-
11th December 2012, 01:02 AM
#1251
காவேரி கண்ணன் அவர்களே! நடிகர் திலகத்தின் நிரந்தர ரசிகரே! உங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்!
விரைவில் மீண்டும் நீங்கள் சென்னை வாசியாக எங்களது வாழ்த்துகள்!
ஜோ/வாசுதேவன்,
வசந்த மாளிகையின் மறு வெளியீடு தாமதமானதற்கு தணிக்கை சான்றிதழ் காரணமல்ல. இப்போது தமிழ் படங்களுக்கு வரிவிலக்கு கொடுப்பதா வேண்டாமா என்பதனை முடிவு செய்வது ஒரு குழுதான். பழைய படமாக இருந்தாலும் புதிய படம் போல ஸ்கிரிப்ட் உட்பட அனைத்தையும் முறையாக விண்ணப்பத்துடன் இணைத்து அந்த குழுவிடம் அளிக்க வேண்டும். ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே வெளியீடு தள்ளி போனதற்கு காரணம். அடுத்த இரண்டு வாரங்களில் பல புதிய திரைப்படங்கள் வெளி வருவதால் வசந்த மாளிகை டிசம்பர் 28 அன்று வெளியாகலாம்.
அன்புடன்
ஜோ,
டிசம்பர் 28 நாஞ்சில் நகரில் இருப்பீர்களா?
-
11th December 2012 01:02 AM
# ADS
Circuit advertisement
-
11th December 2012, 09:27 AM
#1252
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Murali Srinivas
ஜோ,
டிசம்பர் 28 நாஞ்சில் நகரில் இருப்பீர்களா?
இருப்பேன் .. அடுத்த நாள் தான் கிளம்புகிறேன்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
11th December 2012, 04:34 PM
#1253
Senior Member
Seasoned Hubber
NT'S GLOBAL REACH - WHAT A GLORIOUS MOMENT !
Dear friends,
It will be a great moment to cherish.
A Distinguished Foreign Academician is to be honoured in the name of Nadigar Thilagam Sivaji Ganesan ...
It's really a great beginning for the glories / encomiums to come on Sivaji Ganesan.
The Russian Centre of Science and Culture, Chennai, as writer D. Jayakanthan as its President, celebrates its 40th anniversary and as a part of the celebrations awards are instituted to be conferred on eminent academicians/ personalities. For the first time, an International Award is instituted in the name of Nadigar Thilagam Sivaji Ganesan and the receipient is also a foreign national, viz. Russia.
Mr. Fyodor Rozovsky, Counsellor, Head of the Cultural Department of Embassy of Russian Federation in India, is chosen for the prestigious
NADIGAR THILAGAM SIVAJI GANESAN AWARD.
The image of the invitation is produced below which is for information purpose. Details for invitations are given in the banner image of our nadigar thilagam website which is also reproduced below. Please be present without fail.

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th December 2012, 08:33 AM
#1254
Junior Member
Devoted Hubber
தலைவர் ரசிகர்களுக்கு என் வணக்கம்..
உலக சினிமா என்ற தலைப்பில் திரு எஸ் ராமகிருஷ்ணன் நிகழ்த்திய பேருரைகளின் இறுதி நாளில் "சார்லி சாப்ளின்" பற்றி அவர் சுமார் இரண்டு மணி நேரம் பேசினார்.நன்றாக இருந்தது.(என்னால் இந்த ஒரு நாள் மட்டும்தான் போக முடிந்தது)
ஆனால்,
ஆனால்...
நம்,பிரபு,ஸ்ரீனிவாஸ்,கோபால்,ராகவேந்தர்,பார்த்தசாரத ி போன்றோர் எழுதும் விமரிசனங்களின் ஆழத்தோடும்,கூர்மையோடும் ஒப்பிட்டால் இந்த பேருரை மிக சாதாரணம் என்பது என் துணிபு.
The opposite of Best is good எனும் வாக்கியத்தின் பொருள் இதுதான்.
உலகின் மிகச்சிறந்த கலைஞரின் பரம ரசிகராக இருக்கும் தகுதி ஒன்றே,
அந்த ரசிகரையும் உலகின் மிகச்சிறந்த ரசிகராகவும்,விமரிசனராகவும்
ஆக்கிவிடுவது தெளிவாகிறது.
பன்னிரண்டு கை வேலவனைப்பெற்றவனை, நமக்கு திரையில் காட்டிய,
அந்த பரமேஸ்வரனின் பாதம் வணங்க,இந்த 12-12-12 ஐ விட
வேறு ஒரு சரியான நாள் கிடைக்குமா என்ன?
-
12th December 2012, 12:03 PM
#1255
Senior Member
Devoted Hubber
best wishes on the occasion of award in the name of NT-it's celebration time!
-
13th December 2012, 11:37 PM
#1256
தியாகம் - சில நிகழ்வுகள்! சில நினைவுகள்! -Part I
தியாகம் படம் 1977 அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல் 1978 ஜனவரி 26-ந தேதி வெளியிடலாம் என்று பாலாஜி பிளான் செய்தார். ஆனால் அண்ணன் ஒரு கோவிலுக்கு முன்பாகவே படப்பிடிப்பை ஆரம்பித்து விட்ட முக்தா ஸ்ரீனிவாசன் தன அந்தமான் காதலியை ஜனவரி 26 அன்று வெளியிட முன் நிறுத்தினார் எந்த தயாரிப்பாளரோடு போட்டிப் போட்டாலும் எப்போதும் வி-சி.சண்முகம் டிக் அடிப்பது பாலாஜிக்குதான் இருக்கும். ஆனால் இந்த முறை நடிகர் திலகத்தின் மற்றொரு அபிமான தயாரிப்பாளர் இயக்குனர் முக்தாவோடு போட்டி போட்ட போது முக்தாவிற்கே அதிர்ஷ்டம் அடித்தது. இதில் சிறிது வருத்தம் இருந்தாலும் பாலாஜி அந்தமான் காதலிக்கு ஒரு ஐந்து வார இடைவெளியை கொடுத்து மார்ச் 4 அன்று ரிலீஸ் செய்தார்.
எப்போதும் வேற்று மொழியிலிருந்து ரீமேக் செய்து படங்களை தயாரிக்கும் பாலாஜி, தீபம் போன்றே இந்தப் படத்திற்கும் மலையாளத்தை நாடினார்.மது நடித்து வெளிவந்த "இதா ஒரு மனுஷ்யன்" படத்தின் தமிழ் உரிமையை வாங்கினார். ஆனால் அதுவே பெங்காலியில் உத்தம் குமார் நடித்து வெளிவந்த அமானுஷ் [ஆ மானுஷ்?] படத்தின் தழுவலாகும். படத்தின் கதையை எடுத்துக் கொண்டோமானால் தமிழ் nativity அடி வாங்கும் கதை. back waters, சுற்றிலும் கள் சாராய கடைகள், ஸ்டீம் boat போன்றவைகள் தமிழுக்கு சற்றே அன்னியப்பட்டவை. இன்னும் சொல்லப் போனால் கதாநாயகி லட்சுமியிடம் வி.கே.ஆர். கோவிலில் வைத்து வழி மறித்து வம்பு செய்யும் காட்சியை எடுத்துக் கொண்டால் அந்த கோவில் அப்படியே கேரள பாணியில் அமைந்திருக்கக் கூடிய கோவில். இவ்வளவு ஏன் ஒரு முறை வேலை நிமித்தமாக பக்கத்து ஊருக்கு புறப்படும் நடிகர் திலகம் சொல்லும் வசனம் ஒன்று வரும். "இங்கே பக்கத்திலே இருக்கிற சாலக்குடிக்குதானே போப்போறேன்" என்பார். ஆக அங்கே ஒரு ரிஸ்க் இருந்தது. பிராப்தம் படத்திலும் இது போன்ற nativity பிரச்னை இருந்தது நினைவிருக்கும்.
படம் ஒரு மசாலா சித்திரம் என்று படம் வெளியாவதற்கு முன்பே ஒரு தகவல் கசிந்திருந்தாலும் அது எந்தளவிற்கு உண்மை என்பது படம் பார்த்த பின்தான் தெரிந்தது. ஒரு மாஸ் ஹீரோவின் கமர்ஷியல் திரைப்படத்தில் எந்தளவிற்கு கமர்ஷியல் அயிட்டங்கள் இடம் பெறுமோ அது சற்றும் குறைவில்லாமல் இருந்தது. முதல் நாள் ஓபனிங் ஷோ பார்க்க முடியவில்லை. மாலைக் காட்சிதான் போனோம். ஆனால் அதற்குள் படத்தைப் பற்றிய நல்ல ரிப்போர்ட் வந்து விட்டது. மாலைக் காட்சிக்கே சரியான கூட்டம் என்றால் நாங்கள் படம் முடிந்து வரும்போது இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். சிந்தாமணி திரையரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் ஒரே டிராபிக் ஜாம்.
நாங்கள் படத்தை ரசித்துப் பார்த்தோம். இந்தப் படத்தில் நாயகி லட்சுமி உடுத்தி வரும் அனைத்து புடவைகளும் அழ்காய் அமைந்திருக்கும். புடவை என்றதும் நினைவிற்கு வருகிறது. இந்தப் படத்தில்தான் புடவை துணியை நடிகர் திலகத்தின் ஷர்ட் material ஆக பயன்படுதியிருப்பார்கள். அது நன்றாக செட் ஆனது.படம் நண்பர்களோடு சேர்ந்து பார்த்துவிட்டு சிந்தாமணி அரங்கிற்கு எதிர் வரிசையில் அமைந்திருக்கும் ஹோட்டலில் உணவருந்திக் கொண்டே படத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். படம் வெற்றி பெறும், 100 நாட்களை கடந்து ஓடும் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை. ஆனால் இவ்வளவு பிரம்மாண்ட வெற்றியை எதிர் பார்க்கவில்லை. எப்படி பட்டிக்காடா பட்டணமா பெரிய வெற்றிப் பெற்றதோ அது போன்ற ஒரு சாதனையை தியாகம் நிகழ்த்திக் காட்டியது. முன்னரே சொன்னது போல் மாஸ் படம் என்பதால் சென்னையில் சாந்தியை விட, வட சென்னையின் கிரவுன் திரையரங்கில் படத்திற்கு பெரிய வரவேற்பு. கிரவுன் அரங்கில் மட்டும் தொடர்ந்து 214 அரங்கு நிறைந்த காட்சிகள். நண்பர் சுவாமி ஒரு விஷயம் சொல்வார். தியாகம் வெளியான நேரத்தில் கிரவுன் அரங்கின் ஊழியர் ஒருவர் ப்ளாக் டிக்கெட் விற்றே மகளின் கல்யாண செலவை ஈடு கட்டினாராம்.
இந்த சாதனை அவ்வளவு எளிதாக நிகழ்த்தப்பட்டதல்ல வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டது போல நடிகர் திலகத்தின் படங்களே பல்முனை போட்டியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரம். இந்தப் பக்கம் அந்தமான் காதலி என்றால் அந்தப் பக்கம் 14 நாட்கள் இடைவெளியில் வெளியான என்னைப் போல் ஒருவன். தியாகம் 70 நாட்களை கடந்த போது வெளி வந்த புண்ணிய பூமி, 100 நாட்களை நிறைவு செய்த போது வந்த ஜெனரல் சக்கரவர்த்தி என பல படங்கள். அது மட்டுமல்ல அன்றைய கால கட்டத்தில் புயலென புகுந்த இளைய தலைமுறையினரின் பல்வேறு படங்கள் இடைவெளி இல்லாமல் வெளியாகி போட்டியை ஏற்படுத்தின. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டோமானால் ஒரு பெரிய பட்டியலையே சொல்ல வேண்டியிருக்கும்.
1975-ல் அபூர்வ ராகங்கள் மூலமாக அறிமுகமாகி 1977-ல் பரபரப்பாக முன்னேறினார் ரஜினி. 1977 தீபாவளிக்கு வெளியான ஆறு புஷ்பங்களுக்கு பிறகு ஒரு மூன்று மாத இடைவெளியில் ரஜினி விஜயகுமார் ஜெய் கணேஷ் போன்றவர்கள் நடித்த சங்கர் சலீம் சைமன் தியாகம் வெளியாவதற்கு 3 வாரங்களுக்கு முன்பு [பிப் 10] வெளியானது. தியாகம் வெளியான ஒரே வாரத்தில் நடிகை ஷீலா மலையாளத்தில் இயக்கிய யக்ஷ கானம் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து ஆயிரம் ஜென்மங்கள் என்ற பெயரில் ரஜினி விஜயகுமார் லதா போன்றவர்கள் நடிக்க மார்ச் 10 அன்று வெளியிட்டார் இயக்குனர் துரை. இந்தப் படம் சிந்தாமணிக்கு அருகில் அமைந்துள்ள அலங்காரில் வெளியானது. அதே நாளில் சிவகுமார் ஸ்ரீதேவி நடித்த மச்சானை பார்த்தீங்களா படமும் கல்பனாவில் வெளியானது [இந்தப் படத்தில்தான் சந்திரபோஸ் இசையில் மாம்பூவே சிறு மைனாவே என்ற யேசுதாஸ் சுசீலாவின் சூப்பர் ஹிட் பாடல் இடம் பெற்றது]. மார்ச் 18 அன்று தங்கத்தில் என்னைப் போல் ஒருவன் ரிலீஸ். மார்ச் 30 அன்று கமல் - பாலசந்தர் கூட்டணியில் உருவான நிழல் நிஜமாகிறது ஸ்ரீதேவியில் வெளியானது. நல்ல வரவேற்ப்பை பெற்றது. மார்ச் 31 அன்று ரஜினியின் சகோதர சபதம் சென்ட்ரலில் வெளியானது. இத்தனை படங்கள் வெளியாகியும் தியாகம் மார்ச் 4 முதல் 31 வரை 28 நாட்களில் நடைப்பெற்ற 92 காட்சிகளும் ஹவுஸ் புல்.
ஏப்ரல் மாதம் 14 அன்று நடிகர் திலகத்தின் தெலுங்கு படமான ஜீவன தீரலு, வாழ்க்கை அலைகள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மீனட்சியில் வெளியானது. அதே நேரத்தில் சுஜாதா எழுதிய காயத்ரி நாவலை திரைப்படமாக்கி வெற்றி கண்ட இயக்குனர் பட்டாபிராமன் [R.பட்டு] குழுவினர் அதே சுஜாதாவின் அனிதா இளம் மனைவி என்ற நாவலை இது எப்படி இருக்கு என்ற பெயரில் ஜெய்சங்கரை வைத்து தயாரித்து வெளியிட்டனர். அது தங்கத்தில் வெளியானது. இதை தவிர வேறு ஒன்றிரண்டு படங்களும் அந்த மாதத்தில் வெளியான நினைவிருக்கிறது. இந்தப் படங்களை தவிர ஏற்கனவே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த நடிகர் திலகத்தின் படங்களையும் எடுத்துக் கொண்டால், ஏப்ரல் 30 அன்று அந்தமான் காதலி 95 நாட்களை நிறைவு செய்து சினிப்ரியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. என்னைப் போல் ஒருவன் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தியாகம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 30 வரை 58 நாட்களில் சிந்தாமணியில் நடைபெற்ற 192 காட்சிகளும் ஹவுஸ் புல்.
மே மாதம் பிறக்கிறது. மே 5 அன்று அந்தமான் காதலி 100 வது நாள். என்னைப் போல் ஒருவன் 50-வது நாள். தியாகம் சிந்தாமணியில் 63 நாட்களை நிறைவு செய்கிறது.அந்த 63 நாட்களில் நடைபெற்ற 207 காட்சிகளும் ஹவுஸ் புல். இதனால் ஏற்பட்ட கண் திருஷ்டியோ என்னவோ தெரியவில்லை, அன்றைய தினத்தில் கேரளத்தில் தச்சோளி அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது தவறி விழுந்ததில் நடிகர் திலகத்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டாய ஒய்வு எடுக்க நேர்ந்தது.இருப்பினும் அவர் ஏற்கனவே முடித்துக் கொடுத்திருந்த புண்ணிய பூமி மே 12 அன்று கல்பனாவில் வெளியானது. மே 19 அன்று வி.சி.குகநாதன் இயக்கத்தில் ரஜினி விஜயகுமார் நடித்த மாங்குடி மைனர் சென்ட்ரலில் வெளியானது. இந்த நேரத்தில் வேறு ஒன்றையும் சொல்ல வேண்டும். புதிய தமிழ் படங்கள் மட்டுமல்ல வேற்று மொழிப் படங்களும் பலமான போட்டியை ஏற்படுத்தின. யாதோன் கி பாராத் போன்ற இந்தி musical entertainers படங்களை எடுத்த தயாரிப்பாளர் நாசர் ஹுசைன் [இன்றைய சூப்பர் ஹீரோ அமீர்கானின் uncle] அதே பாணியில் தயாரித்த Hum Kisise Kam Nahin அந்த மே மாதம் சினிப்ரியா காம்ப்ளெக்ஸ்-ல் வெளியாகி இளைஞர்களை சுண்டி இழுத்துக் கொண்டிருந்தது. இது மட்டுமா? நடிகர் திலகத்தின் பழைய படங்கள் வேறு மறு வெளியீடு செய்யப்பட்டுக் கொண்டிருந்த நேரம். மே 19 அன்று பார்த்தால் பசி தீரும் ஸ்ரீமுருகனில் வெளியானது, பெரும் வரவேற்பை பெற்றது. இத்தனைக்கும் அதற்கு ஒரு பத்து மாதங்களுக்கு முன்புதான், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 1977 ஜூலை 1 அன்று கல்பனாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி அடுத்தடுத்த அரங்குகளில் ஷிப்ட் ஆகி ஓடியிருந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து அதே அரங்கில் விடிவெள்ளி வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அதே மே மாதம் 26-ந தேதி பேசும் தெய்வம் ஸ்ரீமீனாட்சியில் வெளியானது. படம் வெளியான அன்று வெள்ளிக்கிழமை மதியக் காட்சிக்கு நண்பர்களுடன் நான் சென்ற போது சரியான கூட்டம். குறிப்பாக தாய்மார்கள் கூட்டம் அலை மோதியது. இப்படி தமிழில் புதிய படங்கள், இந்திப் படங்கள், தான் நடித்த பழைய திரைப்படங்கள் என சுற்றி நின்று opposition கொடுத்த போதினும் கூட நடிகர் திலகம் தியாகத்தின் மூலமாக வரலாறு படைத்துக் கொண்டிருந்தார். மே மாதம் நிறைவு பெறும்போது தியாகம் 89 நாட்களை நிறைவு செய்திருந்தது.
ஜூன் மாதம் தொடக்கம். ஜூன் 2 அன்றே ரஜினி முதன் முதலாக ஹீரோவாக நடிக்கும் என்ற விளம்பரத்துடன் பைரவி ஸ்ரீதேவியில் வெளியாகிறது. இளையராஜா இசையில் கட்டபுள்ள குட்டபுள்ள மற்றும் நண்டூருது நரியூரூது பாடல்கள் ஹிட்டடிக்க படத்திற்கு ஆதரவு கிடைக்கிறது.அடுத்த வாரம் 9-ந தேதி அதைவிட பெரிய போட்டி வருகிறது. கமலும் ரஜினியும் இணைந்த ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலாடுகிறது சினிப்ரியாவில் வெளியாகிறது. இதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட். ஆலயமணியின் உல்டா என்ற போதினும் ஸ்ரீதர் படத்தை இளமை பொங்க எடுத்திருந்த விதம் மக்களுக்கு பிடித்துப் போக படம் சூப்பர் ஹிட் ஆகிறது. இது போதாதென்று அதே ஜூன் 9 அன்று சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த சிட்டுக் குருவி சென்ட்ரலில் வெளியானது. இதிலும் இளையராஜா. என் கண்மணி உன் காதலி, உன்னை நம்பி நெத்தியிலே போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மக்களை தியேட்டருக்கு வரவழைத்தன. 9-ந தேதி இளமை ஊஞ்சலாடுகிறது பார்த்துவிட்டு 10-ந தேதி சிட்டுக் குருவி பார்த்துவிட்டு 11-ந தேதி ஞாயிற்றுக்கிழமை தியாகம் போகிறோம். அன்று தியாகம் 100-வது நாள். மாலைக் காட்சிக்கு போனால் முதல் இரண்டு நாள் பார்த்த கூட்டமெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றிவிட்டது. 100-வது நாள் ஓடும் படத்திற்கு நாங்கள் டிக்கெட் வாங்க பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும். ஒரு வழியாக உள்ளே சென்றால் நண்பர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற்போல் அமர்வதற்கு இருக்கைகள் கிடைக்கவில்லை. அலப்பறை என்றால் அப்படி ஒரு அலப்பறை.அன்று மாலைக் காட்சி பார்த்தவர்கள் அந்த அலப்பறையை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.[சாதாரணமாக அலப்பறை அதிகம் கொடுக்கும் இரண்டு நண்பர்கள் அமைதியாக வேறு ஒரு பக்கத்திலிருந்து படம் பார்ப்பதை கண்டவுடன் வியப்பு. என்னடா விஷயம் என்பது இடைவேளையின்போது புரிந்தது. அந்த அமைதிக்கு காரணம் அவர்களுக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோருடன் வந்த ஒரு இளம் பெண்தான் என்பது இப்போது நினைத்தாலும் சுவாரஸ்யமான நிகழ்வாகவே மனதில் தங்கியிருக்கிறது]. 100 நாட்களில் சிந்தாமணியில் மிகப் பெரிய வசூலை பெற்று சாதனை புரிந்தது தியாகம்.
நடுவில் மீண்டும் ஒரு இந்தி சித்திரம். மதுரையின் மையப் பகுதியான நாயக்கர் புது தெருவில் ஒரு புதிய தியேட்டர் complex கட்டி முடிக்கப்பட்டு அதில் அமைந்திருந்த இரண்டு தியேட்டர்களுக்கும் முறையே சக்தி சிவம் என பெயரிடப்பட்டு அதில் சக்தி மட்டும் ஜூன் 15 அன்று திறந்து வைக்கப்பட்டது. முதல் படமாக அமிதாப், வினோத் கண்ணா மற்றும் ரிஷிகபூர் நடித்த பிரபல இந்தி இயக்குனர் மன்மோகன் தேசாயின் அமர் அக்பர் ஆண்டனி திரையிடப்பட்டது. புதிய அரங்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வரும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் வடநாட்டிலும் சென்னையிலும் தூள் கிளப்பிக் கொண்டிருந்த இந்த படத்தை பார்க்கவும் கூட்டம் அலை மோதியது.ஆக ஒரே நேரத்தில் இரண்டு இந்திப் படங்களின் opposition வேறு.
அடுத்த நாள் 16-ந தேதி வெள்ளிகிழமை ஜெனரல் சக்கரவர்த்தி அலங்காரில் ரிலீசானது. படத்தின் தயாரிப்பாளரும் அகில இந்திய சிவாஜி மன்ற தலைவருமாக இருந்த சின்ன அண்ணாமலை சென்னையில் சாந்திதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க தியாகம் மாற்றப்பட்டது. ஆனால் மதுரையில் இந்த சிக்கல் இல்லை என்பதால் தியாகம் சிந்தாமணியில் தொடர்ந்தது. ஜெனரல் சக்கரவர்த்தி நல்ல குடும்ப சித்திரம் என்ற பெயரைப் பெற்று family audience மற்றும் தாய்குலங்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. அடுத்த வெள்ளிகிழமை 23-ந தேதி மீண்டும் இரண்டு படங்கள் ரிலீஸ். அண்ணாவின் ஆசைக்குப் பிறகு பாலாஜி, நடிகர் திலகத்தை வைத்து எடுக்காமல் வேறு ஹீரோவை வைத்து தயாரித்த முதல் படம் ராதைக்கேற்ற கண்ணன். சிவகுமார் ஸ்ரீவித்யா நடித்த இந்த வண்ணப்படம் பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கே-வி.மகாதேவன் இசையில் உருவாகி வெளியானது. இது கல்பனாவில் வெளியானது. அதே நாளில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா நடித்த இளையராணி ராஜலட்சுமி திரைப்படம் மீனாட்சியில் ரிலீசானது. அடுத்த வெள்ளிக்கிழமை 30-ந தேதி அன்றைய நாடக கதாசிரியர் விசு எழுதி மேடை நாடகமாக பெரும் வெற்றிப் பெற்ற பாரத மாதர்க்கு ஜே!, துரை அவர்களின் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீகாந்த் நடிக்க சதுரங்கம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இது தமிழகமெங்கும் ஓரிரண்டு வாரங்களுக்கு முன்னரே வெளியாகி விட்ட போதிலும் மதுரையில் 30-ந தேதிதான் சென்ட்ரல் சினிமாவில் வெளியானது. அன்றைய நாளிலேயே ஸ்ரீகாந்த் லட்சுமி நடித்த பீம்சிங் இயக்கிய ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படமும் ஸ்ரீதேவியில் வெளியானது. இத்தனை ரிலீஸ் படங்களுக்குமிடையே ஜூன் 30 அன்று தியாகம் சிந்தாமணியில் 119 நாட்களை நிறைவு செய்து [17 வாரங்கள்] மேலும் பல புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது.
ஜூலை பிறந்தது. முதலில் நடிகர் திலகத்தின் பழைய படமான அன்னை இல்லம் தினமணியில் வெளியானது. இந்த திரையரங்கம் எப்படி என்றால் பழைய கால திரையரங்கம்.ஆனால் இருக்கைகள் அதிகமாக அமைந்த அரங்கம். இங்கேதான் கர்ணன் 1972-ம ஆண்டு (என நினைவு) வெளியிடப்பட்டு பலத்த வரவேற்புடன் ஓடியது மீண்டும் 1978-கு வருவோம் இந்த திரையரங்கம் அமைந்திருக்கும் இடத்திற்கு முனிச்சாலை என்று பெயர் சிந்தாமணிக்கும் அலங்காருக்கும் அருகாமையில் அமைந்திருக்கும். ஒரு பக்கம் சிந்தாமணியில் தியாகம் மறுபக்கம் அலங்காரில் ஜெனரல் சக்கரவர்த்தி, தினமணியில் அன்னை இல்லம். Beauty என்னவென்றால் மூன்று படங்களுக்கும் கூட்டம். ஜூலை 14 வெள்ளியன்று மீண்டும் double attack. ஆம், கமல் இரட்டை வேடங்களில் நடித்த டி.என்.பாலுவின் சட்டம் என் கையில் சென்ட்ரலிலும் ரஜினி ஸ்ரீதேவி நடித்து, AC.T இயக்கிய வணக்கத்துக்குரிய காதலியே [எழுத்தாளர் ராஜேந்திர குமார்'எழுதிய நாவல்] கல்பனாவிலும் வெளியானது. சட்டம் என் கையில் பாடல்களும் கமலின் நடனமும் தமிழ் படத்தில் முதன் முதலாக இதழ் முத்தக் காட்சி இடம் பெற்றிருக்கிறது என்ற பரபரப்பும் படத்திற்கு கூட்டத்தை சேர்க்கிறது.
இதற்கு இடையில் ஒரு அரசியல் நிகழ்வு.
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 17th December 2012 at 10:58 PM.
-
13th December 2012, 11:44 PM
#1257
தியாகம் - சில நிகழ்வுகள்! சில நினைவுகள்! - Part II
1969-க்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலே நடைபெறவில்லை. பல காரணங்களை சொல்லி அவை தள்ளிப் போடப்பட்டன. இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அன்றைய அதிமுக ஆட்சி அறிவித்தது. 1969-ல் தேர்தல் நடந்த போது நகராட்சியாக் இருந்த மதுரை 1971 மே 1 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது சென்னைக்கு பிறகு மாநகராட்சி ஸ்தானம் கிடைத்தது மதுரைக்குத்தான் அன்றைய நாளில் மதுரை நகராட்சி தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அவர் 1975 ஆண்டு இறுதியில் திமுகவை விட்டு விலகி அதிமுகவில் சேர்ந்தார். ஆக அந்த 1978-ம ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் மாநகராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. 1977-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஆளும் கட்சியும் சரி எதிர்கட்சியும் சரி போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்தனர். அன்றைய முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் மதுரையில் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்ய மதுரையே அனலாக கொதித்தது. அந்த தேர்தலில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிகர் திலகத்தின் ரசிகர்களும் பங்கு பெற்றனர்.அதன் காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள ஒரு சின்ன flash back தேவைப்படுகிறது.
அண்ணன் ஒரு கோவில் பதிவில் 1977-ம ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஒரு சில அரசியல் நிகழ்வுகளை பார்த்தோம். அதன் தொடர்ச்சிதான் நாம் இப்போது சொல்லவிருப்பது. இந்திரா காந்தி அம்மையார் கைது செய்யப்பட்ட போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமாக இருந்த பிரம்மானந்த ரெட்டி இருந்தார். அவரும் அவருடன் இருந்த அன்றைய பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சவான் போன்றவர்கள் ஜனதா ஆட்சிக்கு மறைமுக ஆதரவு தருகிறார்களோ என்ற சந்தேகம் இந்திரா அம்மையாருக்கு எழ, அவர் மீண்டும் தன வழக்கமான அதிரடி அரசியலை ஆரம்பிக்க எண்ணினார். அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஒரு சில மாதங்களில் ஆந்திரா மற்றும் கர்நாடக சட்டசபை பொது தேர்தல் நடக்கவிருந்தது. தென்னகம் எப்போதும் தன பக்கம் நிற்கும் என்பதில் இந்திரா காந்தி அம்மையாருக்கு சந்தேகமியில்லை. ஆகவே 1978-ம ஆண்டு ஜனவரி 1 அன்று தன ஆதரவாளர்கள் கூட்டத்தை அன்னை இந்திரா அவர்கள் கூட்ட, அந்த கூட்டம் செல்லாது என்று ரெட்டியும் சவானும் அறிவிக்க மீண்டும் காங்கிரஸில் ஒரு பிளவு. இந்திரா அம்மையாரின் தலைமையில் காங்கிரஸ்(I) உதயமானது.
ஜனவரியில் அவர்கள் இதை அறிவிக்க பிப்ரவரியில் ஆந்திர கர்நாடகா தேர்தல்கள் அறிவிக்கப்படுகின்றன. பசுவும் கன்றும் சின்னம் முடக்கப்பட்டதால் இந்திரா அம்மையார் கை சின்னத்தை தேர்ந்தெடுக்கிறார். ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் அவர் முழு வீச்சில் பிரச்சாரம் செய்ய ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் இந்திரா காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை பிடிக்கிறது. ஆந்திராவில் சென்னா ரெட்டியும் கர்நாடகத்தில் தேவராஜ் அர்ஸ் அவர்களும் முதல்வர் பதவியை ஏற்றார்கள். இந்த தேர்தல்களின்போது உத்திர பிரதேச மாநிலத்தில் ஆசாம்கர்க் என்ற பாராளுமன்ற தொகுதிக்கும் இடை தேர்தல் நடைபெற்றது. 1977-ல் உபி-யில் உள்ள 85 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோற்ற காங்கிரஸ் இம்முறை அங்கே வெற்றிக் கனியை பறித்தது. பின்னாட்களில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கை தொடர்பாளராக பணியாற்றிய மோஷினா கித்வாய் அந்த தொகுதியில் வெற்றிப் பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள் காலையில் [சென்னையில் முதல் நாள் மாலை] நவசக்தி நாளிதழின் தலைப்பு செய்தி இப்போதும் பசுமரத்தாணியாக மனதில் நிற்கிறது. ஒரு புறம் பெருந்தலைவரின் புகைப்படம், மற்றொரு புறம் அன்னை இந்திராவின் புகைப்படம், நடுவே வந்த தலைப்பு இப்படி இருந்தது.
அறத்தின் வெற்றி! அன்னை உன் கரத்தின் வெற்றி!
தர்மத்தின் வெற்றி! தலைவா உன் லட்சிய கொள்கைக்கு வெற்றி!.
ஆந்திரா கர்நாடக ஆசாம்கர்கில் காங்கிரஸ் அமோக வெற்றி!
இதன் வழியாக இந்திரா அம்மையார் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தன கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார். பொதுவாகவே ஆளும் கட்சியாக இருக்கும் போது மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். அதிலும் ஜனதா போன்ற நான்கு வித்தியாசமான கட்சிகள் ஒன்றாக சேரும் போது அதிலும் அதன் தலைவர்கள் ஒவ்வொரு திசைக்கு இழுக்கும் போது அந்த அதிருப்தி அதிகரிக்கும். அவ்வகை அதிருப்தியின் விளைவாக இந்திரா காங்கிரசை விட்டு விலகி நின்ற நடிகர் திலகத்தின் ரசிகர்களும் அந்த கட்சியின் ஆதரவாளர்களாக மாற தொடங்கிய நேரம். இந்த நேரத்தில் ஜூலை 15 அன்று வரும் பெருந்தலைவரின் பிறந்தநாளை மதுரையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து அதற்கு இந்திரா அம்மையாரையும் வரவழைத்து ஒரு கூட்டம் நடத்தினார் நெடுமாறன். அந்த நேரத்தில் இந்த மாநகராட்சி தேர்தல் வந்து விடவே two in one ஆக இந்த பிறந்த நாள் கூட்டம் அமைந்தது. அனைத்து வார்டுகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக கை சின்னம் அறிமுகமானது மதுரையில்தான். இந்த தேர்தலின்போதுதான்.விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் ஊர்வலமாக வந்த இந்திரா அம்மையார் ஒரு சில இடங்களில் பிரச்சாரம் செய்தார். அவரின் இந்த வருகையும் பிரசாரமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். இதை தவிர வேறு ஒரு காரணமும் இருந்தது. தச்சோளி அம்பு படப்பிடிப்பில் விபத்தில் கை முறிந்த நடிகர் திலகம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் கையின் உள்ளே முறிந்த எலும்பை ஒன்று சேர்க்க மெட்டாலிக் பிஷ் பிளேட் ஒன்றை பொருத்தினார்கள். இந்த அறுவை சிகிச்சை காரணமாக அவரது ஓய்வு அதிகமானது.
அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த மூப்பனார் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் இந்த தேர்தலில் நடிகர் திலகத்தின் பிரச்சாரம் இருக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே விபத்திற்கு பின் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்தை அழைத்துக் கொண்டு மதுரை வந்தார். ஏற்கனவே இந்திரா அம்மையார் வந்ததினால் ஏற்பட்ட சுறுசுறுப்பு நடிகர் திலகம் வந்ததினால் மேலும் கூடியது. மதுரா கோட்ஸ் ஆலைக்கு பக்கத்தில் கரிமேடு என அழைக்கப்படும் இடத்தில முதல் பிரசார கூட்டத்தில் பேசிய நடிகர் திலகம் மேலும் இரண்டு கூட்டங்களில் பேசி விட்டு திரும்பி சென்றார். தேர்தல் பிரச்சாரம் அன்றைய காலகட்டத்தில் கட்டுப்பாடுகளற்ற ஒன்றாகவே இருந்தது. மேலும் ஒரே ஒரு ஊரில் வார்ட் வாரியாக நடக்கும் தேர்தல் எனபதால் அடிக்கடி மோதல்கள் உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகள் வந்த போது காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற 9 மாமன்ற உறுபினர்களில் ஒரு K..N.அழகர் சாமி (நாயுடு -ஆம் அப்படிதான் அவர் பெயரை பிரசாரத்தில் பயன்படுத்தினார்கள்)யும் அடங்குவார் [யாரென்று யோசிப்பவர்களுக்கு -இப்போதைய சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரின் தந்தை).
முன்னரே சொன்னது போல் புதிய படங்கள் போதாதென்று தேர்தல் வேறு நடக்கிறது. ஒரு படம் normal சூழலில் ஓடுவது வேறு. ஆனால் எங்கே வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வன்முறை வெடிக்கலாம் என்ற சூழலில் மக்கள் தியேட்டருக்கு வருவது அதிலும் பெண்கள் வருவது என்பது அரிது. ஆனால் இந்த நேர்மறையான சூழலில் கூட தியாகத்திற்கு கூட்டம் குறையவில்லை. ஜூலை 14 வணக்கத்துக்குரிய காதலியே பார்த்து விட்டு 15-ந தேதி சட்டம் என் கையில் பார்த்து விட்டு 16-ந தேதி ஞாயிற்றுக்கிழமை தியாகம் போனால் ஹவுஸ் புல். டிக்கெட் கிடைக்கவில்லை. சரி அலங்காருக்கு சென்று ஜெனரல் சக்கரவர்த்தி பார்க்கலாம் என்று போனால் அதுவும் Full. வெறுத்துப் போய் திரும்பி வந்தோம்.
அந்த மாதத்திலேயே விஜயகுமார் நடித்த இவள் ஒரு சீதை படம் தங்கத்தில் வெளியானது. புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் வெற்றியை தொடர்ந்து எழுத்தாளார் மகரிஷியின் நாவலான வட்டத்துக்குள் சதுரம் திரைப்படமாக அதே Sp.முத்துராமன் இயக்கத்தில் ஜூலை 28 அன்று வெளியானது. ஜூலை 3-ம வாரத்தில் வெள்ளைக்கண்ணுவில் தங்கப்பதக்கம் வெளியானது. இதனை களேபரங்களுக்கு மத்தியிலும் தியாகம் வெற்றிகரமாக ஓடி ஜூலை 31 அன்று 150-வது நாளை நிறைவு செய்தது. அந்த நாளில் மாலை காட்சிக்கு போயிருந்தோம். திங்கட்கிழமையாக இருந்த போதும் படத்திற்கு வந்த கூட்டம் ஆச்சரியப்படுத்தியது. அதே நேரத்தில் ஜெனரல் சக்கரவர்த்தியும் 50 நாட்களை நிறைவு செய்யும் நேரம். அந்தப் படத்தின் 50 நாள் வசூலும் பிரமாதமாக அமைந்திருந்தது.
ஆகஸ்ட் பிறந்தது. அந்த நேரத்தில் புதுப் படங்களின் வருகையோ போட்டியோ நிற்கவில்லை. 1977-ல் தன் 16 வயதினிலே மூலமாக தமிழ திரையுகையே திரும்பி பார்க்க வைத்த பாரதி ராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆகஸ்ட் 10 அன்று கல்பனாவில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பற்றி நான் சொல்லாமலே அனைவருக்கும் தெரிந்திருக்கும் இதுவும் தியாகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரிய opposition-ஆக அமைந்தது. ஆகஸ்ட் 18 அன்று மற்றொரு பரபரப்பு படம் வந்தது. குமுதம் வார இதழில் கவியரசர் கண்ணதாசன் தொடர்கதையாக எழுதிய அதை விட ரகசியம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, பல இளைய தலைமுறையினரை கவர்ச்சியின் அடிப்படையில் தியேட்டருக்கு இழுத்த இந்தப் படம் ஆகஸ்ட் 18 அன்று சக்தி திரையரங்கில் வெளியானது.
ஆக இப்படி எங்கெங்கு காணினும் போட்டி போட்டுக் கொண்டு புதிய படங்கள் பழைய படங்கள், அந்நிய மொழி படங்கள் அரசியல் நிகழ்வுகள் இவை ஒரு புறம் நிகழ்ந்துக் கொண்டிருக்க அதையெல்லாம் எதிர்கொண்டு 1978 ஆகஸ்ட் 25 வெள்ளியன்று 175வது வெள்ளிவிழா நாட்களை சிந்தாமணியில் நிறைவு செய்தது தியாகம். 175 நாட்களில் ஆறு லட்சத்தி எழுபத்தி நாலாயிரத்து நூற்று பன்னிரண்டு ரூபாய்.வசூல் செய்தது.[Rs 6,74,112/-]. ஒரே அரங்கில் மட்டும் திரையிடப்பட்டு 175 நாட்களில் இத்தனை பெரிய வசூலை ஈட்டிய முதல் படம் தியாகம். தான்.175-வது நாள் அன்றும் மாலைக் காட்சிக்கு நலல கூட்டம். படம் மாற்றப்படாமல் தொடர்ந்து ஓடியிருந்தால் மதுரையில் ஒரே திரையரங்கில் மட்டும் திரையிடப்பட்டு 7 லட்சம் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை தியாகம் தட்டி சென்றிருக்கும். இதற்கு பிறகு இதே திரையரங்கில் வெளியான வயசு பொண்ணு படமும் சரி நீண்ட நாள் தயாரிப்பிலிருந்து வெளியான கே.சி.பிலிம்ஸ் கோவை செழியன் தயாரித்த சீர்வரிசை படமும் சரியாக போகவில்லை. இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் எங்களிடம் இந்தப் படங்களை ஓட்டுவதற்கு பதிலாக தியாகம் படத்தை தொடர்ந்து திரையிட்டுருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும் என்ற அவர்களின் ஆதங்கத்தை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நீண்ட நெடிய குறிப்பையும் அந்த காலகட்டத்தில் வெளியான படங்களை பட்டியலிட்டதும் நடிகர் திலகத்தின் படங்களின் வெற்றி எந்த சூழலில் இன்னும் சொல்லப் போனால் எந்தெந்த சூழலையெல்லாம் கடந்து வந்து வெற்றிக் கனியை பறித்தது என்பதை கோடிட்டுக் காட்டவே. பல முறை பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்ட போதெல்லாம் பார்க்க முடியாமல் போன தியாகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு முரசு தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த போது [முழுமையாக இல்லாவிடினும் கூட] மனதில் இந்த நிகழ்வுகளெல்லாம் அலையடித்துக் கொண்டேயிருந்தன. அதை இங்கே பகிர்ந்ததில் மகிழ்ச்சி.
நிறைவாக ஒன்று சொல்ல வேண்டும். 1973 ஜூலை 14 தொடங்கி 5 வருட விநியோக உரிமை முடிந்து Rm.S பிலிம்சிலிருந்து கைமாறி 1978ம் ஆண்டு ஜூலை மாதம் வேறு விநியோகஸ்தரிடம் வந்தார்கள் Dr ராஜாவும் பட்டாகத்தி பைரவனும். அந்த விநியோகஸ்தர் புத்தம் புதிய கண்ணாடி போன்ற பிரிண்ட் போட்டு தியாகம் 175வது நாளை நிறைவு செய்த போது அதே நாளில் ஆகஸ்ட் 25 அன்று எங்கள் தங்க ராஜா படத்தை ஸ்ரீதேவியில் திரையிட்டார். படத்திற்கு பெரிய வரவேற்பு. 27-ந தேதி ஞாயிறு மாலை ஸ்ரீதேவி அரங்கமே இரண்டானது.
இந்த trip down memory lane பயணம் போக வாய்ப்பளித்த முரசு தொலைகாட்சிக்கு நன்றி!.இந்த nostalgic memories-ஐ படித்த அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
-
14th December 2012, 10:42 AM
#1258
Junior Member
Newbie Hubber
Dear hubber brothers,
I am extremely sorry for my long abstinence.I just commenced my work after a break and have lot of year end pressures. i will be relaxed a little after Chinese new year .
Murali,
Amazing article on thiyagam. I found it lot more literary than this stupid writers like Kalapriya,S.ramakrishnan and Charu Nivedita so called literary heavy weights of contemporary Tamil writers. You can write regularly in English and Tamil both and take it as your post retirement passion cum profession.
-
14th December 2012, 10:46 AM
#1259
Junior Member
Seasoned Hubber
Mr Murali Sir,
What a wonderful analysis of Thygam Vetri Nadai.Hats Off Sir. One thing which I have want to
mention is that NT movies are always watchable not only for today's trend but for many
more years to come. No one can touch our NT's records. Most of them were screen their movies
in small theatres and make it to run for 175 days, but in the case of NT Thirisoolam which ran for
housefull 175 days has been given way to Imayam at Shanthi.
-
14th December 2012, 03:00 PM
#1260
Senior Member
Senior Hubber
Dear Mr. Murali,
As usual, fantastic write-up. What a flow! Also, the way you are able to give minute statistics is really amazing!.
"Thiyagam" is one of my favourite NT movies and "Nallavarkellaam" is one of the songs I still murmur.
Regards,
R. Parthasarathy
Bookmarks