-
22nd May 2012, 12:36 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
சாதனைச்சித்திரமான 'பட்டிக்காடா பட்டணமா' ஆவனக்குவியலுக்குப்பின் தங்களின் பதிவுகளைக்காண வாய்ப்புக்கிடைக்கவில்லை. தனிப்பட்ட வேலைப்பளு காரணமெனில், போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்பி வாருங்கள்.
அப்படியின்றி, யாரோ சிலர் எழுதிய பதிவுகள் காரணமெனில், அவற்றைத்தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள். காரணம் அவர்களின் நோக்கமே, பம்மலார் அளித்து வரும் ஆதார வரிசைப்பதிவுகளை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்பதுதான். அங்கே தருவதற்கு எதுவுமில்லை எனும்போது, இங்கே தந்துகொண்டு இருக்கிறவர்களை என்ன சொல்லியாவது நிறுத்தி விட வேண்டுமென்பதுதான். (ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயிக்க முடியாதவர்கள், நன்றாக ஓடுபவரின் ஷூக்களுக்குள் கண்ணாடித்துண்டுகளைப் போடுவதைப்போல).
அந்த நோக்கத்தில் அவர்கள் வெற்றிபெற்றுவிட நாம் கொஞ்சமும் இடமளித்து விடக்கூடாது. ஏதோ ஒருசில பேர்களைத்தவிர தளத்திலுள்ள நடுநிலை பங்களிப்பாளர்கள் அனைவரும் தங்கள் ஆதாரப்பதிவுகளை விரும்பிப் பார்க்கிறார்கள். பார்த்து பொய்ப்பிரச்சார மாயைகளிலிருந்து விடுபட்டு வருகிறார்கள். அதுபோக தளத்தில் ப்ங்கேற்காத பலரும் வெளியில் இருந்து தங்களின் பதிவுகளை வாழ்த்தி வரவேற்கிறார்கள் என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
"எவனோ வந்தவன் சொன்ன வாய்ப்பறை கேட்டு நொந்துபோக நான் நோயாளி அல்ல" என்று நம் தலைவர் ராமன் எத்தனை ராமனடியில் (சிவாஜி வேடத்தில்) பேசிய வார்த்தைகளை மனதில் கொண்டு மீண்டும் வந்து கலக்குங்கள்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
-
22nd May 2012 12:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks