-
22nd May 2012, 11:39 AM
#11
Junior Member
Veteran Hubber
http://cinema.dinamalar.com/tamil-ne...eRamaJeyam.htm
இசைஞானி செய்தது நியாயமா?!

ஆந்திராவில் ஆரம்பிக்கப்பட்டபோதே நயன்தாரா - சீதை என்பதால் பலத்த சர்ச்தசகளுக்கு உள்ளான தெலுங்குப்படம் ஸ்ரீராமஜெயம். ஆனாலும் பலத்த எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே என்.டி.ஆரின் கலையுலக வாரிசு பாலகிருஷ்ணா, ராமனாகவும், நயன் சீதையாகவும் நடித்து வெளிவந்த அங்கு சுமாராக ஓடிய ஸ்ரீராமஜெயம் தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளது! ஸ்ரீராமஜெயத்தின் தமிழ் டப்பிற்கு தான் தெலுங்கு பதிப்பிற்கு போட்ட இசையும், பாடல்கள் இசையும் சரியாக பொருந்தாது எனவே இந்தப்படம் தமிழில் தன் கேரியருக்கு கெட்டபெயரை ஏற்படுத்தி விடும் என பயந்த இசைஞானி இளையராஜா படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்க எத்தனையோ வழிகளில் முயவ்று பார்த்தாராம்! பெப்ஸி, புரடியூசர் கவுன்சில், புரடியூசர்கில்டு என எக்கச்சக்க அமைப்புகளில் ஆஃப் தி ரெக்கார்டாக படத்திற்கு தடை கோரி பஞ்சாயத்து பண்ண சொன்னாராம். ஆனாலும் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் என்ன ஏதென்று விசாரிக்கிறோம்... மற்றபடி எதுவும் செய்வதிற்கில்லைஎன மேற்படி அமைப்புகள் எஸ் ஆகிவிட்டனவாம்! தமிழில் இளையராஜாவின் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த வெள்ளியன்று ஸ்ரீராமஜெயம் ரிலீஸ் ஆகி ஆன்மிக ரசிகர்களுக்கு அருள் பாலித்து வருவது தெரியும் தானே?! ஞானி இது நியாயமா?!
-
22nd May 2012 11:39 AM
# ADS
Circuit advertisement
Bookmarks