Page 27 of 305 FirstFirst ... 1725262728293777127 ... LastLast
Results 261 to 270 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #261
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    பம்மலார் அவர்கள் நடிகர்திலகத்தின் ஒலிம்பிக் விஜயம் பற்றிய ஆவணங்களைப் பதித்தாலும் பதித்தார். தொடர்ந்து வாசுதேவன், முரளி சீனிவாஸ், ராகவேந்தர் என அனைவரும் தங்கள் கிரிக்கெட் அனுபவங்களை (அவற்றோடு நடிகர்திலகத்தின் கிரிக்கெட் ஈடுபாட்டையும் தொடர்பு படுத்தி) பதித்து தள்ளி விட்டனர். (கூடவே 'டெயில் எண்டராக' நானும்).

    தவிர, அப்போதெல்லாம் பல்வேறு நல நிதிக்காக சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடைபெறும்போதெல்லாம் தானும் ஒரு அணியின் தலைவராக நடிகர்திலகம் கலந்துகொள்வார். (கூடவே ஜெமினிகணேஷ், ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், நாகேஷ் என கிரிக்கெட் ஆர்வம் கொண்ட பல நட்சத்திரங்களும் கலந்துகொள்வார்கள்). பழைய நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதுபோன்ற பல மேட்சுகளைக் கண்டுகளித்த இனிமையான அனுபவம் எனக்கு உண்டு. அதெல்லாம் எவ்வளவு இனிமையான நாட்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #262
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    ஆருயிர் அண்ணன் நடிகர்திலகத்தின் சிலைதிறப்புவிழா நிகழ்ச்சிகளின் தினகரன் ஆவண ஏடுகளைப்பதிப்பித்து நம் அனைவரின் கண்களையும் கலங்க வைத்து விட்டீர்கள். ஒட்டுமொத்த திரையுலகமும், தமிழகத்தின் "ஒரு கட்சி" தவிர மற்ற அனைத்துக்கட்சித்தலைவர்களும் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட பிரம்மாண்ட விழாவினை நேரில் கண்டுகளித்த... அல்ல. அல்ல.. கண்டு கண்கலங்கிய அந்த நாள் நினைவுக்கு வருகிறது. (நினைவுக்கு வருகிறது என்பது ஒரு சம்பிரதாய வார்த்தை... அதையெல்லாம் மறந்தால்தானே நினப்பதற்கு) அரசியல் தலைவர்கள் உட்பட யார் முகத்திலும் சிரிப்பைக்காண முடியாத ஒரு விழா என்றால் அது இந்த விழாதான். அனைவரும் உணர்ச்சிகளின் சங்கமத்தில் இருந்த தருணம் அது.

    கலைஞர் அவர்களால் சிலை திறக்கப்பட்டபோது கைதட்டிய ரசிகர்களைவிட, கதறிய ரசிகர்களே அதிகம்.

    இவ்வரிய பொக்கிஷப்பதிவுகளை, இதுவரை காணாதோர் கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

  4. #263
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் : 8

    நடிகர் திலகத்தின் 84வது காவியம்

    சித்தூர் ராணி பத்மினி [வெளியான தேதி : 9.2.1963]

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.2.1963


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #264
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,
    தங்களுடைய கிரிக்கெட் நினைவுகள் எல்லோரையும் போலவே என்னையும் வெகுவாக கவர்ந்துள்ளது மட்டுமின்றி நினைவுகளை அசை போடவும் வைக்கின்றன. இது போல் மேலும் பல நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும். அதற்காகத் தானே இந்தத் திரி. இதில் அன்பிருக்கும் பாசமிருக்கும். மேதாவித்தனம் இருக்காது, அதிகப் பிரசங்கித்தனமிருக்காது என்பதால் உள்ளம் தெளிவாகவும் இருக்கும். நடிகர் திலகம் என்ற மாமனிதரின் பல்வேறு பரிணாமங்களை வெளிக் கொணர பம்மலார் தந்துள்ள சிறந்த வாய்ப்பிற்கு நன்றி. குறிப்பாக பம்மலார் சூட்டிய நாமகரணம் என்ன பொருத்தமானது பாருங்கள். நாரதர் என்று ஒருவருக்கு பெயர் வைத்தாலும் வைத்தார் அவ்வளவு பொருத்தமாக அமைந்து விட்டது.

    தொடரட்டும் தங்கள் பணி.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #265
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 4

    நடிகர் திலகத்தின் 194வது காவியம்

    என்னைப் போல் ஒருவன்

    [முதல் வெளியீட்டுத் தேதி : 18.3.1978 (தென்னகம்), 14.4.1978(சென்னை)]

    முதல் வெளியீட்டில் அதிகபட்சமாக சென்னை 'தேவிபாரடைஸ்' திரையரங்கில் 70 நாட்களும் மற்றும் சேலம் 'நியூசினிமா'வில் 70 நாட்களும் ஓடிய சிறந்த வெற்றிக்காவியம்

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(மதுரை) : 26.4.1991


    முதல் வெளியீட்டில், ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான மதுரை 'தங்கம்' திரையரங்கில், 41 நாட்கள் ஓடி பெரும் வெற்றி..!

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #266
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதிப்பிற்குரிய முரளி சார்,

    தங்களைப் போன்ற பழுத்த அனுபவசாலியின் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் மிகுந்த மன நிறைவைத் தருவதோடு பொறுப்புக்களையும் அதிகமாக்குகின்றன. உயர்வான தங்கள் பாராட்டிற்கு மனம் நிறைந்த என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் நடிகர் திலகம் திரியில் 'தில்லானா'விற்கான தங்கள் பதிவு அம்சத்திலும் அம்சம்.

    குறிப்பாக ...

    "அந்த கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளின் போது விழி சிவந்து கண்ணில் நீர் பெருக்கி ஒரு சின்ன தலையாட்டலில் உன் உள்ளத்தையும் அதில் என் மேல் உள்ள காதலையும் எனக்கு ஒன்று என்றால் நீ துடித்துப் போவதையும் நான் உணர்ந்திருக்கிறேன் என்ற புரிதலையும்"....

    என்ற வரிகளை பலமுறைகள் படித்து வியந்து, மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

    திகட்டவே திகட்டாத 'தில்லானா' திறனாய்வுக்கு தேனான நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #267
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சிக்கலார் பார்ட்டி
    பாகம் 8ல் பம்மலார் தந்திருந்த அட்டகாசமான நிழற்படம் சிக்கலார் பார்ட்டி

    http://www.mayyam.com/talk/showthrea...-Part-8/page69

    'நாதஸ்வர சக்கரவர்த்தி'யாக நடிகர் திலகம், ஏ.பி.என்
    பம்மலார் பாகம் 8ல் தந்திருந்த நிழற்படங்கள்... அவருக்கு மீண்டும் நமது நன்றி

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #268
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    தங்கள் அன்புப் பாராட்டிற்கு மிக்க நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

    சங்கரா சார் அவர்களின் பிறந்த நாள் பரிசாக தாங்கள் அவருக்களித்த 'கோடீஸ்வரன்' அவருக்கு மட்டுமல்ல... எங்கள் அனைவருக்கும் கோடியைத் தாண்டிய கோலாகலப் பரிசு. கொள்ளை அழகு கொஞ்சும் கோமேதகப் பரிசு.

    கிரிக்கெட்டைப் பற்றி தாங்கள் பதித்துள்ள பதிவு பதிவுகளில் மட்டுமல்ல... கிரிக்கெட்டிலும் கிங் பம்மலார் என்பதை ஆணித்தரமாக சொல்கிறது. ஆல்ரவுண்ட் பம்மலார் ஆல் போல் தழைத்து வாழ வாழ்த்துக்கள். தங்களுக்குப் பிடித்த மற்றொரு SG இதோ தாங்கள் கண்டு களிக்க.



    சித்தூர் ராணி பத்மினி முதல் வெளியீட்டு விளம்பரங்கள் 'ராஜ' பதிவுகள்.

    என்னைப் போல் ஒருவன் மறு வெளியீட்டு விளம்பரம் மற்றும் குறிப்புகள் உங்களைப் போல் ஒருவர் யார் என்று கூற வைக்கிறது. வேறு யாரால் சார் மறு வெளியீட்டு விளம்பரங்களை இப்படி அள்ளி வழங்க முடியும்?...

    சிகரப் பதிவுகளுக்கு மனம் மகிழ்ந்த நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #269
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்,

    பதிவுகளுக்கான தங்களுடைய பாராட்டுதல்களுக்கு எனது தலையாய நன்றிகள்.

    தாங்கள் கூறியது போல 'ஆனந்தக்கண்ணீர் 'நல்ல படம், ஆனால் மக்களால் அதிகம் கண்டுகொள்ளப்படாத படம். 'பிரஸ்டீஜ்' பத்மநாபன் gaint-ஆக மக்கள் மனதில் முன்னமேயே தங்கி ராஜ்ஜியம் நடத்துவதால் 'காம்ப்ரமைஸ்' கல்யாணராமன் அதிகம் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டாரோ?!

    'அவன் ஒரு சரித்திரம்' பதிவில் கிரிக்கெட் பற்றி எழுதியதை மட்டும் இங்கே மறுபதிவு செய்திருந்தாலும் படிக்க மிக interesting ஆகவே இருந்தது. அதுமட்டுமல்ல... 'அவன் ஒரு சரித்திரம்' முழு பதிவையுமே மீண்டும் ஒருமுறை பாகம் 9-ல் படித்துச் சுவைக்க காரணமாயும் இருந்தது. அதற்காக மீண்டும் தங்களுக்கு நன்றிகள் சார்.
    Last edited by vasudevan31355; 31st July 2012 at 12:53 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #270
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் அழகிய-அரிய புகைப்படத்துக்கு கனிவான நன்றி, esvee சார்..!

    தங்களின் மீள்பதிவு இன்றும் இனிமை, கிரிக்கெட் பதிவு மிக அருமை, mr_karthik..!
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •