20.06.2012 தேதியிட்டு இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழிலிருந்து
இந்த நேரத்தில் துக்ளக் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையைப் பற்றிய என் தனிப்பட்ட கருத்தைக் கூற விரும்புகிறேன். தேசியத்திற்காகவும் தேச பக்திக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த நடிகர் திலகத்தைப் பற்றி இவ்வளவு நாளாக எதுவும் எழுதாமல் இருந்த துக்ளக் இதழில் தற்பொழுது திடீரென்று கரிசனம் வந்ததன் காரணம் என்ன எனத் தெரியவில்லை. கர்ணன் வெற்றி பெற்றதைப் பற்றி நாட்டிலுள்ள பெரும்பாலான தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எழுதிய போது துக்ளக் இதழில் கர்ணன் வெற்றியைப் பற்றி குறிப்பிடத்தக்க அளவில் எழுதியதாகத் தெரியவில்லை. ஆனால் தற்போது திடீரென நடிகர் திலகத்தின் ஆன்மீக மாற்றத்தைப் பற்றி எழுதியுள்ளது வியப்பை அளிக்கிறது. திராவிட மாயை தொடர் என்பது ஒரு சாக்காகத் தான் தெரிகிறது.
Bookmarks