-
23rd May 2012, 05:13 PM
#11
Senior Member
Diamond Hubber
Though I am seeing this news since this morning, i didn't post due to kaduppu. but now resisting that and posting...
http://cinema.vikatan.com/?option=co...d=9&Itemid=103
கமல்ஹாஹாஹாசன்!
'அவ்வை சண்முகி', 'தெனாலி', 'பஞ்சதந்திரம்', 'தசாவதாரம்' என கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி தொடர்ந்து வரவேற்பை பெற்ற படங்களை மட்டுமே கொடுத்து இருக்கிறது.
'விஸ்வரூபம்' படத்தினைத் தொடர்ந்து, கமல் நடிக்க இருக்கும் படம் குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. கமல் நடிக்க இருக்கும் அடுத்த படத்தினை தயாரிக்க இருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது மட்டுமே உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் வெற்றிக் கூட்டணியான கமல் - கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தில் இணைய இருக்கிறார்களாம்.
இருவரும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் 'பஞ்சதந்திரம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைய இருக்கிறார்கள்.
எப்போதுமே தனது ஒரு படம் வெளிவர நீண்ட காலம் ஆனால் தனது அடுத்த படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுவார் கமல். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு படத்தினை கூடிய விரைவில் முடித்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்.
ஆகவே இருவரும் இணையும் 'பஞ்சதந்திரம் 2' குறுகிய கால தயாரிப்பாகவும், அதே நேரத்தில் பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் இருக்குமாம்.
'பஞ்சதந்திரம்' படத்தின் காமெடி காட்சிகளும், வசனங்களும் பெரும் வரவேற்பை பெற்றன. அதைப் போலவே இப்படமும் அமைய வேண்டும் என்று திட்டமிட்டு கமல் - கே.எஸ்.ரவிக்குமாரும் பேசி வருகிறார்களாம்.
'கொசுறு' கபாலி : " இந்த படத்துல நடிக்க அசினை புக் பண்ணலாம்னு ஒரு பேச்சு.. பார்ப்போம்! "
-
23rd May 2012 05:13 PM
# ADS
Circuit advertisement
Bookmarks