-
27th May 2012, 06:03 AM
#3591
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
சாதனைப் பொன்னேடுகள் [தொடர்ச்சி....]
100வது நாள் விளம்பரம் : The Hindu : 23.8.1959

வெள்ளிவிழா குறும்பிரசுர விளம்பரம்
[மதுரை-ராம்நாட்-திருநெல்வேலி ஏரியாக்களின் விநியோகஸ்தரான 'அஜந்தா பிக்சர்ஸ்(மதுரை)' வெளியிட்டது]

குறிப்பு:
அ. "வீரபாண்டிய கட்டபொம்மன்", நமது தேசிய திலகத்தின் 55வது திரைக்காவியம் மற்றும் முழுமுதல் வண்ணச்சித்திரம். முழுவதும் 'கேவா' கலரில் தயாரிக்கப்பட்டு பின் 'டெக்னி' கலராக மாற்றப்பட்டு திரையிடப்பட்ட திரைக்காவியம். 'டெக்னி' கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் உருவாக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'டெக்னி' கலரில் வெளிவந்த முதல் திரைக்காவியம்.
ஆ. முதல் வெளியீட்டில் வெளியான அனைத்து ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், அதில்,25 அரங்குகளில் 97 நாட்களும் அதற்கு மேலும் மிகமிக வெற்றிகரமாக ஓடி விண்ணை முட்டும் சாதனையைப் புரிந்தது. இதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.
இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்
ஈ. 97 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடி விழாக் கொண்டாடிய அரங்குகள் : 24
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 111 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 160 நாட்கள்
5. திருச்சி - ஜுபிடர் - 153 நாட்கள்
6. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 118 நாட்கள்
7. திண்டுக்கல் - சக்தி (1208 இருக்கைகள்) - 111 நாட்கள்
8. வேலூர் - ராஜா - 104 நாட்கள்
9. திருவனந்தபுரம் - பத்மனாபா - 104 நாட்கள்
10. கொழும்பு(இலங்கை) - கெயிட்டி - 140 நாட்கள்
11. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 97 நாட்கள்
12. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 97 நாட்கள்
13. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 97 நாட்கள்
14. நெல்லை - ராயல் (1053 இருக்கைகள்) - 97 நாட்கள்
15. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 97 நாட்கள்
16. தஞ்சை - யாகப்பா (1280 இருக்கைகள்) - 97 நாட்கள்
17. குடந்தை - டைமண்ட் - 97 நாட்கள்
18. விருதுநகர் - ராதா (731 இருக்கைகள்) - 97 நாட்கள்
19. தர்மாபுரி - சென்ட்ரல் - 97 நாட்கள்
20. கடலூர் - நியூசினிமா - 97 நாட்கள்
21. பாண்டிச்சேரி - கமர்ஷியல் - 97 நாட்கள்
22. ஆரணி - லக்ஷ்மி (1197 இருக்கைகள்) - 97 நாட்கள்
23. காஞ்சிபுரம் - கண்ணன் (1210 இருக்கைகள்) - 97 நாட்கள்
24. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 97 நாட்கள்
உ. நமது நடிகர் திலகத்தின் 56வது திரைக்காவியமாக "மரகதம்", 21.8.1959 வெள்ளியன்று, "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெளியான 98வது நாளில் வெளியானதால், 97 நாட்கள் ஓடியிருந்த நிலையில் இக்காவியம், "மரகத"த்திற்கு வழிவிடவேண்டியதாகிவிட்டது. இதனால் இந்த வண்ணக்காவியம் 14 அரங்குகளில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.
ஊ. மெகாமகா வெற்றிக்காவியமான "வீரபாண்டிய கட்டபொம்மன்", தமிழ்த் திரை வரலாற்றில், 1959-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம்.
எ. 1959-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலக பாக்ஸ்-ஆபீஸில் வசூலில் மாபெரும் சாதனை புரிந்த திரைக்காவியங்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மன்
2. பாகப்பிரிவினை
3. கல்யாண பரிசு
ஏ. ஏழிசை வேந்தர், சாதனைச் சிகரம் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் ஒரே வருடத்தில் இரு வெள்ளிவிழாக் காவியங்களை அளித்த பெருமை நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. நமது நடிகர் திலகத்தின் 1959-ம் ஆண்டு வெளியீடுகளான "வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் "பாகப்பிரிவினை", இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய காவியங்கள். இதே சாதனையைப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என இன்னொரு ஐந்து முறை செய்து காட்டியிருக்கிறார் நமது சாதனைச் சக்கரவர்த்தி. [பாகவதருக்கு 1937-ல், "சிந்தாமணி"யும், "அம்பிகாபதி"யும் பொன்விழா(50 வாரங்கள்) கொண்டாடின.]
ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
கட்டபொம்மன் களைகட்டுவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 27th May 2012 at 06:08 AM.
pammalar
-
27th May 2012 06:03 AM
# ADS
Circuit advertisement
-
27th May 2012, 06:29 AM
#3592
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
pammalar
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்
பக்தியுடன்,
பம்மலார்.
Thank you Pammalar sir. I have seen our NT attended 100th day or silver jubilee photos in Madurai New Cinema theatre in my school days.
Murali sir, have you seen that photo, please write more about that photo?
Cheers,
Sathish
-
27th May 2012, 06:44 AM
#3593
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
தங்கள் கனிவான பாராட்டிற்கு நன்றி.
Thank You very much kumareshanprabhu sir.
டியர் பாலா சார்,
தங்களுடைய 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வடிவமைப்பு பிரம்மாண்டம், பிரமாதம். அதற்காக என் நன்றிகள். தங்களுடைய என் குமுதம் பதிவு பாராட்டிற்கும் என் அன்பு நன்றிகள்.
-
27th May 2012, 06:56 AM
#3594
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள். தலைவர் படங்களின் முதல் நாள் தியேட்டர் அனுபவங்களை தங்களிடமிருந்து எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.நன்றி!
-
27th May 2012, 07:18 AM
#3595
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் The Hindu 100வது நாள் விளம்பரம், 'அஜந்தா பிக்சர்ஸ்(மதுரை)' வெளியிட்ட வெள்ளிவிழா குறும்பிரசுர விளம்பரம் இரண்டும் அருமையோ அருமை.
"வீரபாண்டிய கட்டபொம்மன்" பற்றிய குறிப்புகள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையான குறிப்புப் பதிவுகள் தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் அசாத்திய, அபாரமான நம்பிக்கைகளுக்கு அச்சாரமாயும், சான்றாயும் அமைந்துள்ளன. Trust என்றால் பம்மலார்... பம்மலார் என்றால் Trust அல்லவா!
வழக்கம் போல மரகதம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கே வில்லனாயிற்று. எல்லாம் நாம் வாங்கி வந்த வரம். வேறு என்ன சொல்ல. நமக்கு நாமே வில்லன்.
தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் குறிப்பு பொன்னெழுத்துக்களால் தங்கத் தகட்டில் பதிக்கப்பட வேண்டியது.
இமாலயக் குறிப்புகளுக்கு இமாலய நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th May 2012 at 07:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
27th May 2012, 08:43 AM
#3596
Senior Member
Diamond Hubber
'வீரபாண்டிய கட்டபொம்மன்' சிறப்பு நிழற்படங்கள்


அன்புடன்,
வாசுதேவன்.
-
27th May 2012, 08:53 AM
#3597
Senior Member
Diamond Hubber
-
27th May 2012, 09:23 AM
#3598
Senior Member
Diamond Hubber

கன்னட மொழி பாடும் கட்டபொம்மன்
"பிரபோ கிருபாகரா"...
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th May 2012 at 10:30 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
27th May 2012, 09:57 AM
#3599
Senior Member
Devoted Hubber
Pammalar / Vasudevan,
Amazing details about VKPB. அப்படியே கொஞ்சம் VKPB re-release ரெகார்டையும் இங்கே சொல்லிடுங்க.
Regards
-
27th May 2012, 10:02 AM
#3600
Senior Member
Diamond Hubber

The Gramophone Company of India Ltd தயாரித்த 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' காவியத்திற்கான (R.P.M. Record) இசைத்தட்டில் உள்ள பாடல்களின் விவரங்கள். "டக்கு டக்கு" மற்றும் "சிங்காரக் கண்ணே" பாடல்கள், பாடல்கள் விவர அட்டையில் miss ஆகி இருப்பதைக் காணலாம்.
.JPG)
நன்றி: tamilfilmstory.blogspot.in
Last edited by vasudevan31355; 27th May 2012 at 10:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks