-
29th July 2012, 06:01 PM
#241
Senior Member
Veteran Hubber
அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,
நடிகர்திலகம் திரியின் 10-ம் பாகத்தில், இன்று தாங்கள் பதிந்திருக்கும், சிக்கல் சண்முகசுந்தரத்தின் குணாதிசயங்கள் பற்றிய அலசல் சிம்ப்ளி கிரேட். எவ்வளவு அணுஅணுவாக ரசித்து அவருடைய குண்நலன்களை ஆராய்ந்திருக்கிறீர்கள். அவர் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்த அவதார புருஷனல்ல. மனிதனுக்குரிய எல்லா பலவீனங்களும் கொண்ட சாதாரண மனிதனே என்று விளக்கியிருக்கும் பாங்கு மிக மிக அருமை.
'நாங்கள் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுத மற்ற பதிவுகள் தடையாக இருக்கின்றன' என்று சொன்னவர்கள் ஆளையே காணோம். நீங்கள்தான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.
-
29th July 2012 06:01 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2012, 06:40 PM
#242
Senior Member
Diamond Hubber
-
29th July 2012, 07:11 PM
#243
Senior Member
Veteran Hubber
இந்திய துணைக்கண்டத்தின் பதிமூன்றாவது ஜனாதிபதியாக
25.7.2012 புதனன்று பதவியேற்றுள்ள
புதிய ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு
நமது நடிகர் திலகம் திரியின் சார்பில்
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
-
29th July 2012, 07:19 PM
#244
Senior Member
Veteran Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகம் ஆதங்கப் பட்டது போல் விளையாட்டு ஒலிம்பிக்ஸில் இந்தியா தங்கம் வெல்கிறதோ இல்லையோ, ஆவணங்களுக்கென்று ஒலிம்பிக்ஸ் வைத்தால் நடிகர் திலகம் நினைத்தது நடக்கும். அந்த பதக்கத்தை பம்மலார் வென்று இந்தியாவுக்கும் நடிகர் திலகத்திற்கும் பெருமை சேர்த்து உள்ளம் குளிர வைப்பார் என்பது திண்ணம்.
அட்டகாசம் சார்...
டியர் ராகவேந்திரன் சார்,
தங்களின் தங்கமான பாராட்டுக்கு எனது பொன்னான நன்றிகள்..!
அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் நடைபெறும் "கர்ணன்" 150வது நாள் மெகா வெற்றிவிழா பிரம்மாண்ட வெற்றி பெற இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள்..! விழா அழைப்பிதழ் மிக அருமை..! இடுகை செய்தமைக்கு இனிய நன்றிகள்..!
நெல்லை 'சென்ட்ரல்'லையும், "எங்க மாமா"வையும் இங்கே 'சண்டே ஸ்பெஷல்' ஆக கொண்டுவந்துவிட்டீர்களே, சூப்பர்..!
நமது நடிகர் திலகம் திரி அடைந்து கொண்டிருக்கும் மெகா வெற்றி குறித்த புள்ளி விவரங்களை தெள்ளத் தெளிவாக வழங்கியமைக்கு தேனான நன்றிகள்..!
"ஆனந்தக்கண்ணீர்" பதிவுகள் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்துவிட்டது..!
அன்புடன்,
பம்மலார்.
-
29th July 2012, 08:03 PM
#245
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுரைகளுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்..!
'ஒலிம்பிக்ஸ் ஸ்பெஷல்" வீடியோவாக, நமது தேசிய திலகத்தின் "இரத்தத்திலகம்" திரைக்காவிய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிக் காட்சியை வழங்கியது பொருத்தமான ஒன்று. கூடைப்பந்து வீரராக நமது 'விளையாட்டுப் பிள்ளை' அதகளம் செய்கிறார். வெற்றி அணியின் கேப்டனாக அவர் வெற்றிக் கோப்பையைப் பெறும்போது, 'ஒலிம்பிக்ஸ்'ஸில் இந்தியா "தங்கப்பதக்கம்" வாங்குவது போன்ற உணர்வு மேலிடுகிறது. இந்த ரசிக்கத்தக்க வீடியோவை இணையத்தில் முதன்முறையாக தரவேற்றிய தங்களுக்கு பாராட்டுக்களுடன் கூடிய நன்றிகள்..!
டிஜிட்டல் "கர்ணன்" டிரெய்லர் பார்வையாளர்கள் பற்றிய 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல் [ஜூலை 2012]' செய்தி நெத்தியடி..!
நமது இதயதெய்வத்தின் பதினோராம் ஆண்டு அவதார நிறைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய புதுவை மாநில சிவாஜி மன்றம் செலுத்திய அஞ்சலி நெஞ்சைத் தொட்டது. அருமையான நிழற்படங்களுக்கும், வீடியோவுக்கும் அரிய நன்றிகள்..!
"ஆனந்தக்கண்ணீர்" ஆல்பம் அற்புதம்..!
அன்புடன்,
பம்மலார்.
-
29th July 2012, 08:09 PM
#246
Senior Member
Diamond Hubber
Watched 'Karnan' @Golden Digital , Singapore with my Son .
As NOV mentioned first 15 mins are shaky ,then it is very clear .
Noted few points
- My son (now 6+ ) liked the movie very much ..Infact I noticed that He wiped his tears when Karnan got arrows
- Though I watched many times (Theatres , TV, DVD) ,I felt that current audience should have felt bit impatience for few songs ,which they may not familiar with ..especially the song on valaikappu .
- There were only about 100 people in theatre and i noticed most of them are not local Singaporeans ,but singapore residents from India , most should have seen the movie with theatre experience before ..This opertunity of watching a old NT movie in theatre should be better utilised by local singaporeans , who would have never get such opertunity ,but sadly it is missing . I assume many didn't even know Karnan is screened .
- For the first time ,I have seen very old ladies (should be in 80's) were brought by their families ..they were seen so happy when returning back .
Regarding the movie and NT , Goosebumps in many places especially in last 30 mins .. None like him before and after him.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
29th July 2012, 09:09 PM
#247
காவல் தெய்வம் - சாமுண்டி. பெயருக்கேற்றார் போல அந்த மனிதனின் உடல் மொழி எப்போதும் rough and tough என்று சொல்லுவோமே அது போன்ற ஒரு ரௌத்திர பாவம் பொங்கி வழியும் உடல் மொழி. பழி வாங்கும் உணர்வு உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் படர்ந்து இருப்பதை திரையில் பார்க்கும்போதே நம்மை உணர வைப்பதில் மாபெரும் வெற்றி கண்டிருப்பார் நடிகர் திலகம், அந்த கதாபாத்திரம் எத்துனை aggressive-வோ அதை வார்த்தைகளில் வடித்தெடுப்பது என்பது அதிலும் ஒரு நீண்ட திறனாய்வாக எழுதும்போது அந்த உணர்வை கொண்டு வருவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஆனால் அதை அந்த உணர்வை வெகு லாவகமாக இங்கே கொண்டு வந்திருக்கிறார் என்றால் மனமார்ந்த பாராட்டுகள் அண்ட் வாழ்த்துக்கள் வாசு சார். இது மேலும் தொடரட்டும்.
அன்புடன்
-
29th July 2012, 09:12 PM
#248
ஒரு நிகழ்வைப் பற்றி எழுதினாலும் சரி ஒரு மனிதனைப் பற்றி எழுதினாலும் சரி அந்த நிகழ்விற்கும் இல்லை அந்த மனிதருக்கும் நடிகர் திலகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு செய்தியை ஒரு புகைப்படத்தை ஒரு பேட்டியை சரியான நேரத்தில் அளிப்பதில் சுவாமிக்கு நிகர் சுவாமியே. இங்கே தரவேற்றியிருக்கும் நடிகர் திலகத்தின் ஒலிம்பிக்ஸ் பற்றிய குமுதம் பேட்டியை அன்று படித்த போது ஏற்பட்ட அதே உணர்வு இன்றும்.
நடிகர் திலகம் பொதுவாக ஸ்போர்ட்ஸ்-ல் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்பது தெரிந்த செய்தி. 1952 -54 கால கட்டத்தில் ராமநாதன் கிருஷ்ணன் அவர்கள் விம்பிள்டன்னில் விளையாட செல்லும் போது இன்றைய காலம் போல அவரை sponsor செய்வதற்கு ஆளில்லை. அன்று வெறும் மாத சம்பளமாக 250 /- வாங்கிக் கொண்டிருந்த நடிகர் திலகம் அந்த ஒரு மாத சம்பளத்தை ராமநாதன் கிருஷ்ணன் அவர்கள் விம்பிள்டன் செல்வதற்கு தன்னுடைய பங்காக கொடுத்தார் என்பது வரலாறு.
வாசு சொன்னது போல cricket-ல் மிகுந்த ஆர்வம் உடையவர் நடிகர் திலகம். டெஸ்ட் மாட்ச்-கள் மட்டுமே நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலங்களில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்றால் அங்கே வருவதை வழக்கமாக கொண்டிருந்தார் நடிகர் திலகம். 1975 ஜனவரி மாதம் 11-ந் தேதி தொடங்கி ஜனவரி 15-ந் தேதி வரை [13th rest day . மாட்ச் 4 நாட்களில் முடிந்து விட்டது] இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் மாட்ச் பார்க்க சென்னைக்கு வந்திருந்தேன். [the unforgettable match in which GRV scored that immortal 97 not out and Andy Roberts took 7 -97 on a spinner 's paradise]. மாட்ச்-ல் இந்தியா வெற்றி பெற்று மதுரைக்கு திரும்பி போயாகி விட்டது. அதே மாதத்தில் சினிமா பைத்தியம் வெளியாகிறது. மீனாட்சி திரையரங்கில் படம் பார்க்கிறோம். படத்திற்கு முன் காட்டப்பட்ட இந்தியன் நியூஸ் review நியூஸ் ரீலில் அந்த சென்னை மாட்ச் காட்டப்பட்ட போது ஒரே சந்தோஷம். மாட்ச் கிளிப்பிங்க்ஸ் நடுவில் நடிகர் திலகம் pavilion-ல் அமர்ந்து கைதட்டிக் கொண்டிருப்பதை காட்டிய போது இரட்டிப்பு சந்தோஷம். அவர் பார்த்த அதே நேரத்தில் நானும் இருந்தேன் என்ற மகிழ்ச்சி. அது இப்போதும் நினைவிருக்கிறது.
அவர் cricket-ஐ எந்தளவிற்கு follow செய்தார் என்பதனை அவர் சொல்லியிருக்கும் ஒரு வாசகத்திலேயே புரிந்துக் கொள்ளலாம். "இங்கே வந்து லோக்கல் மாட்ச் விளையாடிட்டு போனவன் இப்போ world champion" என்கிறார். கிரிக்கெட் follow செய்யும் பலருக்கு கூட அந்த காலத்தில் அதாவது 60 -70 களில் [இலங்கை ICC -யின் full member ஆவதற்கு முன்] சென்னையிலும் Colombo-விலும் தமிழ் நாடு கிரிக்கெட் அணியுடன் வருடந்தோறும் இலகை அணி விளையாடிய விஷயங்கள் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. அந்த tournament-ற்கு Gopalan trophy tournament என்று பெயர். அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு 96-ல் சொல்கிறார் என்றால் அவரின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்துக் கொள்ளலாம். இந்திய உலக கோப்பை 1983-ல் வென்ற பிறகு சென்னையில் நடந்த மாட்ச் ஒன்றில் ஸ்ரீகாந்திடம் நான்தான் சிவாஜி கணேசன் என்று தன்னை சுய அறிமுகம் செய்துக் கொண்டாராம். அப்பேற்பட்ட நடிகர் திலகம் தன்னை தேடி வந்து வெகு எளிமையாக அறிமுகம் செய்து கொண்டதை ஸ்ரீகாந்த் சொல்லி சொல்லி மாய்ந்து போயிருந்தார்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மீண்டும் அந்த இனிய நினைவலைகளில் நீந்த ஒரு வாய்ப்பு உருவாக்கி கொடுத்த சுவாமிக்கு நன்றிகள் பல.
அன்புடன்
-
29th July 2012, 09:17 PM
#249
Senior Member
Veteran Hubber
Dear Mr. sankara1970,
Wish You A Very Very Happy Birthday !
Many Many More Happy Returns !
My Birthday gift to you:

Warm Wishes & Regards,
Pammalar.
-
29th July 2012, 09:48 PM
#250
Senior Member
Seasoned Hubber
முரளி சார் சொன்னது பல நினைவுகளை அசை போட வைக்கிறது. எங்களைப் போன்ற அந்தக் கால இளைஞர்களுக்கு வீடு என்றால் இரவு 10 மணிக்குப் பிறகு - சமயங்களில் அதிகாலை 1 அல்லது 2 மணி கூட - தான் நினைவுக்கு வரும் விஷயம். கிரிக்கெட் சினிமா என்ற இரண்டு கண்களை வைத்துத் தான் வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்தோம் என்றால் மிகையில்லை. கிரிக்கெட்டில் வெங்கடராகவன், அணியில் வெஸ்ட் இண்டீஸ், சினிமாவில் நடிகர் திலகம், இது மிகப் பெரும்பான்மையினரின் உணர்வுபூர்வமான விஷயங்கள் .. ராபர்ட்ஸ் அந்தக் கால பேட்ஸ்மென்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அதே போல் பல வெளிநாட்டவர்க்கு வெங்கடராகவன் சிம்ம சொப்பனமாக விளங்கினார்., துரதிர்ஷ்டவசமாக பிரசன்னாவுக்கு கிடைத்த ஆதரவு வெங்கட்டிற்குக் கிடைக்கவில்லை. அதே நிலை தான் நடிகர் திலகத்திற்கும் பாரத் பட்ட விருது நேரங்களில் உணர்ந்தோம்..
பொதுவாக மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பான எம்.சி.சி.கிளப்பில் உறுப்பினராவதென்றால் மிக மிக மிக .... சொல்லிக் கொண்டே போகலாம்....அந்த அளவிற்கு பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அப்பேர்ப்பட்ட கிளப்பில் நடிகர் திலகத்தை அவர்களே அழைத்து உறுப்பினராக்கினார்கள் என்று அந்தக் காலத்தில் செய்தி உண்டு. இது நடிகர் திலகத்தின் கிரிக்கெட் ஆர்வத்தைமட்டுமல்ல, கிரிக்கெட் வட்டாரத்தில் அவருக்கு இருந்த மாபெரும் நற்பெயரையும் செல்வாக்கையும் உணர்த்துவதாகும்.
முரளி சார் குறிப்பிட்ட அந்த டெஸ்ட் மேட்சுக்கான டிக்கெட்டுகள் 1974 தீபாவளி கழிந்து சில நாட்களுக்குப் பின் தரப்பட்டன. அதற்கு கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கும் முன்பாகவே க்யூ வரிசையை இளைஞர்கள் போட்டு விடுவார்கள். வரிசை போட்டு இரவில் நண்பர்கள் தங்குவோம். அப்படி தங்குவதற்கு முன் இரவுக் காட்சி பார்த்து விட்டு வருவோம். அப்படிப் பார்த்த படம் தான் அன்பைத் தேடி, அவள் ஒரு தொடர்கதை போன்ற 1974 தீபாவளிக்கு வெளியான படங்கள்.
ஒவ்வொரு படத்தையும் முதலிலிருந்தே விளம்பரங்களிலிருந்தே பார்ப்போம்.. காரணம் கிரிக்கெட் பற்றிய செய்தித் தொகுப்பு.. அதில் சென்னையில் நடைபெறும் போட்டி என்றால் தவறாது இடம் பெறும் முகம் கூலிங் கிளாஸ் போட்ட நடிகர் திலகத்தின் திருமுகம்.
நன்றி முரளி சார், தங்களின் பதிவு இங்குள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டும் விஷயம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks