Page 89 of 401 FirstFirst ... 3979878889909199139189 ... LastLast
Results 881 to 890 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #881
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் தமிழ் பற்றிய விமர்சனம் சஞ்சய் சுப்ரமணியன் ஆங்கிலத்தில் எழுதினார் என்றால் அந்த நிகழ்ச்சி பற்றிய தமிழ் வர்ணனை இதோ. நன்றி சரவணன் பூங்காவனம்

    இரண்டு நாட்களுக்கு முன் ஷெரட்டன் ஹோட்டல் சென்று இருந்தோம் சிவாஜி கணேசனின் தமிழை கேட்பதற்காக .சிவாஜியின் தமிழ் உருவங்கள் என்கிற தலைப்பில் நடிகர் மோகன் ராமன் ஒரு அற்புதமான இரவாக தன் உழைப்பால் மாற்றி இருந்தார்..சிவாஜி வருவதற்கு முன் தமிழக திரைப்படங்களின் தமிழ் எப்படி இருந்தது என காட்டி விட்டு ,அப்படியே சரஸ்வதி சபதத்தில் நடிகர் திலகம் கலைவாணியால் ஆசீர்வதிக்கப்படும் காட்சியில் எல்லாரும் தங்களை மறந்து கைதட்டினார்கள்.பராசக்தியின் வசனத்தில் அப்படியே தெறித்து விழுந்த வசனத்தில் ஆரம்பித்த பிரமிப்பு சிவாஜியாக ராமன் எத்தனை ராமனடியில் விரிந்து,மனோகாரவின் கொலைவெறி தமிழில் மெய்மறந்து ,மக்களை பெற்ற மகாராசியின் கொங்குதமிழில் சிலிர்த்து ,வியட்நாம் வீட்டின் அக்ராகர தமிழில் அப்படியே அசந்து,சிவனாக சிங்கதமிழிலில் திருவிளையாடலில் செம்மாந்து,ஒதெல்லோ நாடகத்தில் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு உயிர் கொடுத்ததில் நிமிர்ந்து உட்கார்ந்து ,தேவர் மகனின் வட்டார மொழியில் பின்னி எடுத்து இருக்கும் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டோம் என நிமிர்கிற பொழுது வீரபாண்டிய கட்டபொம்மனின் இறுதி காட்சி அப்படியே கலக்கி எடுத்துவிட்டது.அண்ணாவின் சிவாஜி நாடகத்தை ஒரே நாளில் நூற்றிபத்து பக்க வசனத்தை நடித்து காண்பித்தது;ரயில் பயணத்தில் தங்கப்பதக்க வசனத்தை கேட்டே இரண்டுமணிநேரம் பின்னி எடுத்தது ,பானர்மானின் கட்டபொம்மன் பற்றிய குறிப்போடு இவரின் நடை ஒத்துப்போனதை சொல்லி சிவாஜியிடம் கேட்டபொழுது <"நான் அதெல்லாம் எங்க படிச்சேன் ?வீரன் என்றால் அப்படித்தான் நடப்பான் என்றாராம் சாவகாசமாக !யாத்ரா ஜோதி படத்தில் மலையாளத்தில் நடிக்க கிளம்புவதற்கு முந்திய நாள் செம டென்ஷன் கொண்டு இருந்தாராம் ,"என்ன" என கேட்டபொழுது ,"நாளைக்கு ஷூட்டிங் நேஷனல் அவர்ட் வாங்குன மோகன்லால் கூட ;மிஸ் ஆகா கூடாது !அதான் என சொன்னாராம் !" அதற்கு பிறகு பின்னிஎடுத்துவிட்டு வந்தபின் "ஏன் அப்படி பயந்தீங்க 275 படம் நடிச்சு இருக்கீங்களே ?நீங்க பேசாத டயலாக்கா ?சம்பாதிக்காத பேரா "என கேட்ட பொழுது ,"275 படத்தில் சம்பாதிச்ச பேரை ஒரு படத்தில் தொலைச்சுடக்கூடாது பாரு !எப்பவும் அடிவயித்தில் பலபேரோட உழைப்பில் உருவான வசனத்தை நாம் ரசிகனுக்கு கொண்டுபோய் சேர்க்கிறோம் என்கிற பயத்தோட தான் இருக்கணும் ;அது போற அன்னைக்கு நடிக்கிறதை விட்டுடணும் !"என்றாராம் அதுதான் சிவாஜி.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #882
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,578
    Post Thanks / Like
    Thank you Murali.
    Hope to hear first-hand account from PR soon.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #883
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,578
    Post Thanks / Like
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #884
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    The Bahamas
    Posts
    0
    Post Thanks / Like
    Super old rare picture collections!

  6. #885
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    சனிக்கிழமை காலையில் ஹிண்டுவில் பார்த்து தான் இப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததே தெரியும். 'அழைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமா', 'அனைவரும் வாரீர்' விழா-வா என்று தெரியவில்லை. பார்க் ஷெரட்டன் என்பதால் 'அனைவரும் வாரீ'ராக இருக்காது என்று நினைத்தேன். ஒரு மோது மோதிப் பார்ப்போமே என்று போனேன்.ட்ராஃபிக் நெரிசலில் நீந்தி ஏழு மணிக்கு தான் போய் சேர்ந்தேன்.

    150-200 இருக்கைகளே இருக்கக்கூடிய ஒரு சிற்றரங்கு. நிரம்பி வழிந்தது. ஒரு 50 பேர் போல நின்று கொண்டு இருந்திருப்பார்கள். நான் போகும்போது பி.யு.சின்னப்பா'வின் 'உத்தமபுத்திரன்' காட்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார் மோகன்ராமன். அந்தக் காலத்தில் தமிழின் உதாரணமாக.

    முரளி சார் நிச்சயம் அரங்கில்தான் இருப்பார் என்று குறுஞ்செய்தி அனுப்பி கேட்டேன் 'எங்கிருக்கிறீர்கள்' என்று. அதற்குள் மோகன்ராமன் 'இங்கு ராகவேந்தரன்,முரளி போன்ற தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள்' என்று சுட்டிக்காட்டி பேசினார். அப்போது தான் முரளிசார் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார். அவரைப் பார்த்து அருகில் போய் நின்றுகொண்டேன்.

    சபைக்கு நிரூபிக்கும் விதமாக 'உத்தபுத்திரன் ரிலீஸ் டேட் என்னிக்கு முரளி?' என்று கேட்டார் மோகன்ராமன். '7th February 1958' என்று வழக்கம்போல டாணென்று பதில் வந்தது -கூடியிருந்த கனவான்கள் வாய்பிளக்க. சபை களைகட்டும் சமயத்தில் வந்திருக்கிறேன் என்ற திருப்தி எனக்கு.

    மோகன்ராமன் மிக அழகாக, சரளமாக பேசினார். படத்துணுக்குகள் சரியாக தேர்ந்தெடுத்திருந்தார். அவற்றுக்கான contextஐ குறிப்பிட்டு, ஒரு நடிகனாக அவர் சொன்ன insights எனக்கு மிகப்பிடித்திருந்தன. சுருக்கமாக highlights தர முயல்கிறேன்.

    - 'நீங்க சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டிய பெயர்..' என்ற தெய்வமகன் வசனத்தைக் குறிப்பிட்டார். சிறையிலிருந்து மீண்டு வந்த தந்தையை சிறுவயதில் சிவாஜி சந்தித்தபோது, கிட்டத்தட்ட அப்படி ஒரு கணம் தான். அந்த உணர்வு, நினைவு நிச்சயமாக 'தெய்வமகனி'ல் நடிக்கும்போது வந்திருக்கும் என்று சொன்னார். 3-4 ஆண்டுகளுக்கு முன் 'சிவாஜியின் நடிப்பிலக்கணம்' நூலைப் பற்றி நாம் இங்கு பேசியது நினைவு இருக்கலாம். அதிலும் அவ்வாசிரியர் 'வாழ்க்கையிலிருந்து வரும் அவதானிப்புகளை, அந்த உணர்வுகளை நினைவில் தேக்கி, மீட்டெடுத்து நடிப்பில் செலுத்தும்' முறையைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

    - ராஜாராணியின் பிரபல நீள்வசனம், ஒரே நாளில் கருணாநிதி எழுதியதாம் அந்த ஐந்தரை நிமிடக் காட்சி ஒரே ஷாட், என்பது நான் அறிந்தது. அது ரெண்டு டேக் எடுத்தார்களாம். காரணம்? முதல் டேக் முடிந்ததும் சரியான நேரத்தில் SSR உள்ளே வரவில்லையாம்

    - காமெடி track போல, சிவாஜியின் வசன trackக்குக்காக புகுத்தப்பட்ட நாடகங்களைக் குறிப்பிட்டார்.

    - நான் பெற்ற செல்வம் திரைப்படத்தின் முதல் காட்சியே 'தருமி' நாடகன். அதில் நக்கீரர்-சிவன் என்று இருவேடங்களிலும் சிவாஜி. அதில் வரும் நடிப்பு நுணுக்கங்கள், எவ்வாறு பின்னால் வந்த திருவிளையாடல் காட்சியிலிருந்து மாறுபட்டன என்று விளக்கினார்
    - மக்களைப் பெற்ற மகராசியில் -தான்
    - மக்களைப் பெற்ற மகராசியில் வரும் 'கொங்கு தமிழ்' தான் முதன்முதலில் ஒரு கதாயநாயகம் 'வட்டார வழக்கு பேசும் தருணம்' என்று குறிப்பிட்டார்
    - வியட்நாம் வீடில் பேசும் middle-class பிராமணத் தமிழ், கௌரவத்தில் பேசும் elite பிராமணத்தமிழ், தேவர் மகன்...
    - அன்பு படத்திலேயே அவர் ஒதெல்லோ நாடகத்தை நடித்திருக்கிறார் என்று அன்று தான் தெரியும். ஷேக்ஸ்பியரின் வரிகளையும், அவற்றின் சாரம் அழகாக மொழிபெயர்க்கப்பட்ட விதத்தையும் ஒப்பிட்டுக் காட்டினார் மோகன்ராமன்

    - அப்போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறீனார். ஒரு நடிகரால் மட்டுமே உணர்ந்து சொல்லக்கூடிய நுணுக்கமாக அதைக் கருதுகிறேன்: 'அனேக நடிகர்கள் இரு இயல்பான தாளகதியில் தான் பேசுவர்'. வழக்கு (dialect), ஏற்ற-இரக்கம் (intonation) மாறலாம். (அதுவே எல்லாருக்கும் வாய்ப்பதில்லை). ஆனால் ஒட்டுமொத்த தாளத்தையே மாற்றுவது என்பது மிக மிக சிரமமான விஷயம். அதை சிவாஜி எவ்வாறு அனாயாசமாக செய்தார் என்று சொன்னார். 'அன்பு' ஒதெல்லோ-வின் தாளத்துக்கும், 'ராஎரா' சத்ரபதி சிவாஜிக்கும் உள்ள வித்தியாசம் 'அடிப்படை தாளத்திலிருந்தே' துவங்குகுறது என்று உணர்த்தினார்.

    அந்த உரையிலேயே முக முக்கியமான insightஆக இதைக் கருதுகிறேன். நீங்கள் ரசித்த பிற நடிகர்களின் 'வித்யாசமான' performanceகளை அசை போடுங்கள். அடிப்படை தாளத்தை மாற்ற எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று தெரியும். அவை நல்ல performance இல்லை என்று இல்லை. பல வகையில் தங்களை வித்தியாசம் காட்டிக்கொள்ள முயன்று, வெற்றியும் பெற்றிருப்பார்கள். ஆனால் ஓரிழை 'natural' தாளம் தெரியும். ஏன், சிவாஜிக்குக் கூட இயல்பான 'ஆதார சுருதி' என்று ஒன்றை நாம் பல படங்களில் உணரலாம் தான். ஆனால் முற்றிலுமாக அகத்தைக் கரைத்து பாத்திரத்தில் இட்டவை எத்தனையோ!

    பேச்சுத்தாளத்தின் வேறுபாட்டை உணர சுந்தரரையும், அப்பரையும் நினைத்தால் போதாதா!

    அவ்வளவு ஏன்? நாம் இங்கு சில வாரங்கள் முன் ரசித்த 'சத்ரபதி' சிவாஜி கண்ணதாசன் வசன்ம் கூட கோட்டைக்குக் கோட்டை வேறுவேறு தாளகதி வரும். அந்த காட்சியை முழுமையாகக் காட்டியிருந்தால் இன்னும் தெளிவாகியிருக்கும் என்று நினைத்தேன். நேரம் கருதி, அதன் ஒரு பகுதியையே காட்டினார்.ஆனால் 'எவ்வளவு தான் காட்டுவது, எதைத் தான் விடுவது' என்று மோகன்ராமன் போராடியிருப்பார் என்று அவர் predicamentஐ நினைத்து பரிதாபப்பட்டேன். Problem of plenty!
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  7. #886
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    இன்னும் சில விஷய்ங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.நேரம் கிடைத்ததும் எழுதுகிறேன்.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #887
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    not sure if this was already posted here....... From the sets of Thillana Mohanambal (from Louis Malle's documentary) ti



    some interesting shots of 1968 Madras and TN Film Industry
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  9. #888
    Member Regular Hubber lovedeva_pj's Avatar
    Join Date
    Oct 2006
    Location
    Germany
    Posts
    56
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    This pis from that film sivaji mgr acted together, is this film releease recently how their fans react

  10. #889
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Koondukkili was a much expected one since NT and MT together would do miracles. However, the result was quite unexpected and the rivalry between the fans was also bitter at that time making the film a relative flop. It is a movie dominated by NT as a negative hero rather than a villain with MT almost subdued to the level of a second hero like Muthuraman or SSR in NT movies. for a long time MT would be absent in this movie and comes back after interval before the climax. NT had a scintillating song Konjum Kiliyana Pennai.... with a stylish acting. MT's acting scope was limited in this film. A very mediocre film having the unique distinction of NT with MT. that's all!

  11. #890
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,578
    Post Thanks / Like
    .... and I have never seen it, nor is it in my to-see list.


    any news on thiruvilaiyadal re-release?
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •