
Originally Posted by
pammalar
டியர் திரு. Mgr Raju B S,
தங்கள் வருகைக்கு நன்றி..!
பொய்யான தகவல்களையோ, சந்தேகத்துக்குட்பட்ட தகவல்களையோ, எனது பதிவுகளில், எனது அறிவுக்கு எட்டியவரை, நான் என்றுமே அளித்ததில்லை, அளிக்கப்போவதுமில்லை.
"கர்ணன்" காவியம், சென்னை 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 100 நாட்கள் ஓடவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது மிகமிகத் தவறான தகவல். ஏனென்றால், "கர்ணன்" 100வது நாள் சென்னை விளம்பரத்தை என் கண்களால் பார்த்தவன் என்ற முறையில் இதைக் கூறுகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் உள்ள ஒரு நூலகத்தில் [இப்போது அந்த நூலகம் இல்லை], 1964-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் 'THE MAIL' ஆங்கில மாலை நாளிதழின் தொகுப்பைப் பார்க்க நேர்ந்தது. அதில் "கர்ண"னின் 100வது நாளன்று [22.4.1964 : புதன்], சென்னையில் உள்ள மூன்று திரையரங்குகளிலும் [சாந்தி, பிரபாத், சயானி], 100 நாட்கள் ஓடுவதாக மூன்று அரங்குகளின் சார்பாகவும் மூன்று தனித்தனி விளம்பரங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக கொடுக்கப்பட்டிருந்தன. அந்த ஒவ்வொரு விளம்பரத்தின் அளவும், Book-Notebookக்கு நாம் ஒட்டும் Labelலின் அளவைவிட சற்றுகுறைவாக இருக்கும். அந்த விளம்பரத்தில் என்ன இருந்தது என்பதையும் கூறி விடுகிறேன்.
முதல் விளம்பரத்தில்,
SHANTI
Deluxe Air-Conditioned
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இரண்டாவது விளம்பரத்தில்,
PRABHAT
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
மூன்றாவது விளம்பரத்தில்,
SAYANI
TODAY 100TH DAY
Padmini Pictures
KARNAN.
இத்தகைய தகவல்கள் அந்த விளம்பரங்களில் இருந்தன.
இன்னொன்று, காலை நாளிதழ்களில் வரப்போகும் திரைப்பட விளம்பரங்கள் பெரும்பாலும் மாலை நாளிதழ்களில் அதற்கு முந்தைய நாளே வந்துவிடும். ஆனால், "கர்ண"னைப் பொறுத்தவரை, அதன் 100வது நாள் விளம்பரங்கள், 'THE MAIL' மாலை நாளிதழில் 22.4.1964 அன்று மாலைதான் வெளியானது. அந்த நூலகத்தில், பார்த்தவற்றை, குறிப்புகள் எடுத்து எழுதிக் கொள்ளலாமே தவிர, நகல் (xerox) எடுக்க அனுமதிக்கமாட்டார்கள். அப்படி எனக்கு நகல் கிடைத்திருந்தால், "கர்ண"னின் வெற்றி குறித்த கேள்வியே எங்கும் எழாது.
"கர்ணன்", 22.4.1964 அன்று, சென்னையில் இந்த மூன்று திரையரங்குகளில் [சாந்தி, பிரபாத், சயானி] 100 நாட்கள் ஓடியதோடு நிறைவு. 23.4.1964 வியாழன் முதல், இந்த மூன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:
சாந்தி - Son of Samson(English)
பிரபாத் - ஆத்மபலம்
சயானி - Mere Mehboob(Hindi).
மேலும், "கர்ணன்", 'பிரபாத்' மற்றும் 'சயானி'யில் 56 நாட்கள் மட்டுமே ஓடியதாக கூறினீர்களே..எப்படி சார்..?
"கர்ணன்", 50வது நாளைப் பூர்த்தி செய்தது 3.3.1964 செவ்வாயன்று. 100வது நாளைத் தொட்டது 22.4.1964 புதனன்று. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எந்தப் புதிய தமிழ்த் திரைப்படமும் இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
3.3.1964 முதல் 22.4.1964 வரை வெளியான புதிய தமிழ்த் திரைப்படங்கள்:
(சென்னையில் வெளியான அரங்குகளுடன்)
அல்லி - 5.3.1964 - கெயிட்டி, ஸ்ரீமுருகன், ராக்ஸி, ராம்
நல்வரவு - 5.3.1964 - வெலிங்டன், மஹாராஜா, கிருஷ்ணவேணி
என் கடமை - 13.3.1964 - பிளாசா, கிரௌன், புவனேஸ்வரி, சீனிவாசா
பச்சை விளக்கு - 3.4.1964 - வெலிங்டன், மஹாராணி, ராக்ஸி, நூர்ஜஹான்
சித்ராங்கி - 10.4.1964 - பாரகன், மஹாராஜா, புவனேஸ்வரி
நானும் மனிதன் தான் - 13.4.1964 - காமதேனு, மஹாலக்ஷ்மி, பிரைட்டன், ஜெயராஜ்
தவிர, எந்தவொரு வேற்றுமொழித் திரைப்படமோ அல்லது டப்பிங் படமோ கூட, இந்த காலகட்டத்தில், இந்த இரு அரங்குகளில் வெளியாகவில்லை.
"கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 'சாந்தி', 'பிரபாத்', சயானி' ஆகிய மூன்று திரையரங்குகளில், ஒவ்வொன்றிலும் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. மேலும் மதுரை 'தங்க'திலும் 108 நாட்கள் ஓடி சூப்பர்ஹிட். இதுவே மிகமிகச் சரியான தகவல்.
"கர்ணன்" சென்னைப் பதிப்பு 100வது நாள் விளம்பரத்தை தேடும் எனது தொடர் முயற்சிகளில் வெற்றி கிட்டியவுடன் தாங்கள் அளித்த தகவல் தவறு என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.
மேலும், 11 அரங்குகளில் 50 நாட்கள் ஓடியதும் உணமை. சில வருடங்களுக்கு முன்னர் அந்தந்த ஊர்களிலுள்ள திரையரங்குகளைத் பலமுறை தொடர்பு கொண்டு, அதற்குப்பின்னர் அவர்கள் சொன்ன தகவல் சரிதானா என்பதனைப் பலமுறை சரிபார்த்து அதன்பின் பதிவிடப்பட்ட தகவல் இது. மேலும், வேலூர் முதற்கொண்ட இன்னும் 4 ஊர்களில், "கர்ணன்" 50 நாட்கள் ஓடியுள்ளதாக தகவல் உள்ளது. அவை இன்னும் சந்தேகத்துக்குட்பட்டவையாக இருப்பதால், வெளியிடப்படவில்லை.
தாங்கள் அளித்த தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவும்.
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks