-
4th November 2012, 07:24 PM
#1
Senior Member
Diamond Hubber
வாகை சூட வரும் 'வசந்தமாளிகை'
வசந்த மாளிகையின் மறு வருகை அறிவிப்பு நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த துவங்கியிருக்கிறது. இன்று தினத்தந்தியில் வந்த 'வசந்த மாளிகை' விளம்பரம்.
மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குத் தயாராவோம்.
'தினத்தந்தி' (4-11-2012) நாளிதழில் வந்துள்ள 'வசந்த மாளிகை'விளம்பரம்.
அன்புடன்,
வாசுதேவன்.
-
4th November 2012 07:24 PM
# ADS
Circuit advertisement
-
4th November 2012, 08:01 PM
#2
Senior Member
Diamond Hubber
'கர்ணன்' மாபெரும் வெற்றிக்குப் பின் 'திருவிளையாடல்' வெற்றி சிலர் திருவிளையாடல்களால் உள்ளங்கைகளால் சூரியனை மறைப்பது போன்று தற்சமயம் மறைக்கப்பட்டுள்ளது. மறுபடியும் திருவிளையாடல் திக்கெட்டும் வெற்றிப் புகழ் நாட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கும் போதே 'வசந்த மாளிகை' வருகிறது என்ற இன்றைய 'தினத்தந்தி' விளம்பரம் நம்மிடையே மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அநேகமாக இம்மாத இறுதில் இக்காவியம் வெளியாகலாம் என்று தெரிகிறது. ராகவேந்திரன் சார், பம்மலார் சார், முரளி சார், மற்றும் இதர நண்பர்கள் பட வெளியீடு பற்றியும், மற்ற விவரங்களைப் பற்றியும் நிச்சயம் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
-
4th November 2012, 08:03 PM
#3
Senior Member
Diamond Hubber
'vasantha maligai' censor certificate
-
4th November 2012, 08:07 PM
#4
Senior Member
Diamond Hubber
-
5th November 2012, 04:17 AM
#5
Junior Member
Platinum Hubber
வாசு சார்
வாகை சூடும் .......நம்பிக்கையின் தோரணை
வந்த மாளிகை ----சூடும் வெற்றி மாலை
-
5th November 2012, 04:20 AM
#6
Junior Member
Platinum Hubber
நடிகர் திலகத்தின் "வசந்த மாளிகை" ஒரு காவியம்!
தெய்வமாக மதிக்கவேண்டிய அம்மா ஒரு தாய்ப்பாசம் இல்லாத ஒரு ஜமீந்தாரிணி, கொலைகாரி என்று அறிந்து குடிக்க ஆரம்பித்து குடிகாரனாக வளர்ந்தவிட்ட நல்ல இதயம்கொண்ட இளைய ஜமீந்தார், ஆனந்த் என்கிற சின்னதுரை தான் சிவாஜி. இவரை ஏன் நடிகர் திலகம் னு சொல்றாங்க னு யாருக்கும் இன்னும் சந்தேகம் இருந்தால் இந்த டி வி டி பார்க்கவும்!
குடிகாரராக இருக்கும் இளைய ஜமீன் இடம் பர்சனல் செக்ரட்டரியாக வேலைக்கு சேரும் அழகான கவர்ச்சியான, நேர்மையான அகம்பாவம் பிடித்த, சுயமரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத லதாவாக நடித்துள்ளார் வாணிஸ்ரீ.
லதா, குடிகாரராக, பெண்பொறுக்கியாக இருக்கும் சின்னதுரை ஆனந்தை நற்பாதைக்கு கொண்டு வருகிறார், ஆனந்த் தன் மனதை லதாவின் அழகுக்கும், அன்புக்கும் பறிகொடுக்கிறார். தன்னை நல் வழிப்படுத்திய லதாவுக்கு தன் இதயத்தை அளிக்கிறார். லதா ஆசையுடன் அந்த அன்பு இதயத்தை பெற்றுக் கொள்கிறார்.
ஜமீந்தார் ஏழைப்பெண்ணை மணப்பதா? அவ்வளவு சீக்கிரம் ஜமீன் விட்டுவிடுமா? இதுதான் படம்! தெலுங்கு படத்தை ரி-மேக் செய்த படம் இது. தமிழில் சுமூகமாக முடிகிறது.
இந்தப்படத்தில் சிவாஜி பேசும் சில வசனங்கள்!
* தன்னிடம் புதிதாக வேலைக்கு வரும் பெண்ணிடம்:
இதுதான் அழகாபுரி ஜமீன். இங்கே இருக்கிற ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எங்களுக்குத்தான் சொந்தம்னு எல்லோரும் சொல்லிக்கிறாங்க ஆனால் கடைசியில் மனுஷனுக்கு தேவை ஆறடிமண்!
* தன்னைப்பெற்ற தாய்ப்பாசமில்லா அம்மாவிடம்:
பாசமா? அது ஏதும்மா இந்த வீட்டிலே?
*லதாவை கற்பழிக்க முயலும் கெட்டவனிடம்:
இடியட்! சரினா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது. அதுதான் நம்ம ப்ரின்சிப்பிள்.
* தன்னை தன் சுற்றத்தார் அவமானப்படுத்தும்போது, லதாவிடம்:
குடிகாரன்கூட வருத்தப்படுமளவுக்கு பேசுவதுதான் இவர்களுக்கு தெரிந்த மரியாதை.
* நன்றியுள்ள வேலைக்காரனிடம்:
பொறந்தநாளா? எனக்கா? நான் பிறந்தது எப்போ என்று என்னைப்பெத்த தாய்க்கும் தெரியாது, என்னை படச்ச ஆண்டவனுக்கும் தெரியாது, ஏன் எனக்கே தெரியாது. ஆனால் என் பொறந்த நாளை நீ மட்டும் ஞாபகம் வச்சிருக்கியே? இதை பாசம்னு சொல்வதா? இல்லை விஸ்வாசம்னு சொல்வதா? இதுதான் தூய்மையான அன்பு! அதான் அன்பை கடவுளுக்கு சமமா சொல்றாங்க இல்லையா? நான் யாருக்காக் பிறந்தேனோ, தெரியலை? ஆனால் நீ பிறந்தது மட்டும் எனக்காகத்தான்!
பாடல்கள்:
கண்ணதாசன் பாடல்வரிகள் எழுத கே வி மஹாதேவன் இசையமைக்க டி எம் சவுந்தர்ராஜன், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடியவை.
* மானிட ஜாதியே * ஏன் ஏன் ஏன் * குடிமகனே * கலைமகள் கைப்பொருளே * மயக்கமென்ன
* இரண்டு மனம் வேண்டும் * யாருக்காக! எல்லாமே நல்ல பாடல்கள்!
இந்தப்படத்தில் காதல் கட்டமா இருக்கட்டும், வசனமா இருக்கட்டும், ஸ்டயிலாக இருக்கட்டும், சிவாஜி பின்னி இருப்பார்.
வாணிஸ்ரீ இவருக்கு ஈடுகொடுத்து நடித்து இருப்பார். கவர்ச்சியிலும், காதலிலும், தன் சுயமரியாதயை காப்பாற்றும் சீன்களிலும் கிளப்பி இருப்பார் வாணிஸ்ரீ.
பாலாஜி, மேஜர் சுந்தர் ராஜன், ஸ்ரீகாந்த், நாகேஷ், வி கே ராமசாமி, ரமாபிரபா, சுகுமாரி, பேபி ஸ்ரீதேவி எல்லோரும் நடித்துள்ளார்கள்
வசந்த மாளிகை, 1972 வில் வந்த ஒரு காவியம்தான்!
-
5th November 2012, 05:18 AM
#7
Senior Member
Diamond Hubber
தமிழில திரியின் பெயரை சூட்டியதற்கு நன்றி. பார்க்கவே இதமாக இருக்கிறது.
-
5th November 2012, 05:37 AM
#8
Senior Member
Diamond Hubber
கே.வி.மகாதேவனின் இசை ஆக்கத்தில் என்றுமே பிரமிப்பைத் தரும் பாடல்களில் ஒன்று "மயக்கம் என்ன". டி.எம்.எஸ், சுசிலா கூட்டணியில் சுவையான மெலடி. உறவினர் திருமண நிகழ்ச்சியில் ஒரு இசைக்கச்சேரி. எழுபது வயது பெண்மணி ஒருவர் இந்தப் பாடலை பாடும்படி ஒரு துண்டுச்சீட்டு கொடுத்திருந்தார். பாடிய ஐந்து நிமிடங்களும் அவரின் முகம் அடைந்த பரவச நிலை இன்னும் கண்களிலேயே இருக்கிறது.
இசை, குரல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி-வாணிஸ்ரீ எல்லாமே பொருத்தமாக.
-
5th November 2012, 08:06 AM
#9
Junior Member
Senior Hubber
Originally Posted by
venkkiram
கே.வி.மகாதேவனின் இசை ஆக்கத்தில் என்றுமே பிரமிப்பைத் தரும் பாடல்களில் ஒன்று "மயக்கம் என்ன". டி.எம்.எஸ், சுசிலா கூட்டணியில் சுவையான மெலடி. உறவினர் திருமண நிகழ்ச்சியில் ஒரு இசைக்கச்சேரி. எழுபது வயது பெண்மணி ஒருவர் இந்தப் பாடலை பாடும்படி ஒரு துண்டுச்சீட்டு கொடுத்திருந்தார். பாடிய ஐந்து நிமிடங்களும் அவரின் முகம் அடைந்த பரவச நிலை இன்னும் கண்களிலேயே இருக்கிறது.
இசை, குரல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி-வாணிஸ்ரீ எல்லாமே பொருத்தமாக.
I AM 64 NOW. my teenage memories are always mixed with this movie. I want to share some of my personal happenings happened during yhis movie. Devathai pola oru pennai meet pannum vaippu kidaithathu. she also preferred VM very much to see. that time i was in madurai. Had i been in madras i would have taken her for the movie. madurai we could not go atleast nearer to the theare so much of crowds. first week. after coming to madras I was not able to fulfill her wish for personal reasons. after that we have had no occassion to meet each other. andavan enna ninaithano adhu appadi nadanthathu.
Last edited by Subramaniam Ramajayam; 5th November 2012 at 08:41 AM.
-
5th November 2012, 09:18 AM
#10
Senior Member
Diamond Hubber
மிக்க நன்றி வினோத் சார். ரத்தினச் சுருக்கமாக வசந்தமாளிகையைப் பற்றி நச்'சென எழுதி விட்டீர்கள். தங்கள் ரசனைக்கு என் ராயல் சல்யூட்.
Bookmarks