Page 178 of 305 FirstFirst ... 78128168176177178179180188228278 ... LastLast
Results 1,771 to 1,780 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1771
    Junior Hubber Rangarajan nambi's Avatar
    Join Date
    Apr 2008
    Posts
    24
    Post Thanks / Like
    Watched Thiruvilyadal in Vasant TV yesterday. Though the entire movie is a classic, to me the ultimate scene is PAttum nAne . 5 Nadigar Thilagams performing different musical shots and one after another anticipating his turn and doing a reaction is something incredible acting ! Watch the guy who plays the vocal chords when the flute guy is about to complete his part . This vocal guy gets prepared by testing his vocals quickly and even checks his throat condition for a second. This is just one example. While each one doing his part, the other 4 responding in unison and the next guy's spontaneous ( virtually ) reaction to the previous performer's acts! Is there any other shot taken in cinema like this ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #1772
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார், (புதிதாக திருவல்லிக்கேணி வாசுதேவன் அவர்கள் வந்திருப்பதால் அடையாளம் தெரிய நெய்வேலியைச் சேர்த்துக்கொண்டேன்)

    தங்களின் டூரிங் அனுபவப்பதிவு மிகப்பிரமாதம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். நானும் அந்த அனுபவத்தைப்பெற்றிருப்பதால், தங்கள் பதிவைப்படிக்கும்போது அப்படியே அந்த காலகட்டத்துக்குச் சென்று விட்டேன். பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்குச்சென்று ஒரு மாதம் தங்கியிருக்கும்போது மாலை நேர சுவாரஸ்யமே இந்த டூரிங் டாக்கீஸ்கள்தான்.

    திரையிடப்படும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம். பெற்றோர் சென்னையிலிருக்க நாங்கள் மட்டும் சென்றிருப்பதால் கண்டிப்பு தண்டிப்பு எதுவும் இல்லாத சுதந்திரம். ஒரு வருஷம் பிரிந்திருந்து ஒருமாதம் மட்டும் சந்திப்பதால், 'பசங்களுக்கு லீவு, பாவம் அனுபவிச்சிட்டுப்போகட்டும்' என்று தாத்தா, பாட்டி, அத்தைகள் அளிக்கும் சுதந்திரமே தனி அலாதி சுகம். டூரிங் டாக்கீஸ் என்றாலே இரண்டு காட்சிகள்தான். நடுவில் கீற்றுக்கொட்டகை போட்டு சுற்றிலும் வேலி. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஆபரேட்டர் அறை மட்டும் கல்லால் கட்டப்பட்டு மேலே அஸ்பெஸ்டாஸ் கூறை போடப்பட்டிருக்கும். (தீ விபத்து நேர்ந்தால் பாதிக்காமல் இருக்கவாம்) பக்கத்து நகரத்தில் ரிலீஸாகி ஓடி முடிந்து ஆறு மாதம், ஒரு வருஷம் கழித்துதான் டூரிங் டாக்கீஸுக்கு அந்த படம் வரும். அப்போது பார்க்காதவர்களும், பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க விரும்புவோரும் வருவார்கள், ஒவ்வொரு படமும் அதிக பட்சம் ஒரு வாரம்தான் ஓடும். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்கள் மட்டும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிக்கும். அதற்குக்காரணம், ஓடும் நாட்களில் எவ்வளவு பேர் வந்தாலும் டிக்கட் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். உள்ளே இடம் பிடித்துக்கொள்வது நம் சாதனை.

    கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

    கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

    கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

    எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

    வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.

    என்ன இருந்தாலும் அது ஒரு காலம்தான், அவை ஒரு சுகமான அனுபவங்கள்தான். விடுமுறை முடிந்து சென்னை பரபரப்புக்கு வந்த பின்னும் பல நாட்களுக்கு அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

    வாசு சார், மலரும் நினைவுகளைக் கிளறி விட்ட தங்கள் பதிவுக்கு நன்றி.

  4. #1773
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Karthik

    Though I was born & brought up in Triplicane Now I am not staying in that area. Due to Job complulsion I am away from
    Chennai from 1991 onwards by shifting my place from Virudhunagar, Bangalore & Hubli. Now I am in Chittoor which is
    nearar to Chennai. By seeing your post I come to know that you are in Sindhanur which is one of the dry place in
    North Karnataka and I use to travel a lot in that area for my official purpose. Your experience of doring talkies is a
    nice presentation.

    Regards

  5. #1774
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    அன்புள்ள நெய்வேலி வாசுதேவன் சார், (புதிதாக திருவல்லிக்கேணி வாசுதேவன் அவர்கள் வந்திருப்பதால் அடையாளம் தெரிய நெய்வேலியைச் சேர்த்துக்கொண்டேன்)

    தங்களின் டூரிங் அனுபவப்பதிவு மிகப்பிரமாதம். அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும். நானும் அந்த அனுபவத்தைப்பெற்றிருப்பதால், தங்கள் பதிவைப்படிக்கும்போது அப்படியே அந்த காலகட்டத்துக்குச் சென்று விட்டேன். பள்ளி நாட்களில் கோடைவிடுமுறைக்காக கிராமத்துக்கு உறவினர் வீட்டுக்குச்சென்று ஒரு மாதம் தங்கியிருக்கும்போது மாலை நேர சுவாரஸ்யமே இந்த டூரிங் டாக்கீஸ்கள்தான்.

    திரையிடப்படும் எல்லாப்படங்களையும் பார்த்து விடுவோம். பெற்றோர் சென்னையிலிருக்க நாங்கள் மட்டும் சென்றிருப்பதால் கண்டிப்பு தண்டிப்பு எதுவும் இல்லாத சுதந்திரம். ஒரு வருஷம் பிரிந்திருந்து ஒருமாதம் மட்டும் சந்திப்பதால், 'பசங்களுக்கு லீவு, பாவம் அனுபவிச்சிட்டுப்போகட்டும்' என்று தாத்தா, பாட்டி, அத்தைகள் அளிக்கும் சுதந்திரமே தனி அலாதி சுகம். டூரிங் டாக்கீஸ் என்றாலே இரண்டு காட்சிகள்தான். நடுவில் கீற்றுக்கொட்டகை போட்டு சுற்றிலும் வேலி. நல்ல காற்றோட்டமாக இருக்கும். ஆபரேட்டர் அறை மட்டும் கல்லால் கட்டப்பட்டு மேலே அஸ்பெஸ்டாஸ் கூறை போடப்பட்டிருக்கும். (தீ விபத்து நேர்ந்தால் பாதிக்காமல் இருக்கவாம்) பக்கத்து நகரத்தில் ரிலீஸாகி ஓடி முடிந்து ஆறு மாதம், ஒரு வருஷம் கழித்துதான் டூரிங் டாக்கீஸுக்கு அந்த படம் வரும். அப்போது பார்க்காதவர்களும், பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்க விரும்புவோரும் வருவார்கள், ஒவ்வொரு படமும் அதிக பட்சம் ஒரு வாரம்தான் ஓடும். ஓகோவென்று ஓடி சாதனை புரிந்த படங்கள் மட்டும் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிக்கும். அதற்குக்காரணம், ஓடும் நாட்களில் எவ்வளவு பேர் வந்தாலும் டிக்கட் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான். உள்ளே இடம் பிடித்துக்கொள்வது நம் சாதனை.

    கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

    கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

    கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

    எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

    வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.

    என்ன இருந்தாலும் அது ஒரு காலம்தான், அவை ஒரு சுகமான அனுபவங்கள்தான். விடுமுறை முடிந்து சென்னை பரபரப்புக்கு வந்த பின்னும் பல நாட்களுக்கு அந்த டூரிங் டாக்கீஸ் அனுபவங்கள் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

    வாசு சார், மலரும் நினைவுகளைக் கிளறி விட்ட தங்கள் பதிவுக்கு நன்றி.
    Reading the threads of touring talkies experiences is as thrilling as watching NT movies!!

  6. #1775
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    I tried to type in Tamil, but couldnt find fonts. Can somebody tell me how to use Tamil fonts here?
    Last edited by Vankv; 25th October 2012 at 02:39 PM.

  7. #1776
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    ¢ 'š á' ¢Ģ 𺢸 . ʸ ĸ ʸǢ Ч, â 측 Ǣ ȡ ̦ 츢. żǢ šȣ 츢 м, á ¸ɡ ոȡ. ͨ ʸ ĸ Ȩ 'ɢ' ž , ȡ, ͨ측𺢸 šŢ â츨츢. 측 , , ŨԼ, ۼ ¡ úâ.

    Ţ Ţ â : š á Ȣ Ţ, Ţ š측Ȣ ȢŢ â¡ , ¢ ȡ. ¢ â¡ Ţ š Ǣ Ǣ ȢŢ , ɡ š 츢 Ţ ! ȢŢ м š¢Ģ ͨ !

    â , šƒ 츢츢 Ÿ , Ţ . 츢 ¢ ʸ ĸ ú .
    Last edited by Vankv; 27th October 2012 at 10:51 AM.

  8. #1777
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    கொட்டகைக்கு முன் பெரிய வெளி. அதில் மூங்கில் தடுப்புகளால் அமைக்கப்பட்ட கியூ நிற்கும் இடம், அதன் முடிவில் ஒரு மரப்பெட்டி அதன் முன்பக்கம் டிக்கட் கொடுப்ப்தற்கான ஒரு சின்ன திறப்பு, பின்பக்கம் ஒரு கதவு. டிக்கட் கொடுப்பவர் கையில் டிக்கட்டோடு வந்து அந்தப்பெட்டிக்குள் புகுந்து க்தவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டதும், ஆங்காங்கே அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தவர்களெல்லாம் வந்து மூங்கில் தடுப்புக்குள் புகுந்துகொள்வார்கள். ஒவ்வொரு மரப்பெட்டிக்கும் வெளியே 40 வாட்ஸ் பல்பு எரிந்துகொண்டிருக்கும். தூரத்தில் இருந்து வரும்போது பல்பு எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தால் கவுண்ட்டரில் (?) ஆள் இருக்காரென்று அர்த்தம். விளக்கு அணைக்கப்பட்டிருந்தால் போய்விட்டாரென்று தெரிந்து திரும்பி விடுவார்கள். படம் கால்வாசி ஓடும்வரை டிக்கட் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். இப்படி மூன்று வகுப்புக்கும் மூன்று கியூ.

    கடைசி வகுப்பு தரை டிக்கட். கொட்டகையில் பாதி இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். நன்றாக ஆற்று மணல் அடித்து வைத்திருப்பார்கள். கொஞ்சநாளைக்கு ஒருதரம் அள்ளி விட்டு, வேறு மணல் கொட்டுவார்கள். உண்மையில் இதைத்தான் முதல் வகுப்பு என்று சொல்ல வேண்டும். எப்படி வேண்டுமானாலும் படம் பார்க்கலாம். நின்று கொண்டு, உட்கார்ந்து கொண்டு, காலை நீட்டி அமர்ந்துகொண்டு, கூட்டம் குறைந்த நேரங்களில் படுத்துக்கொண்டும் பார்க்கலாம். அடுத்து பெஞ்ச் டிக்கட். முன்பக்கம் உயரம் குறைவானதிலிருந்து போகப்போக உய்ரம் கூடிக்கொண்டே போகும் வகையில் சவுக்குக்ட்டைகளை தரையில் ஊன்றி, அதன்மீது பலகையை நீளமாக ஆணிபோட்டு அடித்து வைத்திருப்பார்கள். ஆட்டவோ அசைக்கவோ முடியாதபடி ஸ்ட்ராங்காக இருக்கும். பின்னால் சாய ஒன்றுமிருக்காது. ரொம்ப நேரம் அமர்ந்தால் முதுகு வலி வந்துவிடும்.

    கடைசியாக முதல் வகுப்பு. அது என்ன?. உயரமான ஒரு பெரிய சிமெண்ட் திண்ணை அவ்வளவுதான். திண்ணையின் கடைசியில் இரும்பாலான மடக்கு நாற்காலிகள் நிறைய சாத்தி வைத்திருப்பார்கள். முதல் வகுப்பு டிக்கட் வாங்கியவர்கள் போய் ஆளுக்கொன்றாக எடுத்து வந்து விரித்துப்போட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டியதுதான். எல்லா நாற்காலிகளுக்கும் கரும்பச்சை பெயிண்ட் அடித்து, அதில் வெள்ளையில் டூரிங் டாக்கீஸ் பெயர் எழுதியிருப்பார்கள். முதல் வகுப்புக்கு மட்டும் கொர கொர சத்ததுடன் இரண்டு ஃபேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். மற்ற வகுப்புக்களுக்கு ஃபேன் கிடையாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து உட்கார அனுமதி முதல் வகுப்பில் மட்டும்.

    எல்லா டூரிங் டாக்கீஸ் போலவே ஒரே ஒரு புரொஜெக்டர். அதனால் மூன்று இடைவேளை. தனியாக ஸ்டால் எல்லாம் கிடையாது. உள்ளே விற்றுக்கொண்டு வரும் பையன்களிடம்தான் தின்பண்டங்கள் வாங்க வேண்டும். என்னென்ன விற்பார்கள்?. வழக்கம்போல சுண்டல், முறுக்கு, வடை, இவைகளோடு சீஸனுக்குத்தகுந்தாற்போல பனங்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பொறி உருண்டை, கடலை மிட்டாய் என்று எல்லாம் விற்பனைக்கு வரும்.

    வேலிக்குள்ளே நாற்புறமும் திறந்த கொட்டகையாதலால், உள்ளே படம் பார்க்கும் அளவு கூட்டம் வெளியே வசனம் மற்றும் பாட்டுக்கேட்பதற்கு நிற்கும். அப்போதெல்லாம் சினிமாவை ரசிக்க கொட்டகையை விட்டால் வேறு ஏது போக்கிடம்?. அவர்களில் பெரும்பாலோர் ஏற்கெனவே அந்தப்படத்தைப் பார்த்தவர்களாக இருப்பார்கள். டூரிங் டாக்கீஸில் என்ன படம் ஓடுகிறதோ அந்தவாரம் முழுக்க தெருமுனை, குளக்கரை, கடைத்தெரு, வீடுகளில் பெண்களுக்குள் என எங்கும் அத்திரைப்படம் பற்றிய விவாதமாகவே இருக்கும்.
    டியர் வாசுதேவன் சார்

    தங்களின் டூரிங் டாக்கீஸ் அனுபவம் அருமை. நன்றி.

    டியர் கார்த்திக் சார்,

    தங்களுடைய அனுபவம், நான் சிறுவயதில் என்னுடைய கிராமத்தில் அனுபவித்ததை அப்ப்டியே பிரதிபலித்தைப் போல இருந்தது. நன்றி.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #1778
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra,

    Pls give your contact number for further discussion. My no:09581555808. During my school days at Kellet actor Rajesh previously he was
    a teacher in that school taking classes for 7th. At that time he resembles our NT in younger days and in his class he used to call
    me and asks us to sing some song. At that time GOURAVAM song of Pallooti was popular and sang the song and got his appreciation.
    Mr Rajesh is also a fan of our NT.

    Regards

  10. #1779
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Vankv View Post
    I tried to type in Tamil, but couldnt find fonts. Can somebody tell me how to use Tamil fonts here?
    Guide in our Hub itself

    http://www.mayyam.com/talk/showthrea...-post-in-TAMIL
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1780
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள முரளி சீனிவாஸ் சார்,

    தாங்கள் 'நீலவானம்' பற்றியும் 'ஆண்டவன் கட்டளை' பற்றியும் எழுதும்போதெல்லாம் என் மனம் அதன்பால் ஈர்க்க்ப்பட்டு விடும். நீலவானம் ஈர்க்கப்பட மூன்று காரணங்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அண்ணன், அண்ணி மற்றும் மன்னன். (மன்னன் தனிக்கட்சி துவங்கி முதல் பெயராக இடம்பெற்ற அண்ணன் படம்).

    கை கொடுத்த தெய்வம், எங்கிருந்தோ வந்தாள் போல அண்ணன் தன் நாயகிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று 'சாதித்துக்காட்டு' என்று அண்ணிக்கும் இடம் கொடுத்த படம். ஒதுங்கி நின்றாலும் நம் மனம் நிறைந்த பெர்ஃபாமன்ஸத்தர அவர் தவறியதில்லை. மற்றவர்கள் போல 'படம் முழுக்க நானே, நீ வெறும் கவர்ச்சிப்பாவையாக வந்து என்னுடன் ஆடிவிட்டுப்போ' என்று சொன்னவரில்லையே நம் அண்ணன். அவருடன் வந்து சேர்ந்தபின் எத்தனை நார்கள் மனம் பெற்றன..!!. அவர்கள் இன்றளவும் பேட்டிகளில் சொல்லிக்காண்பிக்கிறார்களே.

    நீலவானம் பற்றி நீங்கள் முந்தைய பதிவுகளில் அணு அணுவாக ரசித்து செதுக்கியவற்றைப் படித்துப் படித்து மகிழ்ந்தவன் நான். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்பப்பா. என்ன ஒரு அழகு, என்ன ஒரு அற்புதம். உங்களைப்போலவே சாரதாவும் கூட, அந்த விழாவொன்றில் நகை காணாமல் போகும் காட்சியில் இவருடைய கோட்டைக்கழற்றி அவமானப்படுத்தும் காட்சியை சொல்லி சொல்லி ரசிப்பார். 'ஓ லிட்டில் ஃப்ளவர்' பாடலின் போது 'உனக்கும் எனக்கும் உருவப்பொருத்தமே' என்று ராஜஸ்ரீயைப்பார்த்து குண்டாக தன் கைகளை விரித்துக்காட்டுவாரே. எவர் செய்வார்?.

    இன்னொரு விஷயம். முன்பு நீங்கள் 'பாடல்கள் பலவிதம்' பகுதியில் ஆங்கிலத்தில் எழுதிய 'மலர்ந்தும் மலராத' பாடலின் மெகா பதிவைத் தமிழில் மொழிபெயர்த்து உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று எழுதுகிறேன், எழுதுகிறேன் அது பாட்டுக்கு வளர்ந்துகொண்டே போகிறது. எவ்வளவு விஷயங்களை அதற்குள் அடக்கியிருக்கிறீர்கள். அப்பப்பா. (இப்போத்தான் சித்ரா தியேட்டரில் 'வணங்காமுடி' மெகா கடவுட்டுக்கு தீயணைப்பு எஞ்சின் பாதுகாப்பு தரப்பட்ட இடம் வரை மொழிபெய்ர்த்திருக்கிறேன். அப்படியானால் இன்னும் எவ்வளவு இருக்குமென்று பார்த்துக்கொள்ளுங்கள்).

    தங்களின் 'நீலவானம்' பதிவுகளுக்கு எவ்வளவு ந்ன்றி சொன்னாலும் தகும். அந்த வருடம் (1965) தீபாவளிக்குக்கூட அண்ணனின் படம் வரவில்லையே, அப்படியிருந்தும் இப்படம் ஏன் மக்களிடம் போதுமான அளவில் சென்றடையவில்லை? என்பதுதான் புரியாத புதிர்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •