-
9th October 2012, 05:46 PM
#991
Senior Member
Senior Hubber
[QUOTE=Vankv;963963]

Originally Posted by
parthasarathy
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
5. "நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
I agree with you 100%. He did that sort of experimental things in many films. NT delivered an award winning acting in 'Padithal Mattum Pothuma'. Story, dialogues, songs, music and casting were excellent except NT's wig. He could've just left it without wearing a wig though. NT was lucky enough not to have receding hairline! He didn't have to wear wigs in many of his movies, I feel. I particularly liked the scenes when he goes to see the girl, his brother was going to marry and spoke to her with his limited English! and then After Savithri advised him of women like about their husbands praising them all the time and then there he went on singing 'Naan kavignanum illai!! (He says to Savithri; "sari ini naan veliya theruva pokaama, avalai varnichchukitte irukken!") Funny!
Thank you for your acknowledgement Mr. Vankv (Your name pl.)
Regards,
R. Parthasarathy
-
9th October 2012 05:46 PM
# ADS
Circuit advertisement
-
9th October 2012, 06:10 PM
#992
Senior Member
Senior Hubber
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்
இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.
மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.
பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.
இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.
பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).
இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!
இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.
முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.
முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!
"எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!
திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.
இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.
கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!
பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.
இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!
நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?
நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!
தொடரும்,
இரா. பார்த்தசாரதி
Last edited by parthasarathy; 10th October 2012 at 01:23 AM.
-
9th October 2012, 11:21 PM
#993
சாரதி,
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். பிறகு வந்து எழுதுகிறேன். நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடலும் சரி நெஞ்சிருக்கும் எங்களுக்கு பாடலின் ஆய்வும் சரி, அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் An in depth analysis of Body Language என்பதே பொருத்தமான தலைப்பு.
தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரே ஒரு திருத்தம். நெஞ்சிருக்கும் எங்களுக்கு என்ற இந்த பாடலை (மட்டும்) புனைந்தவர் வாலி அவர்கள். நமது ராஜேஷ் அவர்கள் வந்து நம்மோடு உரிமையோடு சண்டை போடும் முன் மாற்றி விடுங்கள்.
அன்புடன்
-
10th October 2012, 02:31 PM
#994
Junior Member
Newbie Hubber
Sarathy Sir,
Outstanding analysis on Nenjirukkum engalukku. One of my all time favourite boogey Boogey rhythm song. you are enhancing our adrenalin charge. You cant say you will continue as long as you can. You have to continue forever.
Last edited by Gopal.s; 10th October 2012 at 02:53 PM.
-
10th October 2012, 11:02 PM
#995
Senior Member
Seasoned Hubber
I recently watched "baley bandiya".....the whole movie was entertaining.....three different roles for sivaji. His voice modulations for rowdy and scientist character are nice... especially the excessive usage of "I mean"...and Chennai Tamil. I do not remember sivaji speaking Chennai Tamil any other movies. M R radha has dual role.... As usual, his timings are excellent particularly when M R radha brings sivaji to his home first time. over all, it's a nice movie to watch....
Last edited by Avadi to America; 10th October 2012 at 11:04 PM.
In theory there is no difference between theory and practice; in practice there is
-
11th October 2012, 11:31 AM
#996
Senior Member
Senior Hubber

Originally Posted by
Murali Srinivas
சாரதி,
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒன்றும் என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. கொஞ்சம் நேரம் கொடுங்கள். பிறகு வந்து எழுதுகிறேன். நல்லவன் எனக்கு நானே நல்லவன் பாடலும் சரி நெஞ்சிருக்கும் எங்களுக்கு பாடலின் ஆய்வும் சரி, அதைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் An in depth analysis of Body Language என்பதே பொருத்தமான தலைப்பு.
தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரே ஒரு திருத்தம். நெஞ்சிருக்கும் எங்களுக்கு என்ற இந்த பாடலை (மட்டும்) புனைந்தவர் வாலி அவர்கள். நமது ராஜேஷ் அவர்கள் வந்து நம்மோடு உரிமையோடு சண்டை போடும் முன் மாற்றி விடுங்கள்.
அன்புடன்
திரு. முரளி:- தங்களின் ஆத்மார்த்தப் பாராட்டுக்கு நன்றி. இந்தப் பாடல் கவிஞர் வாலி இயற்றினாரா அல்லது கவியரசுவா என்று முதலில் இருந்தே ஒரு சந்தேகம் இருந்தது. என்சைக்ளோபீடியவான உங்களிடம் வேறொரு சந்தேகத்தை நிவர்த்தி பண்ணுவதற்கு தொடர்பு கொண்ட நான், இந்த சந்தேகத்தை நிவர்த்தி பண்ணாமல் விட்டு விட்டேன். உடனே, அந்தத் தவறை சரி செய்து விட்டேன். சரியான நேரத்தில் தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள். என்ன செய்வது, எனக்கும் பல விவரங்கள் (மற்ற மொழிகள் உட்பட) தெரிந்திருந்தும், சில விவரங்களில் இன்னமும் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டபடி, "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடலும் "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" பாடலும் பெரும்பாலும் உடல் மொழியை சுற்றியே பின்னப் பட்டிருக்கும். இந்த ஒரு விஷயம் தான் நாடக நடிப்புக்கும் சினிமா நடிப்புக்கும் வித்தியாசத்தை - நடிகர்களிடமிருந்து - வர வேண்டியிருக்கும் மிக முக்கியமான வித்தியாசம். இந்த வித்தியாசத்தை முதலில் அதுவும் பரிபூரணமாகக் காட்டிய நடிகர், நடிகர் திலகம் என்பது துவக்கத்திலிருந்தே தெரியும். இருப்பினும், இந்தப் பாடல்களும் அந்தக் கட்டுரையும், நடிகர் திலகத்தின் வித்தியாசமான முயற்சியையே பெரிதும் எடுத்துக் கொள்கிறது.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
11th October 2012, 11:36 AM
#997
Senior Member
Senior Hubber

Originally Posted by
Vankv
You do that MR P, all the NT fans around the world will support you. Who do they think they are, these so called 'learned critics' anyway? I don't think they are so much 'learned' about real talent.
Dear Mr. Sasi,
Thanks. When I indicated as so called Learned Critics, I refer people who did in the past right from his debut and people who have been doing this even today. These critics and some of today's youth who have been mudslinging him for certained loud acting would not have seen such performances of NT. If they start seeing it, they they will be able to appreciate his greatness and genius. There has already been a shift in the so many people's minds including today's youth in realising his greatness and it will only grow in future, for sure!
In fact, as Mr. Murali Srinivas has time and agained pointed out, the very purpose of this thread itself is only reach the Thespian's performances and service today's youth, which all of us should continue to do, never minding either mudslinging or non-acknowledgement.
Regards,
R. Parthasarathy
-
11th October 2012, 11:38 AM
#998
Senior Member
Senior Hubber

Originally Posted by
Gopal,S.
Sarathy Sir,
Outstanding analysis on Nenjirukkum engalukku. One of my all time favourite boogey Boogey rhythm song. you are enhancing our adrenalin charge. You cant say you will continue as long as you can. You have to continue forever.
Dear Gopal Sir,
Thank you very much for your kind words of appreciation. I'll continue to contribute.
Regards,
R. Parthasarathy
-
12th October 2012, 03:21 PM
#999
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Avadi to America
I recently watched "baley bandiya".....the whole movie was entertaining.....three different roles for sivaji. His voice modulations for rowdy and scientist character are nice... especially the excessive usage of "I mean"...and Chennai Tamil. I do not remember sivaji speaking Chennai Tamil any other movies. M R radha has dual role.... As usual, his timings are excellent particularly when M R radha brings sivaji to his home first time. over all, it's a nice movie to watch....
A2A, trouble with this thread is, it's too gargantuan in emotion that small ernest post that get's no notice.
As mentioned many times before, this has easily be Kamal's challenge for creating MMKR, just as Navarathiri is a challenge for Dasa. In terms of comedy quotient, it is usually seen as lesser compared to films that came decades later, but I laugh my ass off still. Especially Marudthu and his walk towards camera schene. For the copycat watchers out there, MRR's scene with his double is picked up from Marx Bros Duck Soup movie (the mirror scene). Still, this is a classic, because I ton't want t be a half-assed-cynic-who looks at half empy bottle, because I was told told that my territory might suffer from water problem.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
-
12th October 2012, 03:25 PM
#1000
Senior Member
Diamond Hubber
One of the weirdest posts I have made while in conversation with a persistent **ckhead. Sorry.
" நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.
Bookmarks