-
25th October 2012, 08:06 PM
#1781
Senior Member
Veteran Hubber
அன்புள்ள (திருவல்லிக்கேணி) வாசுதேவன் சார், தங்கள் வரவு நல்வரவாகுக.
வந்ததுமே நான் பணிபுரியும் இடம் பற்றிய விவரத்தை தங்கள் பதிவில் இடம்பெறச்செய்து விட்டீர்கள். நன்றி. நீங்கள் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப்பள்ளியில் படித்திருப்பதால், அங்கு தமிழாசிரியராகப்பணியாற்றிய புலவர் அகமது பஷீர் அவர்களைத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். என் தந்தையின் மிகச்சிறந்த நண்பர். நான் படித்த மண்ணடி முத்தியால்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராக வந்திருந்தார். அவரது பேச்சும் இலக்கிய அறிவும் என்னை வியப்பிலாழ்த்தியது. பணி ஓய்வு பெற்றபின் ஆழ்வார் திருநகரியில் செட்டில் ஆகிவிட்டார்.
(இதையெல்லாம் தனி மடலில் பேசவேண்டியதுதானே என்று நினைக்கும் நண்பர்களுக்கு விளக்கம். என் தனிமடல் பகுதி திறக்கப்பட முடிவதில்லை அதனால்தான் இங்கு. சிரமத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள்).
-
25th October 2012 08:06 PM
# ADS
Circuit advertisement
-
26th October 2012, 12:37 AM
#1782
கார்த்திக்
நீலவானம் பற்றிய எனது பதிவிற்கு தாங்கள் அளித்துள்ள பாராட்டிற்கு நன்றி. உங்களின் பதிவு வரும் என்பது எனக்கு தெரியும். காரணம் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று அல்லவா இது? நான் முன்னரே சொன்ன மாதிரி இந்த நீல வானம் மற்றும் ஆண்டவன் கட்டளை படங்களை எத்துனை முறை சிலாகித்து எழுதினாலும் அலுக்காது. அது மட்டுமல்ல நாம் பலமுறை எழுதியது போல இந்தப் படங்களின் பல நிறைவான அம்சங்களை குறிப்பிட்டு இவை, அந்த 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொட முடியாமல் போனதின் வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம்.
நீலவானத்தை பொறுத்தவரை அது ஒரு சில பிரச்சனைகளை சந்தித்தது. திருவிளையாடல் என்ற இதிகாச காவியம் தமிழகமெங்கும் சூறாவளியாய் சுழன்றடித்த நேரம் வெளியான இந்த நீலவானம், நாயகிக்கு முக்கியத்துவமும் சோகம் சற்றே அதிகமான அளவில் இருக்கிறது என்ற பெயரைப் பெற்றது மட்டுமின்றி கதாபாத்திரங்கள் வெகு குறைவு என்பதால் ஒரு சிறு ஆயாசம் தோன்றுகிறது என்ற ஒரு கருத்தும் நிலவியது.அதுவும் தவிர நீலவானம் வெளியாகி 50 நாட்களை முழுமையாக நிறைவு செய்யும் முன்னரே இயல்பான நடிப்பில் நடிகர் திலகம் காவியம் படைத்த மோட்டார் சுந்தரம் பிள்ளையும் [ஜனவரி 26,1966] வெளியாகி விட இடையில் இந்த படம் சிக்குண்டு தன் 100 நாள் வெற்றி வாய்ப்பை இழந்தது.
எனக்கு எப்போதும் ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும். எந்த சிவாஜி ரசிகரை கேட்டாலும் நீலவானம் படத்தை பற்றி ஆஹா ஓஹோ என்றுதான் பேசுவார்கள். ஆனால் ஏன் படம் தரத்திற்கேற்ற வெற்றி அடையவில்லை என்று கேட்டால் சரியான பதில் வராது. ஆனால் தமிழ் சினிமா சரித்திரம் காட்டும் உண்மை என்னவென்றால் மறு வெளியீடுகளில் சக்கை போடு போட்டது நீலவானம என்பதுதான்.எப்போது திரையிடப்பட்டாலும் ஹவுஸ்ஃபுல் ஆகவே ஓடியது. தாய்மார்களின் கூட்டம் கட்டுகடங்காமல் வரும் காட்சிகளையும் இந்த அரங்குகள் தரிசித்தது. மறு வெளியீடுகளில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையிட்ட அரங்க உரிமையாளர்களும் மிகுந்த லாபம் அடைந்தனர்.
காலம் நேரம் ஒத்து வந்தால் திரையரங்குகளில் நீல வானத்தை பார்க்கும் நாள் மீண்டும் வரலாம்.
அன்புடன்.
அது என்ன போட்டிப் போட்டுக் கொண்டு நீங்களும் வாசு அவர்களும் டூரிங் டாக்கிஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? பிறந்து வளர்ந்து வாழ்ந்தது எல்லாம் நான்மாடக்கூடல் நகரம் என்பதால் இவ்வகை அரங்குகளை பார்த்ததில்லை. அவற்றில் படம் பார்த்த அனுபவமும் எனக்கு இல்லை. ஆனால் உங்கள் நினைவுகள் சுவை.
-
26th October 2012, 12:38 AM
#1783

26th October 2012, 12:39 AM
#1784
இந்த திரியை பல காலமாக வாசித்துக் கொண்டு மட்டும் இருந்து இன்று உறுப்பினராகி தன் வாழ்நாளில் நேர்ந்த மகிழ்ச்சியான நடிகர் திலக தருணங்களை நம்முடனே பகிர்ந்து கொள்ள வருகை தந்திருக்கும் எஸ்.வாசுதேவன் அவர்களே, வருக! உங்கள் வரவு திரிக்கு நல்வரவு ஆகுக.
அன்புடன்
-
26th October 2012, 11:48 AM
#1785
Junior Member
Seasoned Hubber
My sincere thanks to Mr Karthik,Mr Murali Srinivas & Mr Pammalar for welcoming in this prestigious thread of NT.
I might have seen some of my friends during the screening of KARNAN at Shanthi on March 18th. Whatever
possible I will try to post about NT.
Regards
-
26th October 2012, 01:35 PM
#1786
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகத்தின் கொடை குணம் பற்றி ஒரு வலைத்தளத்தில் படித்தது.
என் டயரி
அனுபவங்கள்... ரசனைகள்...
வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.
“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.
“அதென்ன செய்திங்க?” என்றேன்.
“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.
தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.
உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.
சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.
“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.
நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
வாழ்க வள்ளல் சிவாஜி!
*****
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
26th October 2012, 02:15 PM
#1787
Dear Radha,
This charitable mind of our NT is there from the beginning of his career itself and many of these kind of news were never publicized as well; that shows the greatness of NT.
Even in Mumbai, an Eye Hospital was constructed ( By Bharathi Mandram) from the collections of his Dramas especially done by him for this cause.
As once Rajinikanth mentioned, NT is first a Great Human being and we love him for that greatness indeed!!!
ANM
-
26th October 2012, 05:24 PM
#1788
Senior Member
Seasoned Hubber
Dear Radhakrishnan and anm
This Jaffna news has been covered in our nadigarthilagam website for quite a long time courtesy the blog by Dharmakula singam and the image was posted in that blog. The details of the blog is given in the image below which is self explanatory:
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
26th October 2012, 11:10 PM
#1789
Senior Member
Seasoned Hubber
SHUTTLE ACTING ... இப்படி ஒர் சொற்தொடர் சமீப காலமாக மிகவும் திரை விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பயன் படுத்தப் பட்டு வருகிறது. இன்றைய இலக்கணத்தில் வெறுமனே சுவற்றை வெறித்துப் பார்த்து அதுவும் திரைக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றால் கூட shuttle acting என்று சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்கான விளக்கம் என்ன... அந்த நடிப்பிற்கு உதாரணம் என்ன .... இதற்கெல்லாம் உண்மையான விளக்கம் தேவையென்றால் நடிப்பிலக்கணத்தைப் படிக்க வேண்டும் .. நமக்கு அதற்காகவே படைத்த புத்தகம் இருக்கிறதே .... அந்தப் புத்தகத்தின் பெயர் சிவாஜி கணேசன் ... ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வார்த்தையிலும் நடிப்பிற்கான விளக்கத்தை அளிக்கும் பொக்கிஷம் அவர் படங்களும் அவருடைய நடிப்பும்.
அப்படிப்பட்ட Shuttle Performance நடிப்பிற்கான மிகச் சிறந்த உதாரணம் எல்லாம் உனக்காக திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி. என்னுடைய பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் வரக்கூடிய படம். அதற்கு இந்த காட்சி ஒரு சாட்சி. இரு திலகங்களும் விழிகளிலேயே மொழி பேசும் உன்னதக் காட்சி. குறிப்பாக திரையில் ஓடி ஆடி விளையாடும் தன்னுடைய காட்சியைப் பார்க்கும் சாவித்திரி, உணர்ச்சி வசப்பட்டு தானும் அந்தப் பாடலை முணுமுணுப்பதாகட்டும், அவரை திரையிலும் நேரிலும் மாறி மாறிப் பார்த்து கட்டுப் படுத்த முடியாமல் நடிகர் திலகம் தன் உணர்ச்சியினை வெளிப்படுத்தும் காட்சியாகட்டும், இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் - மன்னிக்கவும் - உலக சினிமாவின் உச்சங்கள் என்றே சொல்லலாம் - என்பதை நிரூபிக்கிறார்கள். முதலிரவில் கணவன் மனைவி இருவரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு அரும்புவதை சித்தரிக்கும் இக்காட்சி, என்னை மிகவும் கவர்ந்த காட்சியாகும்.
திரையில் ஓடும் பாடலைத் தானும் உணர்ச்சி வசப்பட்டு முணுமுணுக்கும் காட்சியில் சாவித்திரியின் முக பாவத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
இவ்வளவு சொல்கிறோமே பாடலைப் பற்றி சொல்ல வேண்டாமா..
சுசீலா என்கிற உன்னதப் பாடகியின் குரலில் உள்ளது இனிமை மட்டுமல்ல உள்ளத்தை பிழிந்தெடுக்கும் சோகமும் கூட ... நம்மை மெய்மறக்கச் செய்யும் பாடல் ...
இசை கே.வி.மகாதேவன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th October 2012, 09:13 AM
#1790
Junior Member
Devoted Hubber

Originally Posted by
J.Radhakrishnan
நடிகர்திலகத்தின் கொடை குணம் பற்றி ஒரு வலைத்தளத்தில் படித்தது.
என் டயரி
அனுபவங்கள்... ரசனைகள்...
வாழ்க வள்ளல் சிவாஜி!
தருமகுலசிங்கம் என்று ஒருவர் என்னை இன்று வந்து சந்தித்தார். கொழும்புவைச் சேர்ந்தவர். வயது 60 இருக்கும். யாழ்ப்பாணத் தமிழில் பேசினார்.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் மேல் தீவிர அபிமானமுள்ளவர் என்பது அவரின் பேச்சிலிருந்து தெரிந்தது. அவர் சிவாஜி பற்றி வெளியாகும் எல்லாப் புத்தகங்களையும் உடனுக்குடன் வாங்கிப் படித்துவிடுவாராம். அப்படி விகடன் பிரசுரத்தில் வெளியிட்ட புத்தகங்களையும் வாங்கிப் படித்திருப்பதாகச் சொன்னார்.
“சிவாஜி பற்றி வெளியான எல்லாப் புத்தகங்களிலும் ஏதேதோ செய்திகள் இருக்கு. ஆனால், நாங்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தியை மட்டும் எந்தப் புத்தகத்திலும் பார்க்க முடியவில்லை” என்றார்.
“அதென்ன செய்திங்க?” என்றேன்.
“சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார்.
தொடர்ந்து, “விகடன் பொக்கிஷம் பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் லட்ச ரூபாய் நிதி தந்தது பற்றியும், அதற்கு விகடனில் அந்தக் காலத்தில் தலையங்கம் தீட்டிப் பாராட்டியது பற்றியும் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன். ஆனால் அதற்கு முன்பே, அதாவது 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார்” என்றார் தருமகுலசிங்கம்.
உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அன்றைக்கு வெளியிடப்பட்ட நாடக விளம்பர நோட்டீஸில் இதுவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
‘30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸை திரு.தருமகுலசிங்கம் காட்டியபோது எனக்குச் சிலிர்ப்பாக இருந்தது.
சிவாஜியை யாழ் நகருக்கு வரவழைத்து கௌரவித்த அந்த பி.எம்.சங்கரப்பிள்ளையின் மகன்தான் இன்று என்னை வந்து சந்தித்த தருமகுலசிங்கம். அன்றைக்கு சிவாஜி, நாடகம் முடிந்ததும் தங்கள் வீட்டுக்கு வந்திருந்து தங்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டு மகிழ்ந்ததை நினைவுகூர்ந்தார்.
சிவாஜிக்கு அளித்த வரவேற்புரையில் பேசும்போது, “திரு.கணேசனை ஒரு நடிகர் என்ற அளவில் மட்டும்தான் நாம் அறிந்திருந்தோம். ஆனால், அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; சிறந்த அறிவாளி. தமிழ் மக்களுக்காகப் பணி புரிவதில் மிகுந்த பற்றுடையவர் என்பதையும் இப்போது தெரிந்து கொண்டோம். இவர் தமது நடிப்பாற்றலால் வாழ்வில் மேன்மேலும் உயர்நிலையை அடைவார் என்பது திண்ணம்” என்று சிவாஜியின் நடிப்புத் திறனையும் சேவை மனப்பான்மையையும் மிகவும் பாராட்டிப் பேசியுள்ளார் திரு.சங்கரப்பிள்ளை.
“இங்கே யாழ்ப்பாணம் மக்களாகிய நீங்கள் நாடகக் கலையை இந்த அளவுக்கு ஆர்வத்துடன் ரசித்து வரவேற்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். தமிழகத்தில் உள்ள ஏனைய நடிக நண்பர்களிடமும் உங்களின் ஆர்வத்தை எடுத்துக் கூறிப் பெருமைப்படுவேன்” என்று தமது ஏற்புரையில் கூறி நெகிழ்ந்தார் சிவாஜி. இது அன்றைக்கு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்திக் குறிப்பாக வெளியாகியிருக்கிறது.
நானும் ஒரு சிவாஜி ரசிகன் என்பதில் பெருமைப்படுகிறேன்.
வாழ்க வள்ளல் சிவாஜி!
*****
When I read this news, I didn't know how to react! I was overwhelmed with emotion that NT actually visited my birthplace in 1953, of course I wasn't born until ten years later. But what makes me feeling thrilled is, I was actually born in Moolai hostpital to which Sivaji Ganesan paid donation to!!. Moolai is a small town, about 15 -17 miles from Jaffna town and also about 6/7 miles from my birthplace!. Me and my brothers and sister were all born in that hospital, from 1957 to 1967! and my mother was a member of Moolai co-operative hospital and she paid discounted charges when seeing doctors!. My mother is no more, otherwise I would ask her about NT visit to that hospital. Actually my mother was a teacher at a school (Victoria College, where I also studied),at that time of NT's visit in 1953 which is about 2 miles from Moolai hospital. My mother wasn't married then and was still a fan of NT. I have lots of friends from Moolai, studied with me at Victoria college and if I can still contact them, I will ask if their parents or uncles know about this and they have any photographs.
Last edited by Vankv; 27th October 2012 at 09:21 AM.
Bookmarks