-
27th November 2012, 10:53 AM
#151
Senior Member
Devoted Hubber
-
27th November 2012 10:53 AM
# ADS
Circuit advertisement
-
27th November 2012, 11:15 AM
#152
Junior Member
Seasoned Hubber
-
27th November 2012, 01:59 PM
#153
Senior Member
Diamond Hubber
Vasantha Maligai to Storm Theatres Again
Remember Vasantha Maaligai. The evergreen romantic hit of thespian SIvaji Ganesan. Released in 1972 Septem,ber 29, the film featured Sivaji Ganean, Vanisree, Balaji Sukumari and Nagesh in lead roles. Directed by K S Prakash, the movie had music by K V Mahadevan.
The movie was a huge hit and celebrated silver jubilee run all across tamilnadu and in Sri lanka it created a record running housefull for over 250 days. Close on the heels of Karnan’s (re-released after digital restoration), plans are now on by Srinivasan of Sai Ganesh Films to re-release Vasantha Maaligai after colour correction, cinemascope and digital restoration, especially too woo younger generation audience.
The movie to be released al over Tamilnadu on 7 December will be a celebrated event as All India Sivaji Ganesan Fans Association are taking every step towards it.
Srinivasan had released Gauravam a few years ago to witness bumper opening in many screens.
According tp Sai ganesh Films, ‘ several films of the veteran actor will follow suit. It would be grand celebrations in the coming months’
Vasantha Maaligai had hit songs like Oru Kinnathai (T M Soundararajan), Kudimaganey (T M Soundararajan, L R Eswari), Kalaimagal (P Susheela) and Mayakam Enna (T M Soundararajan, P Susheela).
-
27th November 2012, 04:24 PM
#154
Senior Member
Devoted Hubber
அண்ணனின் "வசந்த மளிகை" வெற்றி பெற வாழ்த்துகள் இது ஒரே சமயத்தில் 3 மொழிகளில் எடுக்கபட்ட படம் என்று நினைவு
மறு வெளியீடுகளில் சிறிய ஊர்களில் கூட அரங்கு நிறைந்த கட்சிகளாக
புது படங்களுக்கு போட்டியாக ஓடிய படமாச்சே.
-
27th November 2012, 06:17 PM
#155
Senior Member
Diamond Hubber
வருகிறது ‘வசந்த மாளிகை’
சில வருடங்கள் முன் வரை புதிதாக ஒரு திரைப்படம் வருகிறதென்றால் ‘வருகிறது’ என்ற போஸ்டர் தெருக்குத் தெரு ஒட்டப்பட்டு சினிமா ரசிகர்களின் ஆவலைத் தூண்டும். இப்போதெல்லாம், இது மாதிரியான போஸ்டர்களை அதிகம் பாரக்க முடிவதில்லை…இருந்தாலும் ஒரு சில படங்கள் ‘மீண்டும்’ வருகிறது என்ற செய்தியைக் கேட்கும் போது ‘வருகிறது’ போஸ்டரைப் பார்க்கும் போது ஏற்பட்ட ஆவல் இச் செய்தியைப் படிக்கும் போது உங்களுக்கும் நிச்சயம் ஏற்படும.
‘கர்ணன்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் திரையிடப்பட்டு வெற்றி பெற்ற பின் அடுத்ததாக நடிகர் திலகம் நடித்து எந்த படம் இப்படி டிஜிட்டல், சினிமாஸ்கோப் முறையில் வெளிவரப் போகிறது என்ற திரையுலக ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய வருகிறது சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ நடித்த ‘காதல் காவியம்’ வசந்த மாளிகை.
1972ம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று வெளியான ‘வசந்த மாளிகை’ திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், வாணிஸ்ரீயின் காதல் நடிப்பாலும், அருமையான பாடல்களாலும் தமிழ்த் திரையுலகில் ஒரு மறக்க முடியாத காதல் காவியம் எனப் பெயரெடுத்தது.
அந்த காதல் காவியத்தை தற்போது டிஜிட்டல், சினிமாஸ்கோப், கலர் திருத்தம் ஆகியவற்றைச் செய்து மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். சாய் கணேஷ் பிலிம்ஸ் சார்பாக சீனிவாசன் இத் திரைப்படத்தை டிசம்பர் 7ம் தேதியன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
1972ல் வெளிவந்த வசந்த மாளிகை திரைப்படம் தமிழ்நாடு, இலங்கை யில் பல சாதனைகளைப் புரிந்து 250 நாட்கள் ஓடிய திரைப்படமாக அமைந்தது.
கே.எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ள இப்படத்தில், “ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…”, “குடிமகனே…”, “கலைமகள்…”, “மயக்கம் என்ன…” ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் அமைந்துள்ளன.
நாகேஷ், பாலாஜி, சுகுமாரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘காதலை காதலிப்பவர்கள்’ மீண்டும் ஒரு காதல் காவியத்தை பார்க்கத் தயாராகுங்கள்…
Thanks to screen4screen.com
-
27th November 2012, 06:59 PM
#156
Senior Member
Diamond Hubber
tamil.webdunia.com
1972 ல் வசந்த மாளிகை வெளியானது. சிவாஜி கணேசனின் அனைத்து தசைகளும் துடித்து நடிப்பதற்கு வாகான கதை. யாருக்காக என்று அவர் போட்ட அலறலில் தமிழ்நாடு தாண்டி இலங்கையும் கிடுகிடுத்தது. படம் பம்பர்ஹிட்.
இன்றும் இரண்டு மனம் வேண்டும் நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று என தமிழக டாஸ்மாக்கில் யாராவது பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலையும் அதைவிட சோகத்தையும் கசக்கிப் பிழிந்த அந்த காவியம் மீண்டும் வெளியாகிறது. சினிமாஸ்கோப், டிஜிட்டல் என்று இன்றைய பிரமாண்டங்களுடன்.
கர்ணன் பாக்ஸ் ஆபிஸை அசைத்துப் பார்த்ததிலிருந்து சிவாஜி கணேசனின் படங்களின் ரைட்ஸை வைத்திருக்கும் அனைவருக்கும் ரீ ரிலீஸின் மீது கடும் மோகம். வசந்த மாளிகையை வெளியிடுகிறவர் சீனிவாசன்.
இவர்தான் சிவாஜியின் கௌரவம் படத்தையும் முன்பு பெரிய அளவில் வெளியிட்டார். வாணிஸ்ரீ சிவாஜி ஜோடியாக நடித்த, கே.எஸ்.பிரகாஷ் இயக்கிய அன்றைய பிரம்மாண்டம் டிசம்பர் 7 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது. கூடவே இலங்கையிலும்.
பெங்களூருவில் சிவாஜி பக்தர்கள் பிரபு ரசிகர்கள் என்ற பெயரில் இன்றும் ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிவாஜி படம் ரிலீசானால் வண்டி பிடித்து பேனர், மாலை, பட்டாசுடன் சென்னை வரும் அளவுக்கு வெறிகொண்ட பக்தர்கள். இவர்களின் பயணச் செலவை குறைக்கும் வகையில் பெங்களூருவிலும் வசந்த மாளிகையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.
டிசம்பர் 7 சென்னை சாந்தி தியேட்டருக்கு காலையில் வந்தால் இன்னொரு தீபாவளியை ரசிக்கலாம்.
கதறி அழ கணேசன் ரெடி, உருகி அழ நீங்க ரெடியா?
-
27th November 2012, 07:04 PM
#157
Senior Member
Diamond Hubber
cinema.nakkheeran.in
சிவாஜி பட வரிசையில் ’வசந்த மாளிகை’!
1972-ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கத்தில் ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், பாலாஜி ஆகியோர் நடித்து வெளிவந்த படம் ‘வசந்த மாளிகை’. இயக்குனர் பிரகாஷ் ராவ் 1971-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘பிரேம் நகர்’ என்ற பெயரில் எடுத்து வெற்றியடைந்த படத்தின் ரீமேக் தான் வசந்த மாளிகை.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றியடைந்த தனது படத்தை பிரகாஷ் ராவ் இந்தியில் ராஜேஷ் கண்ணா, ஹேம மாலினி ஆகியோரை வைத்து எடுத்து வெற்றிகண்டார். வெளிவந்த எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆன ‘வசந்த மாளிகை’ படத்தை இப்போது தமிழில் ரீரிலீஸ் செய்கின்றனர். பழைய படங்கள் அழிந்து விடக்கூடாது என்ற நோக்கில், இன்றைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மெருகூட்டி ரசிகர்களுக்காக ரீரிலீஸ் செய்கின்றனர்.
சிவாஜி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் சிவாஜி நடித்த மற்றொரு படமான வசந்தமாளிகை ரீரிலீஸ் செய்யப்படுவது அந்த கால படங்களை நேசிக்கும் ரசிகர்களுக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை வெள்ளித்திரையில் காண முடியாமல் போன இன்றைய இளைய தலைமுறையினருக்கும் கிடைக்கும் திரைவிருந்து.
-
27th November 2012, 07:12 PM
#158
Senior Member
Diamond Hubber
virakesari.lk srilanka tamil news.
மீண்டும் வசந்த மாளிகை
செவாலியர் சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973ஆம் ஆணடில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய திரைப்படமான 'வசந்த மாளிகை' திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.
ஏற்கனவே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கபட்டு வெளியான கர்ணன் அண்மையில் 100 நாட்கள் வரை ஓடி வெற்றிபெற்றது. இதன் தொடர்ச்சியாக இப்போது வசந்த மாளிகை திரைப்படம் வரும் டிசம்பர் 7ஆம் திகதி மீண்டும் வெளியாகவுள்ளது.
மயக்கம் என்ன..., இரண்டு மனம் வேண்டும், யாருக்காக இது யாருக்காக மற்றும் ஒரு கிண்ணத்தில் ஏந்துகிறேன் போன்ற பாடல்கள் அப்போது பட்டி தொட்டி எங்கும் படடையைக் கிளப்பியது. தற்போது இப்பாடல்களை மீண்டும் திரையில் காண சிவாஜி ரசிகர்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள்.
இப்படத்தினைத் தொடர்ந்து பாசமலர் படமும் டிஜிட்டலாக்கி திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
27th November 2012, 07:26 PM
#159
Senior Member
Diamond Hubber
panncom.net
யாழில் மீண்டும் அதிக வசூலில் வசந்த மாளிகை.
சிவாஜி கணேசன் – வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1973-ல் ரிலீசான படம் ‘வசந்த மாளிகை’. கே.எஸ். பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
இதில் இடம் பெற்றுள்ள ‘மயக்கம் என்ன’, ‘கலைமகள் கைப்பொருளே’, ‘இரண்டு மனம் வேண்டும்’, ‘யாருக்காக’ ,’ஒரு கிண்ணத்தில் ஏந்துகிறேன்’. போன்ற பாடல்கள் அப்போது பட்டி தொட்டி எங்கும் கலக்கின.
இந்த படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். ஏற்கனவே திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், ‘கர்ணன்’ உள்ளிட்ட பல சிவாஜி படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆனது. பாசமலர் படமும் மீண்டும் வருகிறது.
தமிழகத்தைவிட யாழ்ப்பாணத்தில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமே வசந்தமாளிகையாகும். இலங்கையின் ரசிகர்களை நூல் பிடித்துப் பார்ப்பதற்கு இந்தப் படத்தை ஓர் அடையாளமாகக் கருதுவார்கள்.
-
27th November 2012, 07:36 PM
#160
Senior Member
Diamond Hubber
Mega albam
Last edited by vasudevan31355; 27th November 2012 at 09:06 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks