-
4th August 2012, 12:10 PM
#11
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
'ராஜபக்தி' படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரமும் மறு வெளியீட்டு விளம்பரமும் தூள். அதிலும் மறு வெளியீட்டு விளம்பரத்தின் மேலே காணப்படும் வாசகங்கள் அருமை. இந்தபடத்தையும் இன்னும் பார்க்கும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. இப்படத்துக்கு நெடுந்தகடு வெளிவந்திருப்பதாக அறிகிறேன்.
மறு வெளியீட்டு விளம்பரத்தில் மற்றொரு உண்மை தெரிந்தது. ஒரே படத்தில் பானுமதி, பத்மினி, வைஜயந்திமாலா, பண்டரிபாய், ஈ.வி.சரோஜா என்று ஐந்து கதாநாயகிகள் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. இவர்கள் ஐவரும் ஒன்றாக நடித்தது 'ராஜபக்தி' ஒரே படமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
பொக்கிஷப்பதிவுகளுக்கு நன்றி.
-
4th August 2012 12:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks