-
8th October 2012, 02:42 PM
#981
Junior Member
Newbie Hubber
100th page. A humble mile stone.
My request to all our friends. Keep contributing your valuable articles to enrich this thread. Special thanks to Murali,P_R,Joe,Nov,Parthasarathy,Vankv,Subras,Plum ,sivajisenthil,Madhu,Satheesh,J.Radhakrishnan,Grou ch,Barrister,M.Kumar,Ramajayam,Harish,Kalnayak,Mah esh,anm,Rajesh,Rangan,KCS who are contributing presently,
Vasu who opened this thread,Pammalar ,Karthik,Raghavendar ,Raghulram who made their valuable initial contributions.
The friend who were left due to trick of my memory, Pl.accept my thanks with grace.
Last edited by Gopal.s; 8th October 2012 at 03:46 PM.
-
8th October 2012 02:42 PM
# ADS
Circuit advertisement
-
8th October 2012, 03:26 PM
#982
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Vankv
I saw a comment about NT's pair in 'Thavaputhalvan'. NT acted with KR Vijaya in many films which could have been somebody else who acted, I mean some other actresses with thinner frame. KRV's growing weight made NT looked younger and thinner in those 70's movies. But it was ok when he got fatter again in the 80's! Wonder is, no matter how bulkier NT became, he was still romancing, dueting and fighting off villains! The fans accepted him in any form; thin, fat, ugly, clumsy, doesn't matter. Those expressive eyes were enough to captivate the audience. He acted in more than 300 movies and probably the producers faced with a challenge in selecting new heroines from time to time. Almost all the actresses in his lifespan, acted with him. He suited with everybody, but as far as the screen chemistry is concerned, I would say; Sivaji - Padmini first, then Sivaji - Vanisree.
You are cent percent perfectly right. Next best is sivaji-Devika and sivaji-sarojadevi .
-
8th October 2012, 04:10 PM
#983
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
பார்த்தசாரதி சார்,
முக்தாவின் நிறைகுடம்,அருணோதயம்,தவப்புதல்வன் எல்லாமே சுவாரஸ்யமானவை.ஜாலியாக போகும். emotional content இருக்கும்.தவப்புதல்வன் கதாநாயகியை பார்த்தால்தான் வயிறு எரியும்.
தங்களின் பாடல் series காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
திரு. கோபால் / திரு. மது,
தவப்புதல்வன் படத்தைப் பற்றிய ஆய்வை நான் இங்கு தரவில்லை. நடிகர் திலகத்தின் துணிச்சலையும், அவரது திறமை மேல் அவருக்கிருந்த தன்னம்பிக்கையைப் பற்றியும், தொழில் என்று மட்டுமே தான் அவர் பார்த்தார், பாத்திரத்தின் தன்மையைப் பற்றி அல்ல. (இந்தத் துணிச்சலில், நீங்கள் சொன்ன கதாநாயகித் தேர்வு கூட அடங்கும்!)
நிற்க. திரு. கோபால் அவர்களே, நிறைகுடம் மற்றும் அருணோதயம் படங்கள் - படங்கள் என்று மட்டும் பார்த்தால் - தவப்புதல்வன் அளவுக்கு சுவாரஸ்யமாக விஷுவலாகச் செல்லாது. அந்தப் படங்களுக்கு, தவப்புதல்வன் அளவிற்கு பாடல்களும் துணை நிற்கவில்லை. நிறைகுடம் கிட்டத்தட்ட மேடை நாடகம் போல் தான் செல்லும். அருணோதயம் கொஞ்சம் விஷுவலாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ஜோடிப்பொருத்தம் எடுபடவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் - கொஞ்சம் சர்ச்சைக்குரிய விஷயம் தான் - நல்ல வேளை, முத்துராமன் அவர்கள் இந்தப் படத்திலும் படம் நெடுக வந்து போகவில்லை.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
8th October 2012, 05:12 PM
#984
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
5. "நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின், இந்தக் கட்டுரையை மறுபடியும் எழுதுவதில் பேருவகை அடைகிறேன்.
1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)
அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -
எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.
இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.
இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.
அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் -"உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!
இப்போது, சரணம் -
"பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.
"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!
அடுத்து, இரண்டாவது சரணம் -
"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!
இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.
பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!
உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!
குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
-
8th October 2012, 07:19 PM
#985
Administrator
Platinum Hubber

Originally Posted by
Gopal,S.
You are cent percent perfectly right. Next best is sivaji-Devika and sivaji-sarojadevi .
we had a whole discussion on this... Padmini won comfortably!
http://www.mayyam.com/talk/showthrea...na-Jodi/page10
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
9th October 2012, 07:11 AM
#986
Junior Member
Newbie Hubber

Originally Posted by
NOV
Amazing. Exact fit with my opinion and taste.
-
9th October 2012, 07:19 AM
#987
Junior Member
Newbie Hubber
Sarathy sir,
Great write up. If you observe,NT uses his hand movements more when he comes in less sophisticated and innocent characters(Padikkatha medhai,Bale pandiya). More of a body swings and Facial Expressions in Educated ,Sphisticated characters.(Pudhiya paravai). In Padithaal pattum podhuma, he is un-educated but sophisticated. He used both the styles liberally in this movie.(naan kavignanum illai,Nallavan enakku naane songs.) I leave 1000 places vacant after the great Nadigar Thilagam.
Last edited by Gopal.s; 9th October 2012 at 07:24 AM.
-
9th October 2012, 01:58 PM
#988
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Vankv
Pity he didn't do his exercise routine/dieting again in the 80's when he was only in his 50's (younger than Rajini's current age) and looked older, just
because he put on weight again, which could have been avoided as he was still no1 in Tamil cinema (Rajini was only a growing artist then).
I believe, more than the lack of effort, it is to do with the genes that makes this slimming business very difficult... for such ppl, when age is on your side you can do certain things, sweat it out to get to shape but beyond a certain age it is a very tough thing......... that too considering the work load of Sivaji sir at that time.......it would have been next to impossible to even plan anything such as this........
-
9th October 2012, 02:09 PM
#989
Senior Member
Diamond Hubber

Originally Posted by
rsubras
that too considering the work load of Sivaji sir at that time.......it would have been next to impossible to even plan anything such as this........
True ..Thala should have avoided doing shoot round the clock . He should have filtered no of movies and take necessary rest and exercise.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
9th October 2012, 05:45 PM
#990
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
Sarathy sir,
Great write up. If you observe,NT uses his hand movements more when he comes in less sophisticated and innocent characters(Padikkatha medhai,Bale pandiya). More of a body swings and Facial Expressions in Educated ,Sphisticated characters.(Pudhiya paravai). In Padithaal pattum podhuma, he is un-educated but sophisticated. He used both the styles liberally in this movie.(naan kavignanum illai,Nallavan enakku naane songs.) I leave 1000 places vacant after the great Nadigar Thilagam.
Dear Gopal Sir,
Thank you for your appreciation. When it comes to hands movement, restraint and grace in terms of body language, NT is the best right from his debut movie "Parasakthi". That too, from a man from Theatre background!
The very purpose of my series on his performance in Song sequences is only to reach the LEARNED CRITICS and today's YOUTH that he is the only Artiste, who had always been ahead of his time, in understanding the visual media and not like some of these critics' remark that he is a loud actor!
This I will continue, as long as I can!!
Regards,
R. Parthasarathy
Bookmarks