-
17th September 2012, 03:51 PM
#11
Junior Member
Newbie Hubber
உயர்ந்த மனிதன்-பகுதி-5
விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.
அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று
உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை
விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்
வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில்
வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.
நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம்
வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!
அடுத்த காட்சியில் அவர் வா க்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து
அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை
அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து
சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.
கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....
(தொடரும்)
-
17th September 2012 03:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks