-
28th December 2012, 12:36 AM
#1291
ஏவிஎம் Sound Zone Annual Sales-ல் வைத்து இளைஞர் ஒருவர் அறிமுகமானார் என்று எழுதியிருந்தேன். அவருடன் நடந்த சில சுவையான உரையாடல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில் அவர் அறிமுகமான விதம்.
ஹாலில் குவித்து வைக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் டிவிடிகளை குறிப்பாக பழைய படங்கள அதில் நடிகர் திலகத்தின் படங்களை நான் புரட்டிக் கொண்டிருந்த போது இந்த இளைஞர் எதிர்பாராதது படம் இருக்கிறதா என அங்குள்ள விற்பனையாளரிடம் கேட்க அந்த sales man வந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் அன்னையின் ஆணை பற்றி கேட்க அது இருக்கும் இடத்தை நான் சுட்டிக் காட்டினேன். 30-35 வயதுக்குட்பட்ட இளைஞர் இவ்வகைப்பட்ட படங்களை பற்றி விசாரித்து வாங்கும் போதே அவரை கவனிக்க ஆரம்பித்த நான் அவருடன் பேச்சு கொடுக்க, பழைய படங்களின் மீது அதிலும் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர் எனபது அவர் பேச்சில் தெரிந்தது. பல நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவர் கேட்க நான் தெரிந்தவற்றை சொல்ல அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இருவரும் வெளியே வந்தோம். பொதுவாக பேச்சு வந்த போது இணையம் பற்றியும் பேச்சு வர, நான் நமது Hub பற்றி குறிப்பிட்டேன். அவர் உடனே தெரியும் என்று சொல்லி விட்டு நமது நடிகர் திலகம் திரியை படித்திருப்பதாக சொன்ன அவர் அண்மையில் தியாகம் பற்றி எழுதியிருப்பதை பற்றி குறிப்பிட, அதை எழுதியது நான்தான் என்று சொன்னவுடன் அவருக்கு ஒரே சந்தோஷம். காரணம் அவரும் மதுரையை சேர்ந்தவர்தானாம். அனால் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆனாலும் மதுரை பற்றி அந்த தியேட்டர்களைப் பற்றி படிக்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் வந்ததாக சொன்னார். அவர் தந்தையார் வெகு காலம் மதுரையில் இருந்ததாகவும் அவரும் நடிகர் திலகத்தின் ரசிகர் என்றும், தன் தந்தையார் மூலமாகவே நடிகர் திலகத்தின் படங்கள் தனக்கு அறிமுகமானதையும் குறிப்பிட்டார்.
பள்ளி கல்லூரி மற்றும் தற்போதைய வேலைப் பற்றியெல்லாம் பேசினோம். திடீரென்று ஒரு கேள்வி கேட்டார். சார் சாதனை என்றால் என்ன? அவர் என்ன அர்த்தத்தில் கேட்கிறார் என்பதை புரிந்து கொள்ள நீங்கள் எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள் என நான் திருப்பி கேட்டேன். அதற்கு அவர் இந்த வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. நிகழ்பவை எல்லாம் சாதனையாகி விடுமா? என்று அவர் கேட்க நிகழ்பவை எல்லாவற்றையும் அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் எதை அடிப்படையாக வைத்து சொல்கிறோம் என்பதில்தான் பயன்படுத்தப்படும் வார்த்தையின் உண்மையான மதிப்பு இருக்கிறது என குறிப்பிட்டேன். இளைஞர் சொன்னார் நீங்கள் எழுதும் போது மதுரையின் சாதனையாளர் என்று குறிப்பிடுகிறீர்கள். அது என்ன அடிப்படையில் என்பதை தெரிந்துக் கொள்ளவே கேட்டேன் என்றார். அவருக்கு நான் சொன்ன பதிலின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்.
நடிகர் திலகத்தின் திரைப்பட வாழ்க்கையில் முதல் கால் நூற்றாண்டை எடுத்துக் கொண்டு எனது பதிலை சொன்னேன் காரணங்கள் சில. ஒரு கலைஞன் எப்படி சாதித்தான் எனபதற்கு 25 வருடங்கள் ஒரு அளவுகோல். இரண்டாவது காரணம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய தலைமுறை பரபரப்பாக நுழைந்த ஒரு காலகட்டம் 1977 -78 என்பதாலும் அந்த கால அளவை குறிப்பிட்டேன். இனி என் பதில்கள்.
1. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 2 படங்கள் வெள்ளி விழா ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே மொத்தம் மூன்று முறையும் முதல் கால் நூற்றாண்டிலேயே 2 முறையும் செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1959
வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா -181 நாட்கள்
பாகப்பிரிவினை -சிந்தாமணி - 216 நாட்கள்.
1972
பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள்
வசந்த மாளிகை - நியூசினிமா - 200 நாட்கள்.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
2. ஒரே நாளில் வெளியான ஒரே கதாநாயக நடிகரின் 2 படங்களும் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1970 அக்டோபர் -29 -தீபாவளி
சொர்க்கம் -சென்ட்ரல் -100 நாட்கள்
எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100 நாட்கள்.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
3. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கம் தியேட்டரில் ஒரு கதாநாயக நடிகர் நடித்த மூன்று படங்கள் 100 நாட்களை கடப்பது என்ற நிகழ்வை செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1952 - பராசக்தி - 112 நாட்கள்
1960 - படிக்காத மேதை - 116 நாட்கள்
1964 - கர்ணன்- 108 நாட்கள்.
தங்கம் தியேட்டரின் 42 வருட சரித்திரத்திலேயே [1952 -1994] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
[1952 -ம் ஆண்டு திறக்கப்பட்ட தங்கம் தியேட்டர் 1994-ம் ஆண்டு மூடப்பட்டு விட்டது]
4. ஒரு Calender வருடத்தில் [ஜனவரி to டிசம்பர்] வெளியான ஒரு கதாநாயக நடிகரின் 4 படங்கள் 100 நாட்கள் ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1964
கர்ணன் - தங்கம்
பச்சை விளக்கு - சிந்தாமணி
கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல்
நவராத்திரி - ஸ்ரீதேவி.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
5. ஒரே கதாநாயக நடிகர் - ஒரே இயக்குனர். இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ப/பா வரிசை படங்களில் தொடர்ந்து 8 படங்கள் நூறு நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
1958 - பதி பக்தி - கல்பனா
1959 - பாகப்பிரிவினை (216 நாட்கள்) -சிந்தாமணி
1960 - படிக்காத மேதை - தங்கம்
1961 - பாவ மன்னிப்பு -சென்ட்ரல்
1961 - பாச மலர் -சிந்தாமணி
1961 - பாலும் பழமும் -சென்ட்ரல்
1962 - பார்த்தால் பசி தீரும் -சென்ட்ரல்
1962 - படித்தால் மட்டும் போதுமா -நியூசினிமா
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணி மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறது. இதன் பெயர் சாதனை.
[அதிலும் 1961-ம் ஆண்டு மட்டும் 3 படங்கள்.இது தனி சாதனை]
6. ஒரே திரையரங்கில் ஒரே கதாநாயக நடிகர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து 444 நாட்கள் [இதில் ஒரு முழு calender வருடமும் அடங்கும்] ஓடுவது என்ற நிகழ்வை மதுரை மாநகரிலே செய்துக் காட்டியவர் நடிகர் திலகம்.
அரங்கம் -ஸ்ரீதேவி
படங்கள்
1970 அக்டோபர் 29 முதல் 1971 பிப்ரவரி 5 வரை - எங்கிருந்தோ வந்தாள்
1971 பிப்ரவரி 6 முதல் 1971 மார்ச் 25 வரை - தங்கைக்காக
1971 மார்ச் 26 முதல் 1971 ஜூலை 3 வரை - குலமா குணமா
1971 ஜூலை 3 முதல் 1971 அக்டோபர் 17 வரை - சவாலே சமாளி
1971 அக்டோபர் 18 முதல் 1972 ஜனவரி 14 வரை - பாபு
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
7. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான நாட்கள் மதுரை மாநகரிலே ஓடிய கருப்பு வெள்ளை திரைப்படம் -பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216 நாட்கள்.
8. நடிகர் திலகம் நடிக்க வந்த பிறகு அதிகமான வசூலை மதுரை மாநகரிலே ஈட்டிய கருப்பு வெள்ளை படம் பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182 நாட்கள் - Rs 5,61,495.20 p.
1952-க்கு பிறகு மதுரை மாநகரின் 60 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1952 - 2012] இதை நடிகர் திலகம் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறார். இதன் பெயர் சாதனை.
9.இவற்றுக்கெல்லாம் முத்தாய்பாக 1952 முதல் 1978 வரை நடிகர் திலகம் நடித்த 48 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுள் வெள்ளி விழா படங்களும் 150 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழாவை நூலிழையில் தவற விட்ட படங்களும் அடங்கும். இன்னும் சொல்லப் போனால் 90 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய பல படங்களை [தங்கப்பதுமை, வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி, ராஜ ராஜ சோழன் மற்றும் மன்னவன் வந்தானடி போன்றவை] நாம் கணக்கில் சேர்க்கவில்லை.
மதுரை மாநகரின் 81 வருட தமிழ் திரைப்பட சரித்திரத்திலே [1931 - 2012] முதல் கால் நூற்றாண்டிலேயே இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்தவர் நடிகர் திலகம் மட்டுமே. வேறு எந்த கதாநாயக நடிகரும் அவர்களின் திரைப்பட வாழ்க்கையை முழுமையாக எடுத்துக் கொண்டால் கூட மதுரை மாநகரில் இத்தனை 100 நாட்கள் படங்களை கொடுத்ததில்லை. இதன் பெயர் சாதனை.
[மதுரையில் 1952 முதல் 1978 வரை 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய நடிகர் திலகத்தின் படப் பட்டியல் தனி பதிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது].
இவை மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை புரிந்தவர் நடிகர் திலகம் என்பதையும் [ஒரு நடிகர் நடித்த ஒரு படம் தொடர்ந்து 120 நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆவது போன்ற,175 நாட்கள் மட்டும் ஓடி அதிக வசூல் செய்தது போன்ற, அதிகமான படங்கள் 100 காட்சிகளுக்கு மேல் ஹவுஸ் புல் ஆவது போன்ற ] அவருக்கு கூறினேன். மறு வெளியீடுகளின் சாதனைகளெல்லாம் இதில் வரவேயில்லை.
இப்போது சொல்லுங்கள் நடிகர் திலகத்தை மதுரையின் சாதனையாளர் என்று சொல்லுவதில் ஏதேனும் தவறிருக்க முடியுமா என்று நான் கேட்க அந்த இளைஞர் பிரமித்துப் போய் நிற்கிறார். சார் அவரை இதுவரை ஒரு கிரேட் actor என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது என்றார். நான் சொன்னேன் இதைதான் நண்பர் சுவாமிநாதன் ஒரு திரியின் தலைப்பாகவே [Nadigar Thilagam -The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor] வைத்திருக்கிறார் எனபதை சுட்டிக் காட்டினேன்.
During our conversation since he showed interest in Cricket, I told him to check the career graph of NT and that would resemble Sachin's career. It will be consistent with the milestones being achieved at frequent intervals. Whereas the likes of Ponting and Mathew Hayden had a purple patch for a few years time during which time they scored heavily but otherwise it was just ordinary stuff. That made him understand more clearly on what I was talking about.
(தொடரும்)
அன்புடன்
-
28th December 2012 12:36 AM
# ADS
Circuit advertisement
-
28th December 2012, 12:41 AM
#1292
மதுரையில் 1952 முதல் 1978 வரை நடிகர் திலகத்தின் 100 நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல்.
1952
1.பராசக்தி - தங்கம் - 112
1954
2.மனோகரா - ஸ்ரீதேவி - 156
1958
3.உத்தம புத்திரன் - நியூசினிமா - 104
4.பதி பக்தி - கல்பனா - 100
5. சம்பூர்ண ராமாயணம் - ஸ்ரீதேவி - 165
1959
6. வீரபாண்டிய கட்டபொம்மன் - நியூசினிமா - 181
7. பாகப்பிரிவினை - சிந்தாமணி - 216
1960
8. படிக்காத மேதை - தங்கம் - 116
9. விடி வெள்ளி - சிந்தாமணி - 100
1961
10. பாவ மன்னிப்பு - சென்ட்ரல் - 141
11. பாச மலர் - சிந்தாமணி - 164
12. பாலும் பழமும் - சென்ட்ரல் - 127
1962
13. பார்த்தால் பசி தீரும் - சென்ட்ரல் - 110
14. படித்தால் மட்டும் போதுமா - நியூசினிமா - 100
15. ஆலய மணி - சென்ட்ரல் - 100
1963
16. இருவர் உள்ளம் - நியூசினிமா - 100
1964
17.கர்ணன் - தங்கம் - 108
18. பச்சை விளக்கு - சிந்தாமணி - 105
19. கை கொடுத்த தெய்வம் - சென்ட்ரல் - 108
20. நவராத்திரி - ஸ்ரீதேவி - 108
1965
21. திருவிளையாடல் - ஸ்ரீதேவி - 167
1966
22. மோட்டார் சுந்தரம் பிள்ளை - கல்பனா - 100
23. சரஸ்வதி சபதம் - ஸ்ரீதேவி - 104
1967
24. கந்தன் கருணை - நியூசினிமா - 125
25. ஊட்டி வரை உறவு - சென்ட்ரல் - 114
1968
26. தில்லானா மோகனாம்பாள் - சிந்தாமணி - 132
1969
27. தெய்வ மகன் - நியூசினிமா - 100
28. சிவந்த மண் - சென்ட்ரல் - 117
1970
29. ராமன் எத்தனை ராமனடி - நியூசினிமா - 104
30. சொர்க்கம் - சென்ட்ரல் - 100
31. எங்கிருந்தோ வந்தாள் - ஸ்ரீதேவி - 100
1971
32. குலமா குணமா - ஸ்ரீதேவி - 100
33. சவாலே சமாளி - ஸ்ரீதேவி - 107
1972
34. ராஜா - சென்ட்ரல் - 101
35. பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல் - 182
36. வசந்த மாளிகை - நியூசினிமா - 200
1973
37. பாரத விலாஸ் - சென்ட்ரல் - 100
38. எங்கள் தங்க ராஜா - நியூசினிமா - 103
39. கெளரவம் - சிந்தாமணி - 100
1974
40. வாணி ராணி - நியூசினிமா - 112
41. தங்கப்பதக்கம் - சென்ட்ரல் - 134
42. என் மகன் - நியூசினிமா - 101
1975
43. அவன்தான் மனிதன் - சென்ட்ரல் - 105
1976
44. உத்தமன - நியூசினிமா - 105
1977
45. தீபம் - சிந்தாமணி - 100
46. அண்ணன் ஒரு கோவில் - நியூசினிமா - 100
1978
47. அந்தமான் காதலி - சினிப்ரியா - 100
48. தியாகம் - சிந்தாமணி - 175
(தொடரும்)
அன்புடன்
-
28th December 2012, 12:44 AM
#1293
அரசியல் பற்றி பேச்சு வந்தது. எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்த அந்த இளைஞர் தமிழகத்தின் பழைய வரலாறு பற்றி கேள்வி கேட்டார். நீண்ட காலம் தொடர்ந்து முதல்வர் பதவி வகிப்பது பற்றி பேச்சு வந்தது. தொடர்ச்சியாக அதிக காலம் முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்றேன்.அவருக்கு ஆச்சரியம். நான் அப்படி கேள்விப்படவில்லையே என்றார். நான் சொன்னேன் ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 9 1/2 ஆண்டுகள் தமிழக முதல்வர் பதவி வகித்தது பெருந்தலைவர்தான் என்பதை அவருக்கு கூறினேன்.1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முதல் 1963-ம் ஆண்டு அக்டோபர் 2 வரை அவர் முதல்வராக இருந்தார். ஒரு நாள் கூட நடுவில் இடைவெளி விழாமல் இத்தனை நீண்ட காலம் வேறு யாரும் தமிழகத்தில் முதல்வராக பணி புரியவில்லை என்ற உண்மையை சொன்னேன்.
அப்போது முன்பே பேசிக் கொண்டிருந்த சாதனை பற்றி குறிப்பிட்ட நான், தமிழக அரசியலில் பெருந்தலைவர் ஏற்படுத்திய சாதனையைப் சுட்டிக் காட்டினேன். தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று பொது தேர்தலில் நின்று அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து 5 வருடங்கள் முழுமையாக ஆட்சி புரிந்து [அதாவது சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவோ அல்லது தள்ளி வைக்காமலோ] மீண்டும் தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றிகரமாக மீண்டும் ஆட்சி அமைத்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டும்தான். 1957 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி கண்ட அவர் 5 வருடங்களை நிறைவு செய்து 1962 பொது தேர்தலை சந்தித்து அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கடந்த 65 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த ஒரே மனிதன் பெருந்தலைவர் மட்டுமே. சுருக்கமாக சொன்னால் தனது ஆட்சியின் சாதனைகளையும் மேன்மைகளையும் முன்னேற்ற திட்டங்களின் செயல்பாடுகளை மட்டுமே முன்னிறுத்தி வாக்கு சேகரித்த ஒரே தலைவன் பெருந்தலைவர் மட்டுமே. அந்த மனிதன் நடத்திய அரசின் செயல்பாட்டை மக்கள் ஏற்றுக் கொண்டு வாக்களித்ததன் விளைவுதான் அந்த வெற்றி. இன்னும் சொல்லப் போனால் பெருந்தலைவர் தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவரை அவர் தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்தவரை திராவிட கட்சிகளால் அவரை வெற்றிக் கொள்ள முடியவில்லை. 1963-ல் K-பிளான் என்னும் தான் வகுத்த திட்டத்திற்கு ஏற்ப பதவியை துச்சமென மதித்து முதல்வர் பதவியை விட்டு விலகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் டெல்லி சென்ற பிறகுதான், அங்கே பிரதமர்களை உருவாக்கும் கிங் மேக்கர் என்ற நிலையில் அவர் அகில இந்திய அரசியலில் கவனம் செலுத்த, இங்கே மாணவர்களையும் இளைஞர்களையும் மக்களையும் எளிதில் உணர்ச்சி வசப்படுத்த கூடிய மொழி பிரச்சனையும் பாகிஸ்தானோடு ஏற்பட்ட போரினால் உண்டான உணவு தான்ய பற்றாக்குறையும் மற்றும் வேறு சில விஷயங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திராவிட கட்சிகள் வெற்றி பெற்றதை அவருக்கு விளக்கினேன்.
அந்த இளைஞர் [அவர் பெயர் அபிஷேக்] இந்த தகவலகளையெல்லாம் கேட்டவுடன், சார், இந்த உண்மைகளை எல்லாம் ஏன் யாருமே சொல்லவோ எழுதவோ செய்யவில்லையே என்று கேட்டார். நான் சொன்னேன் இன்றைக்கு media-வில் [electronic/print] பணி புரியும் 90- 95 சதவீத நபர்களுக்கு தமிழக/இந்திய வரலாறே தெரியாது. அது அரசியலாகட்டும் சினிமாவாகட்டும் இல்லை ஸ்போர்ட்ஸ் ஆகட்டும் ஒரு பத்து வருட காலகட்டத்தில் நடந்தவற்றை மட்டுமே அறிந்து வைத்திருப்பவர்கள்தான் பெரும்பான்மையோர். வரலாறு தெரிந்த ஒரு சிலரும் இதையெல்லாம் எழுதுவதில்லை. காரணம் பெருந்தலைவரையோ நடிகர் திலகத்தையோ பற்றி உண்மையாக எழுதுவதால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது? அதே நேரத்தில் மற்றவர்களை வானளாவ புகழ்ந்தால் அவர்களுக்கு தேவைப்படும் benefit கிடைக்கும் என்றேன். இளைஞர் புரிந்து கொண்டார்.
இரவு வெகு நேரமாகி விட்டதால் அந்த இளைஞர் மீண்டும் தொடர்பு கொள்வதாக கூறி பிரியா விடை பெற்று சென்றார்.அவர் காரணம் மீண்டும் ஒரு trip down the memory lane போய் வர நேர்ந்தது. இங்கே அவற்றை பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.
அன்புடன்
-
28th December 2012, 03:23 AM
#1294
Senior Member
Devoted Hubber
saradhaa_sn
Senior Member Veteran Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Jul 2005Location: ChennaiPosts: 2,180
Originally Posted by Mahesh_K
Saradhaa madam,
திரு. சின்ன அண்ணாமலை கவியரசர் கண்ணதாசனின் உறவினர், சுதந்திரப் போராட்ட வீரர், மிகச்சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். அவரது 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' என்ற புத்தகம் வியப்பூட்டும் பல குறுந்தகவல்கள் அடங்கியது - நான் சிறு வயதில் படித்து வியந்திருக்கிறேன். இங்கே ஒப்பீடு செய்யப்பட்டிருப்வர்களை விட நிச்சயம் சிறந்தவரே. கல்கண்டு விமர்சனம் எதன் அடிப்படையில் அமைந்து என்று புரிந்து கொள்ள முடியவில்லை. Organising skills குறைவாக இருந்திருக்கலாம். தேசியவாதியான அவர் இந்த விஷயத்தில் திராவிட இயக்கதவருடன் போட்டியிட முடிந்திருக்காது என்பதுதானே தமிழகத்தின் யதார்த்தம் -அன்றும் இன்றும்.
மகேஷ்...
திரு சின்ன அண்ணாமலை ஒரு தேசியவாதி, இலக்கியவாதி, தியாகி என்பதிலெல்லாம் எந்த ஐயமும் இல்லை. அதுபோன்ற பின்புலங்கள் திரு. முசிறி புத்தனுக்கு இல்லை என்பதும் உண்மை.
ஆனால் இங்கே ஒப்பீடு செய்ய எடுக்கப்பட்டிருக்கும் ஒரே அளவுகோல்.....
சின்ன அண்ணாமலை - சிவாஜி மன்றத்தலைவர்
முசிறிபுத்தன் - எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்
என்பது மட்டுமே.
நான் இங்கே சுட்டிக்காட்டியிருக்கும் படங்கள் மட்டும் திரு எம்.ஜி.ஆர் படங்களாயிருந்திருந்தால் ஆர்.எம்.வீரப்பன், முசிறிபுத்தன் போன்றோரின் பெருமுயற்சியால் 100 நாள் மற்றும் வெள்ளிவிழாப்படங்களாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த விஷயத்தில் 'நம்ம ஆட்கள்' கொஞ்சம் மாற்று கம்மிதான். ரசிகர்களிடம் இருந்த உத்வேகம் தலைவர்களிடம் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நடிகர் திலகம் பாகம் 6 .....பக்கம் 83
இந்த ஆதங்கம் எனக்கு நிறையவே இருக்கிறது
-
28th December 2012, 04:49 AM
#1295
Senior Member
Devoted Hubber
#961
Mahesh_K
Senior Member Regular Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2010Posts: 239
NT ரசிகர் ஒருவர் கொடுத்த தகவல். 70களிலும் 80களிலும் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக இருந்தது இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவை. அப்துல் ஹமீது போன்ற பல அறிவிப்பாளர்களின் கவர்ச்சியான குரல் வளம் மற்றும் (ஆல் இந்தியா ரேடியோவில் கேட்கமுடியாத) புதிய திரைப்படப் பாடல்களால் தென் மாவட்ட மக்களின் மனம் கவர்ந்தது இலங்கை வானொலி. அதில் ஒவ்வொரு வாரமும் பாடல்கள் ரசிகர்களின் வாக்குகள் ( போஸ்ட் கார்டில் அனுப்பலாம்) அடிப்படையில் வரிசைப்படுத்தப்படும்.
10 வது பாடலில் தொடங்கி வாக்குகளின் எண்ணிக்கையோடு ஒவ்வோரு பாடலும் அறிவிக்கப்படுவதைக் கேட்க வீடுகளிலும், டீக்கடைகளிலும் பெரும் திரளான மக்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்களாம்.
இந்தப் போட்டியில் மிக அதிகமான வாரங்கள் ( 50க்கு மேல் இருக்கக்கூடும்) முதலிடத்திலேயே இருந்த பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மற்றும் சங்கிலி படத்தில் வரும் " நல்லோர்கள் வாழ்வைக் காக்க" இரன்டும் தானாம். இவை இரண்டுமே NT + S.P.B யின் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1983க்குப் பின் இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சக்தி குறைக்கப்பட்ட பிறகு தென் மாவட்டங்களில் கேட்பது நின்றுவிட்டது.
ஒரு உபரி தகவல் - இதே நிகழ்ச்சியில் அதிக வாரங்கள் முன்னணியில் இருந்த மற்றொரு பாடல் இளையராஜா இசையமைத்த "ஓரம்போ..ஓரம்போ" என்ற பாடல். அதாவது T.M.S அவர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையை ( between Ilayaraaja and TMS) ஏற்படுத்திய பாடல்.
(நடிகர் திலகம் பாகம் 6......பக்கம் 97)
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்ணடும் ஒரு முறை சங்கிலி படத்தில் இடம் பெற்ற
நல்லோர்கள் வாழ்வை காக்க ....... என்ற பாடல் பல வாரங்கள் ஏன் மாதக்கணக்கென்று சொல்லலாம்
இசை அணித் தேர்வில் முதல் இடத்தில் இருந்து வந்தது
ஒருவாரம் தடீரென இப்பாடல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு
தேர்வில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது (ஏதோ உள் சதி நடை பெற்றிருக்கிறது)
முதல் இடத்தில் இருக்கும் ஒரு பாடல் திடீரென கடைசி இடத்திற்கு செல்லுமென்று
யாருமே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எம் ஜீ ஆர் ரசிகர்கள்கூட அதனை ஏற்றுக்கொள்ளவில்லை
இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு சென்று பின்னர் வெளியேற்றப்பட்டிருந்தாலும்
அதனை உண்மையென ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அங்கே நடந்தது சதி சதி சதி
எல்லா இடங்களிலும் அண்ணனின் பேர் புகழை சதிமூலம்தான் வீழ்த்தபார்hதிருக்கிறார்கள்
-
28th December 2012, 10:54 AM
#1296
Junior Member
Seasoned Hubber
Mr Murali Sir,
The way in which you put your views abount the Box Office success of
NT's Film is amazing. The TN people are paying the price by replacing the
Perunthalaivar Rule. No development, nothing and only selfish politics
as well as Jalra Kootam.
We are fortunate enough to have you in this Hub for your excellent work
in propagating the glory of our NT.
-
28th December 2012, 04:25 PM
#1297
Junior Member
Newbie Hubber
-
28th December 2012, 05:07 PM
#1298
Senior Member
Seasoned Hubber
டியர் முரளி சார்,
மதுரை சாதனை குறித்த தங்களுடைய தகவல்கள் அருமை. தாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல பெருந்தலைவர் பற்றியும் நடிகர்திலகம் பற்றியும் உண்மைத் தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. தாங்களாகவே, தவறாக சித்தரித்து எழுதவும், பேசவும் செய்கிறார்கள் என்பதுதான் வேதனை.
-
28th December 2012, 06:24 PM
#1299
Junior Member
Seasoned Hubber
No doubt about that. The year 2012 belongs NT's Mega Hit Karnan only.
-
29th December 2012, 01:04 PM
#1300
Senior Member
Seasoned Hubber
Recently saw "Maragatham" in dvd for the first time. It was a big disappointment. Throughout the film only Padmini, S. Balachander, T.S. Durairaj & Balaiah appeared in most of the scenes and it was almost a cameo for NT. Any other ordinary actor could have played NT's character and i wonder why he choose to act in this film (Political reasons ???? Murasoli Maran ???? Not sure.)
Contrary to above post, there are so many characters which ONLY OUR NT could have given dignity & immortality. One such character is Narahsimmachari in Paritchaikku Neramachu (telecasted in Sun Life a few days back). My God!!! just terrific. In most of the scenes i was just chocked and my eyes were filled with tears....not because of the background or the impact of the story but simply because of this great actors performance and performance alone !!! Amazing....thalaivar's simmakural, his gestures and entire screen presence was all enough to do the magic.
I remember watching the film at Roxy theatre, Purasawalkam (now, Saravana Stores has come up in that place) during my school days. But, watching the film now was thoroughly a new experience. As a fan, it was a pleasure watching Narahsimachari roaring on the screen. Thanks Sun Life.
Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad
Bookmarks