-
25th July 2012, 05:39 PM
#11
Junior Member
Junior Hubber
Anbulla nanbare Nanum oru Theevira Devika Rasigan

Originally Posted by
mr_karthik
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.
கர்ணன் என்ற சீரியஸான படத்துக்கு பெரிய ரிலாக்ஸேஷனே தேவிகாதான். அறிமுகமான முதல் காட்சியிலேயே எத்தனை ஒரு அழகு. அடங்காத குதிரையை அடக்கிய வீரர் யாரென அறிவதற்குள்ளேயே மயக்கமடைந்துவிட, பாறையில் கிடத்தப்பட்டு மயக்கம் தெளிந்ததும், புதிதாக ஒரு ஆண்மகனைக்கண்டு, முதலில் கண்களில் மிரட்சி, சட்டென வினாடி நேரத்திலேயே நாணம். (அந்த நாணப்பார்வையில் கர்ணன் மட்டுமல்ல, படம் பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் அவுட்). மனதுக்குப்பிடித்தவருடன் உரையாட முடியாமல், தோழியும் அவளைத்தொடர்ந்து பெற்றோரும் வந்துவிட, கையால் சைகை செய்துவிட்டுப்போகும் அழகு. அடுத்த காட்சியிலேயே 'கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே' பாடலில் அழகோ அழகு, கொள்ளை அழகு. அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே மீண்டும் 'இரவும் நிலவும் வளரட்டுமே' பாடலில், சிங்க நடையுடன் நடிகர்திலகம் நடந்து வர அதற்கு ஈடு கொடுத்து சுற்றி சுற்றி ஆடிக்கொண்டே செல்லும் பாங்கு.... அய்யோ, எதைச்சொல்வது எதை விடுவது. (நான் தமிழில் எழுதும்போது, நமது தளத்தில் பரிச்சயமான ஒருவரது எழுத்து நடையை காப்பியடிப்பது வழக்கம். இப்போதும் அந்த சாயல் தென்பட்டால் மன்னியுங்கள்). முரட்டுக்கணவனின் கோபத்தை சாந்தப்படுத்தி, 'கண்ணுக்கு குலமேது' பாடலின்போது காட்டும் பாந்தம். இறுதியில் கர்ணன் போருக்குப் புறப்படும்போது மஞ்சள் சேலையும், இடைவரை தொங்கும் கூந்தலுமாக காட்சியளிக்கும்போது, 'இவ்வளவு அழகான பெண்ணை விதவையாக்கத்துடிக்கும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் ஒழிக' என்று கத்தத்தோன்றும். அந்த சுபாங்கி என்ற பாத்திரத்துக்கு அழகூட்டிய தேவிகா என்ற தேவதை நம் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பு.
முரளி சார், நீங்கள் சொன்னபிறகு 'மடிமீது தலைவைத்து' (அன்னை இல்லம்) பாடலில் தேவிகாவின் அந்த போஸை கவனித்தேன். சூப்பர். அந்தப்பாடல் முழுக்க இருவருக்கும் இடையில் கெமிஸ்ட்ரி படுஜோர். அதே சமயம் 'நடையா இது நடையா' பாடலில் 'இடையா இது இடையா அது இல்லாதது போல இருக்குது' என்று தேவிகாவைப்பார்த்து கவியரசர் எழுதியிருப்பது கொஞ்சம் ஓவர்தான். தேவிகாவின் இடையைப்பார்த்து யாரும் அப்படி சொல்ல முடியுமா?.
முரளி சார், தேவிகாவைப்பற்றி இவ்வளவு எழுதிய நீங்கள் இன்னும் அவருக்கு ஓட்டளிக்காமல் இருப்பது சரியல்ல. உடனே தேவிகாவுக்கு வாக்களியுங்கள்.
சாரதா மேடம், 'யாருக்கும் வாக்களிப்பதில்லை' என்ற உங்கள் விரதத்தைக் கைவிட்டு நீங்களும் தேவிகாவுக்கு வாக்களியுங்கள்.
பிரபு சார் போன்ற சிலர், அவசரப்பட்டு பத்மினிக்கு வாக்களித்துவிட்டு இப்போது வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என தோன்றுகிறது. குறைந்த பட்சம் தேவிகா இரண்டாமிடத்துக்காவது வர வேண்டும். (இப்போது மூன்றாமிடத்தில் உள்ளார். பொருத்தமில்லாதவர்கள் முதலிரண்டு இடங்களைப்பிடித்து விட்டனர்).
'திருமதி தேவிகா ஒரு மிகச்சிறந்த நடிகை' என்று நடிகர்திலகமே பாராட்டியுள்ளதை ரசிகர்கள் மனதில் கொண்டு உங்கள் 'அன்புக்கரங்க'ளால் வாக்குகளை அள்ளி வழங்குங்கள்.
அன்புடன்
ச. கார்த்திகேயன்
கலையரசி, நடிப்புத்தென்றல் தேவிகா தலைமை மன்றம்.
Nanum oru Theevira Devika Rasigan. Ella azhagum, thiramium irundum enakku oru kavalai . Avargal enn sarojadevi madiri niraia padangalai kodukka villai. Devika Bale pandyavil (Scientist Sivaji Ganesan) odu " Vazha Ninaithal vazhalam" pattin nadippu matrum nalinathirke pala tadavi padam/dvd parthirukken. Enna Azhagu.
-
25th July 2012 05:39 PM
# ADS
Circuit advertisement
Bookmarks