-
18th September 2012, 08:18 AM
#1221
Junior Member
Senior Hubber

Originally Posted by
KCSHEKAR
டியர் பம்மலார் , கார்த்திக் சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார், முரளி சார் மற்றும் திருவிளையாடல் திரைப்படம் குறித்து பகிர்ந்துகொண்ட மற்றும் என்னைபோன்ற அனைத்து ரசிகர்களின் உணர்வும் ஒன்றுதான்.
ஆனால் ஒன்று, நடிகர்திலகம் அவர்களைப் பொறுத்தவரை, அவர் பராசக்தியில் அறிமுகமானதிலிருந்தே அவருடைய திரையுலக வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களைக் கடந்திருக்கிறார். ஆனால் இறுதி வெற்றி நடிகர்த்திலகத்திற்கே கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை.
திருவிளையாடல் திரைப்பட மறு வெளியீட்டைப் பொருத்தவரையிலும் அதே நிலைதான் வரும். வெற்றி பெறும், வெற்றி பெறுவோம் .
Had the pleasure of watching NADIGARTHILAGAM in QUBE FORMAT.
the picture has come very nicely with out any damage to the original format. the quality of picture and sound dts exceptionally good.
watching nadigarthilagam in cinemascope really an immense pleasure.
hope and pray for an early settlement between the parties and GALA
OPENING all over the state soon.
-
18th September 2012 08:18 AM
# ADS
Circuit advertisement
-
18th September 2012, 09:29 AM
#1222
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
பட்டை கிளப்பிக்கொண்டிருக்கும் தங்கள் பதிவுகளுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்க சற்று காலதாமதமானதற்கு பொறுத்தருள வேண்டுகிறேன். நேரமின்மையும், சற்று சொந்த வேலைகளும் இருந்ததால்தான் இந்த காலதாமதம். இனி தங்களின் தங்கப் பதிவுகளுக்கு வருகிறேன்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 141வது அவதாரத் திருநாளை முன்னிட்டு தாங்கள் பதித்திருந்த கப்பலோட்டிய தமிழரின் புகைப்படம், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் 125வது பிறந்ததினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அளித்திருந்த அட்டகாசமான தலைவரும், திரு.ராதாகிருஷ்ணன் அவர்களும் ஒன்று சேர்ந்து மிளிரும் புகைப்படம், திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் வரிசையில் கப்பலோட்டிய தமிழன்' காவிய செய்தித்தாள் விளம்பரங்கள், 'பாவ மன்னிப்பு' முதல் வெளியீட்டு மற்றும் 'இன்று முதல்' விளம்பரங்கள், "துணிவே துணை" பேசும்படம் இதழில் வெளிவந்த 'தயான்' நிழற்படம் அனைத்தும் அப்படியே உள்ளத்தை அள்ளிக்கொண்டு போகின்றன.
நடிகர் திலகம் பற்றி நடிகர் நாசர் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் அளித்திருந்த பேட்டியை அசுர வேகத்தில் பதிவிட்டு அசத்தியுள்ளீர்கள். நடிகர் திலகத்தினுடனான நாசரின் நடிப்பு அனுபவங்கள் கற்கண்டாக இனித்தது. இனி அடுத்து வரும் இதழிலும் வரக்கூடிய நாசரின் பேட்டியை தங்கள் பதிவின் மூலம் காண ஆவல் மேலிடுகிறது.
தலைவரின் திகிலான வேட்டை அனுபவம் குறித்து 'ஹண்ட்டர்' சிவாஜி என்ற அம்சமான தலைப்பிட்டு, 'மாலைமுரசு' இதழில் மறுபதிப்பாக வெளிவந்த மிரள வைக்கும் கட்டுரையை பதிப்பித்து திகிலூட்டி விட்டீர்கள். மணியனின் 'இதயம் பேசுகிறது' இதழில் தலைவரின் நெருங்கிய நண்பர் திரு.'வேட்டைக்காரன்புதூர்' மாணிக்கம் அவர்கள் 'வனத்தில் கண்ட சில வசந்தங்கள்' என்ற தொடரில் தலைவரின் அட்டகாசமான வேட்டை அனுபவங்களை அருமையாக வர்ணித்திருப்பார். எனக்கு தங்கள் பதிவைக் கண்டதும் அந்தத் தொடர் சட்டென்று என் ஞாபகத்திற்கு வந்து நெஞ்சில் நிழலாடியது. அதற்காக தங்களுக்கு என் அருமை நன்றிகள்.
தயாரிப்பாளர் குற்றாலிங்கம் அவர்கள் உறங்கி வழிந்ததை அவருக்குத் தெரியாமலே படமெடுத்து பின் அதை அவருக்கே போட்டுக்காட்டி வெறுப்பேற்றிய தலைவரின் நகைச்சுவை உணர்வை என்ன சொல்ல! அருமையான நகைச்சுவைக் கட்டுரையை 'தினமலர்' வாரமலரிலிருந்து எடுத்துவைத்து போற்றிப் பாதுகாத்து பதித்ததற்கு சபாஷ்!
நாடக சாம்ராட் பற்றி திரு.'கலாநிகேதன்' பாலு அவர்கள் பொம்மை இதழில் அளித்திருந்த கட்டுரை நமது நடிப்புச் சக்கரவர்த்தியின் தன்னிகரற்ற நாடக ஈடுபாடுகளை பெருமையாக எடுத்துரைக்கிறது. ரொம்ப ரொம்ப நான் ரசித்த கட்டுரை.
'மன்னவன் வந்தானடி' தினமணி கதிர் விமர்சனம் நன்று.
'சத்யம்' காவியத்தின் 'பேசும் படம்' ஸ்டில்கள் அசத்தலோ அசத்தல். நான்கு பக்கங்களும் கலக்கல். அதுவும் முதல் பக்கத்தில் தலைவர் (சற்று அதிர்ச்சி கலந்தவாறு) தனியாக இருக்கும் போஸ் இன்ப அதிர்ச்சி.
'பூ முகம்' என்ற அபூர்வ இதழிலிருந்து தாங்கள் பதித்திருக்கும் தலைவரின் கருத்து ஆஹா. நடிப்பிலிருந்து விலகுவதில்லை என்று ஆணித்தரமாக தலைவர் தெரிவித்திருக்கும் கருத்து சும்மா நெத்தியடி.
அமரகவி பாரதியாரின் 91வது நினைவு தினத்தையொட்டி தேசிய திலகம் நடத்திய தேசிய கவியின் விழா பற்றிய 'ஆனந்த விகடன்' பதிவு மிக அபூர்வமான ஒன்று. பாரதியின் மேல்தான் தலைவருக்கு எவ்வளவு பற்று! வேறு எந்த நடிகர்களாவது இப்படி ஒரு விழா தேசியக் கவிக்கு எடுத்ததுண்டா? அதே போல் "சிந்துநதியின் மிசை நிலவினிலே" காணொளிப் பாடல் பதிவுக்கேற்ற அம்சமான பொருத்தம்.
கலையுலக சக்கரவர்த்தி குறித்து இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்திருந்த கருத்துக்கள் அருமையோ அருமை. வியட்நாம் வீடு நாடகத்தைப் பற்றி அவர் சிலாகித்துப் பேட்டி அளித்திருந்தது அவர் ஒரு நல்ல கலைஞர், ரசிகர் என்று அடையாளம் காட்டுகிறது.
தினத்தந்தி 'குடும்பமலர்' இதழின் 'செவாலியே' விருது விழா கன ஜோர்.
'பிலிமாலயா' இதழின் வைரத்திற்கு பொன் அலங்காரம் புகழாரக் கட்டுரை நமது திரிக்கு பொன் அலங்காரமாய் ஜொலிக்கிறது.
தேசிய திலகம் பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 'துக்ளக்' இதழில் அளித்துள்ள பேட்டி கலக்கல்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 104வது பிறந்ததினம் முன்னிட்டு உலகப் பெரு நடிகரும்,பேரறிஞரும் ஒன்று சேர்ந்து நிற்கும் புகைப்படம் சூப்பரோ சூப்பர்.
அண்ணா அவர்கள் தலைமை தாங்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடக விளம்பரம் இதுவரை எவரும் இணையத்தில் காணாதது.
இதய தெய்வம் குறித்த அறிஞர் அண்ணாவின் புகழுரை அட்டகாசம். தலைவரின் மேல் மாசுமருவற்ற அன்பை திரு. அண்ணாதுரை இறுதிவரை வைத்திருந்தார் என்பதற்கு இக்கட்டுரை ஒரு சான்று. தன் சொந்த முயற்சியினாலும், உழைப்பினாலும்தான் நடிகர் திலகம் இமாலயப் புகழ் பெற முடிந்தது என்று அண்ணா குறிப்பிட்டிருப்பது நூறு சதவிகிதம் நிஜம்.
தந்தை பெரியார் அவர்களின் 134வது பிறந்ததினத்தையொட்டி பகுத்தறிவுப் பகலவரும், படிக்காத மேதையும் அமர்ந்துள்ள புகைப்படம் பக்கா.
எவருமே அளிக்க முடியாத ஆவணப் பொக்கிஷங்களை அள்ளி வழங்கி சந்தோஷக் கடலில் எங்களை சதாசர்வகாலமும் நீந்த வைத்துக் கொண்டிருக்கும் தங்கள் அருந்தொண்டிற்கு எப்படி நன்றி நவில்வது என்றுதான் புரியவில்லை.
Last edited by vasudevan31355; 18th September 2012 at 09:53 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th September 2012, 10:07 AM
#1223
Senior Member
Diamond Hubber
டியர் ராகவேந்திரன் சார்,
பிளாசா தியேட்டர் பொன்னூஞ்சல் பேனர் நிழற்படம், பிளாசா திரையரங்கினுள் வைக்கப் பட்டிருந்த பொன்னூஞ்சல் பட போஸ்டர், பொன் வண்டு பேனர், செவாலியே சிவாஜி நினைவுப் பரிசைப் பெற இருக்கும் வித்தகர்கள் யார் யார் என்ற தேனான விவரங்கள், நீலவானம் காவியத்தில் இடம் பெரும் சாந்தி திரையரங்கு நிழற்படங்கள், ஒவ்வொரு நிழற்படத்திற்கும் அருமையான விளக்க வரிகள், தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் வாரத்தில் திரையிடப்படப்போகும் பழைய திரைப்படங்கள் லிஸ்ட் விவரங்கள், (எனக்கு மிக மிக யூஸ் ஆகக்கூடியது) உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருவிளையாடல் திரைக்காவிய பேனர், திரைக்காட்சிகள், திருவிளையாடல் டிஜிட்டல் அற்புதம் என்ற தித்திக்கும் செய்தி, 'ஆனந்த பைரவி படத்தினை க்ளாப் அடித்து துவக்கி வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நன்றி' என்ற டைட்டில் கார்டு காட்சி, புரட்சிக்கலைஞர் முன்னமேயே யார் என்ற கண்டுபிடிப்பு என்று ஜமாய்த்து விட்டீர்கள். அற்புதமான பதிவுகளை அளித்து ஆனந்தப் பட வைத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-
18th September 2012, 10:21 AM
#1224
Senior Member
Diamond Hubber
அன்பு கார்த்திக் சார்,
பிளாசா திரையரங்கு பற்றிய பழைய நினைவுகளை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நான் கடலூரைச் சேர்ந்ததால் எனக்கு சென்னை தியேட்டர்கள் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால் சென்னை தியேட்டர்களைப் பற்றிய தங்களின் மலரும் நினைவுகளைக் காணும் போது அந்த மனக்குறை அறவே நீங்கி விடுகிறது.
பழைய தமிழ் திரைப்படங்களில் எந்தெந்த காட்சிகளில் தலைவர் படங்களின் பேனர்கள் வரும் என்று பிட்டு பிட்டு வைத்து விட்ட தங்கள் ஞாபக சக்திக்கு ஒரு இமாலய சபாஷ்!
வேலைப்பளுவின் காரணமாக 'திரும்பிப் பார்க்கிறேன்' ஜெயா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாலச்சந்தரின் பேட்டியைப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் என்ன? நீங்கள் தான் இருக்கிறீகளே! தங்கள் பதிவின் விவரங்கள் மூலம் அந்த பேட்டியப் பார்க்க வில்லையே என்ற மனக்குறையும் நீங்கியது. தலைவரைப் பற்றிய நினைவுகளை மறந்து விடாமல் பேட்டியில் பாலச்சந்தர் சொல்லியிருப்பதற்கு நம் திரியின் சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
அருமையான தங்கள் நினைவுப் பதிவுகளுக்கும், இதர பதிவுகளுக்கும் என் மனம் மகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by vasudevan31355; 18th September 2012 at 10:30 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th September 2012, 10:30 AM
#1225
Senior Member
Diamond Hubber
டியர் சந்திரசேகரன் சார்,
சிவாஜியை வழிபடும் நடிகர் 'ராணி' இதழ் கட்டுரை பிரமாதம். அற்புதமான கட்டுரை. தலைவரை தெய்வமாய்க் கொண்டாடும் நடிகர் சாய்குமார் அவர்கள். சிறப்பான கட்டுரையை பதிப்பித்ததற்கு நன்றிகள்.
தாங்கள் கூறியுள்ளது போல மலை போன்ற சோதனைகளை சமாளித்து வெற்றி கண்டு சாதனை படைத்தவர் நம் இதய தெய்வம். ஜெயம் நம்ம பக்கம்தான்.
-
18th September 2012, 10:33 AM
#1226
Senior Member
Diamond Hubber
அன்பு பம்மலார் சார்,
என்னுடையப் பதிவுகளுக்கான தங்களின் மனம் நிறைந்த பாராட்டுதல்களுக்கு மலையளவு நன்றிகள் சொல்லக் கடமைப்பட்டவனாகிறேன். நன்றி! நன்றி 1
-
18th September 2012, 11:43 AM
#1227
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தில் 'உயர்ந்த மனிதன்' காவியத்தை உயர்ந்த ரசனையோடு உரிய ஆய்வு செய்து அனைவரையும் உவகையுறச் செய்த என் அன்பு க(வ)ம்பருக்கு மனம் நிறைந்த என் பாராட்டுக்கள்.
ராஜுவின் இருபதாவது திருமண நாள் விழாவின் போது கோபால் குடித்துவிட்டு தனி அறையில் ராஜுவை வார்த்தை அம்புகளால் துளைக்கையில் ராஜு தான் ஒரு சுமைதாங்கி என்று தனக்கு ஏற்பட்ட சுமைகளை ஒவ்வொன்றாக அடுக்கி விவரித்து முடித்து, "கோபால், நான் என் சந்தோஷத்துக்காக வாழ்ந்த சில நாட்கள் பார்வதியோடு வாழ்ந்த அந்த சில நாட்கள்...அந்தநாள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே தற்செயலாக வேலைக்காரன் சத்யா எதிர்பாராமல் அறைக்குள் நுழைந்துவிட, அதை சற்றும் எதிர்பார்க்காத ராஜுவான நடிகர் திலகம் கோபாலான அசோகன் தோளில் போட்டிருந்த கையை சடாலென எடுத்து, டக்கென்று திரும்பி, அசோகனிடமிருந்து விலகி சற்றே தூர நின்று "சார் விருந்தாளிங்க எல்லாம் உங்களுக்காகக் காத்துகிட்டு இருக்காங்க "என்று சொல்லும் சத்யாவிடம் (சிவக்குமார்) "நாங்க வர்றோம்... நீ போ" என்று அனுப்பி வைக்க எத்தனிக்கும் அந்தக் காட்சி... எத்தனை அர்த்தங்கள் பொதிந்தது?
தன் நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கும் ரகசிய விஷயங்களின் சம்பாஷணைகளின் போது சத்யா நுழைகையில் தங்கள் இருவரைத்தவிர வேறு எந்த ஒருவருக்கும் தன்னுடைய ரகசியங்கள் தெரிந்து விடக் கூடாது என்று நினைக்கும் அவசர முன்னெச்சரிக்கை வேகம், வேலைக்காரனுக்கு தெரிந்து விட்டால் அவனிடமான தன்னுடைய மதிப்பு குறைந்துவிடக் கூடாதே என்ற முன்ஜாக்கிரதை உணர்வு... எங்களுக்கும் ஒன்றுமே நடக்க வில்லை என்பது போல ஒரு பொய் மாயையை சடுதி வினாடியில் முகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் மொழி வழியாகவும் சத்யாவுக்கு மட்டுமல்ல... நமக்கும் காண்பித்தல்...

என்று அந்த ஒரு வினாடி காட்சியில் ஒரு கோடி யுகத்திற்கும் மறக்க முடியாத பாவனையை நம் நெஞ்சில் பதிய வைத்துப் போய் விட்டார் அந்தப் புண்ணியவான் .
ஒரு சிறு சந்தேகம். கோபால் என்றாலே நண்பர்களை நிம்மதியாக வாழவிட மாட்டாமல் அன்புத் தொல்லை கொடுப்பார்களோ! நான் ராஜுவின் நண்பன் கோபாலைச் சொன்னேன்.
Last edited by vasudevan31355; 18th September 2012 at 12:17 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
18th September 2012, 12:15 PM
#1228
Senior Member
Diamond Hubber
கோபால் சாருக்காக

-
18th September 2012, 12:53 PM
#1229
Senior Member
Veteran Hubber
அன்புள்ள வாசுதேவன் சார்,
இங்கு பதிவிட்ட எல்லோருக்கும் பாராட்டு சொல்லும் வகையில் தாங்கள் அளித்த பதிவு, கடந்த ஐந்தாறு பக்கங்களில் வந்துள்ள அனைத்துப்பதிவுகளின் பட்டியல்போல, பொருளடக்கம்போல அமைந்து விட்டது. யாருடைய எந்த ஒரு சிறிய பதிவையும் விடாமல் குறிப்பிட்டிருக்கிறீர்கள் எனும்போது எவ்வளவு ஆழ்ந்து இவற்றைப் படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.
கோபால் மற்றவர்களை வாழ விடவில்லை என்பதை விட, கோபாலை மற்றவர்கள் வாழ விடவில்லை என்பதே உண்மை. ஒருபக்கம், தம்பிக்காகப் பார்த்த பெண்ணை தான் அடைவதற்காக சொந்த அண்ணனே மொட்டைக்கடிதம் எழுதி தம்பி கோபாலின் வாழ்க்கையைக்கெடுத்தார். இன்னொருபக்கம் மலேசிய பெண்போலீஸ் அதிகாரி, போலியாக காதல் நாடகம் ஆடி கோபாலைக்கவிழ்த்தார். இருப்பினும் கோபால் தளராமல், தான் தமிழனாக இருந்தும் தன் மகளை ஒரு தெலுங்கு நாயுடு குடும்பத்திலும், மகனை பஞ்சாப் சீக்கியர் குடும்பத்திலும் சம்பந்தம் செய்து இந்திய நாடு என் வீடு என்று நிரூபித்தாரே, அங்கேதான் கோபால் நிற்கிறார்.
-
18th September 2012, 05:11 PM
#1230
Senior Member
Veteran Hubber
அன்புள்ள எஸ்.கோபால் அவர்களே,
உயர்ந்த மனிதனைப்பற்றி மிக உயர்ந்த நிலையில் ஆய்வு செய்ததற்கு பிடியுங்கள் முதலில் பாராட்டை.
நான் 'இங்கே' எழுதுவதைப் படித்துவிட்டு நீங்கள் 'அங்கே' பாராட்டுவதும், நீங்கள் 'அங்கே' எழுதுவதைப் படித்துவிட்டு நான் 'இங்கே' பாராட்டுவதும் நமக்குள் நடக்கும் கண்ணாமூச்சி.
சும்மா அலசோ அலசென்று அலசித்தள்ளிவிட்டீர்கள். இதுவரையில் உயர்ந்த மனிதனின் 'உயர்ந்த மனிதனை' எத்தனையோ முறை பலர் பார்த்திருந்தபோதிலும் இனி பார்க்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத்துவங்குவர் என்பது திண்ணம். காரணம் உங்களின் அருமையான அலசல்.
எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம், ஏ.வி.எம்.சரவணன் தொலைக்காட்சி நேரகணலின்போது சொன்னது, பலருக்கும் கூட ஆச்சரியமாக இருக்கலாம். படத்துக்கு ஒப்பந்தம் ஆவதற்குமுன் வங்கப்படத்தின் இக்கதையைக்கேட்ட நடிகர்திலகம் 'இந்த ரோலில் நான் செய்வதற்கு என்ன ஸ்கோப் இருக்கிறது?. வேண்டுமானால் அந்த டாக்டர் ரோலைக்கொடுங்கள் செய்கிறேன்' என்று சொன்னாராம். இந்த ரோலில் என்ன ஸ்கோப் இருக்கிறது என்று கேட்டவர்தான், அதே ரோலில் இப்படி 'நடிப்பு ராஜாங்கம்' நடத்தியிருக்கிறார். அதனால்தான் இவர் நடிப்புக்கு நாயகன்.
நடிகர் திரு ஏ.ஆர்.எஸ். அவர்கள் மிகச்சரியாகச்சொன்னது போல மற்றவர்களின் படங்கள் வெறும் படங்கள், இவரது படங்கள் மட்டுமே நடிக்க வருபவர்களுக்கான பாடங்கள். இவரது எந்தப்படத்தில் குதித்தாலும் முத்தோடுதான் வெளியில் வர முடியும். அது உங்களைப்போல, பிரபுராம் அவர்களைப்போல, முரளி சீனிவாஸ் அவர்களைப்போல முத்துக்குளிப்பாளர்களின் திறமையைப் பொறுத்தது. சிலர் வெறும் சிப்பிகளைப்பொறுக்கிக்கொண்டு வந்துவிட்டு ஒன்றுமில்லை என்று சொல்வது திறமைக்குறைவே தவிர வேறில்லை.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்கள் தனியே வந்தபின் இசைவெள்ளம் பாய்ச்சிய படங்களில் இதுவே சிறந்தது என்ற உங்களின் கூற்றை ஒப்ப என் மனம் மறுக்கிறது. சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதே சரியாக இருக்கும். என் கண்ணோட்டத்தில் அவர் எவரெஸ்ட்டின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு அதற்கு மேல் உச்சம் எங்கே என்று தேடியது சிவந்த மண் படத்தில்தான் என்று நினைக்கிறேன்.
'அந்த நாள் ஞாபகம்' பாடலில் தானும் நடித்துக்கொண்டு, தன் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கையும் எப்படி பல்வேறு விதமாக நடிக்க வைத்தார் என்று நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை. 'யார் அந்த நிலவு' பாடலில் தன் கையிலிருந்த சிகரெட்டை மட்டுமல்லாது அதிலிருந்து வெளியான புகையையும் நடிக்க வைத்தவராயிற்றே.
ஆய்வு மன்னரின் அடுத்த படம் என்ன என்று ஏங்க வைத்துவிட்டீர்கள்.
(உங்கள் அனுமதியில்லாமல், உங்கள் ஆய்வுக்கட்டுரையை என் கணிணியில் சேமித்துக்கொண்டேன். 'அப்புறம் அனுமதி வாங்கிக்கொள்ளலாம்' என்ற அசட்டை பத்து சதவீதம். 'அட, நம்ம கோபால்சார்கிட்டே அனுமதியாவது ஒண்ணாவது' என்ற உரிமை தொன்னூறு சதவீதம்)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... (கோபால் என்ற) நண்பனே.. நண்பனே... நண்பனே...
Bookmarks