-
17th August 2012, 07:26 PM
#11
Senior Member
Diamond Hubber
எனது தரப்பிலிருந்து கேள்வி 1 :
மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கான பாடல்களின் இசைகோர்ப்பு மிகவும் தரமான இசையில் வழங்கப்படுகிறது. பிற்காலத்தில் அவர்களது இசையார்வம் அது போன்ற இசையை ஒட்டியே வளரவில்லை என்றாலும் கூட, மண்ணின் இசை, வாத்தியக்கருவிகளைப் பற்றிய அறிவு அந்த இசையின் மூலமாகவே சென்றடைகிறது. அதுபோல ஒன்று நம் மண்ணில் இல்லை. இதுதான் நாதஸ்வர இசை, இதுதான் தவில் இசை, இதுதான் உடுக்கை, இதுதான் பறை, இதுதான் உறுமி, இதுதான் புல்லாங்குழல் என்ற மண் சார்ந்த அடிப்படை அறிவு நம் குழந்தைகளுக்கு இல்லை. உங்களுக்கு அப்படி ஒரு "குழந்தை ஆல்பம்" வெளியிட ஆசை இருக்கிறதா? ஒவ்வொரு வீடடிலும் வைத்து இசைக்கப்படவேண்டிய ஒன்றாக அது அமைந்துவிடும் என சந்தேகமேயில்லை.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
17th August 2012 07:26 PM
# ADS
Circuit advertisement
Bookmarks