்வ திரைப் படங்களை உலகெங்கும் இணையத்தின் மூலம் தேடியும், வெளிநாடுகளில் இருக்கக் கூடிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரின் உதவியுடனும் பெற்றுள்ளேன். (குறிப்பாக தர்த்தி (இந்தி), ஸ்கூல் மாஸ்டர் (இந்தி), மனிதனும் தெய்வமாகலாம், எல்லாம் உனக்காக போன்ற இன்னும் சில படங்கள்) அவைகளில் இருந்து எடுத்த சில பதிவுகளையும் பதிவிட்டுள்ளேன். இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன். வெளியிடங்களுக்கும் சென்று தலைவர் படங்களுக்கு நம் ரசிகர்கள் நடத்தும் ஆர்ப்பாட்ட அலப்பரைகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் என்னால் இயன்ற வரை அளித்துள்ளேன். பெருமைக்காகவோ அல்லது தற்புகழ்ச்சிக்காகவோ சத்தியமாக இதைக் கூறவில்லை. அப்படி என்னால் முடிந்த பதிவுகளை இத்திரியில் பதிவு செய்து அனைவரையும் சந்தோஷப் படுத்த முடிந்ததே என்ற பேரானந்துக்காகவும், மனத்திருப்திக்காகவும் இதை தெரியப்படுத்தி உள்ளேன்.

    நீங்கள் எனக்களித்த பாராட்டுதல்களையும், ஆதரவையும், உற்சாகத்தையும் எண்ணி எண்ணி பெருமிதம் கொள்கிறேன். என் வாழ்நாள் முழுதும் இந்த நன்றியை மறக்க மாட்டேன். இத்திரியின் இமாலய வெற்றிக்கு நீங்கள் அனைவரும் அளித்திருக்கிற, அளித்து வருகிற பங்கு மகத்தானது. உங்கள் அனைவரது உழைப்பாலும் இத்திரி பற்பல சாதனைகளைப் புரியப் போவது உறுதி. ஆனால் உங்கள் அனைவருடனும் இருந்து இத்திரியில் பங்கு கொண்டு பணியாற்ற தற்சமயம் இயலாதவனாய் உள்ளேன் என்பதை கண்ணீரோடும், ஆழ்ந்த வருத்ததோடும், கனத்த இதயத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிகளை டைப் செய்யும் போது என் இதயமே சுக்குநூறாய் வெடித்து சிதறுவதாக உணர்கிறேன். தயவு கூர்ந்து எல்லோரும் என்னை மன்னித்து விடவும். எங்கு எப்படி இருந்தாலும் என் இதயம் முழுதும் இந்தக் கோவிலை சுற்றியபடியேதான் இருக்கும். என் தாயார் ஊரிலிருந்து என்னைப் பார்க்க வந்தால் கூட 'வாம்மா' என்று ஒரே ஒரு வார்த்தை சம்பிரதாயத்துக்கு சொல்லி வீட்டு இத்திரியே கதியென்று கிடந்திருக்கிறேன். அவர்களிடம் இரண்டு வார்த்தை கூட தொடர்ந்து பேசியதில்லை நான். அப்படி உடலும் உயிருமாய் கலந்த, இணைந்த இத்திரியையும், உங்களையும் உயிரற்ற உடலாய் விட்டுப் பிரிகிறேன். உடன் பிறந்த சகோதரர்களாய் அன்பையும், பாசத்தையும் என் மீது பொழிந்த தங்கள் அத்துணை பேருடய பொற்பாத கமலங்களையும் என் நன்றிப் பூக்களால் அர்ச்சனை செய்து இறைவனின் அருளும், இறைவனுக்கே இறைவரான நம் அன்பு நடிகர் திலகத்தின் அருளும் ஆசியும் இருந்தால் நிச்சயம் மீண்டும் இந்தத் திரியில் உங்களோடு மகிழ்ச்சி வலம் வருவேன் என்று கூறி தாங்கொணாத் துயரத்துடன் கண்ணீர் மல்க அனைவரிடமும் இருந்து விடை பெறுகிறேன். நன்றி.

    Last edited by vasudevan31355; 18th April 2012 at 03:08 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2917
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய அன்பு ஜோ சார் மற்றும் அன்பு மாடரேட்டர் NOV சார் அவர்களுக்கும் என் அடிபணிந்த மரியாதையான வணக்கங்கள். தாங்கள் நடிகர் திலகத்தின் மேல் கொண்ட பற்றுதல்களை நினைத்து பல தடவை பூரித்துப் போய் இருக்கிறேன். தங்களது நிர்வாகத் திறமையையும் கண்டு வியந்திருக்கிறேன். திரு NOV சார்... நீங்கள் சிவாஜி மன்றங்களுக்கு நற்பணிகளுக்காக ஓசையில்லாமல் கொடுத்து வரும் உதவித்தொகைகளை நான் அறிவேன். வளர்க உங்கள் தொண்டு. இந்த அடியேனுக்கும் திரியில் சிறு தொண்டு புரிய அனுமதி அளித்தமைக்கு தங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி!


    அன்பு ராகவேந்திரன் சார்,

    திரியில் என்னை எல்லா வகையிலும் ஊக்கமளித்து, என்னுடைய பல தொழில் நுட்ப சந்தேகங்களை எந்த நேரமானாலும் பொறுமையாக விளக்கி என்னை வழி நடத்திய நான் மிக மிக நேசிக்கக் கூடிய என்னுடைய ஆசான் ஸ்தானத்தில் இருக்கும் தங்களை என்னால் மறக்கவே முடியாது. எப்போது சென்னை வந்தாலும் சொந்த சகோதரரைப் போலத் தாங்கள் என்னை கவனித்துக் கொண்டது காலம் உள்ள வரை மறக்க முடியாது. எந்த பிரதிபலனும் கருதாது மூச்சும் உயிரும் நடிகர் திலகத்துக்காகவே என்று வாழும் தங்களின் தன்னலமற்ற சேவை எனக்கும், நம் திரியில் உள்ளவர்களுக்கும் சிறந்த வழிகாட்டுதல்களைத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தன்னந்தனி ஆளாக நடிகர் திலகம் இணையதளத்தை தொடங்கி அதை சிறப்பாக ஆறாவது ஆண்டில் அடியெடுக்க வைக்க நீங்கள் பட்ட சிரமங்களுக்கெல்லாம் நாங்கள் பட்ட சிரமங்கள் மிகக் குறைவு. வெற்றிகரமாக N.T. fans association தொடங்கி திரு Y.G.M மற்றும் முரளி சார் அவர்களின் உறுதுணையுடன் சிறப்பாக நடத்தி வருவது பெருமைக்குரிய விஷயம். தங்களுடன் இணைந்து பணி புரிந்ததில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணி புரிந்ததாகவே அப்படி ஒரு சந்தோஷத்தை உணர்கிறேன். தங்களுடைய பேராதரவிற்கும், அன்பிற்கும் தலைவணங்கி மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெறுகிறேன்.




    அன்பு முரளி சார்,

    நான் இத்திரியில் உறுப்பினராக சேர நீங்கள் ஊக்கமளித்ததற்கும், என்னுடைய பதிவுகளைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டுக்களை தெரிவித்ததற்கும், என்னை தங்கள் சகோதரனைப் போல பாவித்ததற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய அன்பு உள்ளத்திற்கும், தங்கள் முத்தான சத்தான பதிவுகளுக்கும் என்றும் நான் அடிமை. அதனால் தான் தங்களை எப்போதும் 'முத்தான முரளி சார் ' என்று உரிமையுடன் அழைப்பேன். தங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலைக்கு மிகவும் மனம் வருந்துகிறேன். எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்ட உயரிய மனிதர் தாங்கள். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வணங்கி தற்சமயம் தங்களிடமிருந்து கண்ணீர்ப் பெருக்குடன் விடைபெறுகிறேன். (தங்கள் மதுரை மதி திரையரங்கில் நடை பெற்ற கர்ணன் விழாப் புகைப்படங்களை தங்களுக்காகவும், நம் திரியின் அன்பு இதயங்களுக்காகவும் இங்கே பதிவிட்டுள்ளேன். நிச்சயம் நீங்கள், மற்றும் சதீஷ் சார் மனம் மகிழ்வீர்கள் என நம்புகிறேன்)





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 18th April 2012 at 04:38 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2918
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like





















    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 18th April 2012 at 03:27 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2919
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என் இளைய சகோதரர் பம்மலார் அவர்களே!

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தங்களைப் போன்ற சகோதரர் எனக்குக் கிடைப்பாரா?.. அப்படிப்பட்ட கள்ளம் கபடமில்லாத அன்பையும், பாசத்தையும் என் மீது வான் மழையாய் பொழிந்து கொண்டிருக்கும் என் உயிரே! நடிகர் திலகத்தை நான் நினைக்காத நேரமில்லை. அதே நடிகர் திலகத்தின் ஸ்தானத்தில் என் உள்ளத்தின் அடித்தளத்தில் தங்களை வைத்து அகம் மகிழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உறுதுணையாய் நின்ற கருணைக் கடவுளே! உங்கள் அளவிற்கு என் மேல் என் தாயார் தான் பாசம் காட்டியுள்ளார். உணவு உண்ணக் கூட மறந்து போகும். உங்களிடம் மணிக்கணக்கில் கைபேசியில் தினமும் பேச மட்டும் மறந்து போகாதே! நமது திரியை மென்மேலும் செழுமை அடைய வைக்க தாங்கள் எனக்கு பலவகையில் பேருதவி புரிந்ததை மறக்க முடியுமா? சதா சர்வ காலமும் திரியின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருக்கும் நாங்கள் தவம் செய்து அடைந்த எங்கள் அனைவரின் செல்லக் குழந்தை அல்லவோ தாங்கள்!

    (தங்களின் 'வணங்காமுடி' பதிவுகள் எப்படிப்பட்ட வணங்காமுடிகளையும் உங்கள் முன் தலை வணங்க வைத்து விடும். அற்புதமான அருமையான பதிவுகள். அதற்கு என் மனம் மகிழ்ந்த நன்றிகள்)

    எப்பொழுதும் எல்லோரும் நன்றாயிருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு, ஒரே வேண்டுதலோடு வாழ்த்துக்களே வார்த்தைகளாய், வாழ்க்கையாய்க் கொண்ட அன்பு வடிவமே! உலகில் யாருமே சாதிக்க முடியாத சாதனைகளை செய்தவர் நம் இறைவனார். அதே போல அவருடைய தொண்டராகிய தாங்களும் உலகில் யாருமே செய்ய முடியாத சாதனைகளைப் படைத்து வருகிறீர்கள் கிடைத்தற்கரிய ஆவணப் பொக்கிஷங்களை பாதுகாத்து சுயநலம் பாராமல் எங்கள் எல்லோருக்கும் அளித்து வருவதன் மூலமாக. இதற்காக என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை. இந்த சிறு வயதில் செயற்கரிய செயல்களைச் செய்து சிறப்புடன் பணியாற்றி சிகரப் பதிவுகளை அள்ளி வழங்கும் அமுத சுரபியே! எனக்குத் துன்பம் நேர்ந்த போதெல்லாம் தோளோடு தோள் நின்று என் சுமைகளை உங்கள் சுமைகளாய் நினைத்து, என் சந்தோஷத்தை உங்கள் சந்தோஷமாய் நினைத்து, உரிமைகளுக்காக குரல் கொடுத்த உத்தமரே! நீங்கள் அப்பனுக்கு பாடம் சொன்ன முருகப் பெம்மான் அல்லவோ எனக்கு. இதற்கு மேல் எனக்கு எழுத முடியவில்லை. கண்ணீர் நிறைகிறது. நடிகர் திலகத்தின் அருமைகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்ற முதலிடம் பெற முழுத் தகுதியும் கொண்ட ஆவண முதல்வரே! அந்தப் மனிதப் புனிதரின் ஆசியினால் வாழ்வாங்கு வாழ்ந்து, சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று எல்லாவற்றிலும் வெற்றி நடை போட இந்த அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள். நாம் பிரிய வில்லை. உயிருடன் கலந்திருக்கிறோம்.

    வாழ்க வளமுடன்.

    தங்கள் அன்புச் சகோதரன்
    வாசுதேவன் .
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2920
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதிப்பிற்குரிய சாரதா மேடம்,

    தாங்கள் இல்லாமல் அருமைப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வந்து மீண்டும் புதுப் பொலிவு தர உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பதிவானாலும் உடனே அந்தப் பதிவிற்கு முழுமனதுடன் பாராட்டும் உயர்ந்த குணம் தங்களுக்கு. அதே போல தவறான பதிவுகளையும் மனம் நோகாத படி நாசூக்காக கோடிட்டுக் காட்டும் குரு போன்றவர் தாங்கள் எனக்கு. ஒரு விசுவாசமிக்க மாணவனாக குருவான தங்களை எப்போதும் வணங்குகிறேன். ஆவலுடன் தங்கள் பதிவுகளைக் காண வழி மீது விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

    அன்பு கார்த்திக் சார்,

    என்னைப் பொறுத்தவரை நீங்கள் நக்கீரர். நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் தாங்கள் அஞ்சாமல் குற்றம் குற்றமே என்று சூளுரைக்கும் பாணியே தனி. நீங்களும் திரியில் பங்கு பெற்று சில மாதங்கள் ஆயிற்று. எங்களுக்கு பல யுகங்கள் ஆனாற்போன்று இருக்கிறது. தங்கள் முதல் நாள் திரையரங்கு அனுபவ பதிவுகளைக் காணாமல் கவலையுறுகிறது நெஞ்சு. தங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், வழிகாட்டுதல்களும் மறக்க முடியாதவை. தங்கள் அற்புதமான பதிவுகளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

    அன்பு பார்த்தசாரதி சார்,

    தங்கள் பாடல் ஆய்வுகள் என்னவாயிற்று? தாங்கள் இல்லாமல் பாடல் ஆய்வுப் பதிவுகள் இல்லை. அவசியம் திரிக்கு வாருங்கள். இன்பப் பாடல்களின் ஆய்வுப் பதிவை அள்ளித் தாருங்கள். தங்கள் அன்பிற்கும் பாராட்டும் குணத்திற்கும் மிக்க நன்றி!


    திரு.சந்திரசேகரன் சார்,

    தங்களின் உயரிய பண்பும், பாராட்டும் இயல்பும், தங்கள் அளப்பரிய சமூக நலப் பேரவையின் நலத்திட்டங்களும் மறக்க முடியாதவை. தங்களின் அன்பு உள்ளத்திற்கும், இதுவரை அளித்த ஆதரவிற்கும் மிக்க நன்றி!


    டியர் ஞானகுருசுவாமி சார்,

    தங்கள் குடும்பத்தின் புதிய வரவான அந்த தெய்வக் குழந்தைக்கு என் மனப்பூர்வமான ஆசிகள். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

    மற்றும் திரியின் அனைத்து நண்பர்களே!

    திரு plum சார், திரு.P.R சார், திரு கோல்ட் ஸ்டார் சதீஷ் சார், அன்பு ஹரீஷ் சார், திரு. சங்கரா சார், dear grouchcho sir, அன்பு குமரேசன் பிரபு சார், அன்பிற்கினிய பாலா சார், திரு.ராதாகிருஷ்ணன் சார் , திரு சுப்பிரமணியம் ராமஜயம் சார், திரு.ரங்கன் சார், புதிய வரவுகளான சிவாஜி தாசன் சார், திரு subras சார், இளம் சிங்கமான ராகுல் சார், படைப்பாளி பாலா சார், திரு மோகனராம் சார், திரு சகலா சார், திரு கரிகாலன் சார், மற்றும் பெயர் விடுபட்டுப் போன உயிரினும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் என் பாசம் கலந்த நன்றிகளைத் தெரிவித்து, தாங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பிற்கு தலை வணங்குகிறேன்.

    டியர் கோபால் சார்,

    சிறிது காலமே பழகினாலும் நம் நட்பு ஆழமானது. உங்களை மிகவும் நான் அறிவேன். நண்பர்களுக்குள் சிறு சிறு மோதல்கள் வருவது இயற்கை. எந்த வகையிலாவது நான் தங்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அளவுக்கதிமாக வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அது தேவை இல்லாதது. எந்த வித குற்ற உணர்ச்சிக்கும் நீங்கள் ஆளாக வேண்டாம். உங்கள் நெத்தியடி பதிவுகளுக்கு நான்தான் முதல் ரசிகன். நீங்கள் கேட்டிருந்தபடி நான் பதிவு இட்டாயிற்று. இனி நீங்களும் பதிவுகளை கண்டிப்பாக தொடரவேண்டும் என்பது என் வேண்டுகோள். இல்லை. இல்லை. அன்புக்கட்டளை. செய்வீர்கள் என தீர்க்கமாக நம்புகிறேன். நீங்கள் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். நான் திரியை விட்டு விலகுவதற்கும், தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை. என் சொந்த வேலைகளும் இருக்கின்றன. உங்கள் அற்புதமான பதிவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan Part 8
    By RAGHAVENDRA in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1966
    Last Post: 20th September 2011, 10:04 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 6
    By pammalar in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1499
    Last Post: 6th August 2010, 11:57 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan
    By Oldposts in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1492
    Last Post: 12th August 2006, 11:20 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •