-
4th May 2012, 02:42 PM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் ராகுல்,
பரீட்சைக்கு நேரமாச்சு படத்தைப் பற்றிய தங்களுடைய ஆய்வு தங்களுடைய தலைமுறையின் அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. தாங்கள் கூறியவற்றில் பெரும்பாலானவை எனக்கு உடன்பாடே, இருந்தாலும் இசையைப் பற்றிக் குறிப்பிட்டு ஆகவேண்டும். மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் மிகுந்த உயிரோட்டமாக இருக்கும். குறிப்பாக ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாடல் சூழ்நிலையைக் கண்முன்னே நிறுத்தும்.
ஒரு ஓசையின்றி மௌனமாக உறங்குமவள் மனது.
வாலியின் வரிகளைப் பாருங்கள்..
தாயே இன்று சேயானாள், தன்நிலை மறந்தாள், தலைவன் அவன் தாயானான் தொண்டுகள் செய்தான் ...
http://www.raaga.com/player4/?id=317...59994590003043
மற்றொரு பாடல் விஜயரமணி டி.எம்.எஸ். குரலில் ராகம் தானம் பல்லவி என்று கீதம் மூன்று வகை
இதுவும் அருமையான பாடல்.
கேளுங்கள்
http://www.raaga.com/player4/?id=317...95431336387992
-
4th May 2012 02:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks