Page 142 of 305 FirstFirst ... 4292132140141142143144152192242 ... LastLast
Results 1,411 to 1,420 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1411
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :26

    நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

    பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

    வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    'பாட்டுப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.4.1961


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1412
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,

    வசந்த மாளிகை நினைவலைகள் அருமை. உங்களை தொடர்ந்து கார்த்திக் மற்றும் வாசு அவர்களும் தங்கள் பங்கிற்கு அவர்களில் நினைவலைகளை இங்கே பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    செப்டம்பர் 29 மறக்க முடியாத நாள்! மறக்க முடியாத படம்!

    அன்புடன்

  4. #1413
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள பம்மலார் சார்,

    தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி. 70-களில் கர்ணன் பார்த்த விவரத்தை ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷனாகத்தான் சொன்னேன். அதையும் கூட பாராட்டும் பெருந்தகையாளர் தாங்கள்தான்.

    எல்லா விஷயங்களிலும் நடிகர்திலகத்தை முன்னிலைப்படுத்துவது தங்கள் வாடிக்கையென்பது அனைவரும் அறிந்தத் விஷயம். அதை மீண்டும் நிரூபிக்கும் வண்ணம், மறைந்த நகைச்சுவைக் கலைஞர் லூஸ் மோகனுக்கான அஞ்சலிப் பதிவில், அவர் நடிகர்திலகத்தைப்பற்றிக் கூறியிருந்த அருமையான பேட்டியைப் பதிப்பித்து விட்டீர்கள். 'என் திருமணமே நடிகர்திலகத்தின் செலவில்தான் நடைபெற்றது' என்று லூஸ் மோகன் கூறியிருப்பது இதுவரை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?. நம்மவருக்கு செய்யத்தான் தெரியுமே தவிர அதை விளம்பரபடுத்தத் தெரியாதே.

    திரைப்படக்கலைஞர்கள் மட்டுமல்லாது, அவரால் பயனடைந்த, பலன்பெற்ற காங்கிரஸ்காரர்களும் ஏராளம். ஆனால் எதையும், பத்திரிகை நிருபரை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு செய்ததில்லை. அப்போது தெரியாவிட்டாலும் இப்போதாவது எல்லோருக்கும் தெரியட்டுமென்று, ஆவணங்களைத் தேடித்தேடியெடுத்து வந்து விருந்து படைக்கும் தங்கள் கருணை உள்ளத்துக்கு பாராட்டுக்கள்.
    டியர் mr_karthik,

    தேன்மழை போன்ற தங்களுடைய பாராட்டுக்கு என்னுடைய திகட்டாத நன்றிகள்..! தாங்கள் கூறியது 100/100 உண்மை..! நமது நடிகர் திலகம் என்றுமே விளம்பரம் தேடா வள்ளல்பெருமான்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #1414
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    நமது நடிகர் திலகத்தின் 85வது ஜெயந்தித் திருநாளான 1.10.2012 திங்களன்று, அகில இந்திய சிவாஜி மன்ற இலக்கிய அணி சார்பில் நடைபெறவுள்ள சமுதாய நற்பணிகள் இனிதே நடைபெற இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்..!

    மாம்பழத்து மாநகர மறவர்கள், கலையுலக மன்னர்மன்னனின் ஜெயந்தியை முன்னிட்டு வடித்துள்ள, அவரது புகழ்பாடும் பதாகை, அப்படியே அள்ளிக்கொண்டு போகிறது. பதாகையில் காணப்படும் பாமாலை படுஅமர்க்களம்..! பகிர்ந்து கொண்டமைக்கு பாங்கான நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1415
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 16

    நடிகர் திலகத்தின் 74வது காவியம்

    கப்பலோட்டிய தமிழன் [முதல் வெளியீட்டுத் தேதி : 7.11.1961]

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    மறு வெளியீட்டு விளம்பரம் : தினத்தந்தி(சென்னை) : 18.3.1977


    சென்னையில், முதல் வெளியீட்டில் இக்காவியம்,
    'பாரகன்' திரையரங்கில் 52 நாட்களும்,
    'கிரௌன்' திரையரங்கில் 52 நாட்களும்
    'சயானி' திரையரங்கில் 52 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது.


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #1416
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by pammalar View Post
    திரைக்காவிய முதல் வெளியீட்டு விளம்பரங்கள் :26

    நடிகர் திலகத்தின் 67வது திரைக்காவியம்

    பாவமன்னிப்பு [வெளியான தேதி : 16.3.1961]

    வெள்ளிவிழாக் கொண்டாடிய மகாமெகாஹிட் காவியம்

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    'பாட்டுப் போட்டி' விளம்பரம் : சுதேசமித்ரன் : 7.4.1961


    தொடரும்...

    பக்தியுடன்,
    பம்மலார்.
    PAVAMANNIPPU PATTUPOTTI marakkamudiyada anubhavam. we are in a colony of 16 tenants icidently house no also 16. of these seven eight inmates are very close and cine lovers. to participate all eight inc my mother cusin and myself started watching the movie at SRIKRISHNA mint
    reeatedly and arraived at a common decision naming the orderof songs like this.
    1 silar siriar 2 ellorum kondaduvom 3 athan en athan like this arranging other songs after these order sent multiles of replies.
    we are glad to receive some prizes for choosing the no 1 song coreectly
    what a memorable days.

  8. #1417
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாழ்வில் மறக்க முடியாத நாளான செப்டம்பர் 29 1972 - இந்த நாள் வசந்த மாளிகை நாள் - அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்வுடன், அதனைப் பாராட்டிய ஆனந்த், பம்மலார் மற்றும் முரளி சார் அனைவருக்கும் நன்றி. தங்களைப் போல் வாசுவும் கார்த்திக்கும் மட்டுமன்றி, தாங்களும் மற்றும் நமது ஏனைய நண்பர்களும் பகிர்ந்து கொண்டால் எப்படியெல்லாம் ரசிகர்கள் அதனை வரவேற்று பங்காற்றியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    ராமஜெயம் சார், தங்களுடைய கணிப்பும் பெரும்பான்மையினரின் கணிப்பும் சரியானது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும் சிலர் சிரிப்பார் பாடல் முதலிடம் பெற்றது அந்தக் கால மக்களின் ரசிப்புத் தன்மையிலுள்ள மேன்மையைக் காட்டுகிறது. இது போல் மேலும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1418
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பந்த பாசம் - மறக்க முடியாத காட்சி



    சாந்தி பிக்சர்ஸ் பந்த பாசம் 27.10.1962ல் வெளியானது. நடிகர் திலகத்துடன் ஜெமினி கணேசன், தேவிகா, சாவித்திரி, எஸ்.வி.ரங்காராவ், சந்திரபாபு, சந்திரகாந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. ரங்காராவின் இரு புதல்வர்கள் சிவாஜியும் ஜெமினியும். வக்கீலுக்குப் படித்த சிவாஜி தன் எழுத்தார்வத்தால் பத்திரிகையில் பணி புரிகிறார். அங்கே தன் கருத்துடன் பல வகையில் ஒத்துப் போகும் தேவிகா அவரைக் காதலிக்கிறார். நாளடைவில் இருவருகுக்குள்ளும் காதல் வளர்கிறது. இந்த நேரத்தில் செல்வந்தரான ரங்காராவின் குடும்பம் சூழ்நிலை காரணமாக நிலை தடுமாறுகிறது. குடும்பத்தின் மானத்தைக் காக்க விரும்பி ஒரு உடல் ஊனமுற்ற பெண்ணை மணக்கிறார் நடிகர் திலகம். அதன் மூலம் வரும் வருவாயில் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் எடுக்கும் இந்த முடிவினால் தேவிகாவின் காதலை இழக்க நேரிடுகிறது. அது மட்டுமன்றி அந்தத் திருமணத்திற்கு தேவிகா சாட்சி கையெழுத்துப் போடுகிறார். இந்தக் காட்சியைத் தான் நீங்கள் இங்கு காண்கிறீர்கள். மிகை நடிப்பு என்று நடிகர் திலகத்தைக் கிண்டல் செய்வோரை சாட்டையடி தந்தாற்போல் மிகவும் இயல்பாக செய்திருப்பார் நடிகர் திலகம். எந்த காட்சியினையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு எந்த அளவு தேவையோ அந்த அளவு தரக்கூடிய வல்லமை தனக்கு உண்டு என்று நிரூபித்த காட்சி இது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1419
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    என்னவென்று சொல்ல! 'வசந்த மாளிகை' பற்றிய தங்களுடைய நினைவலைகள் நம் அனைவரது எண்ணங்களின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பு என்றால் அது மிகை அல்ல. உங்கள் பதிவுகளில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும், ஏன் ஒவ்வொரு எழுத்துக்களும் உள்ளப்பூர்வமான, உணர்வுபூர்வமான, உண்மையான, எவ்வித பிரதிபலனும் பாராத, உச்சக்கட்ட உணர்வுகளின் தொகுப்பாகவே நெஞ்சில் பதிகிறது. ஒவ்வொரு ரசிகனும் தன் வாழ்நாள் முழுதும் கொண்டாடும் வைபவ விசேஷமல்லவா வசந்தமாளிகை! ஏனோ என்னையுமறியாமல் தங்கள் அனுபவ பதிவுகளை என்னுள் நான் உணர்ந்தபோது கண்ணில் நீர் துளிர்த்தது. ஏதோ இனம் புரியாத சோகம் நெஞ்சை பாரமாய் அழுத்தியது போன்ற உணர்வு. மேற்கொண்டு என்னால் இயலவில்லை. அட்டகாசமான தங்கள் 'வசந்தமாளிகை' நினைவலைகளுக்கு ஆனந்தக் கண்ணீருடன் கூடிய என் நன்றிகள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1420
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'வசந்த மாளிகை'



    வண்ணமயமான வசந்த மாளிகை.



    இறந்த பிறகுதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளோ கொடுத்து வைத்தவர்கள். அதனால்தான் தங்கள் வாழ்நாளிலேயே உயிரோடிருக்கும் போதே சொர்க்கத்தை வசந்த மாளிகையில் கண்டு சொக்கிப் போனார்கள். இனி சொர்க்கம் என்று ஒன்று எதற்கு என்று மாளிகையின் மடியிலே கிறங்கிப் போனார்கள். ஜாதி, இனம், மதம், பேதம் அனைத்தையும் கடந்து மக்கள் அனைவரும் ஒருசேர மாளிகையில் சங்கமித்தார்கள். "நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்" என்றோரெல்லாம் நாங்கள் வசந்தமாளிகையின் ரசிகர்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். காதலின் உண்மையான மகத்துவத்தை அறிந்தார்கள். உணர்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி போல திரையுலகில் ஓர் புரட்சி. தமிழ் சினிமாவுக்கோர் மறுமலர்ச்சி. விளைவு? எங்கும் காணாத எழுச்சி. வசந்த மாளிகை கண்ட தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன.



    "நீ எத்தனை முறை வசந்த மாளிகை பார்த்தாய்?"

    "பத்து முறை"...

    "ச்சே! அவ்வளவுதானா? நான் இருபது முறையாக்கும்"

    என்று ரசிகரல்லாதோர் கூட பெருமை கூட்டிக் கொண்டார்கள்.

    "மாமா! புதுப்படம் போட்டிருக்கான்டா.. வாடா செகண்ட் ஷோ போலாம்" என்பான். "போடா போடா போக்கத்தவனே... வசந்தமாளிகை ஓடுது.. அதுக்குப் போவானா... போறானாம் புதுப்படத்துக்கு... கெளம்புடா! டிக்கட் கெடைக்காம போகப் போவுது"...

    என்று கட்டிய லுங்கியுடன் சைக்கிளில் பறந்து சென்று பார்த்த இளைஞர் கூட்டம். ரிக்ஷா வண்டி இழுத்தவன் முதல் மேல் தட்டு மேனஜர்கள் வரை துக்கங்களை தூர எறிந்துவிட்டு, தூக்கத்தை மறந்து ஏக்கங்கள் கொள்ளவைத்த மாளிகை. இரண்டாவது மூன்றாவது ரீ-ரிலீஸ்களின் போது கிடைத்த வரவேற்பு வாய் பிளக்க வைக்கும்.

    நூறாவது மறு வெளியீட்டிலும் அது தொடரும்.



    யாரை வேண்டுமானாலும் கேள்.. எவரை வேண்டுமானாலும் கேள்... "நல்லாயில்ல"... என்று வேண்டுமென்றே நம்மை வேதனைப்படுத்தக் கூட ஒரு வார்த்தை வராது. "பின்னிட்டாருய்யா உங்க ஆளு... அசல் குடிகாரன் கெட்டான்யா... கணேசன் கணேசன்தான்யா' என்று மகுடம் சூட்டுவான். "இரண்டு மனம் வேண்டும்" என்று கேட்கும் போதே இவன் இருமி வாந்தி எடுக்க முற்படுவான். "யாருக்காக' என்று கூக்குரலிடுகையில் "தலைவா... உனக்காக" என்று ஒருவன் கத்துவான். "எங்களுக்காக" என்று மற்றொருவன் மகிழ்ந்து சொந்தம் கொண்டாடுவான். வசதி படைத்தவன் ஒயின் கிளாஸை போஸ்ட்டரில் பார்த்தது போலப் பிடித்துப் பார்க்க முயன்று 'ஏன்' இந்த வேலை? என்று தோற்றுப் போவான். சால்வைகள் விலை ஏற்றமடைந்தன. தியேட்டர் ஊழியன் பளபளப்பாகத் தெரிவான். இடைவேளைகளில் பல லிட்டர் பால் கேண்டீன்காரன் வாங்கி வைத்தாலும் தியேட்டரில் பாதிப் பேர் 'டீ' இல்லாமல் அலைவான். ரசிகப் பிள்ளைகள் தலைவர் வராத சீன்களில் தியேட்டர் வெளிவராந்தாவில் இறைவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.



    ''வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா'' எனும் போது திருவண்ணாமலை தீபம் தியேட்டரில் தெரியும்.. ஒவ்வொருத்தர் கையிலும் கற்பூரம் எரியும். கிளாசிலிருந்து தரை வரை கைத்தட்டல் உச்சி பிளக்கும். தரை டிக்கெட் எடுத்தவன் துண்டை சுழற்றி மேலே கிடாசுவான். சில்லறைகள் சிதறும். லாட்டரி சீட் கவுண்டர் பைல்கள் திரையை மறைக்கும். 'மயக்கமென்ன' என்றவுடன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு திரையை நோக்கி ஓடுவான். ஆடியன்ஸைப் பார்த்து ஆட்டமாடுவான். "உயிரோடு இருக்கும் என் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை" என்று உச்சரிக்கும் போது இதழ் பிரியாமல் கூடவே உச்சரிப்பான். திருக்குறளை மனப்பாடம் செய்தானோ இல்லையோ... வசந்த மாளிகையின் வசனங்களை வசப்படுத்திக் கொண்டான். "அன்புக் காணிக்கைதான் கண்ணே" என்றால் பக்கத்து சீட்டு நண்பன் மார்பில் இவன் முகம் புதைப்பான். "ஆடிவரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்துவர" வரிகளில் இவன் பூக்களை கைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெய்வப் பாதங்களில் தூவுவான்.



    'கடவுளை தண்டிக்க என்ன வழி?' என்று கையை உதறும் போது காதலியை நினைத்து கதறுவான். 'ஆனா அவகிட்டப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்' என்று சொன்னால் 'எனக்கும் அப்படித்தான் தலைவா' என்று தன்னை மறந்து கத்துவான். "குடிமகனே" என்ற குரல் ஒலிக்கும் முன்பே 'ஓ ஹ ஹா ஹா' என்று இவன் முடித்து வைப்பான். தாய்க்குலம் இருக்கைகள் நிரம்பி வழிந்திருக்கும். 'யாருக்காக'வின் போது பாதிதான் இருக்கும்.."நாசமா போறவனுங்களே! படம் பாக்க உடுறீங்களாடா" என்று தாய்க்குலம் வசவு பாடும். இவனுக்கு பாராட்டுப் பத்திரமாய் இனிக்கும். கூடை கூடையாய் மலர்களை அள்ளித் தெளித்துவிட்டு சிந்திய பூக்களை இருட்டில் அள்ளுவான் மறுபடி தூவ. திருப்தியே இருக்காது. வணக்கம் முடிந்தாலும் வாழ்க கோஷம் தொடரும். மனமில்லாமல் பிரிவான். மறுநாள் அதே கூத்து தான்.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 29th September 2012 at 11:37 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •