"ஒண்ணா ஒரு படம்!"

http://www.adrasaka.com/2012/08/blog-post_4015.html
அப்படியே பல விஷயங்கள் பேசிட்டு இருந்தப்ப திடீர்னு ரஜினி சார், 'கமல்... ஒண்ணா ஒரு படம்... நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசையா இருக்கு’னு சொல்லிட்டு கமலையே பார்த்தார். கமல் கொஞ்சம்கூட யோசிக்கலை. 'தாராளமா நடிக்கலாமே... அப்படி நாம சேர்ந்து நடிக்கிற படத்தை சரவணன் சாரே தயாரிக்கட்டும்’னு சொல்லிட்டார்.

ஒருத்தர் உலக நாயகன்... இன்னொருத்தர் சூப்பர் ஸ்டார். ரெண்டு பேருக்குமே என்னைவிட நிறைய சினிமா தெரியும். ரெண்டு பேருக்கும் சம்பளமும் ரொம்பப் பெருசு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. 'உங்க ரெண்டு பேரையும் நடிக்கவெச்சு வேலை வாங்குற திறமை பாலசந்தர் சார்கிட்ட மட்டும்தான் இருக்கு’னு சொன்னேன். ரெண்டு பேருமே சிரிச்சாங்க. அவங்க ஓ.கே. சொல்லிட்டாங்க. இனி, நாங்க தான் மெனக்கெடணும். பார்ப் போம்'' என்று வழக்கமான அமைதிப் புன்னகையுடன் வழியனுப்புகிறார் சரவணன்.

நன்றி - விகடன்
என்னாதிது?!? ஏப்ரல் மாசம் கூட இல்லையே?!?