-
25th July 2012, 10:03 PM
#111
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 2
நடிகர் திலகத்தின் 99வது காவியம்
முரடன் முத்து [முதல் வெளியீட்டுத் தேதி : 3.11.1964]
[இதே 3.11.1964 தீபாவளித் திருநாளில்தான் இக்காவியத்தோடு நடிகர் திலகத்தின் 100வது திரைக்காவியமான "நவராத்திரி"யும் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது]
முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக கோவை 'இருதயா' திரையரங்கில் 80 நாட்கள் ஓடிய வெற்றிக்காவியம்
பொக்கிஷாதி பொக்கிஷம்
மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 10.8.1979

முதல் வெளியீட்டில், சிங்காரச் சென்னையில், நான்கு திரையரங்குகளில் வெளியாகி, மூன்றில் 50 நாட்களைக் கடந்து வெற்றி பெற்றது. [ஸ்டார் - 52 நாட்கள், பிரபாத் - 52 நாட்கள், சரஸ்வதி - 52 நாட்கள், லிபர்ட்டி - 45 நாட்கள்].
மறுவெளியீடாக இக்காவியம் வெளியான தினத்தன்று [10.8.1979], நடிகர் திலகத்தின் 204வது புதிய திரைக்காவியமான "நான் வாழவைப்பேன்", சென்னை [சித்ரா, பாண்டியன், மேகலா, லிபர்ட்டி] மற்றும் தென்னகமெங்கும் வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பக்தியுடன்,
பம்மலார்.
-
25th July 2012 10:03 PM
# ADS
Circuit advertisement
-
25th July 2012, 10:31 PM
#112
Junior Member
Regular Hubber
Theme

Originally Posted by
pammalar
Thread Title = Thread Theme.
To those who want to know/understand the thread and the theme of the thread :
THREAD's THEME is the same Theme the thread aims to theme. Whatever be the aimed theme, the thread aims to theme the theme based on the thread that would help to achieve the title of the theme. As of now, This is the Theme of the thread and the thread of the Theme !!

-
25th July 2012, 10:58 PM
#113
Senior Member
Veteran Hubber
டியர் mr_karthik,
தங்களின் பாராட்டுக்கு தீர்க்கமான நன்றிகள்..!
பதிவில் தாங்கள் தெரிவித்துள்ள தங்களின் கருத்துக்கள் நூறு சதம் நியாயமானவை.
அந்தக்கால பத்திரிகை விமர்சனங்களில் விமர்சகர்கள், இசை மற்றும் தொழில்நுட்பம் குறித்து அவ்வளவாக அல்லது அறவே கண்டுகொள்ளமாட்டார்கள்.
டிஜிட்டல் "கர்ண"னின் மெகா வெற்றிக் களிப்பில் நாம் தற்பொழுது சிகரத்தில் நிற்கிறோம். அடுத்த அடிகளை இந்த வெற்றியிலிருந்து சற்றும் பிறழாமல் மிகவும் ஜாக்கிரதையாக நாம் எடுத்து வைக்க வேண்டும். அதாவது அடுத்து இதுபோன்று புதிய தொழில்நுட்பத்தோடு வெளியிட என்னென்ன திரைக்காவியங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல், அத்திரைக்காவியங்களில், இன்றைய சூழலுக்கு பொருந்தாத [நடிகர் திலகம் அல்லாத] காட்சிகளில் கத்திரி போடவும் தயங்கக் கூடாது. டிஜிட்டல் "கர்ண"னின் இமாலய வெற்றி, அடுத்தடுத்த திரைக்காவிய வெளியீடுகளிலும் தொடரும், தொடர வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பம்.
'ஜெயா டிவி'யின் நேற்றைய [24.7.2012] 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் நடிகை ரஞ்சனி, அன்னை இல்லத்து விருந்தோம்பல் பற்றியும், நடிகர் திலகத்தின் நற்பண்புகள் பற்றியும் கூறியவற்றை இங்கு பதிவு செய்து பத்திரப்படுத்திவிட்டீர்கள்..! தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
25th July 2012, 11:20 PM
#114
Senior Member
Seasoned Hubber
அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களை டிஜிட்டல் செய்கிறேன் பேர்வழி என்று இல்லாமல், படங்களைத் தேர்வு செய்யும் போது பல காரணிகளையும் ஆலோசித்தல் நலம். எந்தப் படமாயினும் சரி, ஒரிஜினல் இசையை மட்டும் அப்படியே வைக்க வேண்டும், தேவைப் பட்டால் ஒலியமைப்பில் மாற்றம் செய்து கொள்ளலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
25th July 2012, 11:33 PM
#115
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பாராட்டுக்கு நன்றி..!
டிஜிட்டல் "கர்ணன்" வெற்றிவிழா, வெற்றிவிழா மலர்கள் வருகை என இனிப்பான செய்திகளை அளித்துள்ளீர்கள், இனிய நன்றிகள்..!
புதினம்-நூல்-மலர் வேந்தர் திரு.கா.வந்தியத்தேவன் என்கிற திரு.எஸ்.கே.விஜயன் அவர்களுக்கு நமது அன்பும், ஆதரவும் எப்பொழுதுமே உண்டு..!
வெற்றிவிழாவும், வெற்றிவிழா மலர்களும் சிறக்க நமது வளமான நல்வாழ்த்துக்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
26th July 2012, 02:30 AM
#116
Senior Member
Veteran Hubber
திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 5
நடிகர் திலகத்தின் 128வது காவியம்
காவல் தெய்வம் [வெளியான தேதி : 1.5.1969]
பொக்கிஷாதி பொக்கிஷம்
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 1.5.1969

"காவல் தெய்வம்" ஒரு வெற்றிக்காவியம்.
பக்தியுடன்,
பம்மலார்.
-
26th July 2012, 02:34 AM
#117
Senior Member
Veteran Hubber
சிவாஜி சினிமா : பத்திரிகை விமர்சனம் : 3
பொக்கிஷாதி பொக்கிஷம்
காவல் தெய்வம்
தினமணி கதிர் : 16.5.1969
இந்த அரிய ஆவணப்பதிவை மூத்த சகோதரர் ரசிகவேந்தர் திரு. ராகவேந்திரன் அவர்களுக்கு Dedicate செய்கிறேன்..!

பக்தியுடன்,
பம்மலார்.
-
26th July 2012, 06:36 AM
#118
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
காவல் தெய்வம் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் இடம் பிடித்ததாகும். அதை எனக்கு அர்ப்பித்தமைக்கு உளமார்ந்த நன்றி. ராம் திரையரங்கு வழியாக ம.பொ.சிவஞானம் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த பேனரில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் கண்டு வண்டியை நிறுத்தி விட்டு நின்று நிதானமாக சிலாகித்து விட்டு சென்றா-ராம். தன் அருகில் இருந்த நண்பரிடம் சொன்னா-ராம். நடிப்பிற்கென்றே பிறந்தவர் இவர். ஒரு மரமேறியின் தோற்றத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கிறாரே- என்று வியந்தா-ராம். காரணம் . அவருடைய குடும்பத்தாரின் தொழிலும் மரமேறி கள்ளிறக்குவது தான் என்றா-ராம். ஏற்கெனவே காவல் தெய்வம் படத்தைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தா-ராம். இருந்தாலும் பேனரில் அந்தத் தோற்றம் ம.பொ.சிக்குள் ஓர் இனம் புரியாத உணர்வை நடிகர் திலகம் ஏற்படுத்தி விட்டா-ராம்.
நம் அனைவருக்காகவும் அத்திரைப்படத்தின் காட்சிகள் இணைப்பு.
அன்புடன்
Last edited by RAGHAVENDRA; 26th July 2012 at 06:39 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th July 2012, 07:52 AM
#119
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RAGHAVENDRA
டியர் பம்மலார்,
காவல் தெய்வம் நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த படங்களில் இடம் பிடித்ததாகும். அதை எனக்கு அர்ப்பித்தமைக்கு உளமார்ந்த நன்றி. ராம் திரையரங்கு வழியாக ம.பொ.சிவஞானம் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த பேனரில் நடிகர் திலகத்தின் தோற்றத்தைக் கண்டு வண்டியை நிறுத்தி விட்டு நின்று நிதானமாக சிலாகித்து விட்டு சென்றா-ராம். தன் அருகில் இருந்த நண்பரிடம் சொன்னா-ராம். நடிப்பிற்கென்றே பிறந்தவர் இவர். ஒரு மரமேறியின் தோற்றத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கிறாரே- என்று வியந்தா-ராம். காரணம் . அவருடைய குடும்பத்தாரின் தொழிலும் மரமேறி கள்ளிறக்குவது தான் என்றா-ராம். ஏற்கெனவே காவல் தெய்வம் படத்தைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்தா-ராம். இருந்தாலும் பேனரில் அந்தத் தோற்றம் ம.பொ.சிக்குள் ஓர் இனம் புரியாத உணர்வை நடிகர் திலகம் ஏற்படுத்தி விட்டா-ராம்.
நம் அனைவருக்காகவும் அத்திரைப்படத்தின் காட்சிகள் இணைப்பு.
அன்புடன்
RAM RAM, ore kallakkal sir...
-
26th July 2012, 10:20 AM
#120
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
புதிய திரியைப் பாராட்டும் எங்கள் அன்பு பழைய எ(திரி)யே! பார்த்து... பார்த்து... பரவச நிலையில் மயக்கம் போட்டு விழுந்து விடப் போகிறீர்கள். எஸ்.ஏ. நடராஜன் ஆகாமல் இருந்தால் சரி!
நாங்கள் இரு திரி நண்பர்கள். ராசியான திருகரங்களால் வாசு ஏற்றி வைத்த ஜோதியும் பிரகாசிக்க வேண்டாமா?
Bookmarks