Page 98 of 401 FirstFirst ... 488896979899100108148198 ... LastLast
Results 971 to 980 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #971
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,
    பிடியுங்கள் பாராட்டை தங்கள் 2000 ஆவது பதிவுக்கு. ஆனால் ஓரிரு வார்த்தைகளில் அரை மனதோடுதான். ஏனென்றால் தங்கள் 5000 எட்டும் போதுதான் நிறைய வார்த்தைகளில் முழு மனதோடு பாராட்ட முடியும்.
    அன்புடன்
    கோபால்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #972
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    தவப்புதல்வன்

    நேற்று எதேச்சையாக, சன் லைப் தொலைக்காட்சியில், இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

    1972-இல், முதன் முதலாக, இந்தப் படம் வெளியான போது, சென்னை கமலாவில், முதல் நாளே பார்த்து விட்டேன். அந்த வயதில், முதலில் என்னை ஈர்த்தது, வழக்கம் போல், "Love is fine darling" - ஆங்கிலப் பாடலில், நடிகர் திலகத்தின் ஸ்டைலிஷ் நடிப்பும், இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடலும் தான்! அதன் பின்னர், எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் அடிக்கடி, மறு வெளியீடு செய்யப்படாததாலும், என்னுடைய கவனம், அவருடைய பழைய படங்களைப் பார்ப்பதில் கழிந்ததாலும் (நினைவு தெரிந்து பார்க்க ஆரம்பித்தது, ராஜா-விலிருந்துதான்), இந்தப் படத்தை மறுபடியும், முழு படத்தையும், பார்க்க வில்லை. சில வருடங்களுக்கு முன்னர், ஏதோ ஒரு தொலைக் காட்சியில் பார்த்த போது, நடிகர் திலகம் ஏ. சகுந்தலா வீட்டில் விழுந்து கிடக்கும் காட்சியையும், எம்.ஆர்.ஆர்.வாசு மற்றும் ஏ.சகுந்தலா டாமினேட் செய்யும் காட்சிகளும், தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், கோபம் வந்து, படத்தை மேற்கொண்டு பார்க்காமல் எழுந்து சென்று விட்டேன். (என்னதான் நடிப்பை இருந்தாலும், பாழாய்ப் போன மனசு கேட்க மாட்டேன் என்கிறதே!).

    எல்லோரும் எழுதி எழுதி, ஒப்புக் கொண்டு விட்ட ஒரு விஷயம் தான்! அதாவது, நடிகர் திலகத்தின் இமேஜைப் பற்றிக் கவலைப்படாத குணம். இருப்பினும், இந்தப் படத்தை நேற்று கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கப் பார்க்க, மனதில் எழுந்த, பிரமிப்பு அடங்க வெகு நேரம் பிடித்தது.

    1972 - எல்லோருக்கும் தெரியும், நடிகர் திலகத்தின் உச்சக்கட்ட வசூல் சாதனை ஆண்டு. வெளி வந்த 7 படங்களில், 6 படங்கள் பெரிய வெற்றி அடைந்தன. (பட்டிக்காடா பட்டணமாவும், வசந்த மாளிகையும் வெள்ளி விழா தான் ஓடியது; ராஜா, ஞான ஒளி, தவப்புதல்வன் மற்றும் நீதி 100 நாட்களும், அதற்கு மேலும், ஓடின.). இது தான் முக்கியம். நடிகர் திலகம் மெல்ல மெல்ல அதிரடி நாயகனாகவும், மசாலா நாயகனாகவும் கூடப் பெரிய நிலைக்குச் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், எதிர் மறையான கதாபாத்திரமாயிருந்தால் கூடப் பரவாயில்லை. இது, முற்றிலும், ஒரு விதமான, கோழைத்தனம் கலந்த, இயலாமை கலந்த பாத்திரம். இதை ஏற்று நடிக்க - அதுவும், அந்தக் கால கட்டத்தில் - எவ்வளவு துணிவு வேண்டும்? இருப்பினும், தைரியமாகத் துணிந்து ஏற்று நடித்திருக்கிறார்.

    ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! இந்நாளில், யார் யாரோ இதைப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வாசகம் நடிகர் திலகம் ஒருவருக்குத்தான் என்றும் பொருந்தும்.

    படத்தைப் பொறுத்தவரை - தொய்வில்லாமல் சீராக, சுவாரஸ்யம் குன்றாமல் சொல்லப் பட்டிருந்தது. நடிகர் திலகம், வழக்கம் போல், கதாபாத்திரமாகவே மாறியிருந்தாலும், அளவாகவும், இயல்பாகவும், அழகாகவும் நடித்திருந்தார். அருமையான பாடல்கள். இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை தான். (திரு. முரளி அவர்கள், "சிவாஜியின் சாதனைச் சிகரங்கள்" கட்டுரையில், 1972 - வருடத்திய படங்களைப் பற்றி அலசியிருந்த போது, இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தது, பசுமையாக நினைவில் இருந்தது. அப்படியே எழுத முடியவில்லை. அதாவது, "ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா மிகப் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது, மறு பக்கம் வசந்த மாளிகை பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில், வெளியான தவப்புதல்வன், நூறு நாட்களை தொட்டது என்றால், நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் பவர் என்ன என்பது புரியும்".)

    இத்தனைக்கும், தவப்புதல்வன், ஒரு கருப்பு வெள்ளைப் படம் தான்.

    திரு. முரளியின் அந்த வர்ணனையும், நடிகர் திலகத்தின், சரளமான நடிப்பும் தான், மீண்டும் தவப்புதல்வனைப் பார்க்க வைத்தது.

    பார்த்து முடித்ததும், திரு. முரளியைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆகி விட்டது.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  4. #973
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்தசாரதி சார்,
    முக்தாவின் நிறைகுடம்,அருணோதயம்,தவப்புதல்வன் எல்லாமே சுவாரஸ்யமானவை.ஜாலியாக போகும். emotional content இருக்கும்.தவப்புதல்வன் கதாநாயகியை பார்த்தால்தான் வயிறு எரியும்.
    தங்களின் பாடல் series காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  5. #974
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ஹா ஹா கோபால் சார்.. நல்லா சொன்னீங்கா.. ஆனாலும்...

    நிறைகுடத்தின் வாணிஸ்ரீயும், அருணோதயத்தின் சரோஜாதேவியும் டுயட் பாட்டிலும் கூட ஆட வேண்டி இருந்தது. ஆனால் தவப்புதல்வனில் கே.ஆர்.விஜயாவுக்கு ஒரு பாட்டில் மயக்கம் போட்டுக் கிடக்க வேண்டியது மட்டுமே தேவைப்பட்டது. போதாக்குறைக்கு ஜிலுஜிலு டான்சுக்கு ஏ.சகுந்தலா இருந்ததால் இதுவே போதும் என்று விட்டிருக்கலாம். டாக்டர் வேஷத்துக்கும் நாலைந்து கலர் கலர் கண்ணாடி பீப்பாய்களை போட்டு உடைப்பதற்கும் இது போதாதா ?

  6. #975
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    தவப்புதல்வன் நினைவலைகள் அற்புதம், நம் தலைவர் என்றுமே சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர் தானே?
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #976
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,480
    Post Thanks / Like
    We hear that actor Y Gee Mahendra is planning to remake the 1982 film Paritchaiku Neramaachu. The original movie had Sivaji Ganesan playing an orthodox father, while Y Gee played his son. But here's the big news. He has zeroed in on comedian Santhanam to be part of the remake!
    .....
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  8. #977
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    30,480
    Post Thanks / Like
    Sivaji Ganesan was simple and courageous




    The 84th anniversary of ‘Nadigar Thilagam’ Chevalier Sivaji Ganesan was celebrated on October 1st. The elder son of the legendary actor, Ram Kumar Ganesan welcomed the gathering and the guest of honour, the Governor of Tamil Nadu, Shri. Rosaiah. Directors Santhana Bharathi and TP Gajendran were also spotted at the event.

    The governor, while addressing the gathering, was all praise for Sivaji Ganesan. He recollected the days he spent with the actor while campaigning in Andhra Pradesh. “We were good friends, even though we mostly met for political reasons,” he added. About Sivaji’s acting, the Governor said, “There wasn't a single character he couldn't do and none can do a character as perfect as he could. His simplicity and courage were his USPs. I would say, he along with other legends like MGR, NTR and NS Krishnan were the greatest contributors of Indian Cinema.”

    The Sivaji family took the opportunity to honour veterans like K Balachander, actress Kanchana, and Thavil exponent ‘Valayapatti’ AR Subramaniyam. A sum of Rs 50,000 was also donated towards the Sivaji Prabhu Charitable Trust.

    http://www.behindwoods.com/tamil-mov...-03-10-12.html
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  9. #978
    Senior Member Seasoned Hubber rsubras's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    878
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பார்த்தசாரதி சார்,
    முக்தாவின் நிறைகுடம்,அருணோதயம்,தவப்புதல்வன் எல்லாமே சுவாரஸ்யமானவை.ஜாலியாக போகும். emotional content இருக்கும்.தவப்புதல்வன் கதாநாயகியை பார்த்தால்தான் வயிறு எரியும்.
    தங்களின் பாடல் series காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    if i am right, niraikudam and thavaputhalvan had CHO writing the dialogues and screenplay, correct?
    R.SUBRAMANIAN

    My Blog site - http://rsubras.blogspot.com

  10. #979
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rsubras View Post
    if i am right, niraikudam and thavaputhalvan had CHO writing the dialogues and screenplay, correct?
    Niraikudam- story-Mahendran. Screen play,dialogue-Cho. Thavapudhalvan- story,dialogue-Thooyavan.

  11. #980
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    Lovely, Joe, lovely. We have mostly celebrated the 3 NT scene, but forgot about this one. Major-ai evvalavO kindal panni irukkOm, but some films he worked with NT, he did great job. Bravo. Anyway, there are just too many scenes to celebrate.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •