Page 260 of 305 FirstFirst ... 160210250258259260261262270 ... LastLast
Results 2,591 to 2,600 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #2591
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Vanaja Madam,

    With your active participation like your brother and also your various inputs on NT,
    the thread comes into action again. We can slowly increase the tempo in the
    coming days.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2592
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Vanaja Madam,

    With your active participation like your brother and also your various inputs on NT,
    the thread comes into action again. We can slowly increase the tempo in the
    coming days.
    நன்றி திரு வாசு

  4. #2593
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    sollukindra nabar puththam pudhusu..

    sollum vishayam aradhap pazhasu..

    'puthiya mondhaiyil pazhaiya kallu'.

  5. #2594
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    எங்கே போய்விடும் காலம்?-
    அது என்னையும் வாழ வைக்கும்-
    நீ இதயத்தை திறந்து வைத்தால்-
    அது உன்னையும் வாழவைக்கும்

    உள்ளதை சொல்லி நல்லதை செய்து
    வருவதை வரட்டும் என்றிருப்போம்
    கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
    கடமையின் வழியே நின்றிருப்போம்.

    ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
    உண்மையின் கண்களை மூடி வைப்பார்
    பொறுத்தவர்எல்லாம் பொங்கி எழுந்தே
    மூடிய கண்களை திறந்து வைப்பார்

    கால்கள் இருக்க கைகள் இருக்க
    கவலைகள் நம்மை என்ன செய்யும்?
    உழைப்பது ஒன்றே செயல் என கொண்டால்
    நடப்பது நலமாய் நடந்துவிடும்

  6. #2595
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆதிராம் சார்,
    ஒரு சின்ன விண்ணப்பம். திரி என்பது ஆராய்ச்சி கூடமல்ல. பொதுவில் ஒரு விஷயத்தில் நாட்டம் கொண்டவர்கள் கூடி விவாதித்து பரிமாறி கொள்ளும் இடம்.எப்போதும் எல்லா விஷயங்களும் ,எல்லோரிடமிருந்தும் புதுசாக வர முடியாது.ஆனால் எல்லோரும் பரிமாறி கொள்ளும் போது ,ஓரிரண்டு புதுசாக அக படும். அத்தோடு ,புதிது புதியதாய் பார்வையாளர்கள் வருவர். அவர்கள் ,பழைய பாகங்களை முழுதாக படிப்பார் என்றும் சொல்ல முடியாது.அப்போது ,எந்த விஷயமாயினும்,அவர்களுக்கு சுவையானதாகவே இருக்கும். யாரையும் திட்டி, விமரிசித்து, அவர்களை திரியிலிருந்து விரட்ட வேண்டாமே ப்ளீஸ்.
    எல்லோர் பங்களிப்பையும் வர வேற்போம். நல்லதை பாராட்டுவோம். மற்றவற்றிற்கு, மௌனியாய் இருத்தல் நலம்.

  7. #2596
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Burma
    Posts
    0
    Post Thanks / Like
    திரு கோபால் அவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை .

    நான் நடிகர்திலகம் திரிகள் அனைத்தும் பார்வையாளனாக படித்து அதில் உள்ள பலருடைய பதிவுகளை படித்து மகிழ்ந்தவன் .

    திரு முரளி அவர்கள் குறிப்பிட்டது போல பலர் நடிகர் திலகத்தின் சாதனைகளை அவரவர் நடையினில் அருமையாக வழங்கியுள்ளனர் .

    திரு ஜோ அவர்கள் கூறியது போல நடிகர் திலகம் தான் முதன்மையானவர் . அவரது புகழ் பாடுவது பதிவாளர்களின் கடமை .

  8. #2597
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    ஏதோ 'ஏழைக்கேற்ற எள்ளுருண்டை' மாதிரி நானும் இத்திரிக்கு எனது பங்களிப்பை செய்யலாமென்றால் 'பழைய கள்ளு' என்கிறார் சகோதரர் ஒருவர்! அவர் புதுமையாக ஏதாவது எழுதினால் நான் சந்தோஷமாக வாசித்துவிட்டுப்போகிறேன். நான் ஒரு egoistic, ஆனால் சிவாஜி என்று வரும்போது எதுவும் பெரிதாகப்படாது எனக்கு. பழைய கள்ளைக்குடித்துவிட்டு நண்பர் தடுமாறத்தேவையில்லை. There may be other better things for him to do.

    ஊர் கூடித் தேர் இழுக்கலாமென்றார்கள். நானும் நடிகர் திலகம் மீதான ஆர்வத்தில் (ஆர்வக்கோளாறில்லை!) ஏதோ எனது சிற்றறிவுக்கு பட்டவரையில் எழுதிவிட்டுப்போகிறேனே! இராமாயணத்து அணில் மாதிரி. எனது சிவாஜி knowledge எல்லாம் இங்கிருந்து எடுக்கப்பட்டது தான். பல Ph.D களுக்கு மத்தியில் நான் வெறும் kindergarten kid ஆகவே இருந்து விடுகிறேன். அதில் எனக்குச் சந்தோஷமே!

    நான் இங்கே தொடருவேன்.

    ஆதரவுக்கு நன்றி, சகோதரர்கள் கோபால், வாசு, முத்துராமன்.

  9. #2598
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியியல்

    நேரம் : 3 மணி ; மொத்த மதிப்பெண்கள் : 100

    பகுதி - அ [மதிப்பெண்கள் : 30 x 1 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடை தருக)

    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

    1. பராசக்தி படத்தில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர்

    அ) ஞானசேகரன் ஆ) குணசேகரன் இ) ராஜசேகரன் ஈ) சந்திரசேகரன்

    2. வாழ்விலே ஒரு நாள் திரைப்படத்தில் நடிகர் திலகத்திற்கு ஜோடியாக நடித்தவர்

    அ) பத்மினி ஆ) எஸ். வரலட்சுமி இ) பண்டரிபாய் ஈ) ஜி. வரலட்சுமி

    3. "மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்" பாடலை இயற்றியவர்

    அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) மருதகாசி ஈ) ஆத்மநாதன்

    4. சிம்ம சொப்பனம் படத்தின் இசையமைப்பாளர்

    அ) இளையராஜா ஆ) எம்.எஸ்.விஸ்வநாதன் இ) கே.வி.மகாதேவன் ஈ) சங்கர்-கணேஷ்

    5. தனது தமிழக முன்னேற்ற முன்னணி கட்சிக்கு தலைவர் சிவாஜி முதலில் சூட்டிய பெயர்

    அ) தமிழக முன்னணி ஆ) தேசிய முன்னணி இ) தமிழக காங்கிரஸ் ஈ) தமிழ் தேசம்

    கோடிட்ட இடங்களை சரியான விடை கொண்டு நிரப்புக:

    6. பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவு திட்டத்திற்காக, பிரதமர் நேருவிடம் நடிகர் திலகம் ரூ.--------------------- அளித்தார்.

    7. சிவாஜி-பீம்சிங் கூட்டணியில் உருவான முதல் "ப" வரிசைப் படம் -------------------------------------.

    8. -------------------------------------------- திரைப்படம் நாதத்தையும், பரதத்தையும் மையமாகக் கொண்டது.

    9. சிவாஜி அவர்கள் மூன்று வேடங்களில் (கதாபாத்திரங்கள்) தோன்றிய முதல் படம் ------------------------------.

    10. நடிகர் திலகம் ---------------------------------- கோவிலுக்கு யானை அளித்தார்.
    (பல கோவில்களுக்கு யானைகளைக் காணிக்கையாக அளித்துள்ளார். ஏதேனும் ஒரு கோவிலுக்கு வழங்கியதைக் குறிப்பிடவும்.)

    சரியான விடையைத் தருக:

    11. கணேசன் அவர்கள் பிறந்த ஊர் எது?

    12. சிவாஜி கணேசன் அவர்களின் இயற்பெயர் என்ன?

    13. சிவாஜி அவர்கள் ஏற்று நடித்த முதல் நாடக வேடம் என்ன?

    14. இராமாயண நாடகத்தில் சிவாஜி அவர்கள் நடிக்காத மிக முக்கிய வேடம் ஒன்று உண்டு. அது எந்த வேடம்?

    15. கணேசன் அவர்களுக்கு சிவாஜி கணேசன் என்று பட்டம் கொடுத்து அழைத்தது யார்?

    16. சிவாஜி கணேசன் அவர்கள் எந்த வருடம் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார்?

    17. சக்தி நாடக சபாவில் சிவாஜி அவர்கள் நடித்த ஏதேனும் ஒரு நாடகத்தின் பெயரினைக் கூறுக.

    18. பராசக்தி படத்தின் மேக்கப் டெஸ்டிற்காக நடிகர் திலகத்தை புகைப்படங்கள் (ஸ்டில்ஸ்) எடுத்த புகைப்படக் கலைஞர் யார்?

    19. இல்லற ஜோதியில் இடம்பெற்ற 'அனார்கலி - சலீம்' ஓரங்க நாடகத்தின் வசனங்களை எழுதியவர் யார்?

    20. இரும்புத்திரை எந்த ஊரில், எந்த அரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது?

    21. மக்களை பெற்ற மகராசியில் எந்த வட்டாரத் தமிழ் பேசப்பட்டது?

    22. நடிகர் விஷாலின் சகோதரர் ஒரே ஒரு படத்தில் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் பெயர்?

    23. சிவாஜி அவர்களுக்கு கலைக்குரிசில் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

    24. விஸ்வரூபம் 100வது நாள் விழாவில் சிங்கத்தமிழனுக்கு வெற்றிவிழா ஷீல்டை அளித்தவர் யார்?

    25. நடிகர் திலகம் இசைக் கருவியை இசைத்த முதல் திரைப்படம் எது?

    26. களம் கண்ட கவிஞன் நாடக உரையாடல்களை எழுதியவர் யார்?

    27. கல்யாணியின் கணவன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் யார்?

    28. தெய்வமகன் திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் என்ன?

    29. வைரநெஞ்சம் எந்த ஊரில் 50 நாட்களுக்கு மேல் ஒடியது?

    30. நடிகர் திலகத்தின் 159வது திரைப்படம் எது?

    பகுதி - ஆ [மதிப்பெண்கள் 15 x 2 = 30] (எல்லா வினாக்களுக்கும் விடைகளைத் தருக)

    31. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் எந்த ஊரில் அரங்கேற்றப்பட்டது? அரங்கேற்றத்தன்று தலைமை தாங்கியவர் யார்?

    32. திருவிளையாடலில், புலவராக வரும் சிவபெருமான், தன்னை தருமியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த 2 வரி வசனங்களை எழுதுக.

    33. நடிகர் திலகத்தின் பிள்ளைச்செல்வங்களின் (வாரிசுகளின்) நற்பெயர்களைக் குறிப்பிடுக.

    34. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நடிகர் திலகம் எந்த வருடம் இணைந்தார்? யாரை அவர் தலைவராக ஏற்றுக் கொண்டார்?

    35. மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் எவை?

    36. நடிகர் திலகமும் மக்கள் திலகமும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் எது? மக்கள் திலகம் தலைமை தாங்கிய நடிகர் திலகத்தின் 100வது நாள் திரைப்பட விழா எது?

    37. பாசமலர் ராஜசேகரன் தனது தங்கையை ஆனந்தனிடம் ஒப்படைக்கும் போது கூறும் வார்த்தைகள் என்ன?

    38. நடிகர் திலகத்துக்கு சந்திரபாபு பின்னணி பாடிய படம் எது? அப்பாடலின் முதல் வரி என்ன?

    39. நடிகர் திலகத்துடன்

    i) கமல் நடித்த முதல் திரைப்படம்

    ii) ரஜினி நடித்த முதல் திரைப்படம்

    iii) விஜய் நடித்த ஒரே திரைப்படம்

    iv) நதியா நடித்த திரைப்படம்

    ஆகியவைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

    40. நடிகர் திலகத்தின் அண்ணன், தம்பி, தங்கை, தங்கையின் கணவர் ஆகியோரது நற்பெயர்களைக் குறிப்பிடுக.

    41. நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளியான தினத்தன்று வெளியான ஏதேனும் 4 மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் பெயர்களைக் கூறுக.

    42. கீழ்க்காணும் திரைப்படங்களில் நடிகர் திலகத்தின் கதாபாத்திரப் பெயர்களைக் குறிப்பிடுக.

    i) படிககாத மேதை ii) பாகப்பிரிவினை iii) எங்க மாமா iv) நிறைகுடம்

    43. நடிகர் திலகத்தின் திருமணம் எந்த ஊரில், எந்த தேதியில் நடைபெற்றது?

    44. தங்கப்பதக்கம் நாடகம் எத்தனை முறை நடத்தப்பட்டது? தங்கப்பதக்கம் திரைப்படம் வெளியான தேதி என்ன?

    45. கீழக்காணும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் நடிகர் திலகத்தின் படங்களாகியுள்ளன. படைப்பையும், படத்தையும் குறிப்பிடவும்.

    i)அகிலன் ii) கல்கி iii) லக்ஷ்மி iv) ஜெயகாந்தன்

    பகுதி - இ (மதிப்பெண்கள் : 6 x 5 = 30)

    குறிப்பு:

    i) எல்லா வினாக்களுக்கும் விடை தருக.

    ii) ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள மாற்று வினாக்களில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளிக்கவும்.

    46. பராசக்திக்கு முன் உள்ள சிவாஜி அவர்களின் நாடக உலகத் தகவல்கள் சிலவற்றைத் தொகுத்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

    (அல்லது) நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம்பெற்ற ஓரங்க நாடகங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 ஓரங்க நாடகங்கள்)

    47. பீம்சிங் இயக்கிய நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

    (அல்லது) நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 படங்கள்)

    48. தங்கப்பதக்கம் எஸ்.பி.சௌத்ரி அவர்களின் அழகு முகத்தை ஓவியமாக வரைக.

    (அல்லது) பாவமன்னிப்பு ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகள் சிலவற்றை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

    49. திருவிளையாடல் திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
    (ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்) (அல்லது)

    வசந்த மாளிகை திரைப்படம் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகளைக் குறிப்பிடுக.
    (ஊர் - அரங்கு என்ற ஃபார்மெட்டில்) (குறைந்த பட்சம் 10 அரங்குகள்)

    50. நடிகர் திலகமும் இளைய திலகமும் இணைந்து நடித்த திரைப்படங்களைப் பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 15 திரைப்படங்கள்)

    (அல்லது) ராஜபார்ட் ரங்கதுரையில் நடிகர் திலகத்தின் விதவிதமான கெட்டப்புகளை(வேடங்களை) பட்டியலிடுக. (குறைந்த பட்சம் 10 கெட்டப்புகள்)

    51. புதிய பறவை திரைப்படத்தின் கதையை விவரித்து எழுதுக. (குறைந்த பட்சம் 10 வரிகள்)

    (அல்லது) என்னைப் போல் ஒருவன் சுந்தரமூர்த்தி, ஞான ஒளி அருண் - சிறு குறிப்பு வரைக.
    (ஒவ்வொரு பாத்திரத்தைப் பற்றியும் குறைந்த பட்சம் 5 வரிகள்)

    பகுதி - ஈ (மதிப்பெண்கள் : 10)

    52. கீழ்வருவனவற்றைப் பொருத்துக :

    1) 21.7.2004 i) நயாகரா நகர மேயராக தங்கச்சாவி

    2) செவாலியே விருது ii) தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

    3) அமெரிக்க அரசு iii) வீரபாண்டிய கட்டபொம்மன்

    4) நான் பெற்ற செல்வம் iv) எம்.கே.ராதா சிறப்பு தபால் உறை

    5) பைலட் பிரேம்நாத் v) பிரான்ஸ்

    6) பத்மினி பிக்சர்ஸ் vi) இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பு

    7) எகிப்து - கெய்ரோ vii) கர்ணன்

    8) விஸ்வநாதன்-ராமமூர்த்தி viii) சேக்கிழார்

    9) திருவருட்செல்வர் ix) ஆசிய-ஆப்பிரிக்க சிறந்த நடிகராக வெள்ளிப் பருந்து சிலை

    10) பொற்கைப் பாண்டியன் x) ஏ.பி.நாகராஜன்

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    சிவாஜியியல் கேள்வித்தாள் தொகுப்பு : பம்மல் ஆர். சுவாமிநாதன் (பம்மலார்)

    -----------------------------------------------------------------------------------------------------------------------------------

    அன்புடன்,
    பம்மலார்.

  10. #2599
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sierra Leone
    Posts
    0
    Post Thanks / Like
    நானும் இந்த பரீட்சையை எழுதி எனது kindergarten வகுப்பிலிருந்து pass ஆகி விடலாமென்று பார்க்கிறேன். கொஞ்சம் கடினம் தான்.!

  11. #2600
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Sister VANAJA,

    I am not telling that you should not write anything here or you no need to give your contributions.

    Only thing I mentioned is, the main point in your post, that is "80s and 90s directors spoiled Shivaji sir's career" has been discussed in every 10 pages of this thread. So, it is nothing but a 'repeatuuuuu'. Is it true or not. Thatswhy I used as 'pazhaiya kallu'.

    Paaraattu varumbothu sandhoshap paduvadhu pola, criticism varumbodhum accept panna manasu vendum.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •