Page 39 of 305 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #381
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    "வளர்பிறை" விஷுவல் ஆவணப்பதிவுக்கு, தாங்கள் வழங்கிய பாராட்டுதல்களுக்கு எனது இதமான நன்றிகள்..!

    இக்காவியத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் உண்ர்ச்சிப்பிரவாகம்..! ஆடியோ சுட்டிக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

    'கூண்டு திறந்ததம்மா' பாடல் வரிகளை அளித்ததோடு மட்டுமல்லாமல், அப்பாடற்காட்சி பற்றிய விளக்கமும், அதில் நமது வாழ்வியல் திலகம் வாழ்ந்துகாட்டியுள்ளவிதம் பற்றிய கருத்துரையையும் தந்து அசத்திவிட்டீர்கள்..! பாராட்டுக்கள..!

    திரியின் இரு கண்களான தாங்கள் மற்றும் நமது நெய்வேலியார் பங்களிப்புகளால், நமது நடிகர் திலகம் திரி ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #382
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    A message

    Anbulla Pammalar Sir
    Naan Anupiyadhu Kadidham alla ....!
    Ullam !!!
    Adhil ulladhellam ezhuthum alla !!
    Ennam !!!
    Manadhil irupadhanai Veliyil Solla !!!

    Naan Anupiyadhu Kadidham Alla !!!!! Ullam!!!!!
    [/B][/SIZE]

  4. #383
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்

    புதிய தொடர்



    நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர், நடிகர் திலகம் என்றெல்லாம் நாம் புகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் இலக்கணம் உள்ளதா, அப்படி என்றால் அதில் உள்ள இலக்கணம் என்ன, அவருடைய நடிப்பு எந்த வகையை சேர்ந்தது, அல்லது எந்த விதத்தை சார்ந்தது, இப்படி பல்வேறு விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள், எதிர்காலத்தில் வரக் கூடும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் அவருடைய நடிப்பை மிகை என்று வர்ணிக்கும் நண்பர்களுக்கும், அவர்களுக்குத் துணை போகக் கூடிய நமது ரசிக நண்பர்களுக்கும் இந்தத் தொடர் தெளிவைத் தரும் என்று நான் நம்புகிறேன். இந்தத் தொடரை மிக விரைவில் தொடங்க நினைத்துள்ளேன். நடிப்பைப் பற்றியும் அதன் கோட்பாடுகளைப் பற்றியும் உலக அளவில் இலக்கணம் போல் விளங்குவது ஸ்டானிலாவ்ஸ்கி எழுதியுள்ள நூலாகும். இவருடைய காலம் 1863-1938. திரைப் படம் என்பது அறிவியல் ரீதியாக உலக அளவில் மக்களை சென்றடையத் தொடங்கிய கால கட்டத்தில் தான் இவருடைய வாழ்க்கை காலமாகும். இவருடைய நாடு ருஷ்யா. இவர் மறைந்த போது நடிகர் திலகம் 10 வயது குழந்தை. கல்வி யறிவில் நாட்டமின்றி நாடகத் துறைக்கு சென்று தன் வாழ்க்கையத் தொடங்கிய காலம் என்று கொள்ளலாம். கிட்டத் தட்ட படிக்காத மேதையாக விளங்கிய நடிகர் திலகம், நிச்சயமாக ஸ்டானிலாவ்ஸ்கி கோட்பாடுகளைப் படித்து தன் நடிப்பை அமைத்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. அப்படிப் பட்ட நடிகர் திலகத்தின் நடிப்பில் ஸ்டானிலாவ்ஸ்கியின் பல கோட்பாடுகள் விளக்கமாகவும் உதாரணமாகவும் அமைந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த கோட்பாடுகளையும் நடிகர் திலகத்தின் நடிப்பையும் ஒரு சேர ஆய்ந்து எழுதுவதே இத்தொடரின் நோக்கம். எங்கெங்கு சாத்தியமோ அங்கங்கு காட்சிகளும் துணைக்கு இணைக்கப் படலாம்.

    இத்தொடருக்கு தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    டியர் ராகவேந்திரன் சார்,

    'உண்மை ஒருநாள் வெளியாகும் அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்' என்பதற்கேற்ப தங்களின் புதிய தொடர் பல சிறந்த விஷயங்களை தெள்ளத்தெளிவாக்கப்போகிறது எனபது திண்ணம். 'நடிகர் திலகமும் நடிப்புக் கோட்பாடுகளும்' நெடுந்தொடர் மாபெரும் வெற்றி காண மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #384
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    நாயகியர் தொடர் கலக்குகிறீர்கள்.. பத்மினி வரிசையில் கனவும் பலித்தது, பாடல் நான் வணங்கும் தெய்வம் படத்தில் மிகவும் அருமையாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்கள் கணவனை தெய்வமாக மதித்தார்கள் என்பதாய் பொருள் கூறும் பாடல் நினைவுக்கு வருகிறது. மரகதம் ... ஆஹா.. இதில் இந்த பாடலும் இதனுடன் கூட மற்றொரு பாடலான புன்னகை தவழும் மதிமுகமோ பாடலும் அட்டகாசமாய் இருக்கும். இவையன்றி மாலை மயங்குகின்ற நேரம், குங்குமப் பூவே, காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு என்று எஸ்.எம்.எஸ். இசை ராஜ்ஜியம் கொடி கட்டிப் பறக்கும்.
    தொடருங்கள்..

    அதே போல் பக்த துக்காராம் ஸ்டில்லும் சூப்பர்.

    நடிகர் திலகத்தின் அபூர்வ படமொன்று facebookல் ஒரு நண்பரின் இணையப் பக்கத்தில் இருந்தது, நம் பார்வைக்கு


    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #385
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,
    தங்களுடைய ஆதரவான வார்த்தைகளுக்கும் மற்றும் வாசுதேவன், கார்த்திக் உள்பட நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #386
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார்,

    தங்களின் புதிய தொடரை காண ஆவல் மேலிடுகிறது, திரு வாசு அவர்கள் கூறியது போல் ஸ்டானிலாவ்ஸ்கி மட்டும் நடிகர் திலகத்தின் காலத்தில் உயிரோடு இருந்திருந்து, அவரின் நடிப்பைப் பார்த்திருந்தால் நடிப்பின் இலக்கணமே நம் தலைவர் தான் என எழுதி வைத்து விட்டு போய் இருப்பார்.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  8. #387
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :10

    நடிகர் திலகத்தின் 62வது காவியம்

    ராஜபக்தி [வெளியான தேதி : 27.5.1960]

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 27.5.1960


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  9. #388
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 5

    நடிகர் திலகத்தின் 62வது காவியம்

    ராஜபக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 27.5.1960]

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    மறு வெளியீட்டு குறும்பிரசுர விளம்பரம்


    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #389
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் பாரிஸ்டர் சார்,

    மிக்க நன்றி! 'பக்த துக்காராம்' காவியத்தில் நான் என்ன என் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேனோ அதை அப்படியே நூறு சதவிகிதம் நீங்கள் உங்கள் எண்ணங்களாக பிரதிபலித்ததைக் கண்டு படுஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன். ஒரு வீர சிவாஜி பல வீர சிவாஜிக்களாய் பெருகி குதிரைகளில் வந்து எதிரிகளை துவம்சம் செய்து தூள் பரத்தும் போது நீங்கள் சொன்ன 'மவனே'தான் அதை பாராட்டும் உச்ச வார்த்தையாய் இருக்கும்.'Matrix' ஆங்கிலப் பட சீரியல்களில் ஒரு வில்லன் பலப்பல வில்லன்களாகப் பெருகி சண்டையிடுவதை அன்றே 'பக்த துக்காராம்' படத்தில் தலைவரை வைத்து செய்து காட்டி விட்டார்கள். தலைவர் சும்மா அசாதாராணமாய் குதிரையேற்றம் செய்து அதகளப் படுத்துவார். அதே போல துக்காராம் தன் முன் குற்றவாளியாய் நிறுத்தப்படும் போது அவர் குற்றவாளியா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் கட்டங்களில் நடிப்பில் அனைவரையும் திணற வைப்பார். அந்த ஒப்பனை தான் எவ்வளவு அழகு! தங்களுடைய அதிரடி ரசனைக்காக தலைவரின் அற்புதமான ஸ்டில் ஒன்றை தங்களுக்கு அன்புப் பரிசாக வழங்குகிறேன்.

    Last edited by vasudevan31355; 3rd August 2012 at 10:45 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #390
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    என்னுடைய கடந்தகால நினைவுப்பதிவைப் படித்ததும், மனமுவந்து பாராட்டியதுடன், நான் குறிப்பிட்டிருந்த மஞ்சள் மகிமை பாடலையும் கூடவே இரண்டு கண்டசாலா பாடல்களையும் அள்ளித்தந்த தங்களை எப்படிப்பாராட்டுவதென்று தெரியவில்லை. அவ்வளவு பழைய பாடல்களை உடனுக்குடன் தேடியெடுத்து பதிவது என்பது சாதாரண காரியமா?. எல்லாவகையிலும் மற்றவர்களை மகிழ்விப்பதில் தங்களுக்கு ஈடு இணை இல்லையென்றே கூறலாம். 'ஆகாய வீதியில்' பாடலைக் கண்ணுற்றபோது காலங்களைக்கடந்து மீண்டும் சிறுவனானேன் என்பது உண்மை.

    இதயம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
    டியர் mr_karthik,

    தங்களின் இதயம் நிறைந்த பாராட்டுக்களுக்கும், பெருந்தன்மை கொண்ட உயர்ந்த உள்ளத்துக்கும், எனது இரு கரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •