அன்புள்ள வாசுதேவன் சார்,

'அழகே வா... அருகே வா' பாடல் காட்சியை எனக்கு டெடிகேட் செய்தமைக்கு மிக்க நன்றி. எவ்வளவு அருமையான காட்சியமைப்பு. நடிகர்திலகத்தின் அருமையான முகபாவங்கள். "அண்ணி" மிக மிக அழகாக தோன்றிய பாடல்களில் இது ரொம்ப டாப். 'உந்தன் தேவைகளை ஏன் மூடுகிறாய்' என்ற வரிகளின்போது வாயில் விரலை வைத்துக்கடிக்கும் காட்சியை குளோசப்பில் காண்பித்து சங்கர் சார் அசத்தி விட்டாரென்றால், அதை இங்கே பதிவிட்டு நீங்களும் அசத்தி விட்டீர்கள். இந்த ஒரு காட்சிக்கே நடிகர்திலகத்தின் மற்ற ஜோடிகளெல்லாம் அவுட். இப்பாடலைக் காணும்போதெல்லாம் எனக்குத்தோன்றுவது, 'இப்படத்தை கலரில் எடுத்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்' என்ற எண்ணம்தான்.

மற்ற பாடல்களையும் சிறப்பாகப் பதிவிட்ட தங்களுக்கும், ராகவேந்தர் சாருக்கும் மிக்க நன்றி.