-
7th June 2012, 04:56 PM
#3841
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
கர்ணன் வெற்றியைப் பற்றிய தகவல்கள், சத்யம் விளம்பர நிழற்படம் என கொடிகட்டிப் பறக்கிறது, பம்மலாரின் ராஜ்யம், சூப்பரோ சூப்பர்..
பாராட்டுக்கள்.
அன்புடன்
-
7th June 2012 04:56 PM
# ADS
Circuit advertisement
-
7th June 2012, 04:57 PM
#3842
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
சத்யம் படத்தின் விளம்பரத்தை பதிவிட்டு பம்மலார் அசத்தினார் என்றால் படக் காட்சிகளின் நிழற்படங்களை வெளியிட்டு தாங்கள் அசத்தி வருகிறீர்கள். அட்டகாசமான ஸ்டில்கள். சூப்பர்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
-
7th June 2012, 04:58 PM
#3843
Senior Member
Seasoned Hubber
இந்திய இதிகாசமான மஹாபாரதத்தினைப் பற்றி எதிர்காலத் தலைமுறைக்கு பெற்றோர்கள் எடுத்துச் சொல்ல ஒரு பொன்னான வாய்ப்பு, கர்ணன் திரைக்காவியம். ஆயிரம் புத்தகங்கள் சொல்வதை ஒரு ஓவியம் கூறிவிடும் என்பார்கள். அப்படி காட்சிக்குக் காட்சி ஓவியம் போல் செதுக்கப் பட்டது தான் கர்ணன் திரைக்காவியம். பள்ளிக் குழந்தைகள் இந்த வாய்ப்பினை பயன் படுத்திக் கொண்டு கர்ணன் திரைப்படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்ய திவ்யா பிலிம்ஸ் நிர்வாகம் முன்வந்துள்ளது. 13வது வாரத்தையொட்டி நாளிதழில் வெளி வர உள்ள விளம்பரத்தின் நிழற்படம்.
-
7th June 2012, 05:47 PM
#3844
Senior Member
Seasoned Hubber
NT melody song
What a melody song from Mannkkul Vairam
Cheers,
Sathish
-
7th June 2012, 07:50 PM
#3845
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
'சத்யம்' நிழற்பட வரிசை அருமை. தலைவருக்கு ஒரு பெரிய மனிதத்தோரணையுடன் கூடிய சிகையலங்காரம் வெகுவாகப் பொருந்தியுள்ளது. இருப்பினும், தனது பழைய ஜோடியுடன் பதினோரு வருடங்களுக்குப்பின் (1965 நீலவானம் - 1976 சத்யம்) இணைந்திருக்கும் ஒரு ஸ்டில்கூட இல்லாதது என் போன்ற ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றம் தந்தது.
இடையே நடிகர்திலகத்தின் சரஸ்வதி சபதம், பாரத விலாஸ், எங்கிருந்தோ வந்தாள் போன்ற படங்களில் அவரை யார் யாருக்கோ ஜோடியாகப் பார்த்து மனம் புழுங்கிய நிலையில்தான், ஆறுதலாக மீண்டும் சத்யத்தில் ஜோடி சேர்ந்தார். (அதிலும் சரஸ்வதி சபதம் ரொம்பக்கொடுமை. இவரது எல்லா ஜோடிகளும் (பத்மினி, தேவிகா, கே.ஆர்.விஜயா) படத்தில் இருந்தும் இவருக்கு ஜோடியில்லை).
சத்யத்தில் 'அண்ணியுடன்' இருக்கும் ஒரு ஸ்டில்லைப்போட்டு அசத்துங்களேன்.
-
7th June 2012, 11:04 PM
#3846
Senior Member
Seasoned Hubber
-
8th June 2012, 06:33 AM
#3847
Senior Member
Diamond Hubber
-
8th June 2012, 07:26 AM
#3848
Senior Member
Diamond Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்களின் அன்புப் பாராட்டிற்கு நன்றிகள் பல. 'கர்ணன்' 13-ஆவது வார விளம்பரம் தூள். பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. அதே போல மகாலட்சுமி திரையரங்கில் தலைவர் வாரம் கொண்டாடும் பொருட்டு திரையிடப்பட இருக்கும் படங்களின் பெயர்களை சிறு சிறு ஸ்டில்கள் மூலம் தாங்கள் தந்திருப்பது தனி அழகு. மனமுவந்த பாராட்டுக்கள்.
-
8th June 2012, 07:30 AM
#3849
Senior Member
Diamond Hubber
டியர் சதீஷ் சார்,
'ஜாதி மல்லிகை'யைத் தந்து திரியை மணக்கச் செய்து விட்டீர்கள். அருமையான மெலடி. மண்ணுக்குள் வைரத்தில் நடிப்பின் வைரம் அசத்தல் நடிப்பில் நெஞ்சை அள்ளுகிறார். அருமையான பாடலுக்கு நன்றி!
-
8th June 2012, 07:39 AM
#3850
Senior Member
Diamond Hubber
'சத்யம்' படத்தில் S.P.B மற்றும் சுசீலா இருவரின் குரல்களில் காலத்தை வென்ற "கல்யாணக் கோவிலின் தெய்வீகக் கலசம்" பாடல் திரு.கே.வி.மகாதேவன் அவர்களின் அற்புத மெல்லிசை மெட்டில். வீடியோ வடிவில் இப்போது கண்டு மகிழலாமா?
அன்புடன்,
வாசுதேவன்.
Bookmarks