-
12th August 2012, 08:16 PM
#701
Senior Member
Veteran Hubber
நடிகர் திலகத்துக்கு கௌரவம் : 2
ஃபிரான்ஸ் அளித்த அங்கீகாரம்
'செவாலியே' விருது விழா
22.4.1995 [சனிக்கிழமை]
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் : சேப்பாக்கம் : சென்னை
தமிழக முதல்வர் கலைச்செல்வி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமை வகிக்க, ஃபிரான்ஸ் நாட்டுத் தூதர் திரு. ஃபிலிப் பெடிட் அவர்கள், தங்கள் நாட்டின் மிகமிக உயர்ந்த விருதான 'செவாலியே' விருதை, உலக நடிகர் திலகத்துக்கு வழங்கினார். சிங்காரச் சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, இந்தியத் திரையுலகமே திரண்டு வந்து, நமது சிங்கத்தமிழனை வாழ்த்தி, பெருமை தேடிக் கொண்டது. அந்தக் கோலாகலமான விழாவின் வரலாற்று ஆவணங்கள் தொடர்கின்றன:
பொக்கிஷாதி பொக்கிஷம்
வரலாற்று ஆவணம் : தினத்தந்தி : 23.4.1995

தொடரும்...
பக்தியுடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 12th August 2012 at 08:22 PM.
pammalar
-
12th August 2012 08:16 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2012, 09:14 PM
#702
Senior Member
Veteran Hubber

Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார், வாசுதேவன் சார் மற்றும் ராகவேந்தர் சார்....
எனது பதிவுகளைப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
பம்மலார் அவர்களே, தாங்கள் தவணைமுறையில் தந்துகொண்டிருக்கும் 'சந்திப்பு' வெற்றிக்காவியத்தின் விளம்பரப்பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒன்றையொன்று மிஞ்சுகின்றன. ராகவேந்தர் அவர்கள் சொன்னதுபோல, 80க்கு முன்பே தலைவரின் சாதனைகள் முடிந்துவிட்டதுபோல பரப்பப்பட்டு வரும் மாயையை இவை தகர்த்து வருகின்றன. 'சந்திப்பு' வெள்ளிவிழாப்படம் என்பது நம்மில் பலருக்கே தெரியவில்லை என்பதுதான் சோகம். அந்த குறையை தங்கள் ஆவணங்கள் போக்கி வருகின்றன.
எங்க மாமா பற்றி பதிவுகள் இடப்படும் இவ்வேளையில் 'எங்க மாமா'வின் ஆவணப்பதிவுகளையும் தரலாமே. நம்முடைய வனவாச காலத்தில் இடம்பெற்ற படங்களில் அதுவும் ஒன்றல்லவா?. தங்களின் 'பராசக்தி' மறுவெளியீட்டு விளம்பரம் அட்டகாசம். மறுவெளியீடுகளின் விளம்பரங்களையும் தாங்கள் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வியக்க வைக்கிறது.
கலக்குங்கள்.....
டியர் mr_karthik,
நமது நடிகர் திலகத்தின் திரைக்காவிய முதல் வெளியீட்டு ஆவண பொக்கிஷங்களான விளம்பரங்களை,
மலர் மாலைகளாக வழங்கியபோது தாங்கள் மனமாரப் பாராட்டினீர்கள்...,
கதம்ப மாலைகளாகக் கட்டி அளித்தபோது அதைக்கண்டு தாங்கள் களிப்புடன் புகழ்ந்துரைத்தீர்கள்...,
தற்பொழுது ஒவ்வொரு ஆவணத்தையும், ஒவ்வொரு மலராக சற்றும் அதன் மணம் குன்றாமல் கொடுக்கும்போது, 'தவணை முறை'யில் தருகிறீர்கள் என்று ஒரு செல்ல இடி இடித்து பாராட்டுகிறீர்களே..தங்களது 'பஞ்ச்' பாராட்டை மிகமிக ரசித்தேன். [கோபப்பட வேண்டாம்..எல்லாம் ஒரு ஜாலிக்காகத்தான்..!]
"சந்திப்பு"க்குப்பின் "எங்க மாமா"வை எல்லோரையும் சந்திக்கச் செய்து விடவேண்டியதுதான்..!
"அன்பைத் தேடி(1974)" பாடல் காட்சிகள் பற்றிய தகவல் துளிகள் மிக அருமை..!
தங்களின் கலக்கல் பாராட்டுதல்களுக்கு எனது கனிவான நன்றிகள்..!
ஜாலிலோ ஜிம்கானா,
ஜீ..பூம்..பா..
-
12th August 2012, 09:31 PM
#703
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
அன்புக்குரிய பம்மலாரே!
எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது. எங்கள் முத்தையா திரையரங்கில் 'சந்திப்பு' சாதனை படைத்த அந்த 50- ஆவது நாள் 'தினத்தந்தி' விளம்பரம் கடந்த மூன்று நாட்கள் பட்ட வேதனையை புறமுதுகு காட்டி ஓடச் செய்து விட்டது. மனம் லேசாகி ஆகாயத்தில் மிதப்பது போன்றதொரு உணர்வு. பெருமை பொங்க வைக்கும் இந்த அற்புதப் பதிவை அளித்த தங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அடுத்தவர்களை சந்தோஷப்படுத்திப் பார்க்கும் தங்கள் பொன்னான மனம் வாழ்க! வசூல் பிரளயத்திற்கு மறு பெயர் நம் 'வணங்காமுடி' தானோ!
டியர் வாசுதேவன் சார்,
தங்களது ரொம்ப ரொம்ப ரொம்ப பாராட்டுக்கு எனது கொஞ்சூண்டு தேங்க்ஸ்..!
அன்புடன்,
பம்மலார்.
-
12th August 2012, 09:32 PM
#704
Senior Member
Veteran Hubber
அருமையான பதிவுகளை தொடர்ந்து இங்கே அளித்துவரும் esvee சார், தங்களுக்கு எங்களது அன்பான நன்றிகள்..!
-
12th August 2012, 11:01 PM
#705
Senior Member
Veteran Hubber
-
13th August 2012, 09:33 AM
#706
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 4.

படம்: தங்கச் சுரங்கம்
வெளிவந்த ஆண்டு: 1969
தயாரிப்பு: E.V.ராஜன் ('தங்கச்சுரங்கம்' காவியத்தில் கதாநாயகர் நடிகர் திலகத்தின் பெயரும் படத் தயாரிப்பாளர் பெயர் 'ராஜன்'தான்)
சண்டைப் பயிற்சி: திருவாரூர் M.S.தாஸ்

இயக்கம்: ராமண்ணா
இந்த அற்புதமான சண்டைக்காட்சியை அன்பு கார்த்திக் சாருக்கு ஆனந்தத்தோடு சமர்ப்பிக்கிறேன்.
சும்மா பொறி பறக்கும் சண்டைக்காட்சி. படு ஸ்லிம்மாக காலேஜ் மாணவன் போல் நடிகர் திலகம். பாரதியை விசாரணை செய்யும் இடத்தில் பேச்சுக் கொடுத்தபடியே ஒளிந்திருக்கும் எதிரிகளை கண்டு பிடித்து கொடுக்கும் "அட்டாக்"... ஸ்டைலாகவும், லாவகமாகவும் புகுந்து விளையாடும் நம் தங்க ராஜாவின் 'கும் கும்' குத்துக்கள்... சும்மா சுறுசுறுப்பும், விறுவிறுப்பும் நிறைந்த நெத்தியடி பைட். ஜேம்ஸ்பாண்டுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வு... புத்திசாலித்தன பிரதிபலிப்பு... வேகம்... விவேகம் என ஒருசேரக்கலந்து கலைக்குரிசில் கலக்கும் கலக்கல் பைட்.
என்ன ஒரு ஸ்டைலான கலக்கல் டிரஸ்! எதிரிகளை துவம்சம் புரிந்து விட்டு பாரதியிடம் வந்து "மேடம், இதெல்லாம் உங்க ஏற்பாடா?... இவங்கல்லாம் உங்க ஆட்களா?...எப்படி நம்ம விளையாட்டு! (இந்த இடத்தில் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்தப் பெருமையைப் பார்க்க வேண்டுமே!) இப்பவாவது உண்மையை சொல்லுங்க,"... என்று கைகளில் உள்ள கிளவுசைக் கழற்றிய படியே ஷர்ட் பாக்கெட்டிலிருந்து 'தம்' மை எடுத்து, படு ஸ்டைலாக வாயில் வைத்து, மேட்ச் பாக்ஸை எடுத்து, பாரதி அணிந்துள்ள மேலாடையின் பின்புறமுள்ள கொக்கியில் வத்திக்குச்சியை உரசி சிகரெட்டை பற்ற வைக்கும் அந்த அட்டகாச அமர்க்கள ஸ்டைலை என்னவென்று சொல்வது! ஸ்டைலில் எல்லோருக்கும் 'அப்பன்' அல்லவா அவர்! அனைத்து நடிகர்களுக்கும், ஏன் அனைத்து மனிதர்களுக்கும் 'ரோல் மாடல்' நடிகர் திலகம் தானே!
முதன்முறையாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 27th August 2012 at 08:01 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th August 2012, 11:34 AM
#707
Senior Member
Seasoned Hubber
KARNAN, Housefull show - 150th Day at Sathyam Theatre (12-08-2012)
-
13th August 2012, 11:39 AM
#708
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
செவாலியே விழா மற்றும் வாணி ராணி பதிவுகள் தொடர்ந்து தங்களுடைய புகழ்க் கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுகின்றன. பாராட்டுக்கள்.
மது ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் திரு முத்துக்குமார் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th August 2012, 11:40 AM
#709
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்
ஸ்டைலோ ஸ்டைல் ..சூப்பர் ஸ்டைல் ... நான் நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சியை மட்டும் சொல்ல வில்லை ... அந்தக் காட்சியை நீங்கள் தந்திருக்கும் விதத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.
பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th August 2012, 12:56 PM
#710
Junior Member
Seasoned Hubber
Dear KC
Kindly correct me - it is 159 days on 12th Aug and not 150th day - we all enjoyed all your great contributions , Pammalar and others on 4th event which was meant for celebrating 150th day - every day matters to celebrate yet another milestone. Regards
Bookmarks