From Era.Murugan's FB page : இருந்தாலும் இறந்தாலும் இந்தி நடிகராகத்தான் இருக்கணும். ராஜேஷ் கன்னாவுக்கு பத்மவிபூஷன் விருதாம்!
நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க, அவர் எந்தப் படத்திலே ‘நடிச்சிருக்கார்’? ஆனந்த் படத்திலே நல்ல கதை, அமிதாப்போட அமைதியான நடிப்பு, ரிஷிகேஷ்தாவின் இயக்கம் இதெல்லாம் சேர்ந்து ராஜேஷை நடிகராக்கிக் காட்டியது. மற்றபடி?
இங்கே தமிழ்லே ஒருத்தர் வாழ்க்கையையே நாடகம், திரைப்படம்னு செலவிட்டார். கப்பலோட்டிய தமிழனா, கட்டபொம்மனா, திருப்பூர் குமரனா, வாஞ்சிநாதனா இன்னும் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் அந்த விழுப்புரம் சின்னையா கணேசன் செய்து நம்மை மெய்மறக்கச் செய்தார்!
அவருக்கு பத்மஸ்ரீ பட்டத்தோட டாட்டா காட்டிட்டாங்க டில்லியில். ராஜேஷ் கன்னா, வெங்காயம், வெள்ளைப் பூண்டுக்கெல்லாம் பத்மவிபூஷனாம்..வெட்கக்கேடு
Bookmarks