-
1st August 2012, 09:10 AM
#721
Senior Member
Diamond Hubber
Brem Mall-a illa-nu nenekkiren. Senthul it is then?
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
1st August 2012 09:10 AM
# ADS
Circuit advertisement
-
1st August 2012, 11:12 AM
#722
Moderator
Platinum Hubber
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st August 2012, 01:50 PM
#723
Senior Member
Seasoned Hubber
Prabhu (P_R), neenga nejamaave oru ezhuhu vithagar thaan. Enaammaa ezhudhareenga. May be you should think of going into Journalism. You really have it man. I don´t find words to describe how I felt as I read your writings about Sikkalaar´s character.
Thanks again for Murali for bringing it again and Thanks again Prabhu, for writing such a wonderful piece. Joe was absolutely right in what he said
niraive kaanum manam vendum
iraivaa nee adhai thara vendum
-
1st August 2012, 04:02 PM
#724
Senior Member
Devoted Hubber
அன்பு முரளி சார்,
சிக்கலே இல்லாமல் சிக்கலாரை தாங்கள் ஆய்வு செய்திருக்கும் விதம் அருமை.மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விட்டீர்கள்,நன்றிகள் வாழ்த்துக்கள்.
நான் விருப்பப்பட்டது போலவே கர்ணனுக்கு பிறகு திருவிளையாடல் தான் என்ற இனிக்கும் தகவலுக்கு நன்றி
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
1st August 2012, 05:18 PM
#725
Administrator
Platinum Hubber
Originally Posted by
dell_gt
we r planning for saturday show
.....
change to sunday afternoon lah... pOi pattaya kelappuvom
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
1st August 2012, 08:53 PM
#726
Moderator
Platinum Hubber
Thank You sivan. Long time since I saw you around here!
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
1st August 2012, 10:03 PM
#727
Senior Member
Diamond Hubber
P_R neenga enna ezhuthi enna payan.. andhappakkam orE vasaiyaavulla vizhudhu Nesst pattaakkathi bairavan paththi ezhuthunga..
-
2nd August 2012, 05:16 PM
#728
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. முரளி அவர்களே,
உங்களுடைய "தில்லானா மோகனாம்பாள்" பட ஆய்வு வழக்கம் போல் கன கச்சிதமாக இருந்தது. அணு அணுவாக ரசித்து அனுபவித்து எழுதினாலும், வழக்கம் போல் உங்களுடைய சரளமான தமிழ் நடை அப்படியே அருமையாக இருந்தது.
திரு PR அவர்களே,
முரளி அவர்களின் தில்லானா ஆய்விற்கு பதில் அளிப்பது போல், நீங்களும், ஒரு பெரிய ஆய்வைத் தந்து விட்டீர்கள். அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது. பல நுண்ணிய இடங்களைப் பார்த்து பார்த்து தாங்களும் ரசித்து எழுதியுள்ளீர்கள். வழக்கம் போல், மொழியின் மீது உங்களுக்கு உள்ள ஆளுமையை பறை சாற்றியது. மற்ற அன்பர்கள் கூறியது போல், பத்திரிகைத் துறையில் நீங்கள் இறங்கினால், பெரிய இடத்துக்குப் போய் விடுவீர்கள்.! உங்களிடம் மேலும் எதிர்பார்க்கிறோம்.
திரு. முரளி,
சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் அலை பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது, தில்லானாவைப் பற்றி நான் கூறிய சில கருத்துக்களை இங்கே மறுபடியும் நினைவு கூருகிறேன்.
எனக்குத் தெரிந்து, உலகில் உள்ள அத்தனை அற்புதக் கலைஞர்களின் அத்தனை அற்புத நடிப்பையும் ஆராய்ந்தால், நடிகர் திலகத்தின் தில்லானா பெர்பார்மன்ஸ் தான் உயர்ந்தது எனலாம். யாரடா இவன் உளறுகிறான் என சிலர் கூறலாம். இது போல், வியட்நாம் வீடு, மோட்டார் சுந்தரம் பிள்ளை, தெய்வப்பிறவி, முதல் மரியாதை, தேவர் மகன் மேலும் சில பாத்திரங்களைச் சொல்லலாம்.
உலகில் உள்ள - முக்கியமாக - மேலை நாடுகளில் உள்ள - அத்தனை சிறந்த நடிகர்களும், ஒன்று, சிறந்த நடிகர்களாக இருப்பார்கள் - இல்லை பெரிய நட்சத்திரமாக இருப்பார்கள். ஒரே நேரத்தில் வெற்றிகரமான கலைஞன் மற்றும் நட்சத்திரம் என்கின்ற இந்த இரட்டை குதிரை சவாரி சாத்தியமில்லாத ஒன்று. அதிலும், முக்கியமாக, தென்னிந்திய நடிகர்களுக்கு - அதுவும் பெரிய ரசிகர் படை உள்ளவர்களுக்கு - நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. எப்போது, ஒரு நல்ல நடிகன் பெரிய ரசிகர் படைக்கு சொந்தக்காரனாகிறானோ, அந்த நிமிடம் முதல், அவன், அந்த ரசிகர் பட்டாளத்துக்குத் தீனி போட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான். அதிலும், சினிமா ஒரு வர்த்தகத் துறை - அதில் நிலைக்க, பணம் சம்பாதித்தே ஆக வேண்டும், தன்னை வைத்துப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் லாபம் வந்தே ஆக வேண்டும் என்கிற போது, எந்த நடிகனாலும், கலைக்காக நடிக்க முடியாது போகிறது.
ஆனால், தில்லானாவைப் பாருங்கள். அவர் நடிக்க ஆரம்பித்து பதினைந்து வருடங்கள் கழித்து வருகிறது. சிவாஜி திரையில் தோன்றினால், பார்க்க ஆரம்பித்தவுடன், தியேட்டரில் உள்ளவர்கள், அவரை சிவாஜி என்கிற நட்சத்திரமாகத் தான் முதலில் அணுகுகிறார்கள். அதிலும், அவரது பிரத்தியேக ரசிகர்கள், அவரது பிரத்தியேக சில பல அசைவுகளை அவரிடத்தில் எதிர்பார்க்கிறார்கள். படம் முழுவதிலும், அதிலும், ஆரம்பத்திலே இருந்தே, பார்க்கும் ஒருவரையும், அவர் சிவாஜி இல்லை, அந்தப் பாத்திரமான சிக்கல் சண்முகசுந்தரம் தான் என்பதை நிலை நாட்டியாக வேண்டும் என்கிற சவால்!
இந்த சவாலை, அவர் எதிர் கொண்ட கால கட்டத்தைத் தான் நாம் இப்போது கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்தப் படம் வருவதற்கு ஒரு வருடம் முன்பு, தங்கை வெளி வந்து, அவருடைய மூன்றாவது வெற்றிகரமான காலகட்டத்தை - நடிப்புப் பரிமாணத்தை வைத்துப் பார்க்கையில் - துவக்குகிறார். (1952 முதல் 1959 வரை ஒன்று; 1959 (பாகப்பிரிவினை முதல்) 1967 வரை இரண்டு; தங்கை (1967 முதல்) மூன்று.) சமூகத்தின் எல்லாத்தட்டு மக்களிடம் சென்று சேர ஆரம்பித்து, stylized பெர்பார்மன்ச்களிலும், மசாலாப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த இக்கட்டான கட்டத்தில், இப்படி ஒரு பாத்திரம். அதில், ஒரு இடத்தில் கூட பாத்திரத்தை விட்டு இடம் பெயராமல் நடித்தே ஆக வேண்டிய கட்டாயம்.
அதை விட முக்கியம் - அவருடைய ரசிகர்கள் எல்லோரும் ஏங்கியதற்குத் தீனி போட்டு, பெரிய அளவில் அவருடைய உடல் எடையைக் குறைத்து, கல்லூரி மாணவன் போல் காட்சியளிக்கத் தொடங்கியிருந்த நேரம். அவருடைய ரசிகர்கள் எல்லோரும் "அப்பாடா! இனிமேல் சிவாஜியை இளம் வயதினனாக காதல் மற்றும் சண்டைப் படங்களில் பார்க்கலாம். வயதான பாத்திரங்களில் பார்க்க வேண்டிய அவசியம் இனி இராது!!" என்றெல்லாம் இறுமாந்திருந்த காலம் அது!!!
"தில்லானா மோகனாம்பாள்" - நடிகர் திலகத்தின் அறிமுகக் காட்சி வருகிறது - பார்த்தால் - பாகவதர் காலத்து சிகை அலங்காரம், மீசை இல்லாத வழ வழ முகம் - நெற்றியில் பைசா அகலப் பொட்டு! பார்த்தவுடனேயே, தியேட்டரில் அனைவரும் "கொல்லென்று" சிரித்து விட வேண்டிய அபாயம் இருக்கிறது. நான் ஏற்கனவே விட்ட சவால் தான். இது போல், இந்தியாவில் உள்ள அத்தனை நட்சத்திரங்களையும் நடிக்க வையுங்கள். திலீப், அமிதாப், ரஜினி, கமல் முதல் இன்றுள்ள ஷாருக், ஆமிர், சூர்யா, விக்ரம் வரை! பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்ற ஒருவர் மேற்கூறிய தோற்றத்தில் முதல் காட்சியில் தோன்றும் போது தியேட்டரில் ஒருவர் கூட சிரிக்கக் கூடாது! நினைத்துக் கூடப் பார்க்க முடியாது!! அதுதான் நடிகர் திலகம். (இதே சாதனையை கிட்டத்தட்ட நெருங்கிய ஒரே மற்ற நடிகர் மறைந்த என்.டி. ராமா ராவ் - "நர்த்தன சாலா" என்கின்ற தெலுங்குப் படத்தில் - பெண் வேடத்தில் - அல்ல அல்ல - அரவாணி வேடத்தில் - நடித்த போது. ஆனால், இந்தப் படம் வந்த 1963 - இல் அவருடைய ஜன ரஞ்சக இமேஜ் பெரிய அளவில் வளரவில்லை ஆதலால், அவரால் வெகு எளிதாக சோதனை முயற்சி செய்ய முடிந்தது. ஆனால், நடிகர் திலகத்துக்கு அப்படி இல்லை - மேற்கூறிய படி.)
ஆக, முதலில், தோற்றப் பொலிவில் வெற்றி பெற்றாகி விட்டது. உடனே அதிலேயே மாய்ந்து போகாமல், நாதஸ்வர வித்வானாக மாறியாக வேண்டும் - அதற்குரிய பாவங்களைக் காட்டியாக வேண்டும் - இதனிடையே - அவனுக்கு நிகரான புகழுடைய இன்னொரு கலைஞர் வரும்போது - அதற்கேற்ற பாவனைகளைக் காட்டியாக வேண்டும். ஊடே, அந்தக் கலைஞனின் பிரத்தியேக குணமான திமிரையும் காட்டியாக வேண்டும். ("இவங்க நாட்டியத்திலேயே பேர் போனவங்க. இவங்களைத் தெரியாதவங்களே இல்லை - "எனக்கு இப்பத்தான்யா தெரியும்!"). இத்தனையையும், முதல் காட்சியிலேயே பதிவு செய்து, அந்தக் கதாபாத்திரத்தின் அசல் தன்மையை கண நேரத்தில் பதிவு செய்து, படம் பார்த்த, இன்னும் பார்த்துக்கொண்டிருக்கின்ற, இனி மேல் பார்க்கப்போகின்ற அனைவரையும், இது சிவாஜி இல்லை, சண்முக சுந்தரம் என்ற நாதஸ்வரக் கலைஞன் என்று படம் நெடுகிலும் பதிவு செய்ததில், நடிகர் திலகம் என்ற அந்தக் கலைஞன் பெற்ற வெற்றி யாரும் பெறாதது, இனி மேலும், பெற முடியாதது.
நடிகர் திலகத்தின் பாடல்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கையில், "தில்லானாவைப்" பற்றியும் எழுதத் தூண்டிய, திரு. முரளி மற்றும் திரு. PR அவர்களுக்கு நன்றி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
2nd August 2012, 06:06 PM
#729
Senior Member
Seasoned Hubber
NT with Rajkapoor and Devika
Dear all,
Rare photo of NT with Rajkapoor and Devika.
Karthik sir, this is for you.
Cheers,
Sathish
-
2nd August 2012, 09:20 PM
#730
Senior Member
Platinum Hubber
Murali sir & P_R on thillAnA :
Great!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks