-
4th July 2012, 05:46 PM
#11
Junior Member
Junior Hubber
பொதுவாக ராஜாவின் ரசிகர்களில் அவரைப் பற்றிய தேடலில் உச்சம் அடைந்த பிறகு அவர் மீதான சமீபத்திய குற்றசாட்டுகள் குறைகள் பற்றி அக்கறை கொள்பவர்கள் மிகக் குறைவு. அந்த மனிதனின் திறமைக்கு இது சான்று எடுத்துக்கொள்ளலாம். அதே போல் பல தரப்பு ரசிகர்கள் உண்டு. ஸ்பீல்பெர்க் படங்களுக்கு இன்றும் ஜான் வில்லியம்ஸ் இசை அமைப்பதும் பல வருடங்களாக மிகச் சிறப்பாக என்னியோ மோரிகோன் இசை அமைத்து வருவதையும் போல் ராஜாவும் வளமான தனது இசைப் பாணியுடன் இசை அமைக்க வேண்டும். அவரை இன்றைய திரையுலகம் இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற எளிய ஆனால் பேராசையைக் கொண்ட பாமர இசை ரசிகர்களில் நானும் ஒருவன். எனவே இன்னும் புதிதாக தெரிந்து கொள்ள இருக்கிறதா என்று 'சிலருக்கு எரிச்சலூட்டும்' இந்தத் திரிக்கு பல வருடங்களாக வருகிறேன்.
உங்களிடம் இருந்து இன்னும் செய்திகள் எதிர்பார்த்து தான் இன்றும் வந்தேன். ராஜா தான் என் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் பலரைத் தந்தார் என்பதால் ..எனக்கு இதுவும் ஒரு அனுபவம் தான்.
-
4th July 2012 05:46 PM
# ADS
Circuit advertisement
Bookmarks