-
11th June 2012, 01:05 PM
#11
Senior Member
Diamond Hubber
Aanestu, chellatha asinga padithittaanga, ithai chummaa vidaatheenga
http://tamil.oneindia.in/movies/news...al-155474.html
மணிரத்னம் இயக்கும் கடல் படத்திலிருந்து சமந்தா விலகிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் சமந்தா விலகவில்லை என்றும், மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஆகியோர்தான் அவரை வேண்டாம் என்று கூறிவிட்டதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான காரணமாக சொல்லப்படுவது, சமந்தாவின் வயது. கதாநாயகனாக அறிமுகமாகும் கார்த்திக்கின் மகன் கவுதமுக்கு வயது 19. சமந்தாவுக்கோ வயது 27. இதனால் நாயகனை விட சமந்தா அதிக வயதுடையவராகத் தோற்றமளித்ததாகவும், அதனால் வேண்டாம் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. படத்தில் சமந்தாவின் வேடத்துக்கு வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தாவை வைத்து சில காட்சிகளை எடுத்த மணிரத்னமும் ஸ்ரீராமும், பின்னர் அவற்றைப் போட்டுப் பார்த்து திருப்தியடையாததாலேயே அவரை நீக்கிவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் சமந்தாவோ, வழக்கம் போல கால்ஷீட் பிரச்சினையை காரணம் காட்டி விலகியதாகக் கூறுகிறார். எது உண்மை என்று அந்த 'கடலு'க்கே வெளிச்சம்!
-
11th June 2012 01:05 PM
# ADS
Circuit advertisement
Bookmarks