கிரேட் பம்மலார் சார். கிரேட். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 53 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டீர்கள். என்ன ஒரு வியக்கத்தக்க வைக்கும் ஒரு பதிவு! வீ.பா.க. பொம்மனைப் பற்றி இப்படி ஒரு அரிய பதிவு யாராலும் அளிக்க முடியாது. கேள்விப்படாத, ஆச்சரியப் படவைக்கக்க்கூடிய பல விஷயங்களை அருவி மாதிரி பொழிந்து தள்ளி விட்டீர்கள். இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்ப்பை வேறு எகிற வைக்கிறீர்கள். அரிய ஆவணங்களுக்கு தங்களுக்கு காலம் முழுதும் என்னுடைய நன்றிகள்.
தமிழர்களின் தன்மானத்தை உயர்த்த கட்டபொம்மன் வந்தார்.
நடிகர் திலகம் ரசிகர்களின் தன்மானத்தை உயர்த்த பம்மலார் வந்திருக்கிறார்.
அன்பு நண்பர்களே!
ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. யார் யாரோ முயற்சி செய்தும் இறுதியில் கட்டபொம்மன் நடிகர் திலகத்திடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்து விட்டார். தஞ்சமடைந்த கட்டபொம்மனுக்கு பஞ்சம் வைக்காமல் உலகப் புகழை நம் நடிகர் திலகம் பெற்றுத் தந்து விட்டார். இப்போது நடிகர்திலகத்திற்கும், கட்டபொம்மனுக்கும் சேர்த்து நம் பம்மலார் தன் அற்புதப் பதிவின் மூலம் மேலும் மேலும் அவர்கள் புகழை உலகம் முழுதும் பரவச் செய்து விட்டார். அப்படிப்பட்ட நம் அன்பு பம்மலாருக்கு நமது திரியின் மூலம் நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது. பம்மலார் சார் மிக உயர்ந்த முறையில் அவருடைய ஈடு இணையற்ற சேவைக்காக மிகச் சிறந்த முறையில் கௌரவிக்கப் பட வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை மற்றும் வேண்டுகோள். அதற்கான தகுதியும், திறமையும் அவரிடம் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற அரிய ஆவணங்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவருடைய வாழ்நாள் முயற்சிகளின் பலனாக மிக எளிதாக சிரமமே இல்லாமல் நாம் அற்புத அரிய ஆவணங்களைப் பெற்று விடுகிறோம். இதன் உழைப்பின் பின்னணி எவ்வளவு என்பது வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்பேர்ப்பட்ட நம் பம்மலார் கண்டிப்பாக நம்மால் கௌரவப் படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த விருப்பம் நம் அனைவரது எண்ணங்களிலும் கலந்திருப்பது நிஜம். அதை செயல் படுத்தத் தயாராவோம் என உறுதி ஏற்போம். நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks