-
1st January 2013, 12:40 AM
#2711
Junior Member
Seasoned Hubber
-
1st January 2013 12:40 AM
# ADS
Circuit advertisement
-
1st January 2013, 12:49 AM
#2712
Junior Member
Seasoned Hubber
-
1st January 2013, 12:51 AM
#2713
Junior Member
Seasoned Hubber
-
1st January 2013, 01:02 AM
#2714
Senior Member
Seasoned Hubber
Dear friends,
Thank you for the New Year greetings and wish you the same. Welcome to all new friends incl Mr Roopkumar.
New Year Greetings in 3d. Enjoy
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st January 2013, 01:08 AM
#2715
Senior Member
Seasoned Hubber
For those of you who might have missed the earlier posting, MGR calendar for 2013 in 3D.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st January 2013, 01:17 AM
#2716
Junior Member
Seasoned Hubber
அன்பே வா.
ஏ.வி.ஏம். பேனரில் எம்.ஜி.ஆரின் முதல் (ஒரே) படம். விமானத்தில் இருந்து இறங்கும் முதல் காட்சியிலிருந்து அன்பே வா உற்சாகப் பாடல் வரை மக்கள் திலகத்தின் நடிப்பு ராக்கெட் வேக அமர்க்களம் தான். ஏடாகூடமான கேள்விகளை கேட்கும் நிருபரிடம் ஐயாம் வெரி சாரி. நீங்க இப்படி எல்லாம் கேட்கக் கூடாது நல்ல ஆளப்பா இவர் என்று கண்ணியமாகவும் மென்மையாகவும் மறுக்கும் முதல் காட்சியே அசத்தலான இயல்பான நடிப்பு.
தொடர்ந்து நாகேஷுடன் போட்டிபோடும் நகைச்சுவை நடிப்பாகட்டும், தன்னுடைய காதலுக்கு தன் உயிர் நண்பனே தடையாக வரும் போது வெளிப்படுத்தும் சோக நடிப்பாகட்டும், சிட்டிங் பூல் என்ற மலையைச் சுமக்கும் வீரமாகட்டும், புலியைப் பார் நடையிலே புயல் வேக ஆடலாகட்டும் ஈடு இணை சொல்ல முடியாத ஒப்பற்ற திறமை காட்டியிருப்பார். ஏவி.எம். சரவணன் சொன்னது போல் படத்தின் நீளம் அதிகம் என்ற கருத்து வந்த போது நீளமாக இருக்கிறது என்று மயில் தோகையை வெட்டி எறியலாமா என்று அவரது தந்தையார் எழுப்பிய கேள்வி தான் நினைவுக்கு வருகிறது. திரும்பத் திரும்ப பார்த்தாலும திகட்டாத தேனமுது. ஒரு காட்சியில் கூட தொய்வோ , சலிப்போ தோன்றாத அற்புதமான படம். முழுக்க முழுக்க ஜெ.பி.யாகவே வாழ்ந்திருப்பார் மக்கள் திலகம். நான் பார்த்ததிலே பாடலுக்கு முன் சரோஜாதேவியை சீண்டும் காட்சிகள் கற்கண்டு. அழகுத் தமிழில் காற்றினிலே வந்த கீதமல்லவா உங்களை இங்கே கொண்டு வந்தது. தங்கள் மனதைக் கவர்ந்த அந்த மனிதக்குயில் யார் என்பதைக் கண்டு கொண்டு வருகிறேன் என்று கூறும் தலைவரின் குரல்வளம் எப்படிச் சொல்வது. தேனைப் பழிக்கும் மொழி என்பார்களே அது இதுதானா? டிப்டாப்பான உடை, கலையாத தலை, கண்ணீர் சுரக்காத விழிகள், ஓலமிடாத இதழ்கள் இத்தனையையும் வைத்துக் கொண்டு சோகத்தை வெளிப்படுத்த அவரால் மட்டும் தான் முடியும். ஓட்டலில் அசோகன் , சரோஜாதேவி, மக்கள் திலகம் மூவரும் சந்திக்கும் காட்சியில் அவரது உடை அலங்காரம், ஒப்பனை இவற்றை எல்லாம் மீறி ஒரு வார்த்தை கூட முகத்தில் மட்டும் சோகத்தைக் காட்டும் அந்தக் காட்சி நடிப்பின் புதிய பரிணாமம். முகம் பேயறைந்தார் போல் இருக்கும். டி.கே. ராமச்சந்திரன் புகைவண்டி நிலையத்திற்கு அழைக்கும் போது அவரது குரலில் இழையோடும் சோகம், என்னை எந்தப் பொண்ணு விரும்பப் போகுது என்று விரக்தியோடு கூறும் பாங்கு , அசோகனைக் கண்டவுடன் தனது சோகங்களை எல்லாம் மறைத்துக் கொண்டு நட்பின் இறுக்கத்தைக் காட்டும் காட்சிகள். தன்னை வெளிப்படுத்திவிடக்கூடாது என்று முந்திக் கொண்டு பேசவிடாமல் செய்வது, தனியறையில் தன்னைச் சந்திக்க வரும் சரோஜாதேவியுடன் இயல்பாக சிரிக்கும் அழகு எல்லாமே இயல்பான நடிப்பின் உச்சம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு முழு புத்தகம் எழுதும் அளவுக்கு. தொடரும்
-
1st January 2013, 01:27 AM
#2717
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகத்தை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தனது தந்தையை வற்புறுத்தி அவருக்காகவே அன்பே வா கதையைத் தெரிவு செய்து நடிக்கச் செய்ததாக ஏவி.எம். சரவணன் அவர்கள் பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் குங்குமம் வார இதழுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் அன்பே வா படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஜெய்சங்கர் என்றும், எம்.ஜி.ஆர் கேட்டுக் கொண்டதற்காக அந்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தார் என்றும் தவறான ஒரு தகவலைத் தந்திருக்கிறார்.
-
1st January 2013, 01:45 AM
#2718
Junior Member
Seasoned Hubber
நன்றி விகடன் பொக்கிஷம்
-
1st January 2013, 01:47 AM
#2719
Junior Member
Seasoned Hubber

எம்.ஜி.ஆருக்கும் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பரிசளிக்கும் புகைப்பட நிபுணர் சுபாசுந்தரம்
நன்றி விகடன் பொக்கிஷம்
-
1st January 2013, 02:30 AM
#2720
Junior Member
Seasoned Hubber
தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
கே. டி.வியில் உரிமைக்குரல்
Bookmarks