-
20th June 2012, 10:51 PM
#171
Senior Member
Seasoned Hubber
காஞ்சீபுரம் பாலசுப்ரமணியாவில் இன்றிலிருந்து - 20.06.2012 - தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது ஊட்டி வரை உறவு. இத்தகவலை அளித்த காஞ்சிபுரம் நண்பருக்கு நன்றி.
கர்ணன் சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டினை திரு விஜயகுமார் அவர்களிடமிருந்து நேரில் பெற விரும்புவோர் வியாழன் மற்றும் வெள்ளி இரு நாட்களிலும் சென்னை சாந்தி திரையரங்க வளாகத்தில் மாலை 5.00 மணியிலிருந்து 8.00 மணிக்குள் அவரை சந்தித்து பெற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவிக்கிறார்.
-
20th June 2012 10:51 PM
# ADS
Circuit advertisement
-
20th June 2012, 10:52 PM
#172
Senior Member
Seasoned Hubber
இந்த வாரம் 22.06.2012 முதல் தர்மபுரி ஹரி திரையரங்கில் வெற்றி நடை போட வருகிறார் கர்ணன்.
-
20th June 2012, 10:55 PM
#173
Senior Member
Diamond Hubber

"நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் நண்பர்களாகக் கருதி என் குடும்ப கௌரவத்தை இழப்பதை விட கூட்டத்தை இழப்பது மேல்" (ஆத்திரத்தையும் கோபத்தையும் கண்கள் அனலாய் கக்க, குரலின் வேகம் படிப்படியாக உயர, கொந்தளிக்கும் உணர்ச்சியை சற்றே அடக்கிக் கொண்டு, புருவங்களை உயர்த்தி, வெறிகலந்த பார்வையை ஆனந்தன் (ஜெமினி) மேல் படரவிட்டு, கோபத்தின் உச்சத்தை பென்சிலைக் கத்தியால் சீவிக்கொண்டே காட்டி, வெறியை வெளிப்படுத்தும் வேங்கைத்தனம்).
"பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா"...(மற்ற விரல்கள் மூடியிருக்க இடது கை கட்டை விரல் மட்டும் முற்றிலும் இடப்பக்கம் நோக்கி சுட்டிக் காட்டும்)
"புற்றுக்கருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை நாதத்தால் குளிர வைக்கவா"... (அதே கட்டை விரல் பாம்பு படமெடுத்தாடுவதை நர்த்தன அசைவுகளில் நயமாக, நரித்தனமாக உணர்த்தும்)
"காட்டுக்குள்ளே குழி பறிப்பது யானை ஒய்வு பெறுவதற்காகவா"...
"கணையை வில்லிலே பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா"... (ஆட்காட்டி விரல், நடுவிரல் மற்றும் கட்டைவிரல்களின் இடையே சற்றே மடக்கிய சீரான இடைவெளியில் மூன்று விரல்களும் அரைவட்ட எதிரும் புதிருமான சுழற்சியில் அல்லோலகல்லோலப் படுத்தும் )
"இல்லை... இதெல்லாம் பிறர் துன்பத்திலே இன்பம் காண வேண்டும் என்ற பேய்வெறி (கடுமை கலந்த சிரிப்புடன் 'ம்'..என்று சொல்லாமலேயே உதடுகளைக் குவித்து மேலும் கீழுமாக ஒரு தலை அசைவு) அந்த வெறிதான் உனக்கு...பெயர் பொதுநலம்".(கேலியும், கிண்டலும் கலந்த நக்கல் சிரிப்பு)
"இப்படியெல்லாம் பேதங்கள் பேசி பிளவு உண்டாக்குவதற்காகத்தான் (சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது வலது காலை ஷூவுடன் தூக்கி முன் இருக்கும் மேஜை மீது ஆணவத்துடன், முதலாளி என்ற கர்வத்துடன் 'டக்'கென வைத்தல்) அன்று என்னிடம் பிடிவாதமாக வேலை கேட்டாய்"
ஜெமினியின் வார்த்தைகளில் கோபம் தலைக்கேறி, எரிமலையாய் நாற்காலியை விட்டு 'மிஸ்டர் ஆனந்த்' என்று சுழல் நாற்காலியை வேகமாகச் சுழற்றி விட்டு எழுந்து "I am the whole proprietor of the concern...I can do what for I like" என ஆங்கிலத்தில் கர்ஜித்து முழங்கி....
எழுத ஆரம்பித்தால் திரியின் பக்கங்கள் போதாது...
அந்த நடிப்பு ராட்சஷரின் மேற்கூறிய அட்டகாசங்கள் நாளை விஷுவலாக உங்கள் பார்வைக்கு.
வாசுதேவன்
Last edited by vasudevan31355; 21st June 2012 at 03:29 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th June 2012, 10:55 PM
#174
Senior Member
Seasoned Hubber
16.03.2012 அன்று வெளியிடப் பட்டு 23.06.2012 அன்று 100 வது நாள் காண இருக்கும் அன்றும் இன்றும் மெகா ஹிட் படமான கர்ணன் திரைப்படத்திற்காக வெளியிடப் படும் விளம்பரத்தின் நிழற்படம்.
Last edited by RAGHAVENDRA; 21st June 2012 at 10:33 AM.
-
20th June 2012, 11:10 PM
#175
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
நமது பாசத்திலகத்துக்கு தாங்கள் மிகுந்த சிரத்தையுடனும், பக்தியுடனும் கோர்த்து சூட்டிய "பாசமலர்" மாலை அதியற்புதம்..!
மாலையில் காணப்படும் ஒவ்வொரு மலரும் மற்றும் அதன் இதழும் கொள்ளை அழகு..!
பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
20th June 2012, 11:13 PM
#176
Senior Member
Veteran Hubber
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பாசமலர்
[27.5.1961 - 27.5.2012] : 52வது ஆரம்பதினம்
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1961

50வது நாள் விளம்பரம் : The Hindu : 15.7.1961

[நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மிகப் பெரிய ஹீரோ, தான் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைக்காவியத்தில் - அதுவும் கிட்டத்தட்ட தனது சொந்த தயாரிப்பு போன்ற ஒன்றின் - 50வது நாள் விளம்பரத்தில், Stamp-Sizeசில் கூட தனது புகைப்படத்தை வெளியிட்டுக் கொள்ளாமல், அக்காவியத்தில் நடிக்கும் மற்ற இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் புகைப்படத்துடன் மட்டும் கூடிய ஒரு 50வது நாள் விளம்பரத்தை அளிக்க முடியுமா..?! 'அது என்னால் மட்டுமே முடியும்' என நிரூபித்தவர், பெருந்தன்மையின் மறுவடிவமான நமது நடிகர் திலகம்..! மேற்காணும் "பாசமலர்" 50வது நாள் விளம்பரமே அதற்கு சரியான சான்று..! ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகத்தை போன்ற ஒரு பெருந்தன்மையான, விட்டுக்கொடுக்கும் குணம் கொண்ட ஒரு அதியற்புத மனம் படைத்தவர் எவருமில்லை..!]
75வது நாள் விளம்பரம் : The Hindu : 9.8.1961

100வது நாள் விளம்பரம் : தினமணி : 3.9.1961

வெள்ளிவிழா விளம்பரம் : The Hindu : 11.11.1961

வெள்ளிவிழா விளம்பரம் : தினத்தந்தி : 14.11.1961

'வெள்ளிவிழா கொண்டாட்ட' விளம்பரம் : The Hindu : 17.11.1961

26வது வார [176வது நாள்] விளம்பரம் : The Hindu : 18.11.1961

குறிப்பு:
அ. மெகாஹிட் காவியமான "பாசமலர்", வெள்ளிவிழா மற்றும் 100 நாள் விழா கொண்டாடிய திரையரங்குகள்:
1. சென்னை - சித்ரா - 176 நாட்கள்
2. சென்னை - கிரௌன் - 132 நாட்கள்
3. சென்னை - சயானி - 118 நாட்கள்
4. மதுரை - சிந்தாமணி - 164 நாட்கள்
5. திருச்சி - ஸ்டார் - 164 நாட்கள்
6. கோவை - ராயல் - 118 நாட்கள்
7. சேலம் - பேலஸ் - 105 நாட்கள்
8. வேலூர் - நேஷனல் - 105 நாட்கள்
9. பெங்களூர் - ஸ்டேட்ஸ் - 100 நாட்கள்
10. கொழும்பு - கிங்ஸ்லி - 110 நாட்கள்
ஆ. சென்னை 'சித்ரா' திரையரங்க வரலாற்றிலேயே, வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ்த் திரைப்படங்கள் இரண்டு:
1. பாசத்திலகத்தின் "பாசமலர்(1961)".
2. கலைநிலவு ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த "நான்(1967)".
இ. "பாசமலர்", பெங்களூரிலும், இலங்கையிலும் தாமதமாக வெளியாகி 100 நாள் விழாக் கொண்டாடியது.
ஈ. இக்காவியம், தீபாவளித் திருநாளான 7.11.1961 அன்று வெளியான தீபாவளித் திரைப்படங்களுக்காக, மதுரையிலும், திருச்சியிலும் நூலிழையில் வெள்ளிவிழாவைத் தவறவிட்டது.
உ. முதல் வெளியீட்டின் அத்தனை பிரிண்டுகளும் 50 நாட்களும் அதற்கு மேலும் ஓடி இமாலய வெற்றி.
ஊ. 1961-ம் ஆண்டில், தமிழ் சினிமா பாக்ஸ்-ஆபீஸில், இரண்டாவது அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம் "பாசமலர்". 1961-ல், வசூல் சாதனையில், முதல் இடத்தைப் பிடித்த திரைக்காவியம் நமது நடிகர் திலகத்தின் "பாவமன்னிப்பு".
எ. ஒரே ஆண்டில்(1961) வெளியான ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள்["பாவமன்னிப்பு", "பாசமலர்"], இரண்டுமே அந்தக் காலண்டர் ஆண்டிலேயே - அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பருக்குள் - பெரிய திரையரங்குகளில், ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்ட பெரும்பெருமை தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே நமது நடிகர் திலகத்துக்கும் அவர்தம் காவியங்களுக்கும் மட்டுமே சொந்தம். இதே ரக சாதனையை 1983-ல் "நீதிபதி", "சந்திப்பு" திரைக்காவியங்களின் மூலம் மீண்டும் நமது நடிகர் திலகம் நிகழ்த்திக் காட்டியிருந்தாலும், "நீதிபதி", ரெகுலர் காட்சிகளில் வெள்ளிவிழாக் கண்டது மதுரை 'மினிப்ரியா'வில். எனவே, 1961 காலண்டர் வருடத்தில். "பாவமன்னிப்பு" மற்றும் "பாசமலர்" காவியங்களின் வெள்ளிவிழா சாதனை தமிழ் சினிமாவிலேயே யாருமே செய்யாத தனிப்பெருஞ்சாதனை.
ஏ. ஒரே ஆண்டில் வெளியான இரு காவியங்கள், இரண்டுமே வெள்ளிவிழா, என்கின்ற இமாலய சாதனையை 1959-க்குப்பின் மீண்டும் 1961-ல் நிகழ்த்திக் காட்டினார் நமது நடிகர் திலகம். இதே சாதனையை மேலும் 4 முறையும்[1972, 1978, 1983, 1985] நிகழ்த்தியுள்ளார்.
ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில் வெளியான ஒரு கதாநாயக நடிகரின் மூன்று காவியங்கள், ஒவ்வொன்றும், முதல் வெளியீட்டில் முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் [75 லட்ச ரூபாய்க்கு மேல்] வசூலைக் குவித்தது 1961-ல் தான். அந்த மூன்று காவியங்கள் : "பாவமன்னிப்பு", "பாசமலர்", "பாலும் பழமும்"; அந்தக் கதாநாயகன் : நமது பாசத்திலகம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்துக்கு நிரந்தர சக்கரவர்த்தி
சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே..!!
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 20th June 2012 at 11:20 PM.
pammalar
-
20th June 2012, 11:23 PM
#177
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
தங்கள் பாராட்டுக்கு நன்றி!
பாசமலரின் அனைத்து விளம்பரப் பதிவுகளும் அட்டகாசத்திலும் அட்டகாசம்.
குறிப்புகளும் உற்சாகத்தில் எங்களை கும்மாளம் போட வைக்கின்றன.
நான் சூட்டியது பூமாலைதான். தாங்கள் என்றும் வாசம் கமழும் சந்தன மாலை அல்லவா நம் பாசமலருக்கு சூட்டியுள்ளீர்கள்!
விலையில்லா விளம்பரப் பதிவுகளுக்கு விண்ணை முட்டிய நன்றிகள்.
-
20th June 2012, 11:30 PM
#178
பாசமலர் காவியத்தின் பெருமைகளை அதன் 6 மாத விளம்பரங்கள் மூலமாகவும் அதன் அடர்த்தியான உணர்வுபூர்வமான காட்சிகளை வீடியோ புகைப்படங்கள் மூலமாகவும் தொகுத்தளித்த [சுவாமிநாத] சிவா [வாசுதேவ] விஷ்ணு -விற்கு பல்லாயிரம் கோடி நன்றிகள்.
அன்புடன்
-
20th June 2012, 11:31 PM
#179
Senior Member
Diamond Hubber
டியர் சிவாஜி செந்தில் சார்,
தங்கள் மனம் கொள்ளை கொண்ட நடிகர்திலகத்தின் அந்த குறிப்பிட்ட புகைப்படத்தை பதிய எனக்கு வாய்ப்பளித்ததற்கு நான்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும்.
தங்களது உயர்ந்த மனம் திறந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள்.
Last edited by vasudevan31355; 20th June 2012 at 11:38 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th June 2012, 11:32 PM
#180
Senior Member
Diamond Hubber
அன்பு ராகவேந்திரன் சார்,
தங்கள் அளப்பரிய பாராட்டுதல்களுக்கு நன்றி!
கண்ணுக்குக் குளிர்ச்சியாக நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'கர்ணன்' நூறாவது நாள் விளம்பரம் தங்கள் மூலம் பதிவிடப்பட்டு நம்மையெல்லாம் பெருமைப் படுத்தியிருக்கிறது. மனமுவந்த மகிழ்ச்சி பொங்கும் பாராட்டுக்கள்.
Bookmarks