Quote Originally Posted by groucho070 View Post
B. Gad, if aNNan was a judge or a quizz\ master, how much he would have knocked senses to our TV viewers or Radio listeners and made them, well, less than obvious iceberg victims.
GM on KBC
Participant: audience poll option
GM: ஆமாம் (claps and pointing to audience) இவனுங்க எல்லாம் business class-la MPA படிச்சிருக்கானுங்க. ஜக்குனு correct answer அமுத்திருவானுங்க. நடு பகல்ல வேலை வெட்டி இல்லாம ஸ்டூடியோவுக்குள்ள குத்த வச்சு உக்காந்திருக்க பரதேசிங்க, இவங்களுக்கு என்ன தெரியின். வேற சொல்றா.
Participant: phone a friend?
GM: (signature look) அவன் என்ன அறிவுக்கு டிப்போவா?
Participant: இல்லைங்க அவருக்கு நிறைய தெரியும்
GM: என்ன பண்றான்
Participant: IAS prepare பண்றார்
GM: ஓ! அவ்வளோ பெரிய ரேஞ்சா (calls him)
GM: அறிவழகன் சார்
AA: Yes
GM: கோடி ரூவா குடுக்குறாங்கன்னு சொல்லி சார், உங்க ஃப்ரெண்ட் இங்க வந்துருக்கார் சார்..
AA: okay okay
GM: ஆனா பாருங்க சார், இந்த நாய்க்கு முதல் கேள்விக்கே பதில் தெரில சார். இவன் கூட எல்லாம் நீங்க ஏன் சார் சேர்றீங்க. கலெக்டர் ஆனதும் கனெக்ஷன் கட் பண்ணிருங்க சார்
AA: (tries to ask the question)
GM: த சீ இர்றா நாயே, எவ்வளவு பெரிய சோஷியல் மேட்டர் பேசிட்டு இருக்கோம். சார் உங்களுக்கு பரிட்சை எப்போ சார்
AA: இப்பத்தான் கால்பரிட்சை முடிஞ்சுச்சு. இப்பொ லீவு
GM: காப்பரிட்சையா? உங்க வயசு? (sandhEga expression a la Chinna pasanga naanga to Vinayagar sendhil)
AA: முப்பத்திரண்டு
GM: நீங்க என்ன படிக்கிறீங்க? (baed smull expression)
AA: எட்டாவது
GM: எத்தனாவது தடவை
AA: நாலாவது
GM: படுவா இதுவே நாலெட்டு முப்பத்திரண்டு வருது...என்ன %$%க்கு நீ ஃபோனை எடுத்த (slams the phone down)
GM (to participant): எந்திர்ரா மேல...இவன் பேர் என்ன சொன்ன?
Part: அறிவழகன்
GM: இன்னிக்கே இந்தப் பேரே கெஜெட்ல மாத்த சொல்ற.
Part: அப்பொ கேள்வி?
GM: ஓ இன்னும் அந்த நெனப்பு வேறயா..ஒரே கேள்வியை எவ்வளவு நேரம் டா கேக்குறது...எந்திரிச்சு போடா
Part: (sobbing) ஐயா, என் பொண்டாட்டிக்கு கிட்னி ஆபரேசன்
GM: என்ன செண்டிமெண்டா? (thumps clenched fist on palm) இந்த கதையில்லாம் இங்க நடக்காது பாவா. ஆபீஸ் லீவ் போட்டு வந்து பந்தயம் விளையாடுறப் பன்னாடைக்கு ஒரு பொண்டாட்டி இருக்குறதே தப்பு, அவளுக்கு கிட்னி வேறயா. (unplugs the monitor and throws it at him) இன்னைக்கு கடை லீவு டா.