Page 38 of 305 FirstFirst ... 2836373839404888138 ... LastLast
Results 371 to 380 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #371
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் சார்,

    முதலில் தங்களின் புதிய தொடருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ஏற்கெனவே பம்மலாரின் ஆவணப்பதிவுகள் தொடர், வாசுதேவரின் 'நடிகர்திலகத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தொடர்', மற்றும் 'நடிகர்திலகத்தின் நாயகியர் தொடர்', இப்போது தங்களின் 'நடிப்புக்கு இலக்கணம் தொடர். தொலைக்காட்சி சேனல்களில் அடுத்தடுத்து சீரியல்கள் வருவது போலிருக்கிறது. நமது திரி அறுசுவை உணவு என்பதையெல்லாம் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

    அடுத்து, ராயப்பேட்டை மணிக்கூண்டு 'போஸ்ட்டர்' முதியவரின் ஈடுபாடு கண்களில் நீரை வரவழைத்தது. நடிகர்திலகத்துக்கு எப்பேற்பட்ட ரசிகர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்றெண்ணும்போது நானெல்லாம் என்ன சுண்டைக்காய் என்ற உணர்வுதான் வருகிறது. நான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்தான் பட்டப்படிப்பு படித்ததால், நீங்கள் சொல்லும் அந்த இடம் எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். அந்த சர்ச்சின் காம்பவுண்ட் மீது கண்ணாடிப்பெட்டியினுள் ஒரு பைபிள் புத்தகத்தை திறந்து வைத்து தினமும் இரண்டு பக்கங்கள பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்கள். கல்லூரிக்கு மாலை வகுப்பை கட் அடித்து விட்டு, மவுண்ட் ரோடு தியேட்டர்களுக்கு படம் பார்க்க அந்த வழியே நடந்துதான் நாங்கள் செல்வது வழக்கம். கட் அடிக்காத காலங்களில் மாலை வகுப்பு முடிந்து நண்பர்களுடன் 'சாந்தி தியேட்டர் சங்கமத்துக்கு' நடந்து செல்வதும் அந்த வழியேதான். சென்னைக் கல்லூரிகளிலேயே 'தியேட்டர் வளம் செறிந்த இடம்' புதுக்கல்லூரிதான் என்பது தங்களுக்கு தெரியாததல்ல.

    அந்த இடத்தில் ஒட்டப்பட்டிருந்த தெய்வமகன் போஸ்ட்டரை அந்த முதியவர் இறக்கும் வரை பாதுகாத்து, இறந்த பின்னும் எடுத்துச்சென்றார் என்பது உண்மையிலேயே அதிசயிக்கத்தக்க ஒரு நிகழ்வு என்பதில் ஐயமில்லை. இதுபோல இன்னும் எத்தனை ஆயிரம் ரசிகர்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ, இருக்கிறார்களோ.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #372
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    பொம்மை இதழின் 'ஆனந்தக்கண்ணீர்' பக்கங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. நடிகர்திலகத்தின் மனந்திறந்த வாசகங்கள் மனதைப்பிசைந்தன. ரொம்பவே கஷ்ட்டப்பட்டு செய்த பல பாத்திரங்கள் மக்களின் ஆதரவு கிடைக்காமல் போனதில் அந்தக்கலைஞனின் மனம் எவ்வளவு வேதனைப்பட்டது என்பதை அறிய முடிகிறது. முன்பு திருவருட்செல்வர் படத்தைப்பற்றிய கருத்துக்கூறிய போதும் "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் இருந்தும் பட்ட பாட்டுக்கு பலன் எங்கே?" என்று கேட்டிருந்தார்.

    முத்தாய்ப்பாக, 'தன் படத்தைப்பார்த்து ரசிகனின் கண்களில் இருந்து வரும் ஆனந்தக்கண்ணீர்தான் தனக்கு கோடிகள்' என்று முடித்திருப்பது, ரசிகனின் பாராட்டை அவர் எவ்வளவு மதிக்கிறார் என்பதைக்காட்டுகிறது.

    முத்தான பக்கங்கங்களை பதிவிட்ட தங்களுக்கு சத்தான பாராட்டுக்கள், நன்றிகள்.

  4. #373
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! தங்களது புதிய தொடர் பற்றிய தங்களின் அறிவிப்பு நிஜமாகவே ஓர் இன்ப அதிர்ச்சிதான். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நம் அன்பு தெய்வத்தை முன்னிறுத்தி தாங்கள் தொடங்கவுள்ள புதிய தொடர் தொடர்களின் இலக்கணமாக திகழப் போவது திண்ணம். ஸ்டானிலாவ்ஸ்கியின் நடிப்புக்கலையின் பல கோட்பாடுகளை கேள்விக்கூடப் படாமல் தன் அங்க அசைவுகள் மூலம் அதனை விளக்கமாகவும், மிகத் தெளிவாகவும், மிக எளிமையாகவும் பாமரர் முதல் படித்தவர் வரை கொண்டு சேர்த்த பெருமையுடைய ஒரே நடிகர் நமது இதய தெய்வம். ஸ்டானிலாவ்ஸ்கி மட்டும் நடிகர் திலகத்தின் காலத்தில் உயிரோடு இருந்திருந்து, அவரின் நடிப்பைப் பார்த்து விட்டு, நடிப்பிலக்கணம் பற்றிய நூலை எழுத முனைந்திருப்பாரேயானால் அவர் எழுத நினைக்கும் அந்த நூலில் ஒரே ஒரு வரிதான் இருந்திருக்கும். அது திரு.சிவாஜி கணேசன்.

    தங்கள் புதிய தொடர் தொடங்கலுக்கு என் அன்பான, மகிழ்ச்சியுடன் கூடிய நிறைவான வாழ்த்துக்கள்.

    'ஆனந்தக் கண்ணீர்' பதிவிற்கான தங்கள் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #374
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்,

    'ஆனந்தக்கண்ணீர்' பதிவை முழுவதுமாகப் படித்து தங்கள் அழகான கருத்துகளை அருமையாக எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மேன்மையான நன்றிகள். நீங்கள் முன்பு நடிகர் திலகம் திரியில் நீங்கள் விரும்பிக் கேட்டிருந்த, தங்களின் மனம் கவர்ந்த ஒரு பதிவு வெகு விரைவில் இங்கு ஜொலிக்கப் போகிறது. அதுவரை கொஞ்சம் சஸ்பென்ஸாகவே இருக்கட்டுமே! ப்ளீஸ்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #375
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நாயகியர்.(விஷுவல் தொடர்)

    (தொடர்-2 இன் தொடர்ச்சி...)

    நடிகர் திலகத்தின் நாயகியர் (2) 'நாட்டியப் பேரொளி' பத்மினி

    படம்: 'மரகதம்'




    நடிகர் திலகமும், நாட்டியப் பேரொளியும் இணைந்த, பெரும் வரவேற்பைப் பெற்ற கிளாசிக் டூயட்.

    "கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு... எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு"...



    (நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி ஜோடி அட்டகாசம் தொடரும்...)
    Last edited by vasudevan31355; 3rd August 2012 at 07:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #376
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    'நடிகர் திலகத்தின் நாயகியர்' விஷுவல் நெடுந்தொடரில், நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி காட்சியளிக்கும் 'பணம்' நிழற்படமும், பாடல் வீடியோவும் கண்களுக்கு விருந்து. அன்னை இல்லம் எனும் நல்லதொரு குடும்பத்திற்கும், அகிலமெங்கும் உள்ள அன்புள்ளங்களின் இல்லங்களிலும் திருவிளக்காக நிரந்தர ஒளிவீசிக் கொண்டிருக்கும் நமது இதயதெய்வத்துக்கு, 'குடும்பத்தின் விளக்கு நல்ல குடும்பத்தின் விளக்கு' கானம் சரியான சமர்ப்ப்ணம்..! MLV-ன் வாய்ஸ் PSLV ராக்கெட்..!

    இதே போன்று "மரகதம்" நிழற்படமும், 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு' பாடல் வீடியோவும் மிகச் சிறந்த செலக்ஷன்..!

    தமக்குத் திரையுலகில் முதன்முதலில் நடிக்க வாய்ப்பளித்ததற்காக, நமது நடிகர் திலகம், திருமதி. அஞ்சலிதேவி அவர்களை 'Boss' என்றே மரியாதைதோடு அழைப்பார். தாங்கள் பதித்திருந்த, நடிகை அஞ்சலிதேவியின் கருத்துரை 'நச்'..!

    எல்லாவற்றுக்கும் சிகரமாக விளங்குகிறது நமது அன்பு அண்ணலின் 'பொம்மை [1-15 ஜனவரி 1986]' இதழ் அற்புதக் கட்டுரை. அட்டைப்படமே தூக்கிக்கொண்டு போய்விட்டது. தனது கடந்தகால இதயப்புண்களை, எவர் இதயமும் புண்படாமல், எடுத்தியம்ப முடியுமானால் அது நமது அண்ணலால் மட்டுமே முடியும். அருமையான இக்கட்டுரையில் பல இடங்கள் இதயத்தை ஈர்த்தன..

    திரைப்பட கேரக்டர்கள் பற்றிச் சொல்லும்போது, 'தோட்டம் ஒன்றுதான்..அதில் நிறைய பூச்செடிகள் இருக்கு..',

    பலவித கேரக்டர்கள் செய்வதைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'கேரக்டர்கள் பலவிதமானவை..ஆனால் ஆக்டர் ஒருவர்தானே..', [உண்மை, எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் நடித்துக் காட்ட ஸாரி வாழ்ந்து காட்ட 'ஆக்டர்' என்று இவர் ஒருவர்தானே இருக்கிறார். அதனால்தானோ என்னவோ, பண்டித நேரு இவரைப் பார்க்கும்போதெல்லாம் 'ஹலோ ஆக்டர்' என்றே விளித்திருக்கிறார் போலும்].

    'சாதிகள் இல்லையடி பாப்பா' என்கின்ற பாரதியின் வாக்கிற்கிணங்க வாழ்ந்தவரல்லவா நம் வாழ்வியல் திலகம். அதனை எத்துணை நேர்த்தியோடு எடுத்துரைக்கிறார், 'வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஜாதி உணர்வு இருந்ததில்லை'.

    'சோதனைகள் நேரும்போது compromise பண்ணவேண்டியது ஒரு கலைஞனின் கடமை' எனக் கரெக்டாகக் கூறும் நடிகர் திலகம், அவர் ஜெயக்கொடி நாட்டிய சினிமா உலகம் சோஷியலிசத்தை அமல்படுத்தியது எனக் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தை. குறிப்பாக சிவாஜி-எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் திரையுலகில் சமதர்மம் ஓங்கி உயர்ந்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

    திருட்டு வீடியோ பிரச்னை பற்றி அன்றே எவ்வளவு ஆழமாக அலசியிருக்கிறார். திரையுலகில் ஒற்றுமை இன்றியமையாதது என்பதனை எவ்வளவு அழகாக எடுத்துவைக்கிறார்.

    இக்கட்டுரையின் முடிவில் அவர் எழுதியிருக்கும் வைர வரிகள் ஒவ்வொரு அன்புள்ளத்தின் கண்களிலும் ஆனந்தக்கண்ணீரை கண்டிப்பாக வரவழைத்துவிடும். [என் கண்களிலும் வழிந்தோடும் ஆனந்தக்கண்ணீரைத் துடைத்தபடியேதான் இவ்வரிகளை எழுதுகிறேன்.]

    வழங்கிய ஒவ்வொரு பதிவிலும் பல முத்திரைகளைப் பதித்துள்ள தங்களுக்கு எனது நன்றி முத்தாரங்கள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #377
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார் & வாசுதேவன் சார்,

    அஞ்சலிதேவியை பாஸ் என்று அழைப்பது மட்டுமல்ல, அஞ்சலிதேவியின் தயாரிப்பான 'பூங்கோதை'யில் தனக்கு முதல் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றிக்கடனாக, பின்னாளில் அஞ்சலிதேவி தெலுங்கில் தயாரித்த 'பக்த துக்காராம்' படத்தில் மராட்டிய மாவீரன் சத்ரபதி சிவாஜி ரோலில் பணம் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்துக்கொடுத்தார் நமது நடிகர்திலகம்.

  9. #378
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சூப்பர் கார்த்திக் சார்.

    அருமையான தகவலுக்கு நன்றி! 'பக்த துக்காராம்'படத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். இன்று இரவு தலைவர் போர்ஷனை மட்டும் பார்த்து விட வேண்டியதுதான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #379
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பக்த துக்காராம்' stills

    'வீர சிவாஜி'யாக நமது 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்.



    Last edited by vasudevan31355; 3rd August 2012 at 09:27 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #380
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சூப்பர் கார்த்திக் சார்.

    அருமையான தகவலுக்கு நன்றி! 'பக்த துக்காராம்'படத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். இன்று இரவு தலைவர் போர்ஷனை மட்டும் பார்த்து விட வேண்டியதுதான்.
    Dear Vasudevan sir,
    Indha Color la Thalaivar, Chatrapathi Sivaji dress poattu, oru walk viduvaar paarunga...Mavanae...Andha Maratiya Mannan Photlaerndhu Veliya Vandhu Thalaivara Kattipudichu uchchi mugarndhu vaazhthitupovaaru..Avlo Kalakkala irukkum...In one song sequence, you can see so many thalaivar all chatrapathi sivaji's in horses destroying enemies....Pinniduvaaru...We will be confused as to which Chatrapathi to see..because we have only 2 eyes..whereas in frame around 100 chatrapathi sivaji would come...!!!!! Guest Rolennu Paeru...But as usual, yellarayum Guest maadhiri treat pannittu poiduvaaru...!!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •