-
2nd November 2012, 11:43 PM
#11
சாரதி,
நடிகர் திலகத்தின் நடிப்பில் nuances எனப்படும் நுண்ணிய வெளிப்படுத்தல்களை காட்சியமைப்பின் உதவியோடு அழகாய் பதிவு செய்திருக்கிறீர்கள். ஒரு நாள் அல்லது ஒரு மாதம் ஏன் பல வருடங்கள் இடைவெளி நேர்ந்தாலும் அவரால் (மட்டும்) அதே உணர்வை முகத்திலும் சரி வசனம் பேசுவதிலும் கொண்டு வர முடியும். அது அவருக்கு கை வந்த கலை.
இதை படிக்கும் போது ஒரு விஷயம் நினைவிற்கு வந்தது [அதைதான் அலை பேசியில் பேசும் போது வேலை பளு இருப்பதால் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னேன்]. ஒரு சந்தர்ப்பத்தில் இயக்குனர் நடிகர் மனோ பாலாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் ஒரு செய்தியை பகிர்ந்துக் கொண்டார்
முதல் மரியாதை படப்பிடிப்பு இரண்டு மூன்று கட்டமாக மைசூர் சுற்றுவட்டாரங்களில் நடைப்பெற்றது. முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் திலகம் ஒரு காட்சியில் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் ஒரு மம்மட்டி வைத்து தரையில் ஏதோ தோண்டி வசனம் பேசுவதாக காட்சி [படத்தில் இடம் பெற்றதா என்பது நினைவில்லை]. இயக்குனர் பாரதி ராஜாவும் சரி ஒளிப்பதிவாளார் கண்ணனும் சரி ஓகே சொல்லி விட்டனர். சென்னைக்கு திரும்பி வந்து பிலிம்-ஐ கழுவி பார்த்த போதுதான் அந்த காட்சி பிலிம்-ல் சரியாக பதிவாகாமல் Out of Focus ஆக இருந்திருக்கிறது. காட்சி எடுத்த பின் நடிகர் திலகம் இரண்டு முறை சரியாக வந்திருக்கிறதா என்று கேட்டாராம். சரி அடுத்த கட்ட படப்பிடிப்பில் adjust செய்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டனராம்
இரண்டாம் கட்டம் முடிந்து இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் தறுவாயில் இந்தக் காட்சியின் ஞாபகம் வந்தவுடன் இதை எப்படி எடுப்பது அல்லது இதை எப்படி நடிகர் திலகத்திடம் சொல்வது என்று பெரிதும் தயங்கியிருக்கிறார்கள். காரணம் அந்த குறிப்பிட்ட காட்சியின் படபிடிப்பு முடிந்து அப்போதே ஒரு ஆறு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது பிறகு வசனம் இல்லாமல் காட்சியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். வசனத்தை voice over-ஆக செய்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
நடிகர் திலகத்திடம் சென்று இந்த costume பிளஸ் முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவது போல் போஸ் கொடுங்கள். Promotional still--ற்காக என்று சொல்லி விட்டார்கள் நடிகர் திலகமும் சரி என்று சொல்லி விட்டார். காமிராவை silent ஆக ஸ்டார்ட் பண்ணி விடுவதாக் பிளான்.
முண்டாசு கட்டி கையில் மம்மட்டி வைத்து நிலத்தை தோண்டுவதற்கு முன் நடிகர் திலகம் நிமிர்ந்து " ஏம்பா பாரதி, நான் சும்மா நிலத்தை தோண்டற மாதிரி போஸ் கொடுத்தா போதுமா இல்லை அன்னைக்கு பேசின அந்த வசனத்தையும் பேசணுமா?" என்று கேட்டாராம். அப்படியே பூமி பிளந்து தன்னை விழுங்கி விடாதா என்று ஒரு கணம் பாரதி ராஜாவிற்கு தோன்றி வெட்கி தலை குனிந்தாராம். அதன் பிறகு சிறிது நாட்களுக்கு நடிகர் திலகத்தின் முகத்தை பார்க்கவே அவருக்கு வெட்கமாக இருந்ததாம்.
இங்கே இதை குறிப்பிட காரணம் நீங்கள் சுட்டிக் காட்டிய அந்த ஒரு நுணுக்கமான நகாஸ் வேலைகள் மற்றும் நினைவாற்றல் எந்தக் காலத்திலும் அவரிடமிருந்து மறையவுமில்லை, குறையவுமில்லை.
மீண்டும் நன்றி சாரதி.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 2nd November 2012 at 11:50 PM.
-
2nd November 2012 11:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks