-
24th May 2012, 05:13 AM
#3481
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
முதன்முதலில் "கட்டபொம்ம"னை, திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்தான் தனது 'ஜெமினி ஸ்டூடியோஸ்' பட நிறுவனம் சார்பாக, ஒரு முழுநீள திரைப்படமாக தயாரிக்க முடிவுசெய்து, 1953-ம் ஆண்டு அதற்கான விளம்பரத்தையும், அறிவிப்பினையும் பத்திரிகைகளில் வெளியிட்டார். அதில் 'கட்டபொம்ம'னாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் குறிப்பிடப்படவில்லை. அந்த அபூர்வ ஆவணங்கள் அன்புள்ளங்களின் பார்வைக்கு:
ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் : சுதேசமித்ரன் : 5.11.1953 (தீபாவளித் திருநாள்)

ஜெமினியின் 'கட்டபொம்மன்' அறிவிப்பு : ஆனந்த விகடன் : 8.11.1953

அதன் பின்னர் "கட்டபொம்ம"னுக்கான படத்தயாரிப்பு பணிகளும் 'ஜெமினி'யில் மும்முரமாக நடைபெறவில்லை. நாடக உலக ஜாம்பவான்களான டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களது நாடக மன்றம் சார்பில் 'கட்டபொம்ம'னை, "முதல் முழக்கம்" என்ற பெயரில் நாடகமாக நடத்தினர். ஆரம்பத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்நாடகம், தொடர்ந்து பொதுமக்களிடம் போதிய வரவேற்பு பெற முடியாமல் போனதால் அவர்களின் "முதல் முழக்கம்" நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. இடையிடையே 'கட்டபொம்மன்' கனவு சிலருக்கும் வந்து அது பலிக்காமலும் போனது. அதன் பின்னர் 'கட்டபொம்மன்' சரிதையை, நமது நடிகர் திலகம் 'கட்டபொம்ம'னாக உருமாறி, 'வீரபாண்டிய கட்டபொம்மன்" என்ற பெயரில், தனது 'சிவாஜி நாடக மன்றம்' சார்பில், நாடகமாக உருவாக்கி 28.8.1957 புதனன்று, சேலம் கண்காட்சி கலையரங்கில் அரங்கேற்றம் செய்தார். "வீரபாண்டிய கட்டபொம்ம'னுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு. அவ்வகையில் 'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதையை விவரிக்கும் ஒரு கட்டுரை:
'கட்டபொம்மன்' கலையுலகில் கடந்து வந்த பாதை
வரலாற்று ஆவணம் : தென்றல் திரை : 5.10.1957
(சிவாஜியின் "கட்டபொம்மன்" நாடகச் சிறப்பிதழ்)

"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படம் வெளியாகும் வரை இந்நாடகம் 100 முறை மிகமிக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. திரைப்படம் வெளிவந்து ஓடிமுடிந்தபின்பும் ஒரு 12 முறை நடத்தப்பட்டது. ஆக, இந்த 112 முறையில், இந்நாடகத்தின் அபார வசூல் மூலம் நமது நடிகர் திலகம் பல்வேறு ஸ்தாபனங்களுக்கும், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மற்றும் பல்வேறு நற்செயல்களுக்கும் அள்ளி அளித்துள்ள நன்கொடை மட்டும் ரூபாய் முப்பத்து இரண்டு லட்சம். இத்தொகை இன்றைய பொருளாதார மதிப்பீட்டில் பற்பல கோடிகளுக்குச் சமம்.
1957 முதல் மிகமிக வெற்றிகரமாக நடைபெற்று வந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகத்தை அதே பெயரில் திரைப்படமாக தயாரிக்க, நடிகர் திலகத்தின் ஆப்த நண்பரான 'பத்மினி பிக்சர்ஸ்' திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் விருப்பம் தெரிவித்தார். இதற்கு வாசன் அவர்களும், நடிகர் திலகமும் சம்மதம் தெரிவிக்கவே, பி.ஆர். பந்துலுவின் 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பாக, நமது தேசிய திலகம் 'கட்டபொம்மு'வாக வாழ்ந்து காட்டிய "வீரபாண்டிய கட்டபொம்மன்", திரைப்படமாக வெளிவந்து வெள்ளிவிழா கண்டது. 1960-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவில் கலந்து கொண்ட இத்திரைப்படம், நமது நடிகர் திலகத்துக்கு ஆசிய-ஆப்பிரிக்க கண்டங்களின் சிறந்த நடிகர் என்ற மிகப்பெரிய விருதைப் பெற்றுத் தந்தது. திரை இசைத்துறையில் சிறந்த இசையமைப்பாளராக திரை இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்களும் விருதுக்கு உரியவரானார். நடிகர் திலகத்தின் ஈடு-இணையில்லா நடிப்பாற்றலுக்கு என்றென்றும் கட்டியம் கூறும் காலத்தை வென்ற காவியமாக மறுவெளியீடுகளிலும் இக்காவியம் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பெருமைகளுக்குரிய "வீரபாண்டிய கட்டபொம்மன்" வண்ணத் திரைக்காவியத்தின் துவக்க விழா பற்றி:
"வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைக்காவியத் துவக்க விழா
வரலாற்று ஆவணம் : இந்தியன் மூவி நியூஸ் (IMN Singapore) : 1957


கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
-
24th May 2012 05:13 AM
# ADS
Circuit advertisement
-
24th May 2012, 05:47 AM
#3482
Junior Member
Junior Hubber
திரு. பம்மலார் அவர்களுக்கு,
அதிகாலையிலேயே துவங்கிய உங்களின் திருப்பனிக்கு என் வாழ்த்துக்கள். கட்டபொம்மனை பற்றிய செய்திகள் அருமை. 1953ல் இருந்து ஆரம்பித்து இருப்பது, செய்திகள் புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. கட்டபொம்மன் திரைப்படத்தில் முதலில் வெள்ளையத்தேவனாக எம்.ஜி.ஆர் அவர்களை நடிக்க வைப்பதாக இருந்ததாகவும் பிறகு அந்த பாத்திரத்திற்கு ஜெமினி அவர்களை நடிக்க வைத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் கட்டபொம்மனாக எம்.ஜி.ஆர் அவர்களும், வெள்ளையத்தேவனாக நமது நடிகர் திலகம் அவர்களையும் கூட நடிக்க வைப்பதாக திட்டம் இருந்ததாகவும், வழக்கம்போல் எம்.ஜி.ஆர் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் எது உண்மை, எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தங்களுக்கு இது பற்றி தெரிந்தால் இந்த கட்டபொம்மன் கட்டுரையில் விளக்கவும். மேலும் உங்களின் பெரும்பனி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்
-
24th May 2012, 06:04 AM
#3483
Senior Member
Seasoned Hubber
அன்பு நண்பர்களுக்கு,
எனது தாயார் மறைவிற்கு இரங்கள் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றியினைப் பணிவன்புடன் கூறிக் கொள்கிறேன். வருத்த முற்ற உள்ளத்திற்கு தங்கள் ஆறுதல் உரைகள் ஓரளவிற்கு மன வலியமையைத் தந்துள்ளன. மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
24th May 2012, 06:14 AM
#3484
Senior Member
Seasoned Hubber
-
24th May 2012, 07:37 AM
#3485
Senior Member
Diamond Hubber

கிரேட் பம்மலார் சார். கிரேட். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட 53 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டீர்கள். என்ன ஒரு வியக்கத்தக்க வைக்கும் ஒரு பதிவு! வீ.பா.க. பொம்மனைப் பற்றி இப்படி ஒரு அரிய பதிவு யாராலும் அளிக்க முடியாது. கேள்விப்படாத, ஆச்சரியப் படவைக்கக்க்கூடிய பல விஷயங்களை அருவி மாதிரி பொழிந்து தள்ளி விட்டீர்கள். இன்னும் களைகட்டும் என்று எதிர்பார்ப்பை வேறு எகிற வைக்கிறீர்கள். அரிய ஆவணங்களுக்கு தங்களுக்கு காலம் முழுதும் என்னுடைய நன்றிகள்.
தமிழர்களின் தன்மானத்தை உயர்த்த கட்டபொம்மன் வந்தார்.
நடிகர் திலகம் ரசிகர்களின் தன்மானத்தை உயர்த்த பம்மலார் வந்திருக்கிறார்.
அன்பு நண்பர்களே!
ஜெமினியின் 'கட்டபொம்மன்' விளம்பரம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. யார் யாரோ முயற்சி செய்தும் இறுதியில் கட்டபொம்மன் நடிகர் திலகத்திடம் அடைக்கலம் கேட்டு தஞ்சமடைந்து விட்டார். தஞ்சமடைந்த கட்டபொம்மனுக்கு பஞ்சம் வைக்காமல் உலகப் புகழை நம் நடிகர் திலகம் பெற்றுத் தந்து விட்டார். இப்போது நடிகர்திலகத்திற்கும், கட்டபொம்மனுக்கும் சேர்த்து நம் பம்மலார் தன் அற்புதப் பதிவின் மூலம் மேலும் மேலும் அவர்கள் புகழை உலகம் முழுதும் பரவச் செய்து விட்டார். அப்படிப்பட்ட நம் அன்பு பம்மலாருக்கு நமது திரியின் மூலம் நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது. பம்மலார் சார் மிக உயர்ந்த முறையில் அவருடைய ஈடு இணையற்ற சேவைக்காக மிகச் சிறந்த முறையில் கௌரவிக்கப் பட வேண்டும் என்பது என் விருப்பம், ஆசை மற்றும் வேண்டுகோள். அதற்கான தகுதியும், திறமையும் அவரிடம் குவிந்து கிடக்கின்றன. இது போன்ற அரிய ஆவணங்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவருடைய வாழ்நாள் முயற்சிகளின் பலனாக மிக எளிதாக சிரமமே இல்லாமல் நாம் அற்புத அரிய ஆவணங்களைப் பெற்று விடுகிறோம். இதன் உழைப்பின் பின்னணி எவ்வளவு என்பது வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. அப்பேர்ப்பட்ட நம் பம்மலார் கண்டிப்பாக நம்மால் கௌரவப் படுத்தப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளுக்கு நாம் தயாராக வேண்டும். இந்த விருப்பம் நம் அனைவரது எண்ணங்களிலும் கலந்திருப்பது நிஜம். அதை செயல் படுத்தத் தயாராவோம் என உறுதி ஏற்போம். நன்றி!
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 24th May 2012 at 07:56 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
24th May 2012, 07:48 AM
#3486
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட 50வது ஆண்டு நிறைவு விழாவை மிகச் சரியான தருணத்தில் நினைவுகூர வைத்து விட்டீர்கள். படப்பிடிப்பின் போது பயன் படுத்தப் பட்ட பொருட்கள் பற்றிய பதிவு, ஜாக்சன் துரையாக நடித்த திரு பார்த்திபன் அவர்கள் கௌரவிக்கப் பட்ட காட்சி, விழாவினையொட்டி வெளியிடப் பட்ட அஞ்சல் உறை அனைத்தும் அருமை. என் மனமுவந்த நன்றிகள்.
-
24th May 2012, 10:39 AM
#3487
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
வீறுகொண்டு எழுந்து வீர முழக்கமிட்ட 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைக்காவியம் உருவான வரலாறு மலைக்க வைக்கிறது. மலைப்புக்கு காரணம் அப்போது நடந்த சம்பவங்கள் என்றால், அதைவிட பல மடங்கு மலைப்புக்குக் காரணம், இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவற்றை நாம் கண்டு வியக்கும் வண்ணம் தருவதற்கு 'பம்மலார்' என்ற மாமனிதர் இருக்கிறாரே என்ற வியப்புத்தான் காரணம்.
அன்புச்சகோதரர் வாசுதேவன் அழகாகச் சொன்னது போல, நீங்கள் எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு நாடகளை, மாதங்களை, வருடங்களை மற்றும் பொருளாதாரங்களை செலவழித்துத் தேடிய ஆவணப்பொக்கிஷங்களை, யாம் பெற்ற இன்பம் பெறுக நடிகர்திலகத்தின் ரசிகர்களும் என்று அள்ளி வழங்கிக்கொண்டிருக்க, நாங்கள் 'நோகாமல் நொங்கு தின்று கொண்டிருக்கிறோம்'.
ஏற்கெனவே பல நண்பர்கள் எனக்குத்தனி மடலில் சொன்னது போல, தங்களின் சீரிய சேவைக்காக எதிர்வரும் நடிகர்திலகத்தின் பிறந்த நாள்விழாவில் தாங்கள் மேடையேற்றப்பட்டு, மாலை சூடப்பட்டு, பொன்னாடை அணிவிக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டு சீரிய முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது அனைத்து ரசிகர்களின் தணியாத தாகம்.
ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை அன்புக்குரிய ராகவேந்தர் சார் அவர்கள் நடிகர்திலகத்தின் புதல்வர்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று ஆவண செய்ய வேண்டும்.
உங்கள் சீரிய சேவை தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள்.
-
24th May 2012, 11:16 AM
#3488
Senior Member
Veteran Hubber
அன்பு ராகவேந்தர் சார்,
ருஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற 'கட்டபொம்மன் - 50' சிறப்பு நிகழ்ச்சிகளையும் அது தொடர்பான கண்காட்சியையும் மீண்டும் சரியான தருணத்தில் நினைவுகூறும் வண்ணம் மறுபதிப்புச்செய்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
அன்புள்ள் சிவாஜிதாசன் சார்,
'கட்டபொம்மன் திரைப்படத்தில் நடிகர்திலகம் மன்னர் கட்டபொம்மனாகவும், ஜெமினி தளபதி வெள்ளையத்தேவனாகவும், எஸ்.எஸ்.ஆர். கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையாகவும் நடிக்க வைக்க ஏற்பாடாகியிருந்தது. ஆனால் கட்டபொம்மனுக்குப்போட்டியாக கண்ணதாசனால் எடுக்கப்பட்ட 'சிவகங்கைச்சீமை'யில், எஸ்.எஸ்.ஆர். கதாநாயகன் முத்தழகுவாக நடித்ததால் கட்டபொம்மனில் நடிக்க முடியாமல், அந்த பாத்திரத்தில் ஓ.ஏ.கே.தேவர் நடித்து சிறப்பு சேர்த்தார், அவரும் சிறப்படைந்தார்.
மற்றபடி, 'க்ட்டபொம்மனில்' எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்ததாக நீங்கள் சொல்லியிருப்பது இதற்குமுன் கேள்விப்படாதது.
-
24th May 2012, 11:34 AM
#3489
Senior Member
Diamond Hubber
Pammalar,
The VPKP documents are .... Chance-less
-
24th May 2012, 11:42 AM
#3490
Moderator
Platinum Hubber
Look at the cadence changing in each set
Lines by?
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Bookmarks