why this fight friends....
all fans are frustrated because of the delay.. Some people manage it within themselves and for some folks it comes out....
why this fight friends....
all fans are frustrated because of the delay.. Some people manage it within themselves and for some folks it comes out....
https://www.facebook.com/photo.php?f...type=1&theater
சினிமா விமர்சனம் - 16 வயதினிலே
கமலஹாசன்... சப்பாணி பாத்திரப்படைப்பு இந்தப் படத்தில் மிகச் சிறந்த அம்சம். அந்த காரெக்டருக்குள் புகுந்து, மூழ்கி, திளைத்து எழுந்திருக்கிறீர்கள் - தலைசிறந்த நடிப்பு.
இளையராஜா... அன்னக்கிளியில் பாட்டுகள் 'ஹிட்' ஆனது குருட்டு அதிர்ஷ்டத்தால் இல்லை என்று நிருபித்திருக்கிறீர்கள். இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் காதுக்கு இனிமையைத் தருகின்றன.
கலைமணி... கிராமத்துச் சூழ்நிலை படம்தான் என்றாலும், அளவுக்கு மீறிய பட்டிக்காட்டு வசனங்களை எழுதி புழுதி வாரி இறைக்காமல் அளவோடு அழகாக வசனம் எழுதியிருக்கிறீர்கள்.
பாரதிராஜா... நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறீர்கள். கிராமியச் சூழ் நிலையை மாற்ற முயற்சிக்காமல், அப்ப டியே தத்ரூபமாகத் தந்திருக்கிறீர்கள். ரஜினிகாந்தை கமல் கொலை செய்யும் இடத்தை ரத்தினச்சுருக்கமாகப் பட மாக்கியிருக்கிறீர்கள். போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அறுக்காமல், நெஞ்சை உருக்கும் வகையில் மாறுதலான முடிவு கொடுத்திருக்கிறீர்கள். சபாஷ்!
ஒரு காட்சியில் ஹீரோ கோவணத்துடன் வந்தாலும், அவனுடைய மனநிலை காரணமாக, அருவருப்பு ஏற்படாமல் செய்திருப்பது உங்கள் தனி சாமர்த்தியம்.
ஓணானை சாகடிப்பதைக் கூட சகிக்க முடியாத அப்பாவி ஒரு கொலை செய்துவிட்டான் என்ற எண்ணத்தை ஆழமாகப் பதிய வைக்க, பழைய ஓணான் ஷாட்டை இன்னொரு முறை காண்பித்திருக்கலாம். இது ஒரு யோசனைதான்.
இளநீர் கை நழுவிப் போவது ரொம்பப் புதுசு - மாஞ்செடியை மிதிப்பது ரொம்பப் பழசு.
நிவாஸ்... ஒளிப்பதிவு ரொம்பப் பிரமாதம். இயற்கைக் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால், ஒரு சில காட்சிகளில் ஃபோகஸ் சரியாக இல்லை. முக்கியமாக, குடத்தில் தண்ணீர் எடுக்காமல் வரும் ஸ்ரீதேவி, காந்திமதியிடம் 'திருதிரு'வென்று விழிக் கும் காட்சி இதற்கு ஓர் உதாரணம். இத்தனைக்கும் அது 'ஸ்டெடி க்ளோஸ் ஷாட்'. காமிரா உதவியா ளரை இனி கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.
தவிர, ரஜினிகாந்த் பெட்டிக் கடையில் மயில்மார்க் பீடி கேட்டு வரும் காட்சி ஏன் அத்தனை கறுப்பாகத் தெரிகிறது? (பட்டினப்பிரவேசத்தில் வரும் ஷு பாலீஷ் காட்சி மாதிரி) இது உங்கள் தவறான 'அண்டர் எக்ஸ்போஷரா' அல்லது லாபரட்டரியின் தவறான 'அண்டர் டெவலப்பிங்கா'?
'செந்தூரப்பூ' பாடலை மிக அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள். ஆனால், இதில் இரண்டு ஸ்ரீதேவிகளைக் காட்ட மாஸ்க்ஷாட் எடுப்பதற்குப் பதில், பின்னால் வேறொருவரை நிற்க வைத்து 'டியூப்' தெரியும்படி செய்திருக்க வேண்டாம்.
பாஸ்கர்... ஆரம்பக் காட்சியில், ஸ்ரீதேவி யாரையோ எதிர் பார்த்து நிற்கிறார் ரயில்வே ஸ்டேஷனில் - ரயில் வருகிறது - கண்கள் தேடுகின்றன - நினைத் தவர் வரவில்லை - ஏக்கமும் விரக்தியும் அடைகிறார் - பிறகு ரயில் கிளம்புகிறது - இப்போது மறுபடியும் யாரையோ தேடும் பழைய 'எக்ஸ்பிரஷன்' எங்கிருந்து வருகிறது? முன்பின் மாற்றிப் போட்டிருந்தால் குறை தவிர்க்கப் பட்டிருக்கும்.
இதைப் போலவே இரண்டு இடங்களில் 'ஸ்டே' (Stay) தெரிவதையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். காந்திமதியுடன் சந்தைக்குப் புறப்படும் சமயத்தில் கமல் நின்று போவது நன்றாகத் தெரிகிறது. அதேபோல், கமல் ரஜினிகாந்தை அடித்துவிட்டுக் குளக்கரைக்கு வரும்போது ஸ்ரீதேவியின் ஆக்ஷனுக்கு முன், குடத்தின் 'ஸ்டே' தெரிகிறது.
மொத்தத்தில்... '16 வயதினிலே!' போல் இன்னும் நான்கு படங்கள் வந்தால், தமிழ்ப்படத்தின் தரம் உயர்ந்து தலை நிமிர்ந்து நடக்கலாம்!
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
தமிழ் சினிமாவின் தவப் புதல்வன்... கமல்ஹாசன்!
முகம்
03-அக்டோபர் -2012 விகடன்
தமிழ் சினிமாவின் தவப் புதல்வன்... கமல்ஹாசன்! உலகம் பார்த்து உருகும் உலக சினிமாக்களைத் தமிழில் படைத்த படைப்பாளியின் பெர்சனல் முகம் இங்கே...
பொய் சொல்வது பிடிக்காது. எப்போதும் எதிராளியின் கண் பார்த்துதான் பேசுவார். 'பேசும்போது எச்சில் முழுங்கிக்கிட்டே பேசினால் பொய் சொல்றாங்கனு அர்த்தம்!’ என்பார்.
சாதத் ஹசன் மண்டோ படைப்புகள் ரொம்ப விருப்பம். அவரது படைப்பின் அசல் ருசியை உணர உருது கற்றுக்கொண்டவர்.
சைனீஸ் வகை உணவுகள் அவ்வளவு இஷ்டம். அநேகமாக கமல் உண்டிருக்காத ஜீவராசியே இருக்காது. அதே ஆர்வம் பழங்களின் மீதும் உண்டு. டயட் நம்பிக்கை கிடையாது. வயிறு நிறையச் சாப்பிட்டு சேகரித்த கலோரியை எரித்துவிட்டால் போதும் என்பார்.
முடியாது, கஷ்டம் - எடுத்த எடுப்பிலேயே இந்த வார்த்தைகளைச் சொன்னால், ரசிக்க மாட்டார். ''இறுதி வரை முயற்சித்தும் காரியம் ஆகவில்லை என்றால், சொல்ல வேண்டிய வார்த்தைகள் இவை'' என்பார்.
நடிகர் தாமு ஒருமுறை மிமிக்ரிபற்றி கமலிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மிமிக்ரியில் எத்தனை வகை உண்டு? உலகப் பிரபல மிமிக்ரி கலைஞர்கள் யார்? மிமிக்ரிபற்றிய தகவல்களைப் பகிரும் இணையதளங்கள் எவை எவை... என்று கமல் கொடுத்த நீண்ட விளக்கத்தைக் கேட்டு ஆச்சர்யத்தில் அசந்துவிட்டார் தாமு. கமலின் பலதுறை அறிவுக்கு இது ஒரு சாம்பிள்.
தினமும் காலை இரண்டு மணி நேரம் யோகா. எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் யோகாவைத் தவறவிட மாட்டார். () பிறகு, நண்பர்களுடன் சந்திப்பு. தொடர்ந்து படிப்பு... படிப்பு... படிப்பு. புத்தகத்தில் முக்கியமான கருத்துகளை அடிக்கோடிடுவார். காலத் துக்கும் அந்தப் புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்க மாட்டார்.
தினமும் மாலை மூன்று மணி நேரம் ஜிம்மில் பழியாகக்கிடப்பார். திருமண வரவேற்பு, மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்துகொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு, வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு.
ட்விட்டரில் கமல் இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் இருக்கிறார். தினமும் ஒரு பார்வை பார்த்துவிடுவார்.
கடைசியாகப் பார்த்த தமிழ் சினிமா 'ஒரு கல் ஒரு கண்ணாடி’. விரும்பி அழைத்தால் போவார். மற்றபடி அவர் தினமும் பார்க்கும் அசல் சினிமாக்கள் வேறு ரகம்.
மும்பையில் இருக்கும் ஸ்ருதி, அக்ஷரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவைப் பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல், நெருக்கமான நண்பர் மட்டுமே. நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு.
சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில் அடிக்கடி பார்க்க முடியாது. சினிமா நண்பர்களுடன் தினசரித் தொடர்பும் இருக்காது. ஆனால், ஆச்சர்யமாக சினிமாவின் அத்தனை கிசுகிசு, ரகசியங்களும் அறிந்துவைத்திருப்பார்.
'மையம்’ வெப்சைட் விரைவில் தளம் இறங்கலாம். சினிமா, இலக்கியம் சார்ந்த ரசனைகளுக்கே முன்னுரிமை. இதற்காகவே பிரத்யேகமாக ஜெயகாந்தன், தொ.பரமசிவன், மறைந்த ரா.கி.ரங்கராஜன் ஆகியோரிடம் நீண்ட நேர்காணல்களைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார்.
பக்கா நாத்திகர். கோயிலுக்குச் செல்கிறார் என்றால், அன்று அங்கே படப்பிடிப்பாக இருக்கும்.
முன்பு நாகேஷ் நெருக்கமான நண்பர். வயசு வித்தியாசம் இல்லாமல் சகலமும் கதைப்பார்கள். இப்போது பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் செம தோஸ்த்.
தனது ரேஞ்ச் ரோவர் எவோக் காரை மித வேகத்தில் தானே செலுத்துவார். அலுவலகத்தில் அவருக்குப் பிரியமான மேட்ச்லெஸ் பைக் கம்பீரமாக நிற்கிறது. 'ஹே ராம்’ படத்தில் பயன்படுத்தத் தேடியபோது கிடைத்த அந்த பைக், கமல் பிறந்த வருடமான 1954 வருட மாடல். எனவே, அது அவருக்கு டபுள் ஸ்பெஷல்!
நவம்பர் 7... பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திப்பார். அப்போது கூர்ந்து கவனித்தால், அவரது கண்களில் சின்ன சோகத்தைக் காணலாம். அந்தத் தேதிதான் அவருடைய பிரியமான அப்பா இறந்த நாளும்கூட!
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
Nice one from Vikatan..
Thanks Sakala..
" The real triumph in life is not in never getting knocked down, but in getting back up everytime it happens".
அதானே, "பாத்தியா எனக்கு என்னெல்லாம் தெரிஞ்சிருக்கு" ந்னு பீத்திக்கிர மாதிரி!
Vishwaroopam is a 220+ Crores Record breaking Blockbuster!
https://twitter.com/KamalHaasanFans
Uttama Villain Reviews Collection - http://goo.gl/MSBVxv
Konjam overA irundhaalum, I kinda liked how they talked about editing bloopers etc.
காமிரா உதவியா ளரை இனி கவனமாக இருக்கச் சொல்லுங்கள்.![]()
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
Stupid review !
And those who were seen dancing, were thought to be insane, by those who could not hear the music - Friedrich Nietzsche
Does vikatan add 4 marks to all "color" padams?![]()
(see above, 16V got 4 because it was not B&W)
Bookmarks