-
27th May 2012, 07:18 AM
#11
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
வீரபாண்டிய கட்டபொம்மன் The Hindu 100வது நாள் விளம்பரம், 'அஜந்தா பிக்சர்ஸ்(மதுரை)' வெளியிட்ட வெள்ளிவிழா குறும்பிரசுர விளம்பரம் இரண்டும் அருமையோ அருமை.
"வீரபாண்டிய கட்டபொம்மன்" பற்றிய குறிப்புகள் குதூகலத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையான குறிப்புப் பதிவுகள் தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் அசாத்திய, அபாரமான நம்பிக்கைகளுக்கு அச்சாரமாயும், சான்றாயும் அமைந்துள்ளன. Trust என்றால் பம்மலார்... பம்மலார் என்றால் Trust அல்லவா!
வழக்கம் போல மரகதம் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கே வில்லனாயிற்று. எல்லாம் நாம் வாங்கி வந்த வரம். வேறு என்ன சொல்ல. நமக்கு நாமே வில்லன்.
தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் குறிப்பு பொன்னெழுத்துக்களால் தங்கத் தகட்டில் பதிக்கப்பட வேண்டியது.
இமாலயக் குறிப்புகளுக்கு இமாலய நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th May 2012 at 07:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
27th May 2012 07:18 AM
# ADS
Circuit advertisement
Bookmarks