-
1st January 2013, 02:57 PM
#2741
Junior Member
Platinum Hubber
-
1st January 2013 02:57 PM
# ADS
Circuit advertisement
-
1st January 2013, 03:18 PM
#2742
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் ரசிகர்களுக்கும் , பார்வையாளர்களுக்கும் , பதிவாளர்களுக்கும் ஒரு இனிய செய்தி .

மக்கள் திலகம் அவர்கள் மறைவுக்கு பின்னர் 1988 முதல் 2012 வரை ,25 ஆண்டுகளின் அவரது நினைவாக பலவேறு தினசரி ,வார ,மாத இதழ்களில் மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகள் , அரசியல் உலக சாதனைகள் பற்றிய கட்டுரைகள் -செய்திகள் - நிழற்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது .
தனிப்பட்ட முறையில் மக்கள் திலகத்தின் நூல்கள் -ஸ்பெஷல் புத்தகங்கள் -புகழ்பெற்ற நிறுவனங்கள் வெளியிட்ட மக்கள் திலகத்தின் புத்தகங்கள் [சுமார் 200 புத்தகங்கள் மேல்] வந்துள்ளன .
மக்கள் திலகத்தின் வீடியோ தொகுப்புகள் வெவ்வேறு தலைப்புகளில் வந்த வண்ணம் உள்ளது .
இத்தனை சிறப்புக்கள் இருந்தாலும் மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகனின் உள்ளத்திலும் இருக்கும் ஒரு குறை என்னவென்றால் .................................................. ..............
அந்த குறை விரைவில் மறைந்து
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் , இதுவரை யாரும் செய்திராத புதுமை படைப்பாக நமது கண்களுக்கு
தித்திக்கும் விருந்தாக , ஒவ்வொரு ரசிகரின் இல்லத்திலும் அலங்கரிக்கபோகும் .........................................
அந்த திருநாள் வெகு விரைவில் ........

அடுத்த அறிவிப்பு
மக்கள் திலகம் அவர்களின் பிறந்த நாள் அன்று உங்கள் அனைவருக்கும் இந்த திரியில் பதிவாகும் .
அன்புடன்
esvee
Last edited by esvee; 1st January 2013 at 03:37 PM.
-
1st January 2013, 08:16 PM
#2743
Junior Member
Platinum Hubber
1963- 2013
மக்கள் திலகத்தின் பொன்விழா ஆண்டு படங்கள்
1963.
பணத்தோட்டம்
தர்மம் தலைகாக்கும்
கொடுத்து வைத்தவள்
கலை அரசி
பெரிய இடத்து பெண்
நீதிக்கு பின் பாசம்
ஆனந்த ஜோதி
காஞ்சித்தலைவன்
பரிசு .
பெரிய இடத்து பெண் - நீதிக்கு பின் பாசம் - பரிசு
மூன்று படங்கள் 100 நாட்கள் மேல் ஓடியது .
தர்மம் தலைகாக்கும் - பணத்தோட்டம் - கொடுத்து வைத்தவள் - மூன்று படங்களும் 12 வாரங்கள் மேல் ஓடியது .
ஆனந்த ஜோதி - காஞ்சித்தலைவன் - 50 நாட்கள் மேல் ஓடியது .
கலை அரசி - சுமாராக ஓடியது .
மக்கள் திலகதிற்கு ஜோடியாக பானுமதி - ராஜஸ்ரீ - சரோஜாதேவி -e .v .சரோஜா - l .விஜயலட்சுமி
சாவித்திரி - தேவிகா மேற்கண்ட படங்களின் நடித்திருந்தனர் .
மக்கள் திலகம் 1947 கதாநாயகனாக நடித்த பிறகு ஒரே ஆண்டில் மிக அதிகமாக ஒன்பது படங்களின் நடித்து வந்தது 1963 ஆண்டில் தான் .
மீண்டும் அதே சாதனை 1966ல் செய்து காட்டினார் .
-
1st January 2013, 10:47 PM
#2744
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகத்தின் திரைப்படங்கள் எத்தனை முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் அத்திரைப்படங்கள் திரை அரங்குகளில் திரையிடப்படும்போதும் ரசிகர்கள் மிக ஆர்வமாக சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். வீட்டில் cd/dvd-க்களில் அத்திரைப்படங்களை பலமுறை பார்த்து ரசிக்கின்றனர். இப்படி ஒருவர் காலமாகி 25 ஆண்டுகள் ஆனாலும் திரும்ப திரும்ப அவர் படங்களை பார்ப்பது உலக திரைப்பட வரலாற்றில் நம் மக்கள் திலகத்தின் படங்களை மட்டுமே. உலக திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகத்தின் சாதனை மிகவும் போற்றப் படவேண்டிய ஒன்று.
-
1st January 2013, 11:36 PM
#2745
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
MGR Roop
Jai Sir I think this is from a unreleased movie. Maybe Kumaradevan I think.
MGR Roop sir, you are correct.
-
1st January 2013, 11:39 PM
#2746
Junior Member
Seasoned Hubber
உரிமைக்குரல் மாதஇதழ் வெளியிட்ட சபாஷ் மாப்பிள்ளே படத்தின் டிவிடி இன்று வாங்கினேன். ஏற்கனவே கொலம்பியா பிலிம்ஸ் வெளியிட்ட சிடி வைத்திருக்கிறேன். ஆனால் அதில் இரைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் படமும் பிரிண்ட் மிகவும் மோசமாக இருந்தது. உரிமைக்குரல் அதை நல்ல முறையில் மெருகேற்றி அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் கொடுத்து வைத்தவள் படத்திலிருந்து சண்டைக் காட்சியை படத்தின் ஆரம்பத்தில் சேர்த்திருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாமல் . மக்கள் திலகத்தின் நடிப்பில் மற்றுமொரு பரிமாணம். நகைச்சுவை நடிப்பில் மிகவும் அற்புதமாக பரிமளிக்கிறார்.
Last edited by jaisankar68; 2nd January 2013 at 12:18 AM.
-
1st January 2013, 11:47 PM
#2747
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்,
அரசிளங்குமரி திரைப்படம் பற்றிய தங்களது பதிவுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் இரட்டை வேடப் படம். (ஒரே காட்சியில் மட்டும் தோன்றும் தந்தை எம்.ஜி.ஆர் பலருக்கும் தெரியாது). முத்துராமனின் முதல் படம் இதுதான். பாடல்களில் சின்னப்பயலே சின்னப்பயலே, ஏற்றமுன்னா ஏற்றம், நந்தவனத்தில் ஓர் ஆண்டி, ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு, தாரா அவர் வருவாரா, வனிதா மணியே மையலாகினேன் போன்றவை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். மற்ற பாடல்கள் மிகவும் சுமார் ரகம் தான். மக்கள் திலகம் இடம் பெறாத காட்சிகள் அதிகம் அமைந்துள்ளது தான் படத்தின் விறுவிறுப்பு குறைவுக்குக் காரணம்.நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல வனிதா மணியே பாடல் காட்சி எந்தஒரு டிவிடியிலும் இடம் பெறவில்லை. மக்கள் திலகத்தின் நடிப்பு அந்தப் பாடல் காட்சியில் மிகவும் அருமையாக இருக்கும். கே டிவியில் மட்டும் அந்தப் பாடல் காட்சியைப் பார்க்க முடிகிறது.
Last edited by jaisankar68; 1st January 2013 at 11:52 PM.
-
1st January 2013, 11:57 PM
#2748
Junior Member
Regular Hubber
hello every one after bit of gap iam reentering our thread my hectic schedule almost over... wishing all our MT and NT fans a very happy and prosperous new year.....thank u vinod sir and ramamoorthy and others for wishing me personally...... esvee sir still 2 minutes there for completion of jan 1 i kept up my promise sir..........
-
2nd January 2013, 04:33 AM
#2749
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் சிவகுமார் அவர்களே
நீண்ட நாட்களுக்கு பின்பு உங்களின் பதிவு புத்தாண்டு தினத்தில் இடம்பெற்றது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது .
இனி மக்கள் திலகத்தை பற்றிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கின்றோம் .
-
2nd January 2013, 04:53 AM
#2750
Junior Member
Platinum Hubber
Bookmarks