-
5th June 2012, 07:48 AM
#3781
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற தங்கை திரைக் காவியத்தின் விளம்பரத்தை இட்டு அசத்தியுள்ளீர்கள். நவமணி, பிராட்வே டைம்ஸ், மெயில், மூவிலேண்ட் போன்ற பத்திரிகைகளைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளவும் இவ்விளம்பரம் உதவுகிறது. மூவீலேண்ட் பத்திரிகை பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் நடத்திதாகும். அதனுடைய ஏதாவது ஒரு பிரதி தங்களிடம் இருந்தால் அட்டைப் படத்தை இங்கு வெளியிடலாம்.
அன்புடன்
-
5th June 2012 07:48 AM
# ADS
Circuit advertisement
-
5th June 2012, 09:25 AM
#3782
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரா சார்,
உங்கள் கருத்துக்கு நன்றி ..அது குறித்து மேலும் விவாதிக்க அவா உண்டு .ஆனால் இது அதற்கான தளம் அல்ல என நம்புகிறேன் .நாம் மீண்டும் நேரில் சந்திக்க வாய்க்கும் போது விவாதிக்கலாம் .
-
5th June 2012, 02:59 PM
#3783
Junior Member
Newbie Hubber
அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்
2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)
பம்மலார் அவர்களே,
நீங்கள் போட்ட கர்ணன் பட 100 நாள் ஓடிய குறிப்பில் சென்னை ,பிரபாத் ,மற்றும் சயானி இப் படம் 100 நாட்கள் ஓடவில்லை பொய்யான தகவல் ரெண்டு அரங்கிலும் எட்டு வாரம் மட்டுமே ஓடியது ,அது மட்டுமல்லாமல் ஒம்பது அரங்கில்தான் ஐம்பது நாள் ஓடியது தவறை திருத்திகொள்ளவும் .
-
5th June 2012, 05:36 PM
#3784
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் அவர்களே,
கலைஞரின் பிறந்தநாள் பதிவுகளின் முத்தாய்ப்பாக, நடிகர்திலகத்தின் உணர்ச்சி பொங்கும் உரை கண்களில் நீரை வரவழைத்தது. அரசியல் எல்லைகளைத்தாண்டி எப்பேற்பட்ட நட்புணர்வு அவர்களிடையே இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
அதே சமயம் ராகவேந்தர் அவர்கள் சொன்னது போல, அறுபதுகளின்போது (குறிப்பாக 67 தேர்தலின்போது), தங்களிடம் இருந்த 'இன்னொரு சக்தி'யின் உதவியுடன் நமது நடிகர்திலகம் எப்படியெல்லாம் கேலி செய்யப்பட்டார், அவமானத்துக்குள்ளாக்கப் பட்டார் என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. அந்த இன்னொரு சக்தியே அவருக்கு சத்ருவான போதுதான் உண்மையான நட்பின் மகிமை அவர்களுக்குப் புரிந்தது. அதே சமயம் அந்த இன்னொரு சக்தியுடன் நடிகர்திலகம் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய நேர்ந்ததெல்லாம், தான் சார்ந்திருந்த கட்சிக்காக சகித்துக்கொண்ட காலத்தின் கோலம் என்பதைத்தவிர வேறில்லை. அதைவிட இவர் தனிக்கட்சி துவங்கி அவரது துணைவிக்கே துணையாகப்போனது மகா பெரிய கொடுமை.
'தங்கை' படத்தின் விளம்பரங்கள் அருமை. குமுதம் பத்திரிகைக்கு விளம்பரத்திலேயே கொடுத்த சூடு, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று விமர்சிப்போருக்கு நல்ல பாடம்.
'தியாகம்' 100வது நாள் விளம்பரத்தில் விகடன், இதயம் பத்திரிகைகளுக்கு பாலாஜி கொடுத்த சாட்டையடி நினைவிருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்க்கும்போது தங்கையிலேயே அதைத் துவங்கி விட்டார் என்று தெரிகிறது.
அரிய ஆவணங்களை அள்ளி வழங்கியமைக்கு மிக்க நன்றி.
-
5th June 2012, 05:53 PM
#3785
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
தங்களின் 'தங்கப்பதக்கம்' மேளா படு சூப்பர். படத்தின் உணர்ச்சி மயமான கட்டங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன.
ஒரு போலீஸ் அதிகாரி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவரை, புகைப்படத்தொகுப்பிலும், வீடியோ காட்சிகளிலும் அப்படியே வார்த்து விட்டீர்கள். நன்றிகள், பாராட்டுக்கள்.
இனி ஆவணத்திலகம் (மற்றும் புள்ளிவிவரத்திலகம்) பம்மலார் எப்படி அசத்தப்போகிறார் என்று பார்க்க தவமிருக்கிறோம்.
-
5th June 2012, 06:43 PM
#3786
Senior Member
Veteran Hubber
திரு எம்.ஜி.ஆர். ராஜு அவர்களே,
யாருடைய புள்ளி விவரத்தில் குறை காண்கிறீர்கள்..?.
ஒரு படம் ஒரு தியேட்டரில் எந்த தேதியில் திரையிடப்பட்டது, எந்த தேதி வரை எத்தனை நாள் அங்கு ஓடியது, அந்தப்படம் தியேட்டரிலிருந்து எடுக்கப்பட்ட மறுநாள் அங்கு எந்தப்படம் திரையிடப்பட்டது என்ற புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவரிடமா..?.
கர்ணன் 100-வது நாள் விளம்பரத்தைப் பதிவிடும்வரை (இப்போதைய ரீ-ரிலீஸ் 100 நாள் விளம்பரத்தை அல்ல, 1964-ம் ஆண்டு விளம்பரத்தை பதிவிடும்வரை) இப்படி புலம்பிக்கொண்டுதான் இருப்பீர்கள்.
-
5th June 2012, 07:00 PM
#3787
Junior Member
Seasoned Hubber
-
5th June 2012, 09:25 PM
#3788
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
ஆக்ஷன் & செண்டிமெண்ட் களேபரம் 'தங்கை' விளம்பரப் பதிவுகள் தங்கம். தங்கைக்கான குமுதம் விமர்சனம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது. என்ன நினைத்து அந்த விமர்சனம் எழுதப்பட்டது? அந்தப் படத்தை இதுவரை யாரும் குறை கூறி நான் கேட்டதே இல்லை. இன்னும் சொல்லப் போனால் தலைவர் ஆக்ஷன் மூவிகளில் நடிக்க அடித்தளமிட்டு பின்னாட்களில் தான் ஆக்டிங் கிங் மட்டுமல்ல ஆக்ஷனிலும் கிங்தான் என்று நிரூபிக்க வைத்த சூப்பர் டூப்பர் படம் அது.
(குறிப்பு: விரைவில் 'தங்கை' திரைப்படத்தில் தலைவர் தூள்பரத்திய ஸ்டைலான ஒரு சண்டைக்காட்சியை வீடியோவாக நம் அன்பு நேயர்களுக்காக பதிவிடுகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்).
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள் தொடர்ச்சியாக நடிகர் திலகம் கலைஞரைப் பற்றி ஆற்றிய உணர்வுபூர்வமான பாராட்டுரை ஒரு நிஜமான பாசவுரை. படித்து முடித்ததும் கண்கள் பனித்தன. ஆரம்பத்தில் கலைஞரை அவர் என்று குறிப்பிட்ட நடிகர் திலகம் பின்னுரையின் போது நட்பின் மிகுதியில் கலைஞரை உன், உன்னுடைய என்ற ஒருமை வார்த்தையில் விளித்தது அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நட்பின் ஆழத்தை நன்கு உணர்த்துகிறது.
பதிவுத்திலகமான தங்களுக்கு பலகோடி நன்றிகள்.
-
5th June 2012, 09:35 PM
#3789
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
தங்கமான தங்கள் பாராட்டுதல்களுக்கு தங்க நன்றிகள்.
தாங்கள் குறிப்பிட்டிருந்தது போல தியாகம் நூறாவது நாள் விளம்பரத்தில் "தவறாக விளம்பரம் செய்த விகடர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்" என்று பாலாஜி விளம்பரம் அளித்திருந்தார். தலைவர் full standing போஸில் தாடியுடன் அமர்களமாக நிற்கும் போஸ் அந்த விளம்பரத்தின் ஹைலைட். தங்கள் ஞாபகசக்திக்கு என் ஷொட்டுடன் கூடிய பாராட்டுக்கள்.
-
5th June 2012, 09:50 PM
#3790
Senior Member
Diamond Hubber
திரு எம்.ஜி.ஆர். ராஜு அவர்களே
திரிக்கு புது வரவான தங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
முதல் பதிவையே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அளித்திருக்கிறீர்கள். பொய் மூட்டையையும் , புளுகு மூட்டையையும் அவிழ்த்துவிட அவசியம் பம்மலாருக்கு இல்லை. உண்மையான புள்ளி விவரங்களை தருவதற்கு பம்மலார் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகள் தங்களைப் போன்றவர்களுக்கு தெரிய நியாயமில்லைதான். பொய் புரட்டிற்கு நடிகர் திலகம் திரியில் வேலையுமில்லை. அதற்கென்று சில பேர் வேறு சில திரிகளில் முழுநேர வேலையாகவே அதை செய்து வருகிறார்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள். தயவு செய்து வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எழுதாதீர்கள்.
Bookmarks